பட்டா மாறுதல்.. வீட்டிலிருந்தே ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்ய முடியுமா? இதோ தமிழக அரசு சூப்பர் வசதினை:
அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் பல துறைகளின் சேவைகள் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தவகையில் பட்டா மாறுதலும் ஆன்லைனில் ஆரம்பமாகி உள்ளது.
பட்டா என்பது வீடு, நில உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாகும். ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் இந்த ஆவணத்தை வருவாய் துறை வழங்குகிறது... இந்த ஆவணத்தில், ஓனரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி குறித்த விவரங்கள் இருக்கும்.
பட்டா மாறுதலும் உடனடியாக செய்யப்படும். இதில் இடைத்தரகர்களுக்கும் வேலையில்லை.. இந்த இணையதளத்தில் எப்படி பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்வது தெரியுமா?
பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள் (ஏதாவது ஒன்று):
- கிரையப் பத்திரம்
- செட்டில்மெண்ட் பத்திரம்
- பாகப்பிரிவினை பத்திரம்
- தானப்பத்திரம்
- பரிவர்த்தணை பத்திரம்
- விடுதலை பத்திரம்
ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை குடியிருப்பு ஆவணங்கள் (ஏதாவது ஒன்று) ஆதார் அட்டை, தொலைப்பேசி ரசீது, மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை
எப்படி பட்டா மாற்றுவது: முதலில்
www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம். இந்த வெப்சைட்டிற்கு சென்றதுமே, உங்களது பெயர், செல்போன் நம்பர், இ-மெயில் அட்ரஸ் தந்து பதிவு செய்ய வேண்டும். பிறகு, பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டியது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு, உங்களது சுயவிவரங்களையும், நிலத்தின் விவரங்களையும் பதிவிட வேண்டும். அதாவது, அது எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே நம்பர் மற்றும் சப்-டிவிஷன் நம்பர் என பிழையில்லாமல் பதிவு செய்ய வேண்டும்.
அதற்கு பிறகு, சம்பந்தப்பட்ட நிலம் உங்களுக்கு சொந்தமானதற்கு என்ற சான்றான, கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக, உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு வரிகள் இல்லாமல் ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
பட்டா மாறுதல்: இப்போது, உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும்... அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்யப்படும்..!!