роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

родிроЩ்роХро│், роЖроХро╕்роЯ் 14, 2017

роХுро░்рокாройி,

குர்பானியின் பின்னனி...
இப்ராஹீம் (அலை) அவர்கள் 85 வருடங்களுக்கு பிறகு இஸ்மாயில் (அலை) அவர்களை பெற்றடுக்
கிறார்கள். வாழ்விலே பல சோதனையைக்கண்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகப் பெரிய சோதனையாக தன் மகனை அறுத்து பலியிடுவதாக கனவுக் காண்கிறார்கள். இது மிகப் பெரிய சோதனை என அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். கண்ட கனவை தன் மகனிடம் சொல்கிறார்கள். கண்ட கனவு உண்மையென்றால் அதை அப்படியே நிறை வேற்றுவீராக! என மகன் உணர்வுபூர்வமாக சொல்ல, அதை நிறைவேற்ற தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் முனைந்த போது தான், நபியே நீர் கண்ட கனவை உண்மை படுத்தி விட்டீர், எனவே உன் மகனுக்கு பகரமாக இந்த ஆட்டை குர்பானி கொடு என வானில் இருந்து ஜீப்ரயில் (அலை) அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு வந்தார்கள். 5000 வருடங்களுக்கு முன் ஒரு குடும்பம் செய்த தியாகம் தான் இன்று நமக்கு ஹஜ்ஜூப் பெருநாளாக, தியாக திருநாளாக, குர்பானியை நிறைவேற்றும் நன்னாளாக அமைந்திருக்கிறது.

குர்பானியின் சிறப்பு ...
குர்பானி இப்ராஹீம் (அலை) அவர்களின் சுன்னத்தாகும். குர்பானி பிராணியின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நண்மையுண்டு.

குர்பானி கொடுக்கும் நாளில் சிறந்த அமல் குர்பானி கொடுப்பது தான்.
துல்ஹஜ் பிறை 10-ல் மனிதன் செய்யும் குர்பானியை விட வேறெந்த செயலும் அல்லாஹ்விடம் விருப்பமுடையதாக இருக்காது.
குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு தனது கொம்புடனும், குளம்புடனும், முடியுடனும், கியாமத் நாளில் வரும். அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அது அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்டு விடுகிறது. சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்க அதுவே வாகனமாக அமையும்.எனவே பரிபூரணமான மகிழ்வுடன் குர்பானியை நிறைவேற்றுங்கள் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். நூல் திர்மிதி.

குர்பானி பிராணிகள்...
1) செம்மறி ஆடு,ஒரு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அல்லது கொழுத்த தாக இருந்தால் 6 மாதமே உள்ள ஆடு போதும்.
2) வெள்ளாடு, 1 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
3) மாடு., 2 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
4) ஒட்டகம்., 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
கோழி, வாத்து, மீன் போன்ற அன்றாடம் சாப்பிடும்  பிரானிகளை குர்பானி கொடுப்பது கூடாது.

யார் மீது கடமை?

ஹஜ், ஜகாத், பித்ரா செய்ய கடமைப்பட்டவர்கள் மீது குர்பானி செய்வது வாஜிபாகும்.
குர்பானி செய்ய வசதி பெற்றிருந்தும் எவர் குர்பானி கொடுக்கவில்லையோ அவர்கள் நமது தொழுமிடத்திற்கு வர வேண்டாம் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
குர்பானி நாளில் அதற்கு பகரமாக வேறு சதகா செய்வது கூடாது.
தனது மனைவி , குழந்தைகளுக்காக குர்பானி கொடுப்பது கணவன், தந்தை மீது கடமையல்ல.

எதுவரை கொடுக்கலாம்?...

துல்ஹஜ் பிறை 10, 11, 12, ஆகிய மூன்று நாட்கள் வரை கொடுக்கலாம்.
ஷாஃபியீ பிறை 13 வரை கொடுக்கலாம்.
  
