ரூஹ்..
ரூஹ் (ஆன்மா) என்றால் என்ன...
“ரூஹ் (ஆன்மா) என்றால் என்ன?” என்ற கேள்வி இன்று மட்டுமல்ல நபி (ஸல்) அவர்களது காலத்திலும் இருந்துள்ளது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “ஒரு முறை நான் மதீனாவில் நபியவர்களுடன் ஒரு வேளான்மைப் பூமியில் இருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை நாம் கடந்து சென்றோம். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து வந்து “அபுல் காஸிமே ரூஹ் என்றால் என்ன என்று எமக்கு அறிவியும்” என்றார். நபியவர்கள் மௌனமானர்கள். அவர்களுக்கு இறைவனிடமிருந்து செய்தி (வஹி) அறிவிக்கப்படுவதை நான் உணர்ந்தேன். (வஹி வரும்போது ஏற்படும் சிறமம் விலகி) அவர்கள் நிதானித்த பின்னர் நபிகளார் பின்வரும் திருமறை வசனத்தை அந்த யூதருக்கு ஓதிக் காண்பித்தார்கள்.
“நபியே உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்கிறார்கள். ரூஹ் என்பது என் இறைவனுடைய கட்டளையிலிருந்து உள்ளதாகும். அது பற்றி உமக்கு மிகச் சொற்ப அறிவே அன்றி நாம் வழங்கவில்லை என்று நீர் கூறும்” (17:85)
ரூஹ், தமிழில் ஆன்மா அல்லது ஆத்மா என்றும் உயிர் என்றும் மொழிபெயர்க்கப்படுகின்றது. ரூஹ் என்பது உயிரல்ல. நாம் கூட உயிரும் ரூஹும் ஒன்று என்றுதான் நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் ரூஹ் என்பது வேறு உயிர் என்பது வேறு. அல்குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு ரூஹ் பற்றி அல்லாஹ் எமக்கு அளித்துள்ள சிறு விளக்கத்தோடு சற்று சிந்தித்துப் பார்த்தாலே போதும் ரூஹும் உயிரும் வேறுபட்ட இரண்டு அம்ஷங்கள் என்பதை அறிய முடியும். இங்கு ரூஹ் மற்றும் உயிர் என்பன எவ்வாறு வேறுபடுகின்றன என்பதற்கான சில ஆதாரங்களைப் பார்ப்போம்.
1. “வளர்கின்ற அனைத்திற்கும் உயிர் இருக்கின்றது” என்பதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கின்றது. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் அனைத்தும் வளர்கின்றன. எனவே அவற்றுக்கு உயிர் உள்ளதென்பதை எம்மால் விளங்க முடியும். அப்படியாயின் ஒரு பெண்ணின் சினை முட்டையும் ஆணின் விந்தனுவும் ஒன்று சேர்ந்ததில் இருந்து 42 ஆம் நாள் ஆகும் வரை அக்கரு வளர்ச்சியடைகின்றது. வளர்ச்சியடைகின்றதென்றால் அதற்கு உயிர் இருக்கின்றது என்று பொருள். நபி (ஸல்) அவர்களது ஹதீஸின் படி 42 ஆம் நாளில் அல்லாஹ் ஒரு வானவரை அழைத்து அவ்வானவரிடம் ஒரு ரூஹைக் கொடுத்து அதனை குறித்த தாயின் கருவறையில் உள்ள சிசுவில் கொண்டு சேர்க்குமாறு கட்டளையிடுகின்றான். தற்போது சற்று சிந்தியுங்கள். கரு 42 ஆம் நாள் ஆகும்வரை வளர்ச்சியடைகின்றது எனவே அதற்கு உயிர் இருக்கின்றது. 42ம் நாளில்தான் ரூஹ் ஊதப்படுகின்றது. அப்படியாயின் உயிரும் ரூஹும் வெவ்வேறு பொருட்கள் என்பது தெளிவாகிறது.
