கடலும் துஆவும்
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87)
யூனுஸ் அலை ஓதிய துஆவை சோதனையான நேரத்தில் ஓதும் முஃமின்கள் அனைவருக்கும் ஈடேற்றம் கிடைக்கும்
فضائل دعاء يونس:عَنْ سَعْدٍ رضي الله عنهقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْوَةُ ذِي النُّونِ إِذْ دَعَا وَهُوَ فِي بَطْنِ الْحُوتِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنْ الظَّالِمِينَ فَإِنَّهُ لَمْ يَدْعُ بِهَا رَجُلٌ مُسْلِمٌ فِي شَيْءٍ قَطُّ إِلَّا اسْتَجَابَ اللَّهُ لَهُ (ترمذي) بَاب مَا جَاءَ فِي عَقْدِ التَّسْبِيحِ بِالْيَدِ- كِتَاب الدَّعَوَاتِ
فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ (88) أَيْ إِذَا كَانُوا فِي الشَّدَائِد وَدَعَوْنَا مُنِيبِينَ إِلَيْنَا وَلَا سِيَّمَا إِذَا دَعَوْا بِهَذَا الدُّعَاء فِي حَال الْبَلَاء..
மேற்படி திக்ரை மன ஓர்மையுடன் ஓதிய உஸ்மான் ரழி அவர்கள்
عن سَعْد اِبْن أَبِي وَقَّاص رَضِيَ اللَّه عَنْهُ قَالَ مَرَرْت بِعُثْمَان بْن عَفَّان رَضِيَ اللَّه عَنْهُ فِي الْمَسْجِد فَسَلَّمْت عَلَيْهِ فَمَلَأَ عَيْنَيْهِ مِنِّي ثُمَّ لَمْ يَرُدّ عَلَيَّ السَّلَام فَأَتَيْت عُمَر بْن الْخَطَّاب فَقُلْت يَا أَمِير الْمُؤْمِنِينَ هَلْ حَدَثَ فِي الْإِسْلَام شَيْء مَرَّتَيْنِ قَالَ لَا وَمَا ذَاكَ قُلْت لَا إِلَّا أَنِّي مَرَرْت بِعُثْمَان آنِفًا فِي الْمَسْجِد فَسَلَّمْت عَلَيْهِ فَمَلَأَ عَيْنَيْهِ مِنِّي ثُمَّ لَمْ يَرُدّ عَلَيَّ السَّلَام قَالَ فَأَرْسَلَ عُمَر إِلَى عُثْمَان فَدَعَاهُ فَقَالَ مَا مَنَعَك أَنْ لَا تَكُون رَدَدْت عَلَى أَخِيك السَّلَام قَالَ مَا فَعَلْت قَالَ سَعْد قُلْت بَلَى حَتَّى حَلَفَ وَحَلَفْت قَالَ ثُمَّ إِنَّ عُثْمَان ذَكَرَ فَقَالَ بَلَى وَأَسْتَغْفِر اللَّه وَأَتُوب إِلَيْهِ إِنَّك مَرَرْت بِي آنِفًا وَأَنَا أُحَدِّث نَفْسِي بِكَلِمَةٍ سَمِعْتهَا مِنْ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لَا وَاَللَّه مَا ذَكَرْتهَا قَطُّ إِلَّا تَغْشَى بَصَرِي وَقَلْبِي غِشَاوَة قَالَ سَعْد فَأَنَا أُنَبِّئك بِهَا إِنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ لَنَا أَوَّل دَعْوَة ثُمَّ جَاءَ أَعْرَابِيّ فَشَغَلَهُ حَتَّى قَامَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّبَعْته فَلَمَّا