நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், ஏப்ரல் 03, 2025

வக்பு சட்டம்,

வக்பு திருத்தச் சட்டத்திற்கு தமிழ்நாட்டின் கண்டனம் வலிமை மிக்கது;

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் எதிர்ப்பு துணிச்சல் மிக்கது;

கொள்கை உறுதிப்பாட்டின் பிரகடனம் தேசத்தின் முதல் குரலாய் ஒலிக்கிறது.

வக்பு திருத்தச் சட்டம்-2024 என்கிற சதித்திட்டம் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று 02/04/2025 அன்று நடுநிசிப் பொழுதில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல் இது; 
நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியான அவலம் நிகழ்த்தப்பட்ட நாள் இது; 
அரசியல் வரலாற்றில் எழுதப்பட்ட கருப்பு அத்தியாயம் இது. 

இந்த திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலேயே  கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு ஏதோ பெயரளவில் அந்த மசோதா ஆய்வுக்காக அனுப்பப்பட்டு, கூட்டுக்குழுவின் அனைத்து நெறிமுறைகளும், அதன் தார்மீக மரபுகளும் சூறையாடப்பட்டன.  சர்வாதிகாரப் போக்கில் எதிர்க்கட்சியின் கருத்துக்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இப்போது நாடாளுமன்ற மக்களவையில் 12 மணி நேர கடும் விவாதத்திற்குப் பிறகு 232 எதிர் வாக்குகளோடும், 288 ஆதரவு வாக்குகளோடும் இச்சட்டம்  நிறைவேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவுகள் 14, 25, 26 மற்றும் 29 ஆகியன அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. 

தேசமே கொதித்தெழுந்த நிலையில், ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கொண்டோர் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்திலும், திகைப்பிலும் இருந்தபோது,  அடுத்த சில மணி நேரத்திற்குள்ளாகவே நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தச் சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியதை எதிர்த்து ஒரு வலிமையான கண்டனத்தை தமிழ்நாடு சட்டமன்ற அவையில் பதிவுசெய்த நிகழ்வு தேச வரலாற்றில் மிகவும் துணிச்சல் மிக்க அத்தியாயம் எனலாம். "இந்திய தேசத்தில் முதல் குரலாக தனது எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்த மாநிலம் தமிழ்நாடு" என்கிற சரித்திர சாதனையை நிகழ்த்திக் காட்டி இருக்கும் நமது முதலமைச்சரை சமூக நீதி பேசுகிற எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது.  

03/04/2025 அன்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற நுழைவு வாயிலிலிருந்தே கருப்பு நிற பேட்ஜை அணிந்து வந்து, அவை நடவடிக்கைகளில் முதலாவதாகவே இதனை எதிர்த்து கண்டன உரை நிகழ்த்தியிருக்கிறார். அப்போது "இச்சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றம் செல்வோம்; தமிழ்நாடு போராடும்; அதில் வெற்றியும் பெறும்" என குறிப்பிட்டதும் யாரும் எதிர்பார்த்திராத இமாலயத் துணிவு என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து, முதலமைச்சர் அவர்களே இச்சட்டத்தை எதிர்த்து குரல் எழுப்பி கோஷமிட, அனைத்து உறுப்பினர்களும் அதே ஒலியில் கோஷமிட்ட நிகழ்வும் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒரு சிறப்பான நிகழ்வு என எண்ணுகிறேன். இத்திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் சென்ற 27/03/2025 அன்று தீர்மானம் முன்மொழிந்து, அதனை அனைத்துக் கட்சிகளின் ஏகோபித்த ஆதரவோடு நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்பியதையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

நாடாளுமன்ற மக்களவையிலும், மேலவையிலும் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் E.T. முகம்மது பஷீர், P.V. அப்துல் வஹாப் ஆகியோரும், காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மிகக் கடுமையாக விமர்சித்து  உரையாற்றியுள்ளனர். மிகக்குறிப்பாக, தமிழ்நாடு சார்பில் திரு. ஆ. ராசா, திரு. தயாநிதி மாறன், திரு. திருச்சி சிவா, திரு.  திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் மிகத் தெளிவாகவும், மிகக் கடுமையாகவும் தங்கள் எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. 

மொத்தத்தில், வக்பு  சொத்துக்களைக்  கபளீகரம் செய்யத் துடிக்கும் ஒன்றிய அரசின் இந்த சட்ட விரோத நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு சார்பாகக் காட்டப்பட்டுள்ள எதிர்ப்புக் குரல் மிக, மிக வலிமையானதாக இருந்ததை எவரும் மறுத்திடவியலாது. இந்த அதிதீவிர எதிர்ப்புக் குரலுக்கு எல்லா தலங்களிலும் தலைமை ஏற்ற தி.மு.க வுக்கும், அதன் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். 

எம். அப்துல் ரஹ்மான்  
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர், 
முதன்மை துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

மார்க்கக் கல்வியின் அவசியம் ,

மார்க்கக் கல்வியின் அவசியம் 

ஒவ்வொரு மஹல்லா தோறும் மக்தப் மதரஸாக்களை வலுப்படுத்த வேண்டும். மஹல்லாவில் உள்ள ஒவ்வொருவரும் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் அந்தந்த மக்தப் மதரஸாவின் மாணவர்களாக மாற வேண்டும். குர்ஆனைக் கற்றுக் கொள்பவர்களாக மாற வேண்டும். குர்ஆனுடன் தொடர்பு எப்போது குறைந்து விடுமோ குர்ஆனுக்கும் நாம் கொடுக்கும் கண்ணியம் எப்போது குறைந்து விடுமோ அப்போது அல்லாஹ் குர்ஆனை நம்மை விட்டும் அப்புறப்படுத்தி விடுவான். உள்ளங்களில் இருந்தும் அனைவரின் இல்லங்களில் இருந்தும் அல்லாஹ் பறித்து விடுவான். வெறும் காகிதம் மட்டும் இருக்கும்.                                       

عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ : لَيُسْرَيَنَّ عَلَى الْقُرْآنِ ذَاتَ لَيْلَةٍ فَلاَ يُتْرَكُ آيَةٌ فِى مُصْحَفٍ وَلاَ فِى قَلْبِ أَحَدٍ إِلاَّ رُفِعَتْ. (دارمي

இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் ஒரே ஒரு இரவு கடப்பதற்குள் அல்லாஹ் குர்ஆனை (உள்ளங்களில் இருந்தும் அவரவர் இல்லங்களில் வைத்திருக்கும்) குர்ஆன் பிரதிகளில் இருந்தும்) நீக்கி விடுவான். ஒரு வசனம் கூட யாருடைய உள்ளத்திலும் ஞாபகம் இருக்காது. பிரதிகளிலும் இருக்காது.- தாரமீ

 عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ : أَكْثِرُوا تِلاَوَةَ الْقُرْآنِ قَبْلَ أَنْ يُرْفَعَ. قَالُوا : هَذِهِ الْمَصَاحِفُ تُرْفَعُ فَكَيْفَ بِمَا فِى صُدُورِ الرِّجَالِ؟ قَالَ : يُسْرَى عَلَيْهِ لَيْلاً فَيُصْبِحُونَ مِنْهُ فُقَرَاءَ وَيَنْسَوْنُ قَوْلَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَيَقَعُونَ فِى قَوْلِ الْجَاهِلِيَّةِ وَأَشْعَارِهِمْ......  (دارمي

 குர்ஆன் உயர்த்தப்படும் முன்பே குர்ஆனை அதிகம் ஓதிக் கொள்ளுங்கள் என இப்னு மஸ்ஊத் ரழி கூறியபோது பிரதிகளில் இருந்து உயர்த்தப் படலாம். ஆனால் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்களின் உள்ளங்களில் இருந்து எவ்வாறு நீக்கப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்  ஒரு இரவு கடந்து காலை நேரம் வருவதற்குள் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்கள் அனைவரும் குர்ஆனை இழந்த ஏழைகளாக ஆகி விடுவார்கள். கலிமாவைத் தவிர வேறு எதுவும் ஞாபகம் இருக்காது. குர்ஆனுக்கு பதிலாக அறியாமைக் காலத்தின் சொற்களிலும். கவிதைகளிலும் மக்கள் மூழ்கி விடுவார்கள். இது கடைசி நேரமாக இருக்கும்.                          

குர்ஆனை விட்டும், தீனுடைய சூழ்நிலையை விட்டும் குடும்பங்கள் நீங்கி விட்டால் குடும்பங்கள் வீணாகி விடும்



  எந்த பூமியில் மழை இல்லையோ அந்த பூமியில் பயிர்கள் வீணாகி விடும். எந்த வீட்டில் தீன் இல்லையோ அந்த வீட்டில் சந்ததிகள் வீணாகி விடும் -  உர்தூ கவிதை

குர்ஆன்ஓதத்தெரியாமல்இருப்பதுமாபெரும்துர்பாக்கியம். யாருடைய மனதில் அறவே குர்ஆன் இல்லையோ அவரது உள்ளம் பாழடைந்த இல்லம்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضقَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنْ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ (ترمذي)عَنْ عُثْمَانَرضي الله عنهقَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ(ابن ماجة)

மதரஸாவுக்கு காலையில் சென்று ஒரு குர்ஆன் ஆயத்தை கற்பது 100 ரக்அத் தொழுவதை விட சிறந்தது

عَنْ أَبِي ذَرٍّ قَالَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ لَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَابًا مِنْ الْعِلْمِ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ(ابن ماجة)

جاء شخص وعليه علامات الانكماش إلى أمير المؤمنين علي رضي الله عنه وقال له: أحس في نفسي أني أموت بعد ساعة، فقال له علي رضي الله عنه: (الموت ليس مشكلة، كلنا نموت).فقال له: ماذا أعمل في هذه الساعة؟قال (عليرضي الله عنه (اطلب العلم).

ஹழ்ரத் அலீ ரழி அவர்களிடம் ஒருவர் வந்து எனக்குள் மவ்த்துடைய அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டதுஎன்றார். அதற்கு அலீ ரழி இது எல்லோருக்கும் வருவது  தானே என்று கூற, அதற்கு அவர் நான் இறுதிநேரத்தில் என்ன செய்ய வேண்டும்என்று கேட்க, கல்வியை கற்றுக் கொள் என்றார்கள்.                                              

நம்மில் எத்தனை பேர் குர்ஆன் ஒத தெரியாதவர்கள், மார்க்க சட்டதிட்டங்கள் தெரியாதவர்கள் நம்மில் பலருக்கு ஒளு செய்யும் முறையே தெரியவில்லை ஒளுவின் முறித்தல்கள் தெரியவில்லை, பர்ளான குளிப்பு ஒன்று இருக்கிறது என்றே பலருக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தவர்களுக்கும் குளிப்பின் பர்ளுகள் என்ன என்று தெரிவதில்லை இது தான் இன்றைய இஸ்லாமியர்களின் நிலை....அதிகாலை எழுந்து தானும் பஜ்ர் தொழுது தனது பிள்ளைகளையும் பஜர் தொழ வைத்து பிள்ளைகளை நிரப்பமாக பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அன்று இருந்தனர் ஆனால் இன்றோ தானும் எட்டு மணிக்கு எழுவதுடன் பிள்ளைகளை அதன் பின் எழுப்பி ஸ்கூலுக்கு அரக்க பறக்க அனுப்புவதே பெரும்பாடாக உள்ளது இதற்கிடையில் மக்தபை பற்றி சிந்திக்கவே முடிவதில்லை .மாலையில் பிள்ளைகள் வீடுதிரும்பியதும் டியூஸன் என்ற பெயரில் இரவுவரை கழித்து விட்டு வீடு வந்ததும் சாப்பிட்டு படுக்கவே நேரம் உள்ளது.                                                  

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் ரஹ் அவர்கள் கூறினார்கள் இன்றைய முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்கு இரண்டு காரணங்கள். 1.ஒற்றுமையின்மை 2. குர்ஆனின் தொடர்பை கை விட்டது.