2. நாம் உறக்கத்திற்குச் செல்லும்போது அல்லாஹ் எமது ரூஹை எம்மைவிட்டும் உயர்த்துகின்றான். ஆனாலும் உடலுக்கும் ரூஹிற்கும் இடையில் ஒரு இணைப்பு இருக்கும். யாருடைய அஜல் இன்னும் உள்ளதோ யார் மீண்டும் விழித்து எழவேண்டும் என்று அல்லாஹ் நாடுகின்றானோ அவரது ரூஹை அல்லாஹ் அவ்வுடலுடன் சேர்த்துவிடுவதாகவும் யாரது அஜல் முடிகின்றதோ யார் விழித்து எழக்கூடாதென இறைவன் நாடுகின்றானோ அவரது ரூஹை அப்படியே தன்பால் எடுத்துக்கொள்வதாகவும் அல்லாஹ் பின்வரும் வசனங்களில் 39:42/6:60 கூறுகின்றான். அப்படியாயின் உறக்கத்திலும் எமது இதயம் தொழிற்படுகிறது. நாம் அசைகின்றோம், சுவாசிக்கின்றோம். ஏனெனில் ரூஹ் உயர்த்தப்பட்டாலும் உயிர் இருப்பதால்தான் இவ்வாறு நடைபெறுகின்றது. எனவே ரூஹும் உயிரும் வேறு என்பது விளங்குகளிது.
3. எமது மரணத் தருவாயில் மலக்குல் மௌத் அவர்கள் வருகை தந்து ரூஹைக் கைப்பற்றிக்கொண்டு வானத்தை நோக்கி உயர்ந்து செல்வார்கள். அப்போது அந்த ரூஹ் செல்லும் திசையை எமது பார்வை பின்தொடர்வதாக அல்குர்ஆன் கூறுகின்றது. ரூஹ் பிரிந்தாலும் உடலில் உயிர் இருக்கின்றதென்பதை இதிலிருந்து அறிய முடியும். உடலில் உயிர் இருப்பதால்தான் கண்கள் பார்க்கும் தொழிலைச் செய்கின்றன. ரூஹ் பிரிந்ததும் மரணித்தவரது கண்களை மூடிவிடுவது நபிகளாரின் சுன்னாவாகும்.
4. கண் தானம், இதய தானம், கிட்னி தானம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இவ்வாறான உருப்புதானங்கள் செய்வது மரணித்ததன் பின்னர்தான். இங்கு மரணித்ததன் பின் என்பது ரூஹ் கைப்பற்றப்பட்ட பின், உயிர் பிரிய முன் என்பதாகும். ரூஹ் பிரிந்தாலும் உடலில் உயிர் இருப்பதால்தான் உறுப்புக்கள் வேறாக்கப்படுகின்றன. உடல் உஷ்னம் தனிய முன்னர் உறுப்புக்களை மாற்றவேண்டும் என்று நாம் கூறுவது இதனைத்தான். ஆக இங்கும் உயிர் வேறு ரூஹ் வேறு என்பது அழகாகத் தெரிகின்றது. உடலில் இருந்து உயிர் படிப்படியாகப் பிரிந்து தொண்டைக் குழியால் வெளியேறும் காட்சியை நவீன மறுத்துவத் தொழில்நுட்பம் Thermal imaging camera மூலம் படம்பிடித்துள்ளனர்.
ரூஹ் பிரிந்தாலும் உடலில் குறிப்பிட்ட சில நேரங்களுக்கு உயிர் இருக்கின்றது. அதனால்தான் அந்த ஜனாஸா வானவர்களால் ரூஹ் சுமந்து செல்லப்படுவதைப் பார்ப்பதாகவும் அவ்வுடலை மண்ணரை நோக்கிக் கொண்டு செல்லும்போது அது நல்ல மனிதனாக இருந்தால் விரைவாகக் கொண்டு செல்லும்படியும் கெட்ட மனிதனாக இருந்தால் மண்ணரைக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் உரக்கக் கத்துவதாகவும் நபிகளார் கூறினார்கள். மண்ணரையில் அடக்கம்செய்துவிட்டு நாம் நடந்துவரும் காலடி ஓசைகளைக்கூட அவ்வுடல் கேட்கின்றது என்றார்கள். ஜனாஸாவை வீட்டில் மக்கள் பார்வையிடும் போதும், அதனைக் குளிப்பாட்டும் போதும், கபன் செய்து தொழுகை நடாத்தும் போதெல்லாம் அவ்வுடலில் உயிர் இருப்பதால் அது சுற்றி நடக்கும் விடயங்களை அறிந்துகொள்ளவும் கூடும். அல்லாஹ்தான் அனைத்தையும் அறிந்தவன். இதனோடு தொடர்பாக நபியவர்களது பத்ர் யுத்தத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கு நினைவு கூர்வது பொருத்தமென நினை;கின்றேன்.
