நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், ஆகஸ்ட் 15, 2016

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?
****************************

(நமது ஊர் இளைஞர்கள் வருங்கால மாப்பிள்ளைகள் தவராமல் படிக்கவும்)

திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா? தயவு செய்து பதில் தரவும்
ரோஷன்

பதில் :

ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

5141حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا قَالَ مَا عِنْدَكَ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ فَمَا عِنْدَكَ مِنْ الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ رواه البخاري

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை'எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சரி,குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது''என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்''என்று சொன்னார்கள்.

புகாரி (5141)

எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ(21)30

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும்,இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் (30 : 21)

எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்''என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற் பொழிவில் குறிப்பிட்டார்கள்.(ஹதீஸின் சுருக்கம்)

முஸ்லிம் 2611

தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான்.

தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்
தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

6612 حَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنْ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ أَوْ يُكَذِّبُهُ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (6612

நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.
அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா?  என்று பார்க்க வேண்டும்.

நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள்.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும்.

வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம்.

இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.

இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு.1

السلام عليكم ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم இஸ்லாமியர்களுக்கும், இந்தியாவிற்கும் எதிராக செயல்பட்ட ஆங்கிலேயர்கள் 

- சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி ஜும்ஆவில் பேசுவது தகுதியானதா என்ற கேள்வி சில பொதுமக்களிடம் உள்ளது. ஆனால் ஒரு காலத்தில் சுதந்திரத்தைப் பற்றிப் பேசாத ஜும்ஆ மேடைகள் இல்லை என்று சொல்லும் நிலை இருந்தது. ஏனெனில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு மட்டும் எதிரிகள் அல்ல.. இஸ்லாத்திற்கும் எதிரிகளாக இருந்தார்கள். மூவாயிரம் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டுள்ளன. மஸ்ஜித்களில் தொழுகை நடைபெறும்போதே முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், இத்தகையவர்களை எதிர்ப்பது ஷரீஅத் அடிப்படையிலும் தவறாக ஆகாது وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا (البقرة114 இந்திய சுதந்திர வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளில் சில... நாடு விடுதலையான நேரத்தில் 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதி அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் அத்தனை உறுப்பினர்களுடன் கூடி இருந்த நிசப்தம் நிலவிய வேளையில் இந்தியா விடுதலை பிறந்தது என்பதற்காக அறிகுறியாக 12 மணி அடித்து ஓய்ந்த அந்த வேளையில் கணீரென ஒலித்த சுதந்திர கீதம் தற்போதுள்ள ‘ஜனகனமண’ அல்ல: தேசிய கீதமாக ஒலித்தது அல்லாமா இக்பாலின் ’ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ‘எனவே, இந்நாட்டில் முதல் தேசிய கீதமாக இந்த பாடல்தான் பாடப்பட்டது. ஆக இந்த கீதத்தை தான் தேசிய கீதமாக இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை இயற்றியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அந்தப் பாடல் ஓரம் கட்டப்பட்டது ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திப்பு இருந்தார். இந்திய அரசர்களும், மன்னர்களும் திப்புவுக்கு நேசக்கரம் நீட்டியிருந்தால் ஆங்கிலேய ஆட்சி சுமார் 100 வருடம் முன்பே முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் நம் நாட்டு குறுநில மன்னர்கள் வெள்ளையர்களின் வரவேற்பாளர்களாக இருந்தார்கள் திப்புவின் சுதந்திர உணர்வுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சதியில் சிக்கி இருந்தார்கள். ஆங்கிலேயர்களையும், ஆங்கில மொழியையும், அவர்களின் அரசில் பணிபுரிவதையும் அதிகம் வெறுத்து ஒதுக்கியவர்கள் முஸ்லிம்கள் தான். அந்த ஆங்கிலேய வெறுப்பு சுதந்திரத்திற்குப் பின்பும் தொடர்ந்ததால் தான் படிப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். எந்த ஆலயங்களிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரம் நடைபெறவில்லை. ஆனால் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடைபெற்றன. ஆலிம்கள் ஜும்ஆ மேடைகளில் மார்க்கத்தை மட்டும் பேசாமல் சுதந்திரத்தின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறினர். அதனால் தான் ஆங்கிலேயர்கள் பெருமளவில் ஆலிம்களைக் கொன்றனர். மூவாயிரம் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டன. மஸ்ஜிதில் தொழுகை நடைபெறும்போதே ஆங்கிலேயர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மஸ்ஜிதின் சுவர்களையும் துளைத்துக் கொண்டு உள்ளே இருந்தவர்களை குண்டுகள் பதம் பார்த்த வரலாறும் உண்டு இப்படிப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்களை பின்வரும் சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக பாசிச சக்திகளும், பாசிச ஊடகங்களும் மறைத்து வருகின்றன. வெள்ளையர்களுக்கு ஏவலாளிகளாக இருந்தவர்கள் இன்று தேசியவாதிகளாக வேடமிடுகிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு அன்று அடிபணிந்து போகாமல் சுதந்திர உணர்வுக்கு முன்னோடிகளாக இருந்த முஸ்லிம்கள் இன்று சுதந்திரத்திற்குப் பிறகு நிமிர்ந்து நிற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பெற்றோர்களை, மனைவி மக்களைப் பிரிந்து வியர்வை சிந்தி உழைத்து சம்பாதிக்க வேண்டிய நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ஷைகுல் ஹிந்த் எனப்படும் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஷைகுல் ஹிந்த் எனப்படும் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் சிறையில் இருக்கும்போது ஆங்கிலேயர்கள் தன் கையை