காலித் இப்னு வலீத் ரழி பெரும்பாலும் மார்க்கப்போரில் நேரத்தை கழித்தவர்கள். பல போர்களில் தளபதி அவர்கள் தான். அதனால் குர்ஆனை அதிகமாக ஓத முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் அவர்களின் ரடைசி நேரத்தில் குர்ஆனை கொண்டு வரச் சொல்லி அதை கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்கள். அதிகமான மார்க்கப்போரின் காரணமாக உன்னை அதிகம் வாசிக்க என்னால் முடியவில்லை. என்று அழுத நிலையில் அவர்களின் உயிர் பிரிந்தது

குர்ஆனை கற்று பின்பு மறந்தவர்களைப் பற்றி....

குர்ஆனை கற்றவர் அதை அடிக்கடி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவிழ்த்து விடப்பட்ட ஒட்டகம் விரண்டோடுவது போல் நம்மை விட்டும் விரண்டோடி விடும்

عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ (بخاري) باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ- كتاب فضائل القرآنشَبَّهَ دَرْسَ الْقُرْآن وَاسْتِمْرَار تِلَاوَته بِرَبْطِ الْبَعِير الَّذِي يُخْشَى مِنْهُ الشِّرَاد ، فَمَا زَالَ التَّعَاهُد مَوْجُودًا فَالْحِفْظ مَوْجُود ، كَمَا أَنَّ الْبَعِير مَا دَامَ مَشْدُودًا بِالْعِقَالِ فَهُوَ مَحْفُوظ . وَخَصَّ الْإِبِل بِالذِّكْرِ لِأَنَّهَا أَشَدّ الْحَيَوَان الْإِنْسِيّ نُفُورًا ، وَفِي تَحْصِيلهَا بَعْد اِسْتِمْكَان نُفُورهَا صُعُوبَة .(فتح الباري)

குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)

الأجذم قيل هو مقطوع اليد ، وقيل هو الذي به جذام.வெண்குஷ்டம்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا ( أبو داود بَاب فِي كَنْسِ الْمَسْجِدِ- كِتَاب الصَّلَاةِ

என் உம்மத்தினரின் நன்மைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் சிறந்ததாக நான் கண்டது மஸ்ஜிதில் கிடக்கும் ஒரு அசுத்த த்தை அப்புறப் படுத்துவதாகும். அதேபோல் என் உம்மத்தினரின் தீமைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் கெட்டதாக நான் கண்டது குர்ஆனின் ஒரு சூராவை மனப்பாடம் செய்த பின் அதை மறந்து விடுவதாகும்..                      

குர்ஆனைக் கற்று அதன் அதை மறந்தவர் அவராக மறக்கவில்லை. அல்லாஹ் மறக்கடித்து விட்டான்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ  (بخاري) مَعْنَاهُ أَنَّهُ عُوقِبَ بِوُقُوعِ النِّسْيَان عَلَيْهِ لِتَفْرِيطِهِ فِي مُعَاهَدَته وَاسْتِذْكَاره (فتح الباري)

உலகின் எந்த ஒரு அமலையும் இங்கே செய்ததை மறுமையிலும் தனக்கு முன்பாக செய்து காட்டும்படி அல்லாஹ் பெரும்பாலும் சொல்வதில்லை. ஆனால் குர்ஆனை அழகாக ஓதியவரை அங்கேயும் ஓதிக் காட்டும்படி அல்லாஹ் கூறி கண்ணியப்படுத்துவான். ஓத ஓத அந்தஸ்து உயரும்

عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍورض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَقَالَ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ (يوم القيمة) اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا (ترمذي) قَالَ كَانَ الضَّحَّاكُ بْنُ قَيْسٍ يَقُولُ : يَا أَيُّهَا النَّاسُ عَلِّمُوا أَوْلادَكُمْ وَأَهَالِيكُمَ الْقُرْآنَ فَإِنَّهُ مَنْ كُتِبَ لَهُ مِنْ مُسْلِمٍ يُدْخِلُهُ اللَّهُ الْجَنَّةَ أَتَاهُ مَلَكَانِ فَاكْتَنَفَاهُ فَقَالا لَهُ : إقرأ وَارْتَقِ فِي دَرَجِ الْجَنَّةِ حَتَّى يَنْزِلانهِ حَيْثُ انْتَهَى عِلْمُهُ مِنَ الْقُرْآنِ(مصنف ابي شيبة)عَنْ أُمّ سَلَمَةرَ أَنَّهَا سُئِلَتْ عَنْ قِرَاءَة رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ كَانَ يُقَطِّع قِرَاءَته آيَة آيَة " بِسْمِ اللَّه الرَّحْمَن الرَّحِيم الْحَمْد لِلَّهِ رَبّ الْعَالَمِينَ الرَّحْمَن الرَّحِيم مَالِك يَوْم الدِّين(أَحْمَد) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ فَيَرْضَى عَنْهُ فَيُقَالُ لَهُ اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً (ترمذي) 

குர்ஆனாகிறது மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்ய வரும். ரப்பே அவருக்கு சுவனத்து நகைகளை அணிவிப்பாயாக என்று கூறும் அவ்வாறே அணிவிக்கப்படும். இன்னும் அதிகமாக அணிவிக்கும்படி கூறும் மீண்டும் அணிவிக்கப்படும். பின்பு ரப்பே அவரை நீ பொருந்திக்கொள்ள வேண்டும் என மன்றாடும் அவ்வாறே அல்லாஹ்வின் பொருத்தம் அவருக்குக் கிடைத்த பின் அவரிடம் நீங்கள் குர்ஆனை ஓதுவீராக என்று கூறப்படும் அவர் ஓதுவார். அவ்வாறு ஓதும்போது ஒவ்வொரு ஆயத்துக்கும் பகரமாக அவருடைய சுவன அந்தஸ்து கூடும்