அபூ தல்ஹா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பத்ர் போரன்று நபி (ஸல்) அவர்கள் 24 குறைஷித் தலைவர்களின் சடலங்களை நாற்றம் படித்த கிணற்றில் வீசி எறியும்படி கட்டளையிட்டார்கள். நபியவர்கள் போரில் வெற்றி பெற்றால் அந்த இடத்தில் மூன்று நாட்கள் தங்குவது வழக்கம். அவ்வாறே பத்ர் போர் முடிந்த பின் அங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள். மூன்றாவது நாள் தனது வாகனத்தைத் தயார்செய்துகொண்டு தனது தோழர்களுடன் எதிரிகளின் சடலங்கள் போடப்பட்ட கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அவர்களை அவர்களுடைய தகப்பனாரின் பெரைக் கூறி அழைத்து “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! முன்பே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டிருந்தால் இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாமே! நிச்சயமாக எமது இறைவன் எமக்கு வாக்களித்ததை நாம் உண்மையாகக் கண்டுகொண்டோம். உங்களது இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் கண்டுகொண்டீரா?” என்று கேட்டார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே ரூஹ்ஹ{கள் அற்ற சடலங்களிடம் நீங்கள் என்ன பேசுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நான் கூறுவதை அவர்களைவிட நீங்கள் அதிகம் கேட்கும் திறன் உள்ளவர்களாக இல்லை” மற்றுமொரு அறிவிப்பில் “அவர்களைவிட நீங்கள் கேட்கும் ஆற்றல் அதிகமுடையவர்களாக இல்லை. ஆனால் அவர்களால் பதில் அளிக்க முடியாது” என்றார்கள். ஆதாரம் (புஹாரி, முஸ்லிம், மிஷ்காதுல் மஸாபீஹ் 2/345)
ரூஹ் பிரிந்து குறிப்பிட்ட சில நேரங்கள் வரைதான் உயிர் உடலில் இருக்கும். உயிர் இருக்கும்போது அவற்றால் செவிமடுக்க முடிந்தாலும் உயிர் பிரிந்து மரித்தபின் ஒருபோதும் அவற்றால் செவிமடுக்கவும் முடியாது. யாராலும் செவிமடுக்கச் செய்யவும் முடியாது. அல்லாஹ் கூறுகின்றான்.
“நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது” (27:80)
எமது ரூஹிற்கு ஆரம்பம் ஒன்று உண்டு. ஆனால் முடிவோ அழிவோ இறப்போ கிடையாது. ஆனல் உயிர் என்பது அழியக்கூடியது. அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்ப்பது அவனுக்காக அவனுடைய தீனை வாழச்செய்வதற்காக எமது உயிரைத் தியாகம் செய்யவேண்டும். உயிரைத் தியாகம் செய்தால் அதற்குப் பகரமாக அல்லாஹ் எமது ரூஹிற்கு சுவனத்தைத் தருவதாக வாக்களித்துவிட்டான். பாருங்கள்:
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும்இ செல்வங்களையும் அவர்களுக்கு சுவனம் நிச்சயமாக உண்டு என்ற ஒப்பந்தத்தில் விலைக்கு வாங்கிவிட்டான். (9:111)
ரூஹைப் படைத்த ஆரம்ப நிலை...
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணால் படைத்துவிட்டு தனது ரூஹில் இருந்து முதலில் அவரது உடலுக்கு ஊதுகின்றான். தனது ரூஹ் செலுத்தப்பட்ட உடல் என்பதற்காக அல்லாஹ் ஆதமை கண்ணியப்படுத்தி அவருக்கு ஸ{ஜுத் செய்யுமாறு மலக்குகளைப் பணிக்கின்றான். இது பற்றி திருமறை இவ்வாறு பகர்கின்றது.
