தர்மம் செய்தல்:
‘யார் ஏழ்மையிலும் வசதியிலும் தர்மம் செய்கிறாரோ அவர் சொர்க்கவாசி ஆவார்’ என்று அல்லாஹ் கூறுகிறான் (அல்குர்ஆன் 3:134)
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் உரையின் போது பெண்களே உங்களை நான் நரகத்தில் அதிகமாக கண்டேன். எனவே அதிகமாக தர்மம் செய்யுங்கள். தர்மத்தின் மூலமாக உங்களை நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் அணிந்திருக்கும் அணிகலன்களாக இருந்தாலும் சரியே என்று கூறினார்கள்.
அதைக் கேட்ட சஹாபிய பெண்கள் தங்களின் காதுகளிலிருந்தும் கைகளிலிருந்தும் அணிகலன்களை கழற்றி தர்மம் செய்தார்கள். (புஹாரி
உண்மை பேசுதல்:
உம்மு ஸலமா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்டார்கள். அதற்கு அவர்கள் தன்னிடம் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தான் ஒரு முன்கோபக்காரி என்று உண்மையை எடுத்துக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய முன்கோபம் போக நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று கூறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
இதிலிருந்து எந்த சூழ்நிலையிலும் உண்மை பேச வேண்டும் என்பதும், ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது தவறு என்பதும் புலனாகிறது.
மார்க்கத்தை அதிகமாக கற்றுக் கொள்ளுதல்:
சஹாபிய பெண்கள் அதிகமாக மார்க்கத்தை கற்றுக் கொள்வார்கள். ஒருமுறை சஹாபிய பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘யா ரஸுலுல்லாஹ் சஹாபாக்கள் எப்போதும் உங்களுடன் இருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்கிறார்கள். எனவே எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்கி கற்றுத் தாருங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) வியாழக்கிழமையை உங்களுக்கு ஆக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.
பணம் வந்தாலும் தன்னடக்கத்தோடு வாழுதல்:
கதீஜா (ரலி), அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) போன்ற சஹாபிய பெண்மணிகள் பணம் இருந்தும் தன்னடக்கமாக, எளிமையாக வாழ்ந்தார்கள். அவர்கள் பணத்தைக் கொண்டு பெருமையடிக்கவில்லை. ஆணவம் கொள்ளவில்லை. ஏனெனில் ‘யாருடைய இதயத்தில் கடுகளவும் பெருமை இருக்கிறதோ அவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குழந்தை வளர்ப்பு:
குழந்தைகளை ஒழுக்கத்தோடும், இஸ்லாமிய பண்பாட்டோடும் வளர்ப்பது பெற்றோர்களது கட்டாய கடமை. குழந்தைகள் தந்தையை விட தாயிடம் நெருக்கமாக இருப்பதால் தாய் மீது இந்த பொறுப்பு அதிகமாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறெல்லாம் எந்தப் பெண் நடந்து கொள்கிறாளோ அவளே உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் ஆவாள்.
ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் மேற்கண்ட முன்மாதிரி முஸ்லிம் பெண்ணாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
சனி, பிப்ரவரி 08, 2014
இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.கணவனிடம் நடந்து கொள்ளும் முறை:1.கணவனுக்கு கட்டுப்படுதல்:எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து, கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ‘ஸாலிஹான பெண்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:34)ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவன் பார்க்கும் போது அவனை சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ)2.கஷ்டத்திலும் கணவனுக்கு உதவி செய்தல்:நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600 இறக்கைகளை கொண்டவர்களாக வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்களாக கண்ட பொழுது மிகவும் பயந்தவராய் தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ஓடி வந்து ‘என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள்’ என்று கூறினார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை போர்த்தி ஆசுவாசப்படுத்திய பின் நடந்ததை விபரமாக கேட்டு பின்னர்நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்களை ஒரு போதும் கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் நீங்கள் சொந்தங்களை அனுசரித்து, மக்களின் கஷ்டங்களை சுமந்து, ஏழை எளியோருக்கு உதவி செய்து விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள். (நூல்: புகாரி)3.