شرح( يا رب حله ) والمعنى يا رب زَيِّنْهُ ( إقرأ ) ( وارق ) أي اِصْعَد ْأي يقال لصاحب القرآن اقرأ القرآن واصعد على درجات الجنة

பள்ளிக் கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் அக்கறை காட்டும் பல  பெற்றோர்கள் தீனுடைய கல்வியை கற்றுத்தருவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாட்டின் பல பகுதிகளிலும் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருந்தன.அனைத்து சமுதாயத்து மாணவர்களும் அங்கிருந்து அறிவை கற்றனர்.இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், உலகத் தலைவர்களால் போற்றப்பட்டவருமான லால்பகதூர் சாஸ்திரி மதரஸாவில் கல்வி பெற்றவராவார்.  இவர் போல் சுதந்திர இந்தியாவின் பல தலைவர்கள், குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப் பகுதியைச் சார்ந்த பலரும் மதரஸாக்களில் கல்வி பெற்றவர்களாவர். நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளை கடந்து விட்ட இன்றையை சூழ்நிலையிலும் கூட உத்தர பிரதேசம் பீகார் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருக்கின்றன. அதனால் தான் அங்கு மதரஸா கல்வி தொடக்க கல்விக்கு ஈடாக அரசாங்கத்தால் கருதப் படுகிறது.ஆனால் இன்று ஸ்கூல், மதரஸா இரண்டையும் தனித்தனியாக பிரித்து விட்ட காரணத்தாலும், மதரஸாவுடைய கல்வியை கற்க முடியாத அளவுக்கு பிள்ளைகளின் ஸ்கூல் நேரங்கள் அதைத் தொடர்ந்து வீட்டுப் பாடங்கள் என துன்யாவின் தேடல் தொடர்ந்து கொண்டே இருப்பதால் பாவம்.. நம் பிள்ளைகளில் எத்தனையோ பேருக்கு முறையாக தீனுடைய கல்வி கிடைக்காமலேயே இருக்கிறது.                        

ஒரு ஹதீஸைத் தேடி மதீனாவில் இருந்து சிரியாவுக்குச் சென்ற காலம் இருந்தது. ஆனால் இன்று பள்ளிவாசல் தோறும் மதரஸாக்கள் இருந்தும்  மார்க்கக் கல்வியைக் கற்கும் ஆர்வம் இல்லை

عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَكُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ (ابوداود) باب الْحَثِّ عَلَى طَلَبِ الْعِلْمِ- كتاب العلم



முகலாய மன்னர்களில் ஒளரங்கசீப் அவர்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு. சிறந்த பக்தியாளர். அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்யாதவர். ஆனால் அவரது தந்தை ஷாஜஹான். மூத்த சகோதரர் தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய அனைவரும் அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்பவர்கள்.  தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் அதற்குப் பதிலாக ஒரு மஸ்ஜிதை கட்டியிருந்தால் இன்று வரை அவருக்கு நன்மை போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் இதுவே அவர் ஒரு ஆடம்பரப் பிரியர் என்பதற்கு உதாரணம். . தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய இருவரும் குடிகாரர்கள். அரசுப் பணத்தை குடித்தே அழித்தவர்கள். இந்த இருவருக்கும் உடந்தையாக ஷாஜஹான் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒளரங்கசீப் மட்டும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் வளர்ந்தார் என்றால் அதற்குக் காரணம் அவருக்குக் கிடைத்தமார்க்கக் கல்வி தான். ம்கதப் மதரஸாக்களில் ஆசிரியர்களின் போதனையால் தன்னுடைய தந்தையும், சகோதரர்களும் செய்வது தவறு என்று புரிந்து கொண்டார். மேலும் முந்தைய ஆட்சியின் அனைத்து ஆடம்பரங்களையும் ஒழித்தார். உதாரணமாக முந்தைய ஆட்சியில் கவிஞர் வாரியம் என்று இருந்தது. இவர்களின் முழு வேலை அரசரைப் புகழ்ந்து கவிதைகள் இயற்றுவது. அதைப் படித்து பொற்காசுகளைப் பெறுவது.  இதற்காக அரசுப் பணம் வீணாக்கப்பட்டது ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாரியத்தை கலைத்தார். மன்னரை இசையெழுப்பி தூங்க வைக்க இசைவாணர் குழு என்றிருந்தது அதையும் கலைத்தார். தன் கையால் தொப்பி தயாரித்து அந்தப் பணத்தில் செலவு செய்தார். இவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் அவர் ஆட்சியை அமையக் காரணம்அவர் பெற்ற மார்க்கக் கல்வியாகும்.                                                                            

இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுடைய தாய் ஆரம்பத்தில் இவர்களை துணி துவைக்கும் வண்ணானிடம் அனுப்பி வைத்தார்கள். அங்கே போனாலும் நாலு காசு சம்பாதிக்கலாம் என்று. ஆனால் இமாம் அவர்களோ அந்தக் காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கிய இமாமுல் அஃழம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் கல்வி கற்கச் சென்றார்கள்.  மகன் காசு இல்லாமல் வெறுங்கையோடு வருவதைக் கண்ட அந்தத் தாய் நேராக இமாமுல் அஃழம் ரஹ் அவர்களிடம் சென்று “ என்ன... என் மகனின் மனதை நீங்கள் மாற்ற நினைக்கிறீர்களா ? வண்ணானிடம் சென்றாலும் நாலு காசு சம்பாதிப்பான். நீங்கள் அவனுடைய மனதை மாற்றி உங்களுடன் அமர வைத்துக் கொண்டீர்.. என்று கோபப்பட, இமாமுல் அஃழம் பொறுமையுடன் தாயே! நீங்கள் உங்களுடைய மகனை துணி துவைக்கும் வண்ணானாக பார்க்கிறீர்கள் ஆனால் நானோ இவரை இந்த நாட்டு மன்னருடன் சரி சமமாக உட்கார்ந்து ஃபாலூதா என்னும் உயர்வகை பானத்தை அருந்துபவராக பார்க்கிறேன் பிற்காலத்தில் இவர் அப்படி வருவார் என்று நினைக்கிறேன் என்றார்கள். அதன்பின்பு அந்தத் தாய் மகனுடைய விருப்பத்தில் தலையிடுவதில்லை. இமாம் அபூயூசுப் ரஹ் அவர்கள் பிற்காலத்தில் இமாமுல் அஃழம் அவர்களிடம் கல்வி பயின்று அவருடைய திறமையின் காரணமாக அந்த நாட்டின் மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களால் உயர்ந்த நீதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார்கள் ஒரு நேரத்தில் மன்னர் விருந்துக்கு அழைத்த போது, அங்கே சென்று மன்னருக்கு அருகில் அமர்ந்து ஃபாலூதாவை அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுக்கு பழைய நினைவு வருகிறது அன்று என் தாய் என்னை வண்ணானிடம் அனுப்ப, நான் இமாமுல் அஃழம் அவர்களிடம் சென்று கல்வி பயின்றேனே அப்போது அவர்கள் கூறியது இப்போது நிஜமாகி இருக்கிறதே என்று சந்தோஷத்தால் கண்கலங்கினார்கள்.                                                                             

மார்க்கக்கல்வியால் உயர்ந்த மற்றொரு மாமேதை இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களைப் பற்றி...

மார்க்கக் கல்வியில் மேற்படிப்பை கற்றுக் கொள்வதற்காக இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களை அவர்களின் தாய் மக்காவுக்கு அனுப்பி வைக்கும்போது மகனே!  நீ கல்வியைப் பெற்ற அறிஞனாக மட்டும் திரும்பி வர வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்கள்.  இமாம் ஷாஃபியீ ரஹ் மக்காவுக்குச் சென்று இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்களிடம் கல்வி பயின்று நன்கு தேர்ச்சி பெறுகிறார்கள் இவர்களின் உயர்ந்த பண்பும், திறமையும் மாலிக் ரஹ் அவர்களைக் கவர்ந்து விட சிறிது காலத்தில் இவர்களே ஒரு தனிப்பிரிவுக்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் விருதுகளை சுமந்தவர்களாக தன் ஆசிரியரால் தரப்பட்ட அன்பளிப்புகளுடன் சொந்த ஊர் வருகிறார்கள். அவர்கள் வருவதையும், எவ்வாறு வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்ட அந்தத் தாய்  “ என் மகனை இங்கிருந்து புறப்பட்ட கோலத்திலேயே பார்க்க விரும்புகிறேன். கல்வியினால் பிரதிபலன் பெற்றவராக அல்ல “ என்று செய்தி அனுப்பினார்கள். இதைக் கேள்விப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் தங்களிடமுள்ள பரிசுகளை அனைவருக்கும் தந்து விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பி அந்தத் தாயின் மனதை குளிர வைத்தார்கள். தமது பிள்ளைகளின் மார்க்கக் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கருதும் அன்றைய பெற்றோர்களின் நிலை அவ்வாறிருந்தது







இளம் வயதிலேயே கல்வியை கற்பது சிறந்தது

عن موسى بن علي عن أبيه:أن لقمان الحكيم قال لابنه :يا بني اِبتغ العلم صغيرا فإن ابتغاء العلم يشق على الكبير (الفقيه والمتفقه للخطيب البغدادي)

லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் மகனுக்கு உபதேசம் செய்யும்போது  மகனே சிறு வயதிலேயே கல்வியைத் தேடு. ஏனெனில் பெரிதாகி விட்டால் கல்வியைக் கற்பது கடினமாகி விடும்.                      

عن ابن عباس رضي الله عنه قال:قال رسول الله صلى الله عليه وسلم حِفظُ الغلامِ كالوَشم في الحَجر عن الحسن البصري  قال:التعلم في الصغر كالنقش في الحجر-قال ابن بشران وحفظ الرجل بعدما كبر كالكتاب على الماء-قال علقمة :ما حفظتُ وأنا شاب فكأني أنظر إليه في قرطاس أو ورقة- عن معمر قال :جالست قتادة وأنا ابن أربع عشرة سنة فما سمعت منه شيئا وأنا في , ذلك السن إلا وكأنه مكتوب في صدري (الفقيه والمتفقه للخطيب البغدادي)

நபி ஸல் கூறினார்கள் சிறுவயதில் மனப்பாடம் செய்வது கல்லைக் குடைந்து வரைவது  போன்றாகும். அதாவது நன்றாகப் பதியும். மேலும் அவ்வாறே ஹஸன் பஸரீ ரஹ் அவர்களும் கூறினார்கள். இப்னு பிஷ்ரான் ரஹ் அவர்கள் கூறும்போது முதுமையை அடைந்த ஒருவர் மனப்பாடம் செய்வது தண்ணீரில் எழுதுவது போன்றாகும் என்றார்கள். அல்கமா ரஹ் அவர்கள் கூறும்போது இளமையில் நான் கற்றுக் கொண்டவை தான் இப்போதும் அதன் பக்கங்களை அப்படியே கண்ணால் பார்ப்பது போன்றே மனப்பாடமாக உள்ளன என்றார்கள். மஃமர் ரஹ் அவர்கள் கூறும்போது நான் கதாதா ரழி அவர்களுடன் 14 வயதில் கல்வி கற்க மண்டியிட்டேன். அப்போது நான் கற்றுக் கொண்டவை என் நெஞ்சில் பதிந்தது போன்று ஆகி விட்டன.  



