*பெரும் நாள் + பெறும் நாள் = பெருநாள்*
ரமழான் மாதம் முழுவதும் பகலெல்லாம் பசித்திருந்து, தாகித்திருந்து, அருள் மறை குர்ஆனை அழகுபட ஓதி, ஓதக்கேட்டு இபாதத்துகளால் இரவைப்பகலாக்கி, இரவெல்லாம் விழித்திருந்து இல்லார்க்கு ஈந்து நாளெல்லாம் நற்செயல் புரிந்த நல் இதயங்களுக்கு நாயன் அல்லாஹ் கூலி தரும் நாளே பெருநாள். அதை நாம் பெறும் நாளே பெருநாள்.
*பெருநாள் இரவில் விழித்திருந்து பெறுவோம்.*
عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ) . رواه ابن ماجه
அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
யார் இரு பெருநாள் இரவில் இறையருளை நாடி விழித்திருந்து வணங்குகிறார்களோ அவர்களின் இதயங்கள் பிறர் இதயம் இறக்கும் நாளில் இறக்காது. என்றார்கள். (நூல் : இப்னு மாஜா)
இதே கருத்தைத் தழுவி உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரைத்த தகவல் ஒன்றை உபாதத் இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
தப்ரானி ஹதீஸ் கிதாபில் இடம் பெற்ற அந்த தகவல் கீழே.
رواه الطبراني عن عبادة بن الصامت رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( من أحيا ليلة الفطر وليلة الأضحى لم يمت قلبه يوم تموت القلوب
மேற்கண்ட இவ்விரு ஹதீஸைத் தழுவி இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும், இரு பெருநாள் இரவை இறை வணக்கத்தால் உயிர்ப்பிப்பது முஸ்தஹப் - உகப்பிற்குரியது என்று கூறுகிறார்கள்
وقال النووي في المجموع :
قَالَ أَصْحَابُنَا : يُسْتَحَبُّ إحْيَاءُ لَيْلَتَيْ الْعِيدَيْنِ بِصَلاةٍ أَوْ غَيْرِهَا مِنْ الطَّاعَاتِ ، وَاحْتَجَّ لَهُ أَصْحَابُنَا بِحَدِيثِ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم : ( مَنْ أَحْيَا لَيْلَتَيْ الْعِيدِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ ) وَفِي رِوَايَةِ الشَّافِعِيِّ وَابْنِ مَاجَهْ : ( مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ تَعَالَى لَمْ يَمُتْ قَلْبُهُ حِينَ تَمُوتُ الْقُلُوبُ
கல்விக்கடல் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் அதேகருத்தை வலியுறுத்தி வஸீத் என்ற தம் நூலில் எழுதியுள்ளார்கள்.
ذكر الإمام أبو حامد الغزالي في كتابه الوسيط في فقه الشافعية سنن العيد فذكر منها إحياء ليلته بالعبادة. واستدل على ذلك بقول النبي –صلى الله عليه وسلم- “من أحياء ليلة العيد لم يمت قلبه يوم تموت القلوب” قال ابن الصلاح: إحياء ليلتي العيد جاء فيه ما ذكر.
*துஆக்கள் மறுக்கப்படாத இரவுகள்*
عن ابن عمر رضي الله عنهما قال: «خمس ليال لا يرد فيهن الدعاء: ليلة الجمعة، وأول ليلة من رجب، وليلة النصف من شعبان، وليلة العيد، وليلة النحر.
(رواه الديلمي في "مسند الفردوس)
ஐந்து இரவுகள் அவற்றில் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை.
1) ஜுமுஆவின் இரவு.
2) ரஜப் மாதத்தின் முதல் இரவு.
3) ஷஃபான் மாதத்தின் மத்திய இரவு.
4) நோன்புப் பெருநாள் இரவு.
5) ஹஜ்ஜுப் பெருநாள் இரவு.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் : தைலமி
قال الإمام الشافعي –رحمه الله -: “وبلغنا أنه كان يقال: الدعاء يستجاب في خمس ليال: في ليلة الجمعة، وليلة الأضحى، وليلة الفطر، وأول ليلة من رجب، وليلة النصف من شعبان”.