(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்துஇ மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்இ அவரை நான் செவ்வையாக உருவாக்கிஇ அவரில் என் ரூஹிலிருந்து ஊதியதும்இ "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள். (15:30) (38:71) (32:09)
தாயகம் நோக்கிய ரூஹின்
ஆறு கட்டப் பயணம்...
முதல் கட்டம்...
அல்லாஹ் தனது ரூஹிலிருந்து ஊதி ஆதம் (அலை) அவர்களை எழுப்பியதும் அடுத்த எமது ஆன்மாக்களின் பிறப்பு நிகழ்கின்றது. இதுவரை இவ்வுலகில் வாழ்ந்த அனைவரினதும், வாழ்ந்து கொண்டிருக்கும் 70010 கோடிப்பேரினதும் இனி இவ்வுலகம் அழியும்வரை எத்தனை எத்தனை கோடிக் கணக்கான மனிதர்கள் வாழப்போகிறார்களோ அவர்கள் அத்தனைபேரினதும் ரூஹ்களை அல்லாஹ் அதாம் (அலை) அவர்களிலிருந்து வெளிப்படுத்தி ஆலமுல் அர்வாஹ் (ரூஹ்களின் உலகம்) எனும் இடத்தில் வாழச்செய்கிறான். இதுவே எமது ரூஹ்களின் முதல் பிறப்பும், முதல் வீடுமாகும். இங்குதான் நாம் அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக்கொள்வதென சான்று பகர்ந்துள்ளோம்.
“உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கிஇ அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்குஇ அவர்கள் "ஆம். நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக.” (7:172)
ஆலமுல் அர்வாஹில் ரூஹ்கள் இருந்த விதம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
“ரூஹ்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. அங்கு சேர்ந்திருந்தவை இங்கும் சேர்ந்திருக்கும். அங்கு பிரிந்திருந்தவை இங்கும் விலகி இருக்கும்” என்றார்கள்.
(முஸ்லிம் : 6376)
சிலபோது நாம் இங்கு யாரையாவது பார்த்தால் இதற்கு முன்பு அவரை எங்கோ சந்தித்தது போன்ற ஞாபகம் இருக்கும். விரைவில் பேசிப் பலகி நண்பர்களாகிவிடுவோம். இன்னும் சிலரோடு இலகுவில் சேர மாட்டோம். இதற்குக் காரணம் நாம் ஆலமுல் அர்வாஹில் ஒன்றிணைந்தும் தூர விலகியும் இருந்ததுதான்.
இரண்டாவது கட்டம்...
ஆலமுல் அர்வாஹில் இருந்த எமது ரூஹை அல்லாஹ் இரண்டாவது கட்டமாக தாயின் கருவறைக்கு நகர்த்துகின்றான். ஒரு தாயின் வயிற்றில் கரு வளர்ச்சியடைந்து 42 நாட்களாகும்போது வானவர் ஒருவர் ஒரு ரூஹை எடுத்துவந்து அத்தாயின் வயிற்றில் உள்ள கருவில் ஊதிவிடுகின்றார். நபியவர்கள் கூறுகின்றார்கள்.
“முளையத்தில் 42 இரவுகள் கடந்ததன் பின்னர் அதனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் அதனை வடிவமைக்கின்றார். மேலும் காதுகள், கண்கள், தோல், தசைகள், என்புகள் ஆகியவற்றையும் உருவமைக்கின்றார். பின்பு என் இரட்சகனே! இது ஆணா அல்லது பெண்ணா? என்று வினவுகின்றார். பின் உங்கள் இரட்சகன், தான் விரும்பியதைத் தீர்மானிக்கின்றான். வானவர் அதனைப் பதிவு செய்கின்றார்.” (முஸ்லிம்)
மூன்றாவது கட்டம்...
தாயின் கருவறையில் இருந்த நாம் இவ்வுலகை வந்தடைகின்றோம். மனிதன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றோம். எமது ரூஹோடு சேர்த்து உடல் மற்றும் உயிர் என்ற இரண்டு பகுதிகள் வழங்கப்படுகின்றன. உடலும் உயிரும் இவ்வுலகில் ரூஹ் தங்குவதற்கான ஏற்பாடுகளாகும். அவை நிரந்தரமானவை அல்ல. அழியக் கூடியவை. ஆனால் ரூஹிற்கு அழிவே கிடையாது.
