роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЮாропிро▒ு, роЕроХ்роЯோрокро░் 08, 2017

ро╡ாро┤்роХ்роХை ро╡рогроХ்роХрооாроХ рооாро▒,

இஸ்லாம் என்றால் வணக்கமுறை மாத்திரமல்ல,அது ஒரு நல்ல வாழ்க்கை முறையும் தான்.ஒரு முஸ்லிம் தன் வணக்கத்தில் கவனம் செலுத்துவது போல தன் வாழ்விலும் கவனம் செலுத்தவேண்டும்.
ஒரு முஸ்லிமுக்கான அடையாளத்தை பற்றி கூறவருகிற நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்

المسلم من سلم المسلمون من لسانه ويده

ஒரு முஸ்லிம் தன் நாவாலும் கரத்தாலும் பிற முஸ்லிம்களுக்கு எவ்வித இடையூறுகளையும் செய்யமாட்டார் என்று கூறினார்கள்.
சுருக்கமாகச்சொன்னால் ஒரு முஸ்லிம் இருக்கும் இடம் அமைதி தவழும் என்றார்கள்.இஸ்லாத்தின் முகமனான ஸலாமும் அதைதான் போதிக்கிறது.  அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் என்னால் உனக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பது தான் பொருள்.

அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி வாழ்கிற வாழ்க்கை ஒரு முஸ்லிமின் வாழ்க்கையல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.ஒரு முஸ்லிமை கஷ்டப்படுத்தும் வணக்கத்திற்கு அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் கிடையாது,

ஜமாஅத் தொழுகை முக்கியமானது.ஆனால் உடலிலிருந்து துர்வாடை வரும் அளவுக்கு உள்ள நோயால் பாதிக்கப்பட்டவர் ஜமாஅத் தொழுகைக்கு வரக்கூடாது என்பது மார்க்கத்தின் சட்டம்,காரணம் அது மற்ற முஸ்லிம்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும்

ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது பாக்கியமானது தான், காரணம் அது சுவனத்தின் கல்.அதை முத்தமிடுவது அல்லாஹ்விடம் முஸாபஹா செய்வது போன்றது.ஆனாலும் அதை  முத்தமிடுவதற்காக பிறமுஸ்லிம்களை சிரமப்படுத்துவதுவது ஹராமாகும்.
அந்த கல்லைவிட ஒரு முஸ்லிமின் கல்பு அல்லாஹ்விடம் மதிப்புமிக்கது. அதை கவனமின்றி காயப்படுத்திவிடக்கூடாது.

குர்ஆன் ஓதுவது சிறப்பு,ஒரு எழுத்துக்கு பத்து நன்மை.அது அல்லாஹ்விடம் பேசுவதற்கு சமமானதுதான்,ஆனால் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு முஸ்லிமுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சப்தமிட்டு குர்ஆன் ஓதுவது ஹராமாகும்.

ஒரு முஸ்லிமின் வாழ்வு அடுத்தவர்களுக்கு எவ்வகையிலும் சிரமம் தராமல் வாழவேண்டும்.

وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: «لقد رأيت رجلاً يتقلب في الجنة في شجرة قطعها من ظهر الطريق كانت تؤذي الناس» [مسلم ح1914] .

மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நீண்டிருந்த மரத்தின் கிளையை துண்டித்த மனிதன்- சுவனத்தின் இன்பங்களை விசாலமாக அனுபவிக்க கண்டேன் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் 
அவ்வாறு அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாகவும் வாழவேண்டு  மென்றும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

سمع عبد الله بن عمر يقول قال رسول الله صلى الله عليه وسلم إن من الشجر شجرة لا يسقط ورقها وإنها مثل المسلم فحدثوني ما هي فوقع الناس في شجر البوادي قال عبد الله ووقع في نفسي أنها النخلة فاستحييت ثم قالوا حدثنا ما هي يا رسول الله قال فقال هي النخلة