இந்த தகவலை வலியுறுத்தும் விதமாக சட்ட மேதை இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அவர்களும் இதை கூறியுள்ளார்கள்.
*புகாரி இமாம் உரூஸ் தினம்*
ஷவ்வால் பிறை ஒன்று நம் கொண்டாட்டங்களின் நடுவே நினைவு கூறப்பட வேண்டியவர்கள் இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
ஆம்! இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று தான் அல்லாஹ்வை அடைந்தார்கள்.
அவர்களின் உரூஸ் தினத்தில் அவர்களின் மேன்மையைப் போற்றுவோம்.
*பெருநாள் காலையில்*
من قال يوم العيد قبل الشمس سبحان الله وبحمده 300 مرة ووهبهن لاموات نور وحمل له الملك ألف نور فيدخله في قبره يوم يموت
யார் பெருநாள் அன்று சூரியன் உதிக்கும் முன் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று முன்னூறு முறை ஓதி அதை மரணித்துவிட்ட முஸ்லிம்களின் ஆன்மாக்களுக்கு சேர்த்து வைத்தாரோ, அந்த ஒவ்வொரு கப்ரிலும் ஆயிரம் ஒளிகள் நுழைகின்றன. அவர் மரணித்த பின் ஒரு மலக்கு ஆயிரம் பேரொளிகளுடன் அவர் கப்ரில் நுழைவார்.
நூல் : துஹ்ஃபதுல் இக்வான்.
பெருநாள் அன்று கடைப்பிடிக்க வேண்டிய சுன்னத்தான காரியங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.......
🏵️ அதிகாலையில் எழுந்து விட வேண்டும்..அதில் பரகத் இருக்கிறது
🏵️ மிஸ்வாக் செய்ய வேண்டும் அது ஒரு சுன்னத்தாகும்..
🏵️ பஜ்ர் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தவறாமல் தொழ வேண்டும்.
🏵️ ஈதுல் பித்ர் தொழுகைக்காக குளிக்கிறேன் என நிய்யத் செய்து குளிப்பது.
🏵️ புத்தாடையோ அல்லது இருப்பதில் நல்ல ஆடையையோ அணிவது.
🏵️ நறுமணம் பூசிக்கொள்வது
🏵️ மார்க்கத்துக்கு முரண் ஆகாதவாறு அலங்காரம் செய்து கொள்வது.
🏵️ ஒற்றைப்படையாக பேரீத்தம்பழமோ அல்லது வேறு இனிப்போ சாப்பிடுவது.
🏵️ பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஸதகத்துல் பித்ர் (90ரூபாய் அல்லது அதை விட அதிகம்) நோன்பு பெருநாள் தர்மத்தை கொடுப்பது.
🏵️ பிறை பார்த்ததில் இருந்து பெருநாள் தொழுகை முடியும் வரை அதிகதிமாக தக்பீர் ஓதிக் கொள்வது..
🏵️ உறவினர்களை சந்தித்து பெருநாள் வாழ்த்துக்கள் சொல்வது.
🏵️ எல்லோருடனும் முஸாபஹா செய்வது .
🏵️ அக்கம் பக்கத்தில் உணவு களை பரிமாறிக் கொள்வது. இதும் ஒரு சுன்னதாகும்.
🏵️ பெருநாள் தொழுகைக்கு போகும்போது ஒரு பாதையிலும் வரும்போது ஒரு பாதையிலும் வருவது.
🏵️ அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்ய வேண்டும்..
🏵️ பெருநாளைக்கு அடுத்த நாளிலிருந்து (ஷவ்வால் மாதம்)6 நோன்பு வைப்பது...
குறிப்பாக இக்கால சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை இவையெல்லாம் நீங்கி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் இன்னும் குறிப்பாக உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய சமுதாய மக்கள் பாதுகாக்கப்படவும், ஈருலகிலும் வெற்றி பெறுகின்ற மக்களாக ஆகுவதற்கும் துஆ செய்யுங்கள்.....