أَشْفَقْتُ أَنْ يَسْبِقنِي إِلَى مَنْزِله ضَرَبْتُ بِقَدَمِي الْأَرْض فَالْتَفَتَ إِلَيَّ رَسُول اللَّه فَقَالَ "مَنْ هَذَا أَبُو إِسْحَاق" قَالَ قُلْت نَعَمْ يَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "فَمَه " قُلْت لَا وَاَللَّه إِلَّا أَنْ ذَكَرْت لَنَا أَوَّل دَعْوَة ثُمَّ جَاءَ هَذَا الْأَعْرَابِيّ فَشَغَلَك قَالَ " نَعَمْ دَعْوَة ذِي النُّون إِذْ هُوَ فِي بَطْن الْحُوت "لَا إِلَه إِلَّا أَنْتَ سُبْحَانك إِنِّي كُنْت مِنْ الظَّالِمِينَ" فَإِنَّهُ لَمْ يَدْعُ بِهَا مُسْلِم رَبّه فِي شَيْء قَطُّ إِلَّا اِسْتَجَابَ لَهُ "(مسند أحمد-باب:مسند سعد بن ابي وقاص
ஸஃது இப்னு அபீ வக்காஸ் ரழி அவர்கள் ஒரு முறை மஸ்ஜிதில் உஸ்மான் ரழி அவர்களை பார்த்து ஸலாம் கூற, அப்போதுஏதோ ஓதிக் கொண்டிருந்த உஸ்மான் ரழி அவர்கள் ஸஃது ரழி அவர்களை நன்றாக பார்த்த பிறகும் ஸலாமுக்கு பதில் கூறாமல் இருந்து விட, உடனே ஸஃது ரழி அவர்கள் ஜனாதிபதி உமர் ரழி அவர்களிடம் இஸ்லாத்தில் ஏதேனும் புதிய கட்டளைகள் வந்துள்ளதா ? என்று கூறி முறையிட, உடனே அவர்கள் உஸ்மான் ரழி அவர்களை அழைத்து விசாரிக்கிறார்கள் அப்போது உஸ்மான் ரழி அவர்கள் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என மறுக்க, ஸஃது ரழி அவர்கள் நடந்ததை சத்தியமிட்டு கூறிய போது, சற்று யோசித்து விட்டு உஸ்மான் ரழி அவர்கள் “ நான் யூனுஸ் அவர்களுடைய துஆவை மன ஓர்மையுடன் ஓதிக் கொண்டிருந்ததால் என் கண்கள் குருடாகி விட்டதைப் போன்றாகி விட்டது. என் உள்ளம் முழுவதும் அந்த தஸ்பீஹ் நிரம்பி இருந்ததால் நீங்கள் ஸலாம் சொன்னதை நான் கவனிக்கவில்லை என உஸ்மான் ரழி கூறிவிட்டு, அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பும் கேட்டார்கள். அப்போது ஸஃது ரழி அவர்கள் அந்த துஆவைப் பற்றி தனக்குத் தெரிந்த தகவலையும் கூறுகிறார்கள். அதாவது நபி ஸல் அவர்கள் ஒரு முறை “ முதல் துஆ...என்று ஏதோ துஆவின் சிறப்பை சொல்ல ஆரம்பித்த போது ஒரு கிராமவாசி வந்து ஏதோ கேட்டு, நபி ஸல் அவர்களின் கவனத்தை திசை திருப்ப, நபி ஸல்அவர்கள் அவர் பின்னால் சென்று விட்டார்கள்.நபி ஸல் வீட்டுக்குப்புறப்படும் போது நான் என் காலால் தரையில் தட்டி அவர்களுக்கு நினைவூட்டினேன்.அப்போது தான் அவர்கள் மீன் வயிற்றுக்குள் நபி யூனுஸ் அலை ஓதிய துஆ தான் அந்த துஆ..எவர் அதை ஓதி துஆ கேட்பாரோ அவருடைய கோரிக்கை நிறைவேறும் என்றார்கள்.
நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அந்த துஆவைக் கேட்க காரணமாக இருந்த சம்பவம்
قَالَ اِبْن مَسْعُود وَابْن عَبَّاس وَغَيْرهمَا رضي الله عنهم وَذَلِكَ أَنَّهُ ذَهَبَ بِهِ الْحُوت فِي الْبِحَار يَشُقّهَا حَتَّى اِنْتَهَى بِهِ إِلَى قَرَار الْبَحْر فَسَمِعَ يُونُس تَسْبِيح الْحَصَى فِي قَرَاره فَعِنْد ذَلِكَ وَهُنَالِكَ قَالَ "لَا إِلَه إِلَّا أَنْتَ سُبْحَانك إِنِّي كُنْت مِنْ الظَّالِمِينَ" وقيل" فَلَمَّا اِنْتَهَى بِهِ إِلَى أَسْفَل الْبَحْر سَمِعَ يُونُس حِسًّا فَقَالَ فِي نَفْسه مَا هَذَا ؟ فَأَوْحَى اللَّه إِلَيْهِ وَهُوَ فِي بَطْن الْحُوت إِنَّ هَذَا تَسْبِيح دَوَابّ الْبَحْر قَالَ وَسَبَّحَ وَهُوَ فِي بَطْن الْحُوت وَقَالَ عَوْف الْأَعْرَابِيّ لَمَّا صَارَ يُونُس فِي بَطْن الْحُوت ظَنَّ أَنَّهُ قَدْ مَاتَ ثُمَّ حَرَّكَ رِجْلَيْهِ فَلَمَّا تَحَرَّكَتْ سَجَدَ مَكَانه ثُمَّ نَادَى يَا رَبّ اِتَّخَذْت لَك مَسْجِدًا فِي مَوْضِع لَمْ يَبْلُغهُ أَحَد مِنْ النَّاس وَقَالَ سَعِيد بْن أَبِي الْحَسَن الْبَصْرِيّ مَكَثَ فِي بَطْن الْحُوت أَرْبَعِينَ يَوْمًا (تفسير ابن كثير
ஆழ்கடல் இருட்டுக்குள் அவர்கள் இருந்த நேரத்தில் ஆழ்கடலில் உள்ள பொடிக்கற்களும் தஸ்பீஹ் செய்வதைக் கண்டார்கள். அப்போது நபி யூனுஸ் அலை அவர்களின் உள்ளத்தில் நாமும் நம்முடைய சோதனை நீங்க துஆச் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. மற்றொரு அறிவிப்பில் எந்த மீனின் உடம்புக்குள் நபி யூனுஸ் அலை இருந்தார்களோ அதற்குள்ளே சில சப்தங்களைக் கேட்டார்கள். ரப்பே இது என்ன என்று அல்லாஹ்விடம் கேட்க, இவை கடல் வாழ் உயிரிணங்களின் தஸ்பீஹ் என்று அல்லாஹ் கூறினான். எனவே அவர்களும் தஸ்பீஹ் செய்தார்கள்.
மேலும் நபி யூனுஸ் அலை மீன் வயிற்றுக்குள் விழுங்கப்பட்ட போது தாம் இறந்து விட்டதாகவே உணர்ந்தார்கள். ஆனால் கால்களை அசைத்த போது அசைந்தது. அப்போது நன்றிக்காக மீன் வயிற்றில் சிரமத்துடன் சஜ்தா செய்தார்கள். பிறகு அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இந்த உலகில் வேறு யாருக்கும் ஏற்படுத்திக் கொடுக்காத மஸ்ஜிதை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளாய் என்று கூறி நன்றி செலுத்தினார்கள்.
ஆழ்கடல் இருளில் தன் சோதனையை நீக்கும்படி இருவர் துஆ செய்தனர்.