குறை கூடாது...
1) மூக்கு அறுப்பட்டது.
2) புற்பூண்டு சாப்பிட முடியாத அளவு நாக்கு அறுப்பட்டது.
3) ஒரு மடியில் பால் வராமல் இருத்தல். (ஆடு)
4) மாடு, ஒட்டகம் போன்றதில் இரு மடியில் பால் வராமல் இருத்தல்.
5) மடியில் காயம், மடி துண்டிக்கப்பட்டு .கன்று பால் குடிக்க முடியாத நிலை.
6) கண்கூடாக தெரியும் நோய்.
7) அரவாணி, ஷாஃபியிடம் கூடும்.
8) குருடாக இருத்தல்,ஒற்றைக் கண் உள்ளதாக இருத்தல், ஒரு கண்ணின் பார்வையில் 3-ல் ஒரு பாகம் அளவு அல்லது அதைவிட அதிகமாக பார்வை குறைப்பட்டிருத்தல் .
9) 3-ல் ஒரு பகுதி அல்லது அதைவிட அதிகமாக வால் துண்டித்திருப்பது.
10) கால் ஊனமான பிரானி, 3 கால்களில் மட்டுமே நடக்கிறது என்றால் கூடாது.
ஊனமுற்ற காலில் நடந்தால்  கூடும்.
11) அறுக்கும் இடம் வரமுடியாத அளவு நோய் இருத்தல்.
12) அனைத்து பல்லும் இல்லாமல் இருத்தல், அல்லது தீனியை மெல்ல முடியாத அளவு இருத்தல்.
13) பிராணிக்கு கொம்பு இல்லாவிட்டாலும் கொடுக்கலாம். மூளைக்கு அதனால் பாதிப்பு இருந்தால் கூடாது.
14) மாறுகண், பைத்தியம், சொறி கூடும்.
15) மலட்டு பிராணி கூடும்.

எது கொடுப்பது சிறப்பு ..
1) காயடிக்கப்பட்ட பிராணி, இறைச்சி நன்றாக இருக்கும்.
2) விலை உயர்ந்த பிராணி.
3) வெள்ளாடு, ஒட்டகம், மாடு, பெண் சிறந்தது.

கர்ப்பம் .....
இது குறையல்ல, கொடுக்கலாம். எனினும் பேறு காலத்திற்கு நெருக்கமான பிராணியை அறுப்பது மக்ருஹ்.
குட்டி வெளியே வந்தால் அதை அறுத்து சாப்பிடலாம்.

அறுப்பதின் சட்டம்...
1) அறுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்.
2) குர்பானி கொடுப்பதை நிய்யத் செய்வது.
3) பிஸ்மில்லாஹ் சொல்லி அறுப்பது. இன்னீ வஜ்ஜஃத்தும் ஒதிக் கொள்ளலாம்.
4) தொண்டை குழிக்கு மத்தியில் உள்ள இரண்டு இரத்தக் குழாய், மூச்சுக்குழாய், உணவுக்குழாய், ஆகிய 4 குழாய்களை துண்டிக்க வேண்டும்.

குர்பானியின் ஒழுக்கம் ....

1) கத்தியை முன்பே தீட்டி வைக்க வேண்டும்.பிராணிகள் முன் தீட்டக் கூடாது.
2) அறுக்கும் சமயம் வேறு பிராணிகள் முன்னால் இருப்பது கூடாது.
3) அறுத்த பிறகு பிராணியின் சூடு ஆறுவதற்கு முன் தோலை உரிப்பதோ, கறியை துண்டுப் போடுவதோ கூடாது.

குர்பானி இறைச்சி .....
3 பங்காக ஆக்க வேண்டும்.
1) ஒரு பங்கு தனக்கும் .
2) ஒரு பங்கு ஏழைகளுக்கும்,
3) உறவினர்களுக்கு ஒரு பங்கும் கொடுக்க வேண்டும்.
பிற மதத்தவர்களுக்கு கொடுப்பது குற்றமல்ல. ஆனால் கறியாக  கொடுப்பதை விட சமைத்து கொடுப்பது சிறப்பு.