தொட்டு விட்டால் அந்தக் கையைக் கழுவாமல் எந்தப் பொருளையும் தொட மாட்டார்கள் எனவே தான் ஒரு ஆங்கிலேயன் கூறுவான் மஹ்மூதுல் ஹஸன் அவர்ளை மால்டா சிறையில் எந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் சித்ரவதை செய்தார்கள் என்பதை அவர்கள் வஃபாத்தான பின் குளிப்பாட்டும்போது தான் உணர முடிந்தது. அதாவது அவர்களை குளிப்பாட்டும்போது இடுப்பில் சதையே இல்லை அது பற்றி அவருடன் சிறையில் இருந்த ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஆங்கிலேயர்கள் இரும்பை பழுக்க காய்ச்சி அவரது இடுப்பில் சூடு வைப்பார்கள் அதனால் தான் அவரது இடுப்பில் சதையே இல்லை என்றார்கள் காந்தியை பிரபலப்படுத்தியது இந்த மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் தான் , காந்திக்கு மகாத்மா என்று பட்டம் கொடுத்தது மெளலானா அப்துல் பாரீ ரஹ் அவர்கள் தான் ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் மால்டா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று வருடம் ஏழு மாதம் சிறை வாசத்திற்குப் பின் குற்றம் நிரூபிக்கப்பட
ாததால் அவர்களையும், அவர்களுடன் இருந்த நால்வரையும் 1920 ஜூன் 20- ம் தேதி ஆங்கிலேயர்கள் விடுதலை செய்தனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட அவர்கள
் மால்டா விலிருந்து மும்பை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்களை வரவேற்பதற்காக பல்வேறு ஆலிம்கள், முக்கியத்தலைவர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர். அவ்வாறு வருகை புரிந்த தலைவர்களில் காந்திஜியும் ஒருவர். பிறகு மும்பையில் ஒரு அறையில் காங்கிரஸ் தலைவர்களும், மற்றும் உலமாக்களும் இந்தியாவின் நிலை பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இனிமேல் அகிம்சை வழியில் போராட வேண்டும் என்பது ஆலோசனையின் முக்கிய அம்சமாக இருந்தது. அகிம்சைப் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்ற விவாதம் எழுந்தது. அப்போது ஷைகுல் ஹிந்த் அவர்கள் பகலில் தன்னை வரவேற்க வந்தவர்களில் இளம் ஃபாரிஸ்டர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர் எங்கே ? என்று கேட்டு அவரையே அதாவது காந்தியையே தலைவராக நியமிக்கச் சொன்னார்கள். அதன் பின்பு காந்தியை தலைவராக அறிமுகப்படுத்தவும் மக்களிடையே சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கவும் ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் பல ஊர்களிலும் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் மெளலானா அப்துல் பாரீ ஃபரங்கீ மஹல்லீ ரஹ் அவர்கள் தான் முதலில் காந்தியை மாகாத்மா என பட்டம் சூட்டி அழைத்தார்கள் அன்று முதல் அப்பெயர் பிரபலமடைந்தது. குஜராத்தில் பணியா சமூகத்தைச் சார்ந்த மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்பவரை தேசப்பிதாவாகவும், மகாத்மாகவும் மாற்றியது உலமாக்கள் அமைப்பு தான் என்பதை மகாத்மா காந்தி கடைசி வரை மறக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. ஆனால் நாம் மறந்து விட்டோம் மற்றவர்கள் மறுக்கிறார்கள் காந்தியை உருவாக்கிய சமூகத்தினர் இன்று தேச துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். காந்தியை சுட்டுக் கொன்ற சமூகத்தினர் தேச பக்தர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வரலாற்று ஆசிரியர் தாம்சன் என்பவர் குறிப்பிடும் முக்கியச் செய்தி டெல்லியில் ஒரு