அந்தக்  காலத்தில்  14 வயது என்பது சிறிய வயதாக கருதப் பட்டது.  ஆனால் இந்த வயது சிறுவர்களின் கையிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டதால் இந்த வயதிலும் கூட மனன சக்தி மிகவும் குறைந்து விட்டது 

உண்மைச் சம்பவம் - ஒரு மதரஸாவின் 14 வயது மாணவன் அவன் என்ன மனப்பாடம் செய்தும் ஒரு வசனம் கூட மனப்பாடம் ஆகவில்லை இறுதியில் அவனிடம் ஆசிரியர் காரணம் கேட்கும் போது அவன் சொன்ன பதில் எனக்கு 10 வயது இருக்கும் போது என்னுடைய நண்பன் செல்போனில் ஒரு ஆபாசமான காட்சியை காட்டினான் அது அப்போது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை ஆனால் இப்போது குர்ஆனை மனப்பாடம் செய்ய நினைக்கும் போது அந்த காட்சி என் கண் முன்னால் வந்து நிற்கிறது என்னால் மனப்பாடம் செய்ய முடியவில்லை என்று கூறினான்



மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாமல் போவதாலும் பூமிக்கு பல்வேறு பாதிப்புகள்..

عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ ». (ابوداود

கடைசி காலத்தில் தொழ வைப்பதற்கு இமாம் கிடைக்காமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை ஏற்படுவது அழிவு நாளின் சிறிய அடையாளங்களில் ஒன்றாகும்

 (إن من أشراط الساعة)، أي من علاماتها الصغرى الدالة على قربها. واحدها شرط بالتحريك. (أن يتدافع أهل المسجد) أي في الإمامة فيدرأ كل من أهل المسجد الإمامة عن نفسه إلى غيره، ويقول لست أهلاً لها لما ترك تعلم ما تصح به الإمامة، ولجهلهم بما يجوز ولا يجوز. (لا يجدون إماماً) أي قابلاً الإمامة. (يصلي بهم) على وجه الصحة بأداء أركانها. وواجباتها وسننها ومندوباتها. وقيلك المعنى يدفع كل من أهل المسجد الإمامة عن غيره إلى نفسه، فيحصل بذلك النزاع، فيؤدي ذلك إلى عدم الامام.  (مرعاة

கருத்து-  இமாமத், அதான் என்ற இந்த சிறந்த பணிகளை விட்டும் பலர் தூரமாகி விடுவார்கள். கடைசியில் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழ வருபவர்களில் ஒருவர் தான் இமாமத் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதற்கும் யாரும் முன் வர மாட்டார்கள். காரணம் ஒவ்வொருவரும் எனக்கு இமாமத் செய்யத் தெரியாது என்று கூறி ஒதுங்குவார்கள். கடைசியில் ஜமாஅத் நடைபெறாமல் தனித்தனியே மக்கள் தொழுது விட்டுச் செல்வார்கள்.  

ولذا أجاز المتأخرون من أصحابنا أخذ الأجرة على الإمامة والآذان ونحوهما من تعليم القرآن بخلاف المتقدمين فإنهم كانوا يحرمون الأجرة على العبادة (مرقاة

மார்க்கக் கல்வியை மக்கள் அறவே வெறுப்பதன் மூலம் மஸ்ஜித்களுக்கு இமாம் இல்லாமல் ஆகி விடக் கூடாது என்ற கவலையின் அடிப்படையில் தான் பிற்கால உலமாக்கள் இமாமத்திற்கும் அதானுக்கும் சம்பளம் வாங்குவது கூடும் என அனுமதித்தார்கள். ஆனால் முற்காலத்தில் அவ்வாறு இல்லை.                              

மார்க்கக் கல்வியின் தற்கால சூழ்நிலை. குறிப்பாக இந்தியாவில்..

 ஒரு மஹல்லாவில் சுமார் 200 முஸ்லிம் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் அதில் சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே மக்தபுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள முஸ்லிம் பிள்ளைகள் குர்ஆனின் அடிப்படைக் கல்வி கூட இல்லாமல் துன்யாவின் சிந்தனையிலேயே வளருகின்றனர். இவர்களில் பலர் பிற்காலத்தில் மாற்று மதத்தவர்களைக் காதலித்து மதம் மாறி, கோவிலுக்கோ அல்லது சர்ச்சுக்கோ சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். சில பிள்ளைகள் இதிலிருந்து தப்பித்தாலும் மார்க்கம் அறியாததால் அவர்களால் தந்தை அல்லது தாயாரின் ஜனாஸா தொழுகை நடைபெறும்போத என்ன ஓத வேண்டும் என்று கூட அறியாதவர்களாக உள்ளனர். 

இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான் மதரஸாக்களை ஒழிக்க வேண்டும் என்ற எதிரிகளின் கோஷம் ஓங்கியுள்ளது.

மார்க்கம் கற்று மார்க்கப் பற்றுடன் வாழும் பிள்ளைகளால் தான் உலகம் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"مَهْلًا عَنِ اللَّهِ مَهْلًا، لَوْلا شَبَابٌ خُشَّعٌ، وشُيُوخٌ رُكَّعٌ، وَأَطْفَالٌ رُضَّعٌ، وبَهَائِمُ رُتَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا، ثُمَّ لَرُضَّ رَضًّا". (رواه الطبراني في المعجم الكبير

அல்லாஹ்வின் வேதனைக்கு அவசரப் படாதீர். இறையச்சமுள்ள வாலிபர்களும் ருகூவு செய்து தொழும் முதியவர்களும் பால்குடிப் பருவக் குழந்தைகளும் கால்நடைகளும் இல்லா விட்டால் அல்லாஹ் எப்போதோ உலகை அழித்திருப்பான்.  