மரங்களில் ஒரு மரம் உண்டு அதன் இலை உதிராது,அந்த மரம் ஒரு முஸ்லிமின் வாழ்வுக்கு ஒப்பானது.அது எந்த மரம் என்று சொல்லுங்கள்? என நபி ஸல் அவர்கள் வினவியபோது மக்களின் கவனம் காடுகளில் உள்ள மரங்களின் பக்கம் சென்றது.அது பேரித்தமரம் என்று எனக்கு தெரியும் ஆனாலும் மரியாதைக்காக வெட்கப்பட்டு அதை சொல்லவில்லை.
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அது எந்த மரம் நீங்களே சொல்லுங்கள் என ந்பித்தோழர்கள் கூறியபோது-அது பேரித்தமரம் என்று நபி ஸல் அவர்கள் பதில் சொன்னார்கள்.

ஒரு பேரித்தமரத்தை போல ஒரு முஸ்லிம் வாழவேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.பேரித்த மரத்தின் இலை,காய்,பழம்,மட்டை,என அதன் எந்த பகுதியும்வீணாகாது,பயனற்றுப்போகாது.அவ்வாறே ஒரு முஸ்லிம் தன் வாழ்வின் அனைத்து பகுதியிலும் பயனுள்ளதாக வாழ வேண்டும்.

இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் தங்களின் இஹ்யா எனும் கிதாபில் கூறுகிறார்கள்
அல்லாஹ் படைத்த உயிரினங்கள் மூன்றுவகை
1.அதனால் முழுக்க முழுக்க மனித சமூகத்திற்கு பயன்பாடு மட்டுமே இருக்கும்.ஆடு,மாடு,ஒட்டகம்,கோழி போன்ற உயிரினங்களை போல.
2.அதனால் முழுக்க முழுக்க மனித சமூகத்திற்கு இடையூறு மட்டுமே.  தேள்,பாம்பு போன்றவை.
3.அதனால் பயனும் இல்லை, இடையூறும் இல்லை.காட்டில் வசிக்கும் உயிரினங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
மனிதா!நீ எப்படி வாழப்போகிறாய்?குறைந்த பட்சம் முதல்வகை உயிரினத்தை போலாவது வாழவேண்டாமா?என இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் கேட்கிறார்கள்.

அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது ஆகப்பெரிய அமலாகும்.
அடுத்தவர்களை மகிழ்விப்பது ஹஜ் அக்பராகும் என்று மவ்லானா ரூமி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال عليه الصلاة والسلام:[ احب الاعمال الى الله بعد الفرائض ادخال السرور على المسلمين] كما عند الطبراني

கடமையான காரியங்களுக்குப்பின் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான அமல் முஸ்லிம்களின் உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்துவது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

روى أبوداؤدفي سننه عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم "المؤمن مرأة المؤمن

ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்கு கண்ணாடி என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
ஒரு முஃமினின் உள்ளத்தை நபி ஸல் அவர்கள் கண்ணாடிக்கு ஒப்பிட்டு சொல்கிறார்கள்.அதற்கு பல கருத்துக்கள் உண்டு.
கண்ணாடி எப்படி ஒருவனின் குறையை கூடுதல் குறைவின்றி காட்டுமோ அப்படி நாமும் பிற முஸ்லிமுடன் நடந்துகொள்ளவேண்டும்.அதைப்போல கண்ணாடி எப்படி ஒருவனின் குறையை அடுத்தவனிடம் காட்டாதோ அவ்வாறே நாமும் ஒரு முஸ்லிமின் குறையை அடுத்தவர்களிடம் சொல்லி அவனை கஷ்டப்படுத்தக்கூடாது.இதில் இன்னொரு முக்கிய பொருளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.அது என்னவெனில்,கண்ணாடியை போல  முஸ்லிமின் கல்பும் மிருதுவானது.கண்ணாடி எப்படி கவனத்துடன் கையாளப்படவேண்டுமோ அவ்வாறு ஒரு முஸ்லிமின் உள்ளத்தையும் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.இல்லையெனில் உடைந்துவிடும்.