கேம்ப் ஒன்றில் நான் தங்கியிருந்த போது மனித உடல்கள் எரிக்கப்படும் வாடையை நுகர முடிந்தது நான் ஒரு வித அச்சத்தோடு வெளியில் எட்டிப் பார்த்த போது அங்கே நான் கண்ட என் காட்சி மனதை பதற வைத்தது. சுமார் 40 மார்க்க அறிஞர்கள் உடம்பில் துணி இல்லாமல் நிர்வாணமாக நெருப்புப் பள்ளத்திற்கு அருகில் கைகளை கட்டி நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களைச் சுற்றி ஆங்கிலேயர்கள் நின்று கொண்டு ஒவ்வொருவராக நெருப்பில் தூக்கி வீசுகிறார்கள் அவ்வாறு வீசப்படும்போது அவர்களிடம் கேட்கிறார்கள் நீங்கள் உங்களுக்கு எதிரான போராட்டத்தை விட்டு விட்டால் உங்களை உயிரோடு விட்டு விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் ஆனால் அந்த ஆலிம்கள் நாங்கள் கொல்லப்பட்டாலும் உங்களுக்கு எதிராகவே இருப்போம் என்று கூறுகிறார்கள் கடைசியில் அந்த நாற்பது ஆலிம்களும் நெருப்பில் தூக்கி வீசப்படும் காட்சி இன்றளவும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார் சுதந்திரப் போராட்டத்திற்காக படிப்பை பாதியிலேயே நிறுத்திய காயிதே மில்லத் ரஹ் தாயகம் மீது படையெடுத்து வருபவர்கள் முஸ்லிம்களாயினும் துரத்தும் பரம்பரை நாங்கள் என முழங்கி காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் காயிதே மில்லத் அவர்கள் இந்தியாவிற்கும், இஸ்லாத்திற்கும் எதிரான ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ஆலிம்களில் சிலரைப் பற்றி.. பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எனும் எம். ஜே. கலீலுர் ரஹ்மான் பாகவீ (ரஹ் 29 -01 -1905ல் பள்ளப்பட்டியில் பிறந்தவர். குடியேறியவர், மணி மொழி பத்திரிக்கை ஆசிரியர், படிப்பை பாதியிலேயே உதறியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘இந்திய தேசிய ராணுவத்தை’ உருவாக்கி வெள்ளை அரசை தூங்க விடாமல் துளைத்தெடுக்கவும், துரத்தி அடிக்கவும் செய்த அந்த நேரத்தில் நேதாஜியின் படையில் பல்வேறு சமுதாயத்தினர் இருந்தாலும் அதில் பல முஸ்லிம் ஜெனரல்கள், கர்னல், லெப்டினென்ட் கர்னல்கள், முஸ்லிம் சிப்பாய்கள் பல பேர் இருந்தனர். இதில் நேதாஜியுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள். நேதாஜி அவர்களுடன் இந்திய நாட்டு விடுதலைக்காக 1941 முதல்1945 வரை வெளிநாட்டிலே பெரும்பாலும் இருந்து செயலாற்றிய பெருமைக்குரியவர். 1946 டிசம்பர் 5ல் ரஜிலா என்ற கப்பலில் சென்னை வந்தார். தாயார் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிய செய்தியை அப்போது அறிந்தார் நேதாஜியின் படை வரிசையில் நாட்டு விடுதலைக்கு வீட்டையும் மறந்து தியாகம் செய்தவர் மணிமொழி மெளலானா. (மணிமொழி மெளலானா அவர்கள் பயன்டுத்திய பல அறிய நூல்கள் மதரஸா காஷிஃபுல் ஹுதா நூலகத்தில் உள்ளன) திண்டுக்கல் ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி 26-11-1876ல் சேலம் ஆத்தூரில் பிறந்தவர். ஹாஜி காதிர் முஹ்யித்தீன் இராவுத்தர் அவர்கள் புதல
்வர் கிலாபத் இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும் உச்சத்திலிருந்தபோது திண்டுக்கல் நகரை தலைமையாக கொண்டு அதன் பொதுச்செயலாளராகப் பணிபுரிந்ததார். த
ிருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் கதர் அணியாத முஸ்லிம்களின் திருமணத்திற்கு செல்வதில்லை என்ற கொள்கை உடையவர். கிலாபத், ஒத்துழையாமை இயக்கத்தில் பெரும் பங்கேற்றார். மதுரை டவுன் ஹாலில் ராஜாஜி தலைமையில் நடந்த மது விலக்கு பொதுக் கூட்டத்தில் இரண்டு மணி நேரம் வீறு கொண்டு இவர் பேசியதற்குப்பின் வேறு எந்த பேச்சாளரும் பேசுவதற்கு பொருள் இல்லை என்ற நிலையை உருவாக்கியவர். இவரது '' இயற்கை மதம்'' நூலுக்கு ஈ.வெ.ரா. முன்னுரை எழுதியுள்ளார். 1955 ஜூன் 23ல் காலமானார் சிராஜுல்மில்லத் அப்துஸ் ஸமது சாகிபின் தந்தையார் இவர். அல்லாமா நஹ்வி செய்யது அஹமது மெளலானா- அல்ஹிதாயா, கமருஸ்ஸமான், காலச்சந்திரன் ஆகிய இதழ்களின் ஆசிரியரான அல்லாமா நஹ்வி சையது அஹ்மது. மெளலானா தேசிய இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு கதராடை அணிந்து சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். தனது அல்ஹிதாயா பத்திரிக்கை மூலம் தேச விடுதலைக்கு வழிகளை அறிவித்தார். இவர் மீது சினங்கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் இவரை சிறையில் தள்ளியது. 1948 சுதந்திர இந்தியாவில் மரணத்தை தழுவினார். ஷைகு அப்துல் காதிர் ஆலிம் சாஹிப்- 1885 இராமநாதபுரம் நம்புதாளையில் பிறந்து. நைனா முகம்மது ஆலிம் சாஹிபிடம் கல்வி பயின்ற இவர் கிலாபத் இயக்கப் போரில் பெரும் தொண்டாற்றினார். 1955ல் காலமனார். - அமானி ஹள்ரத்- 1893 ஜூலை 23ல் இராயவேலூரை அடித்த பள்ளி கொண்டாவில் ஹாஜி மெளலானா அப்துல் ரஹீம் புதல்வராகப் பிறந்தார். கிலாபத் இயக்கத்தில் தீவிரப் பணியாற்றினார். 1958ல் ஷைகுல் மில்லத் பட்டம் காயிதே மில்லத் அவர்களால் அன்னாருக்கு வழங்கப்பட்டது அன்று வெள்ளையர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்ததைப் போன்று இன்று இஸ்ரேலியர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கிறார்கள் அன்றாடம் நமது உடன் பிறவா சொந்தங்கள். குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். அந்த முஸ்லிம்களுக்காக ஒவ்வொரு தொழுகையிலும் துஆ செய்வதோடு. இஸ்ரேலுக்கு எதிராக முடிந்த வரை எதிர்ப்பைக் காட்ட வேண்டும் நம் குறிப்பாக இஸ்ரேலின் தயாரிப்புகளாக வெளியாகும் பொருட்களை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை தவிரக்க வேண்டும் இஸ்ரேலின் தயாரிப்புகள் அல்லது இஸ்ரேலின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டு வெளியாகும் பொருட்கள் – சேனல்கள் – 20 th century fox films, kids etc, cnn, news of the world, walt Disney இன்னும் சில சேனல்கள், IBM. body mist body care. COCA - COLA – FANTA , champion , felix-cat food, fox tv net work, evian, hp foods , huggies disposable baby product, intel, ibm, Jacobs biscuits, JOHNSON & JOHNSON, Kleenex facial, KIWI shoe care, KITKAT, MILK MADE, MILKY BAR , NESTLE , NESCAFE , NOKIA, NATIONAL geographicsl, pickwick-tea, POLO. SPRITE, SUNKIST, sky tv network, star tv net work, apparel, சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது இன்னும் நிறைய உள்ளன உலக உளவில் சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட பங்கை இஸ்ரேலுக்கு தருகிறது அதன் படி சுமார் 10 ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டில் அதில் 2 ரூபாய் இஸ்ரேலுக்குப் போகிறது என்றால் அந்த சிகரெட்டை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இஸ்ரேலின் கொடூர கொலைகளுக்கு துணை போகிறார்கள் PART - 2 வளர்ந்து வந்த புரட்சியாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் ஆங்கிலேயனின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட வரலாற்றுச்சான்றுகள்உள்ளன டிடு மீர் நடத்திய கலகம், மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஹக்கிம் அஜ்மல் கான், ரபி அகமது கிட்வாய், முகமது அஷ்பாக், உல்லாகான் ஆகியோர் ஆங்கிலேயர்கள் எதிர்த்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட முக்கிய பிரமுகர்கள். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார்கான் தனது 95 ஆண்டு வாழ்க்கையில், 45 ஆண்டுகளை ஆங்கிலேயனை எதிர்த்த சுதந்திரப்போராட்ட வேள்விக்காக சிறையில் கழித்தவர் போபாலைசேர்ந்த பரகத்துல்லா கத்தார் கட்சி என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தோற்றத்தை ஏற்படுத்திய நிறுவனர்களின் ஒருவர் இந்த கத்தார் கட்சி இந்தியாவில் வெள்ளைக்காரனுக்கு எதிராக புரட்சியை நடத்துவதற்காக, கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை தோற்றுவிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து புரட்சியாளர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது அப்படி அனுப்பப்பட்டவர்கள் மார்க்சிய பயங்கரவாதிகள் என்பதாகக் கூட ஆங்கிலேய அரசாங்கத்தால் முத்திரைக் குத்தப்பட்டனர். அவ்வாறு இந்தியாவிலுள்ள பல பெரு நகரங்களில் வந்திறங்கிய புரட்சியாளர்கள் பலரும் ஆங்கிலேய அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர். பிரான்ஸ் நாட்டில் தலைமறைவு புரட்சிகர வாழ்க்கையிலிருந்து கத்தார் கட்சியை நடத்தியதில் ஒருவரான சையத் ரகுமத்ஷா என்ற இந்தியர் 1915ம் ஆண்டு புரட்சிகர எழுச்சியில் தூக்கிலிடப்பட்டார்
. மலேசியாவிலும், பர்மாவிலும் சையத் முஸ்தபா உசையினுடன் இணைந்து இந்திய ஆயுத கிளர்ச்சிக்காக பணிகள் செய்து வந்த உத்திரபிரதேசத்தின் ஃபசியாபாத்தை
சேர்ந்த அலி அகமது சித்திக் 1917ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் 1942ம் ஆண்டு ஈடுபட்ட வைக்கம் அப்துல் காதர் என்ற கேரளத்தைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர் தூக்கிலிடப்பட்டார். காந்தியின் தொடர் பயணங்களுக்கு நிதி கொடுத்து உதவிய தொழிலதிபர் உமர் சுபானி என்பவரும் முஸ்லிம் சமூகத்திலிருந்து வந்த பிரமுகர் தான். ஹஸ்ரத் மஹால், அஸ்காரி பேகம், பீ அம்மா போன்ற முஸ்லிம் பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்கள்.தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையில் முதல் சுதந்திர முழக்கம் செய்தவர் திப்பு சுல்தான் தான் என்ற செய்தியை இப்போது வரலாறு ஒப்புக்கொள்கிறது. ஆங்கிலேயனுடைய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் மேட்டுக்குடி குடும்பங்களைச் சேர்ந்த பல அறிவு ஜீவிகள் முழுமையாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காக வெள்ளையனால் குறி வைத்துத் தாக்கப்பட்டனர் உருது கவிஞர் மிர்ஸா காலிப் 1797ம் ஆண்டு முதல் 1869ம் ஆண்டு வரை, இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர். பிற்காலத்தில் பாகிஸ்தான் என்ற நாட்டை பிரிப்பதற்காக குரல் கொடுத்தார் என்று இன்று சிலரால் குற்றம் சாட்டப்படும் ஜின்னா கூட 1930ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து சுதந்திரத்திற்கானபோராட்டங்களில் ஈடுபட்டவர் தான். அதேபோல டாக்டர் சர்அல்லமா முகமது இக்பால் என்ற பிரபல கவிஞர் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக போராடியவர். இப்படியாக முஸ்லிம்களின் பங்களிப்பு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்களது உடலையும், உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்கு இருந்திருக்கிறது என்ற செய்தி முறையாக எடுத்துக்கூறப்பட வேண்டும். இதை முஸ்லிம் அமைப்புகள் மட்டுமே வெளியே கொண்டு வருவது என்ற நிலை மாறி, மற்ற சமூகத்தினரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் நோக்கோடு இந்த உண்மைகளை பரப்ப வேண்டும்.