நபி (ஸல்) அவர்கள் தமது மஸ்ஜித் நபவியில் இரண்டு சபையினரை கடந்து சென்றார்கள். அப்போது, 'அவர்கள் இரு சாராருமே நன்மையான காரியத்தில்தான் உள்ளனர் (என்றார்கள்), எனினும் அவ்விருசாராரில் ஒரு சாரார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர், என்றார்கள். இதோ ஒரு சாரார் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் அவனிடம் அருளை எதிர்பார்க்கின்றனர். இறைவனை நாடினால் அவன் அவர்களுக்கு கொடுப்பான்; அல்லது கொடுக்காமலும் இருப்பான். மற்றொரு சாராரோ அவர்கள் கல்வி ஞானத்தை தானும் கற்று, அதை அறியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தாம் மிகச் சிறந்தவர்கள். நானும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகத்தான் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்' என்று கூறிவிட்டு, அந்த சபையினரிலேயே அமர்ந்து விட்டார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: தாரமீ)

'பனூ இஸ்ரவேலரைச் சார்ந்த இருவர். அவர்களில் ஒருவர் கல்வியாளர். அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றி விட்டு, மக்களிடம் அமர்ந்து அவர்களுக்கு நல்லதை கற்றுக்கொடுக்கிறார். மற்றொருவர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குகிறார். அவ்விருவரில் சிறந்தவர் யார்?' என்று நபிகளாரிடம் கேட்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'வணக்கசாலியை விட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர். நான் எப்படி உங்களை விட சிறந்தவனாக இருக்கிறேனோ அது போன்று' என பதிலுரைத்தார்கள். (நூல்: தாரமீ, திர்மிதி)

பத்ரு போரில் இறை மறுப்பாளர்களில் 70 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள். அந்தக்கால வழக்கப்படி, சிறை பிடிக்கப்பட்டவர்களில் வசதி உள்ளவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றலாம். அதன்படி வசதியானவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றனர். அப்போது, வசதியில்லாத கைதிகளுக்கு நபிகளார் ஒரு சலுகை அளித்தார். அதாவது, ஒரு கைதி 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத, வாசிக்க கற்றுக் கொடுத்தால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், மஸ்ஜித் நபவி பள்ளிவாசல் திண்ணையில் வைத்து வசதி இல்லாத எழுபதுக்கும் அதிகமான தோழர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுக்கொடுத்தார்கள். இவர்கள் 'திண்ணைத் தோழர்கள்' என்று அழைக்கப்பட்டனர்.

நண்பர்களே, கல்வியின் சிறப்பை நாம் அறிந்துகொள்வதோடு, நாமும் சிறந்த கல்வியை கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். நம்மைச் சேர்ந்தவர்களையும் கல்வி கற்கவும், பல கலைகளில் தேர்ச்சி பெறவும் ஊக்குவிக்க வேண்டும். நாம் கற்ற கல்வியை பயன்படுத்தி அதன் மூலம் நமக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பல பெறுவோம், ஆமின்.

வக்ப் சொத்துகள், சட்டங்கள்,

ஜும்ஆ பயான்கள்.*
*வக்ப் சொத்துகள், சட்டங்கள்.*
*============================*



வக்பு
https://vellimedaiplus.blogspot.com/2024/08/blog-post_8.html



வக்ப் சட்ட திருத்தம்
https://youtu.be/QzGFGEotnNk?si=aCuD-cn_QG8FJYWx






திங்கள், மார்ச் 31, 2025

ஈதுல் பித்ர் பெருநாள்,

*பெரும் நாள் + பெறும் நாள் = பெருநாள்*

ரமழான் மாதம் முழுவதும் பகலெல்லாம் பசித்திருந்து, தாகித்திருந்து, அருள் மறை குர்ஆனை அழகுபட ஓதி, ஓதக்கேட்டு இபாதத்துகளால் இரவைப்பகலாக்கி, இரவெல்லாம் விழித்திருந்து இல்லார்க்கு ஈந்து  நாளெல்லாம் நற்செயல் புரிந்த நல் இதயங்களுக்கு நாயன் அல்லாஹ் கூலி தரும் நாளே பெருநாள். அதை நாம் பெறும் நாளே பெருநாள்.

*பெருநாள் இரவில் விழித்திருந்து பெறுவோம்.*

عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ) . رواه ابن ماجه

அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். 

யார் இரு பெருநாள் இரவில் இறையருளை நாடி விழித்திருந்து வணங்குகிறார்களோ அவர்களின் இதயங்கள் பிறர் இதயம் இறக்கும் நாளில் இறக்காது. என்றார்கள். (நூல் : இப்னு மாஜா) 

இதே கருத்தைத் தழுவி உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரைத்த தகவல் ஒன்றை உபாதத் இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். 

தப்ரானி ஹதீஸ் கிதாபில் இடம் பெற்ற அந்த தகவல் கீழே. 

رواه الطبراني عن عبادة بن الصامت رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( من أحيا ليلة الفطر وليلة الأضحى لم يمت قلبه يوم تموت القلوب 

மேற்கண்ட இவ்விரு ஹதீஸைத் தழுவி இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும், இரு பெருநாள் இரவை இறை வணக்கத்தால் உயிர்ப்பிப்பது முஸ்தஹப் - உகப்பிற்குரியது என்று கூறுகிறார்கள்

وقال النووي في المجموع :

قَالَ أَصْحَابُنَا : يُسْتَحَبُّ إحْيَاءُ لَيْلَتَيْ الْعِيدَيْنِ بِصَلاةٍ أَوْ غَيْرِهَا مِنْ الطَّاعَاتِ ، وَاحْتَجَّ لَهُ أَصْحَابُنَا بِحَدِيثِ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم : ( مَنْ أَحْيَا لَيْلَتَيْ الْعِيدِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ ) وَفِي رِوَايَةِ الشَّافِعِيِّ وَابْنِ مَاجَهْ : ( مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ تَعَالَى لَمْ يَمُتْ قَلْبُهُ حِينَ تَمُوتُ الْقُلُوبُ

கல்விக்கடல் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் அதேகருத்தை வலியுறுத்தி வஸீத் என்ற தம் நூலில் எழுதியுள்ளார்கள்.

