நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், நவம்பர் 24, 2022

நாற்பது நாட்கள் (40) மகத்துவம்,

நாற்பது -  பரிணாமத்தின் குறியீடு

நாற்பது நாட்கள் ,நாற்பது என்பதின் மகத்துவம் பற்றி கட்டுரை இருந்தால் போடுங்க பிளீஸ்' - Shafiyath Qadiriyah  கேட்டுக் கொண்டதற்கிணங்க ,

உங்களில் ஒருவரின் கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது (40 நாட்கள்) பகல் அல்லது இரவு சேமிக்கப்படுகிறது. 

பிறகு அதைப் போன்றே (40 நாட்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துக் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. 

பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்று) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது. முஸ்லிம் 5145

அன்றி (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (குர்ஆன் : 2:51)

(அதற்கு இறைவன், அவ்வாறாயின் ( பனி இஸ்ரவேலர்களுக்கு )அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) "அந்த இடம் நாற்பது வருடங்கள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்.  (குர்ஆன் : 5:26)

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. (குர்ஆன் : 7:142)

மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால், "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! ...(குர்ஆன் : 46:15)

அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏழை முஹாஜிர்கள் மறுமைநாளில் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்" என்றார்கள் 
முஸ்லிம் : 5699. 

காலித் பின் உமைர் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் "சொர்க்கத்தின் நிலைக்கால்களில் இரு நிலைக்கால்களுக்கிடையேயான தொலைவு நாற்பதாண்டு பயணத் தொலைவாகும்" என்றும் சொல்லப்பட்டது. 
ஸஹீஹ் முஸ்லிம் : 5676. 

அபூஸாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த இரு எக்காளத்திற்கு (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பதாகும்" என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 5660. 

நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். 

நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவன் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான்?"  என்று கேட்டோம். அதற்கு, "நாற்பது நாட்கள்" என்று பதிலளித்த நபியவர்கள், "அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும், மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும், அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும், மற்ற நாட்கள் உங்களின் (சாதாரண) நாட்களைப் போன்றும் இருக்கும்" என்று குறிப்பிட்டார்கள் முஸ்லிம் : 5629. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள்.  மூசா (அலை) அவர்கள், "ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்;சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டீர்கள்" என்று சொன்னார்கள்.

அதற்கு மூசாவிடம் ஆதம் (அலை) அவர்கள், "நீர்தான் மூசாவா? அல்லாஹ், தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தனது கையால் உமக்காக (வேதத்தை) எழுதினான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?" என்று கேட்டார்கள்.

(இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்;தோற்கடித்துவிட்டார்கள்" என (இரண்டு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 5157. 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாற்பதாவது வயதின் தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பினான். ஸஹீஹ் முஸ்லிம் : 4685. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் : 4488. 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவரை இரு பேரீச்ச மட்டைகளால் ஏறக்குறைய நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 3512. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு ஒரு காலம் வரும். (அப்போது போர்கள் மிகுந்து) ஆண்கள் குறைந்து, பெண்கள் அதிகரித்துவிடுவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்துவந்து,  அவனைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் முஸ்லிம் : 1838. 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய  புதல்வர்  ஒருவர் "குதைத்" அல்லது "உஸ்ஃபான்" எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பார்" என்று கூறினார்கள். 

நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது "அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்" என்றார்கள். 

நான் "ஆம்" என்றேன். "அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்" என்று கூறிவிட்டு, "ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 1730. 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையில் நஃபில்) தொழும்போது உட்கார்ந்த நிலையிலேயே ஓதுவார்கள்; ருகூஉச் செய்ய எண்ணும்போது எழுந்து நின்று (சாதாரணமாக) ஒருவர் நாற்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு ஓதுவார்கள் (பிறகு ருகூஉச் செய்வார்கள்(. இதை அம்ரா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 1331. 

அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் எது?" என்று கேட்டேன். 

அதற்கு அவர்கள், "அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) பள்ளிவாசல்" என்று பதிலளித்தார்கள். 

நான் "பிறகு எது?" என்று கேட்டேன். அவர்கள் "(ஜெரூஸலத்திலுள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். 

நான், "அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?" என்று கேட்டேன். அவர்கள் "நாற்பதாண்டுகள்" (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பெற்று நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பெற்றது). முஸ்லிம் 903

புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அபூஜுஹைம் பின் அல்ஹாரிஸ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் அனுப்பி, தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன செவியேற்றார்கள் என்று கேட்டுவருமாறு சொன்னார்கள். 