தீவிரவாதத்தையும், இஸ்லாத்தையும் இணைத்து பரப்பக்கூடிய சக்திகள் இந்திய மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுகின்றன. ஆகவே மேற்கண்ட விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் வட்ட மேஜை மாநாட்டில் மெளலானா முஹம்மது அலி பங்களிப்பு முதல் வட்ட மேஜை மாநாடு (1930-32) லண்டனில் நடந்தது. இந்த மாநாட்டில் கிலாபத் இயக்கத்தின் தலைவரும், முஸ்லிம் லீக் தலைவரான மெளலானா முஹம்மது அலி பங்கேற்றார்.உணர்ச்சியுடன் பேசினால் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்று மருத்துவர்கள் தடுத்தும் கூட மெளலானா அவர்கள் ‘என் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமல் இருப்பதை விட வெளியிட்டு இறந்து விடுகிறேன். இல்லையேல் சுதந்திரம் பெற்ற இந்நாட்டிலே ஒரு புதைகுழியைக் கொடுங்கள்’ என விடுதலை தாகத்தை வெளியிட்டார். எனவே, மெளலானாவின் தேசப்பற்றையும், விடுதலை வேட்கையும், மெய்சிலிர்க்க வைக்கிறது. மெளலவீ அஹ்மதுல்லா ஷா சென்னையில் பிறந்து அயோத்தியில் வாழ்ந்தவர் மெளலவீ அஹ்மதுல்லா ஷா ஒரு கையில் வாளையும் மறு கையில் பேனாவையும் ஏந்தி அவ்வீரத்தியாகி புரிந்த தொண்டிற்கு இணையே இல்லை. மேற்சொன்ன வரிகள் ஆணைத்தும் இந்து மகாசபை வீ ரசாவர்க்கர் தனது எரிமலையின் மௌலவி அகமதுஷா அவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே செல்வதிலிருந்து எடுத்த ஒரு பகுதி மட்டும் தான். பைசாபாத் சிறையில் தூக்குத்தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிகுந்த மௌலவி அகமதுல்லாஹ் ஷாவை சிறைக் கதவுகளை உடைத்து புரட்சியாளர்கள் மீட்டுச் சென்றனர். ரூ. 50 ,000-க்கு ஜகன்னாத சிங் செய்த துரோகம் அயோத்திக்கு வந்த மௌலவி அகமதுல்லாஹ் ஷா அயோத்திக் கோட்டையிலிருந்த தொடை நடுங்கி ராஜா ஜகன்னாத சிங்கிற்கு தங்களது புரட்சிக்கு ஆதரவு தர கேட்டு கடிதம் கொடுத்து அனுப்பினர் துரோக சிந்தை கொண்ட அந்த ராஜா, மௌலவி அவர்களையே நேரில் பார்க்க வரச் சொன்னான். உடனே ராஜாவின் அழைப்பை ஏற்று யானை மீதமர்நது சென்றார் மௌலவி. நகருக்குள் சென்றதும் நகர வாயிற் கதவுகள் மூடப்பட்டது அதன் அர்த்தத்தை அறிந்து கொண்ட மௌலவி அஞ்சா நெஞ்சத்துடன் முன்னேறி தான் வந்த யானையின் மாவுத்தனுக்கு யானை, கதவை முட்டி உடைக்கட்டும் என்று கட்டளையிட்டு தொடர்ந்து முன்னேற முயன்றார்.இன்னும் ஒரே தடவை முட்டினால் போதும் கதவு தடாலென்று விழுந்து விடும். ஆனால் அந்தோ அதற்குள் அந்த துரோக ராஜாவின் தம்பி மௌலவியை குறிவைத்து சுடவே, அப்பெரியார் உடலில் தோட்டா பாய்ந்து வீர சுவர்க்கமடைந்தார் . இணையற்ற தேசபக்தரும், எண்ணிக்கையற்ற ஆங்கில வீரர்களை அலற அடித்தவரும், மகாவீரருமான மௌலவி அகமதுல்லாஹ் ஷா துரோகியான ஒரு கோழையின் கையால் மரணமடைய வேண்டும் என்பது பாழும் விதியின் கட்டளைப் போலும் என்று எரிமலையில் சாவர்க்கர் எழுதுகிறார். 1858 ஜூன் முதல் வாரத்தில் இந்தப் பாவத்தை நிறைவேற்றிய பாதகர்கள், அரசின் அறிவிப்பின் படி 50,000 ரூபாய் வெகுமதியை பெற்றிட மௌலவியின் தலையை வெட்டி வெள்ளைத் துணியில் கொண்டு சென்றனர். அத
