*கண்ணியமிக்க கத்ர் இரவு*
*பிறை 27*
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
லைலத்துல் கத்ரை ரமழான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் தேடி கொள்ளுங்கள்!
அறிவிப்பாளர் :ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா.
நூல்: புகாரி
எண்:2020
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
*கத்ர் இரவு என்பது ரமழான் மாதத்தின் 27 ஆம் நாள் இரவாகும்*.
அறிவிப்பாளர் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு.
நூல்: அபூதாவூத்.
எண்:1386
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் கத்ர் இரவை தேடினால் *27 ஆம் நாள் இரவில்* அதை தேடி கொள்ளட்டும்!
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு.
நூல்: அஹ்மத்
எண்:4808
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து கூறினார்:
யாரசூலல்லாஹ்! நான் முதுமை யானவன். மேலும் நோயாளியாகவும் உள்ளேன்.
எல்லா இரவுகளிலும் நின்று தொழுவது எனக்கு சிரமமாக உள்ளது. எனவே ஒரு இரவை எனக்கு அறிவித்துக் கொடுங்கள்! அந்த இரவை கத்ர் இரவாக இறைவன் எனக்கு ஆக்கி வைப்பான் என்று நம்புகிறேன்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(கடைசி பத்தில்) *ஏழாவது நாள் இரவை* எடுத்துக் கொள்ளுங்கள்!
அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு
நூல்: அஹ்மத்
எண்:2149
(கடைசி பத்தில் ஏழாவது நாள் என்பது 27ஆம் நாள் இரவாகும்)
உபை இப்னு கஃ-ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்:
*நிச்சயமாக கத்ர் இரவு என்பது 27ஆம் நாள் இரவாகும்*.
அவர்களிடம் கேட்கப்பட்டது: எவ்வாறு இதை உறுதி பட கூறுகிறீர்கள் ?
அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அடையாளத்தை வைத்துக் கூறுகிறேன்.
பிறகு அவர்களிடம் கேட்கப்பட்டது:
அந்த அடையாளம் எது?
உபை இப்னு கஃ-ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில் கூறினார்கள்:
அன்றைய இரவு கழிந்து சூரியன் உதிக்கின்ற போது சூரிய ஒளி மங்களாக இருக்கும்.
அறிவிப்பாளர்:ஸிர்ர் இப்னு ஹுபைஸ் ரழியல்லாஹு அன்ஹு
நூல்: முஸ்லிம்.
எண்:762
*27ஆம் இரவில் முழு வணக்கம்*
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதம் 23ஆம் நாள் இரவில் மூன்றில் ஒரு பகுதி அளவிற்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்
25 ஆம் நாள் இரவில் பாதி இரவு அளவிற்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.
*27 ஆம் நாள் இரவில்* எங்களுக்கு ஸஹ்ர் உணவு தப்பி விடுமோ என்று நாங்கள் கருதுகின்ற அளவிற்கு இரவு முழுவதும் எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு.
நூல்: நசாயீ.
எண்:1606
(ரமழான் மாதம் 27 ஆம் நாள் இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது நபி வழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கிறது)
ரமழான் மாதம் இருபத்தி மூன்றாம் நாள் இரவில் மூன்றில் ஒரு பகுதி அளவிற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நின்று நாங்கள் தொழுதோம்.
தொழுகையை முடித்துவிட்டு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(தோழர்களே!) எதை நீங்கள் தேடுகிறீர்களோ அது உங்களுக்கு பின்னால் உள்ளது .
25ஆம் நாள் இரவில் பாதி இரவு அளவிற்கு தொழுதோம். தொழுகையை முடித்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(தோழர்களே!) எதை நீங்கள் தேடுகிறீர்களோ அது உங்களுக்கு பின்னால் உள்ளது.
*27 ஆம் நாள் இரவில்*
முழு இரவும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தொழுதோம்.
தொழுகையை முடித்து இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதையும் கூறாமல் மௌனமாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் ரழியல்லாஹு அன்ஹு.
நூல்: அஹ்மத்.
எண்:21566
அபூதாவூத் .எண்:1375
நஸாயீ . எண்:1364
(23ஆம் நாள் இரவிலும் 25ஆம் நாள் இரவிலும் நீங்கள் தேடுகின்ற லைலத்துல் கத்ர் பின்னால் வரவிருக்கிறது என்று கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 27 ஆம் நாள் இரவில் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தது கத்ர் இரவு 27 ஆம் நாள் இரவு தான் என்பதை அறிவிக்கிறது.)