குர்பானி தோல்... .
1) விரிப்பு போன்றதற்கு தனக்காக பயன்படுத்தலாம்.
2) ஏழைகளுக்கு தர்மம் செய்யலாம் .
3) விற்பனை செய்தால் அதை ஸதகா செய்து விட வேண்டும்.
4) மதரஸா மாணவர்களுக்கு கொடுக்கலாம்.
5) குர்பானி தோலை யோ, அதன் கிரயத்தையோ, எவ்வகையான கூலியாகவோ, அறுப்புக் கூலியாகவோ கொடுப்பது கூடாது.
6) மஸ்ஜித், மதரஸா, கட்டிடத்திற்கு செலவிடக் கூடாது.
7) டேக்ஸ், வரி போன்றதற்கு கொடுப்பது கூடாது.

சாப்பிடக்கூடாதவை...
1) ஆண்குறி
2) பெண்குறி
3) விறைகள்
4)கழலைக் கட்டி
5) மூத்திரப்பை
6) பித்தப்பை
7) இரத்தம்.
இவைகள் பங்கிடுவதிலும் சேராது.
     
கூட்டுக் குர்பானி.....
1) மாடு, ஒட்டகத்தில் 7 பேர் கூட்டு சேரலாம். ஆட்டில் கூடாது.
2)குர்பானியல் கூட்டு சேர்பவர்களின் நிய்யத் குர்பானியின் நிய்யத் இருக்க வேண்டிய அவசியமில்லை. இபாதத் உடைய நிய்யத் இருந்தாலே போதும், எனவே ஒருவர் அகீகா, மற்றொருவர் குர்பானியை நாடியிருந்தால் கூடி விடும்.
ஆனால் இறைச்சிக்காக கூட்டு சேர்வது கூடாது.

3) பிராணியை வாங்கும் முன், அல்லது நடுவில் , கடைசியில் எப்போது வேண்டுமானால் கூட்டு சேரலாம். ஆனால் அறுத்த பின் கூட்டு சேர்வது கூடாது.

4)யாராவது கூட்டில் இறந்து விட்டால் வாரிசுதாரர் அனுமதியளித்தால் கொடுக்கலாம்.

5)கூட்டுக் குர்பானி கறியை எடைப் போட்டுத்தான் பிரிக்க வேண்டும். தோராயமாக பிரிப்பது கூடாது.
ஆனால் கூட்டை விட தனியாக குர்பானி கொடுப்பது தான் சிறந்தது.

சில சட்டங்கள் ...
1) குர்பானி கடமையல்லாதவர் கடன் வாங்கி கொடுத்தாலும் கூடும். கடனை திருப்பிக் கொடுப்பது சிரமம் என்றால் கூடாது.
2) குர்பானி பிராணி காணாமல் போனால், திருடப்பட்டால், மரணித்துவிட்டால், வேறு பிராணியை  வாங்கி அறுப்பது கடமையாகும்.
3) பிராணியை குர்பானி கொடுக்காமல் விட்டு விட்டால் "களா" செய்ய வேண்டும். அதாவது பிராணியின் விலை மதிப்பில் தர்மம் செய்ய வேண்டும்.
4) இரவு நேரங்களிலும் குர்பானி கொடுக்கலாம்.
5) பிறை 9 ஆம் நாள் ஃபஜ்ர் தொழுகையிலிருந்து பிறை 13 அஸர் வரை தொழுகைக்குப் பின் தக்பீர் கூறுவது வாஜி பாகும்.

நாம் கொடுக்கும் குர்பானியின் கறியையோ, இரத்தத்தையோ அல்லாஹ் நாடுவதில்லை. மாறாக இறையச்சத்தை மட்டும் தான் அல்லாஹ் பார்க்கிறான்

மேலும்  குர்பானி பற்றி

குர்பானி

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்