கணவனுக்கு பணிவிடை செய்தல்:நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை தேடி ஹிரா குகை சென்ற பொழுது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 55. அந்த வயதிலும் அவர்கள் பல மைல் தூரம் கரடு முரடான பாதையில் உணவுப் பொருளை சுமந்து நடந்து சென்று தன் கணவனுக்கு பணிவிடை செய்தார்கள். (நூல்: புஹாரி)4.இல்லறத்தில் கணவனை திருப்திபடுத்துதல்:நீங்கள் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தாலும் அல்லது போருக்கு செல்வதற்காக குதிரையின் மீது இருந்தாலும் கணவன் இல்லறத்திற்காக அழைத்தால் அவனை சந்தோஷப்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.5.ரகசியம் காத்தல்:கணவன் ரகசிய உள்பட எல்லாவிதமான ரகசியங்களையும் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் ரகசியம்; என்பது அமானிதம். அமானிதத்தைப் பேணுவது உண்மை முஸ்லிமின் பண்பு. அமானித மோசடி செய்வது முனாஃபிக்கின் அடையாளம்.விருந்தோம்பல்:யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறார்களோ அவர்கள் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி)ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு விருந்தாளி வர நபி (ஸல்) அவர்கள் இவருக்கு யார் விருந்தளிப்பது என்று கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் தான் அளிப்பதாக கூறி அந்த விருந்தாளியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவியிடம் ‘நபி (ஸல்) அவர்களின் விருந்தாளியை கண்ணியப்படுத்து’ என்று கூறினார்கள். உடனே மனைவி உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், ‘குழந்தைகள் உண்ணும்உணவைத் தவிர வேறு எதுவும் நம்மிடம் இல்லையே’ என்று சொல்ல, அதற்கு கணவர் அபூதல்ஹா (ரலி) அவர்கள், குழந்தைகளை பசியோடு தூங்க வைத்து விட்டு உணவை எங்களுக்கு வைத்து விட்டு விளக்கை ஏற்றுவது போல் அணைத்து விடு. விருந்தாளி நானும் உண்பதாக நினைத்துக் கொண்டு வயிறார உண்ணுவார், நான் உண்ணுவது போல் நடித்துக் கொள்வேன் என்று சொல்ல, அதற்கு கட்டுப்பட்டு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள்அவ்வாறே செய்தார்கள். மறுநாள் காலை ஸுப்ஹு தொழுகைக்கு சென்ற அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் இருவரின் விருந்தோம்பலை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான், மேலும் சந்தோஷத்தில் சிரித்தான் என்றார்கள்.அப்போது அல்லாஹ் ‘அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்’ (அல்குர்ஆன் 59:9) என்ற வசனத்தை இறக்கியருளினான்.
பலதார மணம்
=>
1.ஒரு சில திருமணங்களை பெருமானார் (ஸல்) அவர்கள் சமுதாய மற்றும் அரசியல் காரணங்களுக்காக செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் இஸ்லாத்தையே இலக்காகக் கொண்டு வாழ்ந்தார்கள். முஸ்லிம்களுடன் தமது நிலைமையைப் பல்வேறு முயற்சிகளின் மூலம் வலுப்படுத்திட முனைந்தார்கள். இதனால்தான் அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் சிறிய வயதுடைய மகளை
மணந்து கொண்டார்கள். அபூபக்கர் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அடுத்தப்படியாகப் பொறுப்பேற்றவர்கள். அதேபோல்தான் அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மகளை மணந்து கொண்டதும். உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களுக்குப்பின் பொறுப்பேற்றவர்கள். ஜுபைரியா (ரலி) அவர்களை மணந்து கொண்டதன் மூலம் தான் ‘பனீ அல்-முஸ்தலிக்’ என்ற குலத்தவரின் ஆதரவை திரட்ட முடிந்தது.
பெருமானார் (ஸல்) அவர்களால் ஸபியா (ரலி) அவர்களை மணமுடித்துத்தான் கடின சித்தமுடன் அரபு நாட்டில் வாழ்ந்த யூதர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடிந்தது. எகிப்திலிருந்து வந்த மேரி என்ற பெண்மணியை மணந்து கொண்டதன் மூலம் அவர்கள் எகிப்து அரசரருடன் அரசியல் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது.
ஆரம்ப நாட்களில் எதிரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு முஸ்லிம்கள் துரத்தப்பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம்தந்த நாடு அபிசீனியா. இந்த அபிசீனியா நாட்டைச் சார்ந்த ‘நிகஸ்’ அவர்களால் அளிக்கப்பட்ட ’ஜைனப்’ அவர்களை மணந்து கொண்டது, அபிசீனிய மன்னரிடத்திலும் மக்களிடத்திலும் பெருமானார் (ஸல்) அவர்கள் வெளிப்படுத்திய நட்பின், நன்றியின் வெளிப்பாடேயாகும்.