ஒரு முஸ்லிமின் உள்ளத்தை மகிழ்விப்பது அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான அமலாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு முஃமினின் உயிர், பொருள்,மரியாதை அனைத்தும் பாதுகாக்கப்படவேண்  டியவையாகும்.அதை மக்காவின் புனித இடங்களுக்கு ஒப்பிட்டு நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு தடவை நபி ஸல் அவர்கள் பைத்துல்லாஹ்வை தவாப் செய்துகொண்டி ருந்தார்கள்.அப்போது கஃபாவை முன்னோக்கி, அல்லாஹ்வின் இல்லமே! நீ எத்துனை பெரிய மரியாதைக்குச்சொந்தம் என்று கூறிவிட்டு- என்னை நோக்கி அப்துல்லாஹ்வே! உலகில் கஃபாவை விட மரியாதைக்குறியது எது?வென தெரியுமா?என கேட்டார்கள்.அப்போது  அல்லாஹ்வுக்கும் அவனின் ரஸூலுக்கும் தெரியும் என்றேன்.அதற்கு நபி ஸல் அவர்கள் ஒரு முஸ்லிமின் உயிர்,பொருள்,மானம் கஃபாவை விட மரியாதையானது.ஒரு முஸ்லிமை நோவினை செய்து அவன் உள்ளத்தை உடைப்பது இறையில்லத்தை உடைப்பதைக்காட்டினும் ஆபத்தானது.என்றார்கள்.

உன்னை எங்கே தேடுவேன்? என்று நபி மூஸா அலை அவர்கள் அல்லாஹ்  விடம் வினவியபோது உடைந்த உள்ளங்கள் இருக்கும் இடத்தில் என்னை தேடு என்றானாம்.
ஒரு முஸ்லிமை சந்தோஷப்படுத்தும் வழிமுறைகளையும் சொல்லித்தந்தார்கள்.

تهادوا تحابوا حتى لوكان شيئا يسيرا
 
சிறிய பொருளானாலும் அன்பளிப்பு செய்து உங்களுக்கிடையில் அன்பை உருவாக்குங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
நல்ல அழகான வார்த்தையை பேசுங்கள்.சிரித்தமுகத்துடன் சகோதர முஸ்லி  மை சந்திப்பதும் அல்லாஹ்வுக்கு பிடித்தமான செயலாகும்.

والفاروق عمر -رضي الله عنه-: "ثلاث تثبت لك الود في صدر أخيك: أن تبدأه بالسلام، وأن توسع له في المجلس، وأن تدعوه بأحب الأسماء إليه

உன் சகோதரனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டாக்க மூன்றுவழிகள் உண்டு என்று உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
1.நீ அவனுக்கு முந்தி ஸலாம் கூறுவது
2.சபையில் அவனுக்கு விசாலமாக இடம் தருவது
3.அவனை அழகிய பெயர்களால் அழைப்பது
உம்மு சுலைம் ரலி அவர்களின் மகன் அபூ உமைர் என்ற சிறுவரிடம் நபி ஸல் அவர்கள் நகைச்சுவையாக பேசுவார்கள்.
ஒரு நாள் அச்சிறுவரை சந்திக்க நபி ஸல் அவர்கள் வந்தபோது-அச்சிறுவர் கவலையாக இருக்கக்கண்டார்கள் காரணம் கேட்டபோது,அவர் வளர்த்த சிட்டுக்குறுவி இறந்து போய்விட்டது என்று பதில் சொன்னார்கள்.