னை கொத்தவாயிலில் எல்லோரும் பார்க்கும் வண்ண கம்பில் சொருகி காட்சிப் பொருளாக வைத்த கொடுமையினை எழுதிட கையும் மறுக்கிறதே...மௌலவி மாண்ட செய்தி பரவ
ியது. உச்சந்தலையில் நச்சரவு தீண்டியாது போல செந்தேகத்தில் செந்தேள் கொட்டியது போல துடித்தெழுந்தனர். துரோகிகளை வஞ்சம் தீர்த்திட நிஜாம் அலிகான் பிலிபட் வரை படையெடுத்தார். கான் பகதூர்கான் நாலாயிரம் படையுடன் தாக்கத் துவங்கினார். பரூகாபாத் தேசபக்தர்கள் ஐயாயிரம் பேர் போருக்குப் புறப்பட்டனர். விலாயத்ஷா மூவாயிரம் வீ ரர்களுடன் மோதலுக்கு இறங்கினார். நானாசாகிப் பாலாசாகிப், அலிகான் மிவாதி, முதலிய தலைவர்கள் ஐயாயிரம் சிப்பாய்களுடன் ரோஹில் கூர்திலும் அயோத்தியிலும் மகத்தான போரைத் துவக்கினர். மௌலவி அகமதுல்லாஹ் ஷா சென்னையில் பிறந்தவர் மௌலவி அகமது ஷாவின் வீர சரித்திரத்தை விளக்கிக் கொண்டே சென்றதன் காரணம் அவர்கள் பிறந்தது சென்னையில். அவர் பெயர் மௌலவி அகமதுஷா. அவர் நமது சென்னை மாகாணத்தில் பிறந்தவர் சுதந்திர யுத்தம் மூண்டதும் வெளிக்கிளம்பிப் போர் புரிந்தார் அவர் எம். எஸ். சுப்பிரம்ணிய ஐயர் எழுதி 1953 இல் சென்னையிலிருந்து வெளியான சுதந்திர சரித்திரம் நூல் பக்கம் 102 ல்.. மேலும் அரியலூர் எல் .சபாபதி எழுதிய இந்திய சுதந்திரப் போர் பக்கம் அகமது ஷா 61ல் சென்னையில் பிறந்தவர் என்று உள்ளது. அகமது ஷா சென்னையில் பிரபல குடும்பத்தைச் சார்ந்தவர் என்று கப்பின்ஸ் குறிப்பிடுகிறார். (எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்திர யுத்தம் வீ ரசாவர்க்கர் எழுதிய 9 -8 -1946 இல் வெ ளியான பதிப்பில் பக்கம் 204). சுதந்திரப் போராட்டத்திற்காக நிதி உதவி செய்ததில் முஸ்லிம் பிரமுகர்களின் மாபெரும் பங்களிப்பு. போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர். லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக் காசேரலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள்என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் ஆவார். ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார். இவ்வாறு வ.உ.சியின் இமாலய முயற்சிக்கு அடித்தாங்கல்களாக பல முஸ்லிம் பெருமக்கள் இருந்துள்ளனர். வ.உ.சியின் முயற்சியை - தியாகத்தை மதிக்கும் நம் ஆதங்கமெல்லாம், கப்பல் ஓட்டிய தமிழனின் புகழைப் பேசும் போதெல்லாம் 'கப்பல் வாங்கித்தந்த தமிழன்'ஹாஜி. பக்கீர் முகம்மது சேட்டையும் கொஞ்சம் சேர்த்துப் பேசுங்களேன் என்பதுதான். (* செ.திவான், விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்,பக்கம் 78.) 1908 - இல் வ.உ.சி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் நடைப
ெற்றது. அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியான பலரில்... முதல் நபர் முகம்மது யாசின் என்ற இள
ைஞராவார். - தனது 'சுயசரிதை' யில் வ.உ.சி. இதை குறிப்பிடுகிறார். வ.உ.சி. விடுதலையான பின் முஹைதீன் பிள்ளையின் இல்லத்தில் பலமுறை வந்து தங்கியுள்ளார். அப்போதுதான் அவர் திருக்குறளுக்கு உரை எழுதினார். ஆந்த நூலை உத்தமபாளையம் ஆனந்தா அச்சுக் கூடத்தில் பதிப்பித்துக் கொடுத்தவர் உத்தமபாளையம் கே.எம்.அகமது மீரான்.* முஹைதீன் பிள்ளை, அஹமது மீரான் ஆகியோர் செய்த உதவிகளுக்காக வ.உ.சி அவர்களுக்கு எழுதிய கடி

பிரபல்யமான பதிவுகள்