=> 2.இந்தத் திருமணங்களில் சிலவற்றைச் செய்து கொண்டதன் மூலம் பெருமானார் (ஸல்) அவர்கள் குலம், கோத்திரம், ஜாதி, மதமாச்சரியங்கள், தேசியம் என்ற குறுகிய கண்ணோட்டங்களை ஒழித்தார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர் நிராதரவானவர்கள், ஏழைகள், அவர்கள் எகிப்திலிருந்து வந்த கிறிஸ்துவப் பெண்மணியை மணந்திருந்தார்கள், வேற்றுச் சமயத்தைச் சேர்ந்திருந்த ஒரு யூதப்
பெண்மணியை மணந்திருந்தார்கள், அபிசீனியாவிலிருந்து வந்த ஒரு நீக்ரோ பெண்மணியை மணந்திருந்தார்கள். சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் வாயளவில் பேசிவிட்டு வாளாதிருந்திடுபவர்களல்ல பெருமானார் (ஸல்) அவர்கள், அதனை செயல்படுத்திக் காட்டிடவும் செய்தார்கள்.
=> 3.சில சட்டப் பிரச்சினைகளுள் தெளிவினைத் தருவதற்காக பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு திருமணத்தைச் செய்தார்கள்.
1)>அன்றைய நாட்களில் குழந்தைகளைத் தத்தெடுக்கும் பழக்கம் பரவலாக இருந்தது. இந்தப் பழக்கத்திற்கு உட்பட்டுத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘ஜைத்’ என்ற அடிமையை தத்தெடுத்து இருந்தார்கள். ஆனால் இஸ்லாம் இந்தப் பழக்கத்தை அனுமதிக்கவில்லை, தடை செய்தது. இந்தப் பழக்கத்திற்கு நடைமுறையில் முதல் மரணஅடி தந்தவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களே ஆவார்கள்.
’ஜைத்’ அவர்களால் மணவிலக்கு செய்யப்பட்டிருந்த ஜைனப் அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். இதன் மூலம் தான் ஜைத் அவர்களின் உண்மையான ததை ஆகிவிடவில்லை என்பதையும், தத்தெடுக்கும் முறை தத்தெடுப்பவரைத் தந்தையாகவும் தத்தெடுக்கப்பட்டவரை மகனாகவும் ஆக்கி விடுவதில்லை என்பதையும் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.
2)>அன்று மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்களை மறுமணம் செய்வதை அரபு மக்கள் அனுமதிக்கவில்லை. பெருமானார் (ஸல்) அவர்கள் மணவிலக்குச் செய்யப்பட்ட அப்பெண்மணியை மணந்து கொண்டதன் மூலம், அதுபோன்ற பெண்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமையைப் பெற்றுத் தந்தார்கள்.
வியத்தகு முறையில் இந்த ‘ஜைனப்’ அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் முறைப் பெண்ணுமாவார்கள். முதலில் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ‘ஜைனப்’ அவர்களை மணமுடிக்கும் பேச்சு ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் அப்போது மறுத்து விட்டார்கள். அதன் பின்னர்தான் ‘ஜைத்’ அவர்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டது. ‘ஜைத்’ அவர்களால் விவாகரத்து செய்யப்பட்ட
பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டதன் காரணம், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களை மறுமணம் செய்து மறுவாழ்வளிக்கலாம் என்பதை எடுத்துக் காட்டவேயாகும்.
இதுகுறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்கம் தருகின்றது.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர் அவ்விஷயத்தில், (அதற்கு மாறாக வேறு) அபிப்ராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யாரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.
………..’ஜைத்’ அவளை தலாக்கு கூறிவிட்ட பின்னர், நாம் அவளை உமக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், விசுவாசிகளால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தங்கள் மனைவிகளைத் தலாக்கு கூறிவிட்டால், (அவர்களை வளர்த்த) விசுவாசிகள் அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளையாக இருந்தது.
உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே அவர் ‘ஜைதுக்கு’ எவ்வாறு தந்தையாக ஆகிவிடுவார்?) ஆனால் அவரோ, அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (க் கடைசி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அணுப்பவில்லை) அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தோனாக
இருக்கின்றான்.(திருக்குர்ஆன்: 33:36,37,40)
இந்த உண்மைகளை மனதில் கொண்டே பெருமானார் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட திருமணங்களை அணுகிட வேண்டும். பெருமானார் (ஸல்) அவர்களின் திருமணங்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் மனதில் எந்தத் தடுமாற்றமுமில்லை. முஸ்லிமல்லாதவர்கள் நாம் இங்கே தந்திருக்கின்ற உண்மைகளை அவசியம் ஆராய்ந்து தங்களது முடிவுகளை வரையட்டும் என வேண்டுகிறேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...