அப்போது நபி ஸல் அவர்கள்-     يا عمير ما فعل النغير
அபூ உமைர்!உன் சிட்டுக்குறுவிக்கு என்ன ஆகிவிட்டது? என அச்சிறுவரிடம் துக்கம் விசாரித்தார்கள்.
ஒரு சின்ன பையனாக இருந்தாலும் அவனின் துக்கத்திலும் பங்கெடுக்கிறார் கள்.சிறிவரோ பெரியவரோ அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதில் ஆயிரம் நன்மைகள் உண்டு என்பதை புரியவேண்டும்

كما في حديث زاهر بن حرام الأشجعي لما أقبل إلى بيت النبي صل الله عليه وسلم يريده في حاجه فلم يجده فمضى إلى السوق ليبيع بعض بضاعة أحضرها من الباديه يقول أنس وكان زاهر رجلا فقيرا ذميما (يعني لا مال ولا جمال) فأقبل النبي صل الله عليه وسلم إليه وهو في السوق ثم قبضه من كتفه من خلفه وجعل ينادي من يشتري العبد من يشتري العبد والناس يتلفتون وزاهر يقول من هذا الذي يبيعني ويلتفت حتى راى النبي صل الله عليه وسلم فسكن روعه وجعل يحاول ان يلصق كتفيه بالنبي صل الله عليه وسلم ثم قال: يا رسول الله تبيعوني اذن تجدني كاسدا
فقال عليه الصلاة والسلام: لكنك عند الله لست بكاسد انت عند الله غالي

ஸாஹிர் இப்னு ஹராம் ரலி அவர்கள் ஒரு தேவைக்காக நபி ஸல் அவர்களின் இல்லம் வருகிறார்கள்.அங்கு மாநபி ஸல் அவர்கள் இல்லை.   உடனே ஸாஹிர் ரலி அவர்கள் வியாபாரத்திற்காக கடைத்தெருவுக்கு திரும்பி விடுகிறார்கள்.
ஸாஹிர் ரலி அவர்களை பற்றி அனஸ் ரலி அவர்கள் குறிப்பிடும்போது,  அவர்களிடம் அழகும் இல்லை, பொருளும் இல்லைஎன கூறுகிறார்கள்.    ஸாஹிர் தன்னை தேடிவந்த்தை கேள்விப்பட்ட பூமான் நபி ஸல் அவர்கள் கடைத்தெருவுக்கு ஸாஹிர் ரலி அவர்களை சந்திக்க வருகிறார்கள்.
இறைதூதர் அவர்கள் கறுப்பு நிற அடிமையான ஸாஹிர் இப்னு ஹராமை சந்தையில் கட்டியணைத்து இவரை யார் வாங்குவீர்கள்? என்றபோது, அவர் எத்தனை மகிழ்ச்சியை உணர்ந்திருப்பார். என்னை யார் வாங்குவார்கள்? நான் ஒரு செல்லாக்காசு என்ற அவரது ஏக்கக் குரலுக்கு ‘நீ அல்லாஹ்விடத்தில் விலை கூடியவன்’ என்ற பதிலால் ஒரு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்த உத்தமர் ஸல் அவர்களின் வாழ்வை சிந்திக்கவேண்டும்.
அவ்வாறே தன் தோழர் செய்யும் தவறை திருத்தும்போதுகூட அவரின் மனம் புன்படாமல் நளினமாக குற்றம் செய்தவர்மட்டுமே அதை புரிந்துகொள்ளும் விதத்தில்  சொன்ன போங்கு நாமும் கவனிக்கவேண்டும்.