(நான் சென்று கேட்டேன்.) அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்கு முன்னால் கடந்துசெல்வதைவிட நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது மாதங்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது வருடங்களில் நாற்பது என்று சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை. 
முஸ்லிம் : 878

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.ஸஹீஹ் முஸ்லிம் : 431. 

.... நாற்பது என்பது பரிணாம வளர்ச்சியின் காலகட்டம் அது நாட்களாக , வருடங்களாக , எண்ணிக்கைகளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது .

இப்படி முழுமைப் பெற்ற பரிணாமத்தின் குறியீடாக நாற்பதைக் கணிக்கப்படுகிறது

கத்தார் கால் பந்து உலக கோப்பை,

இந்த உலகம் ஒரு வித்தியாசமான  கால் பந்து உலக கோப்பையை காண்கிறது.

இங்கே விபச்சாரம் கொடி கட்டி பறக்கவில்லை...
ஆண் உறைகளை வழங்க ஏடிஎம் திறக்கவில்லை..
மதுபானம் ஆறாக ஓடவில்லை...
ஆபாச ஆடல் பாடல் இல்லை....

இந்த செய்திகள் உலக விளையாட்டு வரலாற்றிலே இதுவரை இல்லாத ஒன்று....

கத்தார் என்ற ஒரு சிறிய நாடு உலகநாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது... தனது சாதுர்யமான அரசியல் காய் நகர்தல்கள் அதனை சாதித்தும் காட்டியுள்ளது.

உலக கோப்பை கால்பந்து விளையாட்டை நடத்த கத்தார் தேர்வு செய்யப்பட நாள்முதல் இன்றுவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.

அமெரிக்காவுடன் போட்டி போட்டு கத்தார் இந்த உலக கோப்பை விளையாட்டை கைப்பற்றியது.

Fifa தேர்வு கமிட்டி உறுப்பினர்களுக்கு  கத்தார் லஞ்சம் கொடுத்ததாக ஒரு புகார்.

கட்டுமான பணிகளுக்காக பணியாளர்களை அடிமையாக நடத்துவதாக ஒரு புகார்.

கட்டுமான பணிகளில் பலர் இறந்ததாக ஒரு புகார்.

ஆடை கட்டுப்பாடு, மது தடை, தன்பால் இணையர்களுக்கு  தடை என கத்தாரை உலகின் பல நாடுகளும் மீடியாக்களும் விமர்சித்துக் கொண்டே இருக்கிறது.

இவைகள் அனைத்தையும் கடந்து சுமார் 25 லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்து fifa வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சாதனையை கத்தார் நிகழ்த்தியுள்ளது....

25 லட்சம் கோடியை இந்த ஒரு மாத நிகழ்வுக்காக கத்தார் செலவழித்துள்ளது..

இன்னும் 20 வருடங்களுக்கு தேவையான கட்டமைப்பை கத்தார் உருவாக்கியுள்ளது.

கத்தார் எடுத்த சில அதிரடி முடிவுகள் உலக மீடியாக்களை தூங்கவிடவில்லை ....

கடைசிவரை மது தடை பற்றி பேசவே இல்லை ... இரண்டு நாட்களுக்கு முன்பாக மது தடை என கத்தார் அறிவித்தது.. ஐரோப்பிய மீடியாக்கள் ஆடித்தான் போனது...

இஸ்ரேல் என்ற வாசகமே இருக்க கூடாது என கத்தார் அறிவித்தது ... யூதர்களின் தூக்கத்தை கலைத்தது ...

சர்ச்சைக்குரிய நபர் என்று ஓரம் கட்ட நினைத்த யூத கைக்கூலிகலுக்கு சம்மட்டி அடியாக ஜாஹிர் நாயக் துவக்க  விழாவில் சிறப்பு அழைப்பாளர் அளைக்கப்பட்டுள்ளார் ...

குர்ஆன் வசனங்களால் ஆரம்பமானது விழா .... அதற்கு அவர்கள் தேர்வு செய்த வசனமும் அடடா....

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 49:13)

ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒரு நாடு .... உலக நாடுகள் அனைத்தையும்  அழைத்து தனது கொள்கையில் ஒரு போதும் சமரசமில்லை ... என அடித்து கூற ஒரு தைரியம் வேண்டும்.... அது  கத்தாருக்கு நிறையவே உள்ளது....

கத்தார் நாட்டிர்க்கு இறைவன் அருள் புரிவானாக ஆமீன் …

https://youtu.be/SbXp-RX6UMQ

பிரபல்யமான பதிவுகள்