இதுவரை ஒரே பாதையில் (ழுநெ றுயல) பயணித்து வந்த நாம் மூன்றாவது கட்டமாகிய இவ்வுலகை அடைந்ததும் இங்கிருந்து இரண்டு பாதைகள் பிரிகின்றன. இவ்வுலகம் ஒரு முற்சந்தி. ஒரு பாதை சுவனத்திற்கு அழைத்துச் செல்கின்றது. மற்றைய பாதை நரகிற்கு இழுத்துச் செலகின்றது. இதுபற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்.
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ “நாம் அவனுக்கு இரண்டு பாதைகளைக் காண்பித்துள்ளோம்” (90:10)
இவ் இரண்டு பாதைகளில் எதனையும் தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தை அல்லாஹ் எமது ரூஹ்களுக்கு வழங்கியுள்ளான். அதேபோன்று இவ்விரண்டு பாதைகளைப் பற்றிய அறிவையும் எமக்குத் தந்துள்ளான். ஆக இவ்வுலகில் தெரிவு, அறிவு என்ற இரண்டையும் நாம் அடுத்த பாதையைத் தெரிவுசெய்வதற்காகப் பயன்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்திற்கும் இருப்பது ஐயறிவு. மனிதனுக்கு மட்டும் மேலதிகமாக அதிலும் விசேடமாக ஆறாவது ஒரு அறிவை வழங்கியிருப்பதன் நோக்கம் இப்பாதையைத் தெரிவுசெய்வதற்கே! ஆறாவது அறிவுக்கு பகுத்தறிவு என்று பெயர். சுவனத்தின் பதையையும் நரகத்தின் பாதையையும் பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு என்பதுதான் பகுத்தறிவுக்கு வழங்கப்படவேண்டிய சரியான வரைவிலக்கணம் என்று கருதுகின்றேன்.
நான்காம் கட்டம்...
மூன்றாம் கட்டத்தில் வாழும் எமது ரூஹை மலகுல் மௌத் எனும் வானவர் நான்காம் கட்டமாகிய ஆலமும் பர்ஸக் எனும் இடத்திற்கு கொண்டவந்து சேர்க்கின்றார். இப்பிரபஞ்சம் அழிந்து மஹ்ஷர் வெளியை உருவாக்கும் வரை எமது ரூஹ்கள் இங்குதான் வாழப்போகின்றன. இதுவரை மரணித்த அனைவரினது ரூஹ்களும் இங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
ஐந்தாவது கட்டம்:....
பிரபஞ்சம் அழிந்து மஹ்ஷர் வெளி உருவான பின்னர் எமது ரூஹ்கள் மீண்டும் அங்கு வரவழைக்கப்படுகின்றன. அதுவும் அங்கு அந்த ரூஹ்களுக்கு புதிய இவ்வுலகில் இருந்ததை ஒத்த அதே உடல் போர்த்தப்படுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்: “ஆன்மாக்கள் (அவற்றின் உடல்களோடு)ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும்போது.” (அத்தக்வீர்:07) தற்போது எமது கைவிரல் ரேகைகள் எவ்வாறு இருக்கின்றனவோ அதே வடிவில் எந்த மாற்றமுமின்றிய உடல்களுடன் எமது ரூஹ்களையும் சேர்த்துவிடுவான். (75:4)
ஆறாவது கட்டம்:....
மஹ்ஷரிலே ஒவ்வொரு ரூஹிற்குமான விசாரணைகள் தனித்தனியே நடைபெற்று அவை சம்பாதித்துக்கொண்டவற்றுக்கு ஏற்ப ஆறாவது கட்டமாகிய சுவனத்திற்கோ அல்லது நரகிற்கோ அவை அனுப்பப்படுகின்றன. இதுதான் இறுதிக்கட்டம். இனி இங்குதான் ரூஹ்கள் நீடூளி காலம் வாழப்போகின்றன. இனி இறப்போ, பிறப்போ இல்லை. சுனத்தில் நுழைந்த ரூஹ்கள் இன்பத்தை அனுபவிக்கும். நரகில் நுழைந்த ரூஹ்கள் கடுமையான வேதனையை அனுபித்துக்கொண்டே இருக்கும்