(மேலும் ரமலான் மாதம் 27 ஆம் நாள் இரவு முழுவதும் இபாதத் மற்றும் அமல்களில் ஈடுபடுவது நபி வழி என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கிறது)
*கத்ர் இரவில் சிறப்புத்தொழுகை*
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
லைலத்துல் கத்ர் அன்று இறைநம்பிக்கையோடும் நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும் யார் நின்று வணங்குகிறார்களோ அவர்களுடைய முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்.
அறிவிப்பாளர்:அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு
நூல்:புகாரீ . எண்:1901
முஸ்லிம் . எண்:760
*கத்ர் இரவில் துஆ*
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன்:
யா ரசூலல்லாஹ்! லைலத்துல் கத்ர் இரவை நான் அறிந்து கொண்டால் அந்த இரவில் நான் என்ன ஓத வேண்டும்?
( ஆயிஷாவே!) நீங்கள் கூறுங்கள்:
அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃ-ஃபு அன்னீ.
இறைவனே! நிச்சயமாக நீ மன்னிப்பாளனாக இருக்கிறாய். மன்னிப்பதை விரும்பவும் செய்கிறாய். எனவே என்னை மன்னிப்பாயாக!
அறிவிப்பாளர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா.
நூல்: திர்மிதி
எண்:3513
இப்னு மாஜா. எண்:3850
*கத்ர் இரவின் மாண்பை அடைகின்ற நல்லடியார்கள் கூட்டத்தில் எல்லாம் வல்ல இறைவன் நமது அனைவரையும் சேர்த்து அருள்வானாக!
ஆமீன்!**லைலதுல் கத்ர்* இரவின் *13 அடையாளங்கள்*. அவை பின்வருமாறு.
1) 🌅 லைலதுல் கத்ர் இரவானது ஒளி வீசும் நிலவுள்ள இரவைப் போன்று காட்சி அளிக்கும்.
♦️2) 🌙 லைலதுல் கத்ர் இரவில் இலகுவானதாகவும் ஒளிமயமானதாகவும் இருக்கும். உணவுத் தட்டின் பாதித்துண்டைப் போன்று நிலா தோன்றும்.
♦️3) 🌴 லைலதுல் கத்ர் இரவில் (மரம் செடி கொடிகள்) அமைதியான காட்சி அளிக்கும்.
♦️4) 🏔️ லைலதுல் கத்ர் இரவில் சூடோ குளிரோ இருக்காது.
♦️4) 🌠 லைலதுல் கத்ர் இரவில் நட்சத்திரம் எரிந்து விழாது.
♦️5) 🐕 லைலதுல் கத்ர் இரவில் நாய் குரைக்காது.
♦️6) 🌧️ லைலதுல் கத்ர் இரவில் மழை பொழியும்
♦️7) 💧 லைலதுல் கத்ர் இரவில் சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும்.
♦️8) 🌋 லைலதுல் கத்ர் இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்.
♦️9) 🌄 லைலதுல் கத்ர் இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் உதிக்கும் போது சுடர் அதிகமின்றி பிறையைப் போன்று இருக்கும்.
♦️10) 👪லைலதுல் கத்ர் இரவு முழுவதும் நலவுதான் நடைபெறும், அதன் ஆரம்பத்திலிருந்து அதிகாலை வரை எவ்வித கெடுதிகளும் ஏற்படாது.
♦️11) 🐓 லைலதுல் கத்ர் இரவில் சேவல் (மெதுமையாக) கூவும். காரணம் அன்றைய இரவில் வானவர்கள் அதிகளவில் இறங்குகின்றனர்.
♦️12) 🌒 அன்றைய தினத்தில் சூரியன் சந்திரனைப் போன்று ஜுவாலையின்றிக் நேராகக் கிளம்பும்.
♦️13) ☠️ அன்றைய தினத்தில் சூரியன் உதிக்கும் போது ஷைத்தான் வெளியேற மாட்டான்.
நூல் ஆதாரம் 📖 :- முஸ்லிம் 1397, இப்னு குஸைமா: 2190, இப்னு ஹிப்பான் 3688, மஜ்மஃவுஸ் ஜவாயிது 1356