ذكر الإمام أبو حامد الغزالي في كتابه الوسيط في فقه الشافعية سنن العيد فذكر منها إحياء ليلته بالعبادة. واستدل على ذلك بقول النبي –صلى الله عليه وسلم- “من أحياء ليلة العيد لم يمت قلبه يوم تموت القلوب” قال ابن الصلاح: إحياء ليلتي العيد جاء فيه ما ذكر.

*துஆக்கள் மறுக்கப்படாத இரவுகள்*

عن ابن عمر رضي الله عنهما قال: «خمس ليال لا يرد فيهن الدعاء: ليلة الجمعة، وأول ليلة من رجب، وليلة النصف من شعبان، وليلة العيد، وليلة النحر.
(رواه الديلمي في "مسند الفردوس)

ஐந்து இரவுகள் அவற்றில் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை.

1) ஜுமுஆவின் இரவு.
2) ரஜப் மாதத்தின் முதல் இரவு.
3) ஷஃபான் மாதத்தின் மத்திய இரவு.
4) நோன்புப் பெருநாள் இரவு.
5) ஹஜ்ஜுப் பெருநாள் இரவு.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் : தைலமி 

قال الإمام الشافعي –رحمه الله -: “وبلغنا أنه كان يقال: الدعاء يستجاب في خمس ليال: في ليلة الجمعة، وليلة الأضحى، وليلة الفطر، وأول ليلة من رجب، وليلة النصف من شعبان”.

இந்த தகவலை வலியுறுத்தும் விதமாக சட்ட மேதை இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அவர்களும்  இதை கூறியுள்ளார்கள். 

*புகாரி இமாம் உரூஸ் தினம்*

ஷவ்வால் பிறை ஒன்று நம் கொண்டாட்டங்களின் நடுவே நினைவு கூறப்பட வேண்டியவர்கள் இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். 

ஆம்! இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று தான் அல்லாஹ்வை அடைந்தார்கள். 

அவர்களின் உரூஸ் தினத்தில் அவர்களின் மேன்மையைப் போற்றுவோம். 

*பெருநாள் காலையில்* 

من قال يوم العيد قبل الشمس سبحان الله وبحمده 300 مرة ووهبهن لاموات نور وحمل له الملك ألف نور  فيدخله في قبره يوم يموت

யார் பெருநாள் அன்று சூரியன் உதிக்கும் முன் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று முன்னூறு முறை ஓதி அதை மரணித்துவிட்ட முஸ்லிம்களின் ஆன்மாக்களுக்கு சேர்த்து வைத்தாரோ, அந்த ஒவ்வொரு கப்ரிலும் ஆயிரம் ஒளிகள்  நுழைகின்றன.   அவர் மரணித்த பின் ஒரு மலக்கு ஆயிரம் பேரொளிகளுடன் அவர் கப்ரில் நுழைவார். 
 நூல் : துஹ்ஃபதுல் இக்வான்.

பெருநாள் அன்று கடைப்பிடிக்க வேண்டிய சுன்னத்தான காரியங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.......


🏵️ அதிகாலையில் எழுந்து விட வேண்டும்..அதில் பரகத் இருக்கிறது

🏵️ மிஸ்வாக் செய்ய வேண்டும் அது ஒரு சுன்னத்தாகும்..

🏵️ பஜ்ர் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தவறாமல் தொழ வேண்டும்.

🏵️ ஈதுல் பித்ர் தொழுகைக்காக குளிக்கிறேன் என நிய்யத் செய்து குளிப்பது.

🏵️ புத்தாடையோ அல்லது இருப்பதில் நல்ல ஆடையையோ அணிவது.

🏵️ நறுமணம் பூசிக்கொள்வது

🏵️ மார்க்கத்துக்கு முரண் ஆகாதவாறு அலங்காரம் செய்து கொள்வது.

🏵️ ஒற்றைப்படையாக பேரீத்தம்பழமோ அல்லது வேறு இனிப்போ சாப்பிடுவது.

🏵️ பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஸதகத்துல் பித்ர் (90ரூபாய் அல்லது அதை விட அதிகம்) நோன்பு பெருநாள் தர்மத்தை கொடுப்பது.

🏵️ பிறை பார்த்ததில் இருந்து பெருநாள் தொழுகை முடியும் வரை அதிகதிமாக தக்பீர் ஓதிக் கொள்வது..

🏵️ உறவினர்களை சந்தித்து பெருநாள் வாழ்த்துக்கள் சொல்வது.

🏵️ எல்லோருடனும் முஸாபஹா செய்வது .


🏵️ அக்கம் பக்கத்தில் உணவு களை பரிமாறிக் கொள்வது. இதும் ஒரு சுன்னதாகும்.

🏵️ பெருநாள் தொழுகைக்கு போகும்போது ஒரு பாதையிலும் வரும்போது ஒரு பாதையிலும் வருவது.

🏵️ அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்ய வேண்டும்..

🏵️ பெருநாளைக்கு அடுத்த நாளிலிருந்து (ஷவ்வால் மாதம்)6 நோன்பு வைப்பது...

குறிப்பாக இக்கால சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை இவையெல்லாம் நீங்கி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் இன்னும் குறிப்பாக உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய சமுதாய மக்கள் பாதுகாக்கப்படவும், ஈருலகிலும் வெற்றி பெறுகின்ற மக்களாக ஆகுவதற்கும் துஆ செய்யுங்கள்.....

பிரபல்யமான பதிவுகள்