كما روى الطبراني وهو حديث صحيح عن خوات بن جبير رضي الل تعالى عنه:قال خرج النبي صل الله عليه وسلم يوما في بعض أطراف المدينه قال وكنت قد خرجت في حاجة فمررت بنساء ووقفت معهن أتحدث قال فمر النبي صل الله عليه وسلم بي...قال خوات ما تفعل ها هنا؟؟؟
(يعني ما الذي يوقفك مع النساء)
قلت يا رسول الله إن لي جملا شاردا فأنا خرجت أبحث عنه ثم مضى من بين أيديهم فلما رآه النبي صل الله عليه وسلم من غد في طريق من طرق المدينه قال...يا خوات ما فعل شراد جملك؟؟؟
يقول فقلت: يا رسول الله لا يزال شاردا.
قال ثم أخذت اصد عن النبي صل الله عليه وسلم لأن لا أراه قال فدخلت المسجد يوما لاصلي فدخل النبي عليه الصلاة والسلام فراني فوقف ينتظرني قال فطولت الصلاة
قال فقال لي: يا خوات طول أو لا تطول لن انصرف حتى تنتهي قال فلما انتهيت قال صل الله عليه وسلم يا خوات:ما فعل شراد جملك؟؟؟
قلت :يا رسول الله والله ما شرد علي منذ أسلمت منذ أن حسن إسلامي لم يشرد الجمل عني
قال فضحك النبي صل الله عليه وسلم متلطفا معه... هذا من إدخاله للسرور صلوات ربي وسلامه عليه

கவ்வாத் இப்னு ஜுபைர் எனும் இளம்வயது நபித்தோழர்.பெண்களுடன் பேசிக்கொண்டிருப்பதை நபி ஸல் அவர்கள் காண்கிறார்கள்.
கவ்வாதே?இங்கு என்ன செய்கிறீர்?என கேட்க, எதிர்பாராமல் திகைத்துப்போன அந்த வாலிபர் என் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது அதை தேடுகிறேன் என பொய்யான பதிலை கூறிவிடுகிறார்.
அதை தெரிந்துகொண்ட நபி ஸல் அவர்கள் அவரை காணும் போதெல்லாம் கவ்வாதே? உன் ஒட்டகம் என்ன ஆனது?என கேட்பார்கள்.
ஒரு கட்டத்தில் நபி ஸல் அவர்களின் கண்களுக்கு படாமல் ஒளிந்து வாழ ஆரம்பித்தார் கவ்வாத் ரலி.
ஒருநாள் கவ்வாத் ரலி பள்ளிக்கு வந்தார்கள்.பின்னால் நபி ஸல் அவர்களும் வந்துவிட்டார்கள்.நபி ஸல் அவர்களை பார்த்த கவ்வாத் ரலி தக்பீர் கட்டி தொழ ஆரம்பித்துவிடுகிறார்கள்.
நீண்ட நேரம் தொழுதார்கள்.நபி ஸல் அவர்களும் அவர்களை சந்திக்காமல் செல்வதில்லை எனும் முடிவுடன் நின்றார்கள்.
இறுதியாக தொழுகையை முடித்த கவ்வாத் ரலி அவர்களிடம் கவ்வாதே உன் ஒட்டகம் என்ன ஆனது?என்று கேட்டபோது அல்லாஹ்வின் மீது ஆணையாக என் ஒட்டகம் தொலைந்துபோகவுமில்லை,மிரண்டுபோகவுமில்லை என்று கூறினார்கள், அதை கேட்ட ஸல் சிரித்தவர்களாக சென்றுவிட்டார்கள்.
தவறை திருத்தும்போது கூட அடுத்தவர்களை காயப்படுத்தாமல் திருத்துவது தான் ஒரு உண்மை முஸ்லிமின் குணமாகும்.
குற்றத்தை வெறுப்போம்.குற்றவாளியை வெறுக்க மாட்டோம்
குஃப்ரை வெறுப்போம். காஃபிரை வெறுக்கமாட்டோம் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை தத்துவமாகும்.
நபி மூஸா அலைஅவர்களையும்,ஹாரூன் அலை அவர்களையும் கொடுமைக் காரன் பிர்அவ்னிடம் அனுப்பியபோது

فَقُولَا لَهُ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ
 
"நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள், அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம், அல்லது அச்சம் கொள்ளலாம்.என்று கூறி அனுப்பிவைக்கிறான்.
சீர்திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் இந்த வசனம் அழுத்தமான பாட்த்தை தருகிறது.
தவறுகளை எடுத்துச்சொல்லும்போது கூட எதிராளிகளின் உணர்வுகள் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும்

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்