அதில் ஒருவரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். ஏனெனில் அவர் சிரமத்தின் போது மட்டும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர் அல்ல. எப்போதும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர். அதனால் அவரது சிரமத்தை அல்லாஹ் நீக்கினான். அவர்கள் தான் நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87الانبياء)
நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் தன் உம்மத்தினருக்கு இஸ்லாமை எடுத்துக் கூறியும் கேட்காததால் அல்லாஹ்விடம் அவர்களின் மீது வேதனையை இறக்க துஆ செய்தார்கள். அல்லாஹ்வும் அதை ஏற்றுக் கொண்டு இந்த நாளில் வேதனை வரும் என்று அறிவித்தான் அதை அப்படியே அந்த மக்களிடம் நபி யூனுஸ் அலை கூறினார்கள் அப்பொழுது அந்த மக்களுக்கு பயம் வந்தது அவர்கள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடி பெரியவர்கள், சிறியவர்கள், கால்நடைகள் என எல்லோரும் ஒன்று கூடி துஆ செய்ததால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த வேதனையை அல்லாஹ் ரத்து செய்தான் இதற்கிடையே வேதனை வரும் என்று அறிவித்த நபி யூனுஸ் அலை ஊரை விட்டும் வெளியேறிச் சென்று விட்டார்கள் அல்லாஹ் அறிவித்தும் கூட இப்படி வேதனை வராமல் ஆகி விட்டதே என்ற அதிருப்தியுடன் அவர்கள் வெளியேறியதாலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி வெளியேறியதால் அல்லாஹ் அவர்களை தண்டித்தான்
وَأَمَّا يُونُس" فَإِنَّهُ ذَهَبَ فَرَكِبَ مَعَ قَوْم فِي سَفِينَة فَلَجَّجْت بِهِمْ وَخَافُوا أَنْ يَغْرَقُوا فَاقْتَرَعُوا عَلَى رَجُل يُلْقُونَهُ مِنْ بَيْنهمْ يَتَخَفَّفُونَ مِنْهُ فَوَقَعَتْ الْقُرْعَة عَلَى يُونُس فَأَبَوْا أَنْ يُلْقُوهُ ثُمَّ أَعَادُوهَا فَوَقَعَتْ عَلَيْهِ أَيْضًا فَأَبَوْا ثُمَّ أَعَادُوهَا فَوَقَعَتْ عَلَيْهِ أَيْضًا قَالَ اللَّه تَعَالَى " فَسَاهَمَ فَكَانَ مِنْ الْمُدْحَضِينَ " أَيْ وَقَعَتْ عَلَيْهِ الْقُرْعَة فَقَامَ يُونُس عَلَيْهِ السَّلَام وَتَجَرَّدَ مِنْ ثِيَابه ثُمَّ أَلْقَى نَفْسه فِي الْبَحْر وَقَدْ أَرْسَلَ اللَّه سُبْحَانه مِنْ الْبَحْر الْأَخْضَر - فِيمَا قَالَهُ اِبْن مَسْعُود - حُوتًا يَشُقّ الْبِحَار حَتَّى جَاءَ فَالْتَقَمَ يُونُس حِين أَلْقَى نَفْسه مِنْ السَّفِينَة فَأَوْحَى اللَّه إِلَى ذَلِكَ الْحُوت أَنْ لَا تَأْكُل لَهُ لَحْمًا وَلَا تُهَشِّم لَهُ عَظْمًا فَإِنَّ يُونُس لَيْسَ لَك رِزْقًا وَإِنَّمَا بَطْنك تَكُون لَهُ سِجْنًا (تفسير ابن كثير)
இன்னொருவன் ஃபிர்அவ்ன் -அவனும் செங்கடலில் மூழ்கடிக்கப்படும் இறுதி நேரத்தில் தான் அல்லாஹ்வை ஏற்று அல்லாஹ்விடம் தம்மை காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்தான் ஆனால் அவனது ஈமானும் ஏற்கப்படவில்லை அவன் காப்பாற்றப்படவுமில்லை. ஏனெனில் அவன் தனக்குக் கஷ்டம் வரும்போது மட்டுமே அல்லாஹ்வை அழைத்தான். அதேபோல சில முஸ்லிம்கள் சிரமமான நேரங்களில் மட்டும் அல்லாஹ்வைத் தொழுது சந்தோஷமான நேரங்களில் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள். இவர்களை அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான்
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ- آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91يونس)عَنِ ابْنِ عَبَّاسٍ رض إِنَّ جِبْرِيلَ كَانَ يَدُسُّ فِي فَمِ فِرْعَوْنَ الطِّينَ مَخَافَةَ أَنْ يَقُولَ : لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ.(مسند أحمد, تفسير ابن كثير)
கடைசி நேரத்தில் துன்பத்தின் போது ஃபிர்அவ்ன் கேட்கும் பிரார்த்தனை ஒருவேளை ஏற்கப்பட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமா க அவன் பிரார்த்தனையை முழுமையாக்க விடாமல் அவனுடைய வாயில் ஜிப்ரயீல் அலை மண்ணைப் போட்டு திணித்தார்கள்