роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

родிроЩ்роХро│், роЬூрой் 04, 2018

рокாрод்родிрооா (ро░ро▓ி) роЕроо்рооைропாро░ைрок் рокро▒்ро▒ி,

பாத்திமா (ரலி) அம்மையாரைப் பற்றி

சொர்க்கத்துப் பெண்மணியான *பாத்திமா(ரலி)* பற்றிதெரிந்து கொள்வோம் வாருங்கள்
நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

1.நபி(ஸல்) *நான்காவது பிள்ளை பாத்திமா (ரலி).*

2.பாத்திமா(ரலி) *நபி(ஸல்) அவர்களின் 41 ஆம் வயதில் பிறந்தார்கள்.*

3. நபி (ஸல்) அவர்களின் *பெண் மக்களில் இளையவர் பாத்திமா (ரலி).*

4.பாத்திமா(ரலி) *திருமண வயது 15 ஆண்டுகள் 5 மாதங்கள்.*

5.பாத்திமா(ரலி) *கணவர் பெயர் அலி(ரலி).*

6.ஹிஜ்ரி *2ஆம்* ஆண்டு பாத்திமா(ரலி)க்கு *திருமணம் நடந்தது.*

7.பாத்திமா என்றால் *"நரகத்தை விட்டும் தடுக்கப்பட்டவர்"* என்று பொருள்.

8.பாத்திமா என்ற பெயர் நபிக்கு *இல்ஹாம்* மூலம் அறிவிக்கப்பட்டது.

9.பாத்திமா(ரலி) அவர்கள் *சொர்க்கத்து பெண்களின் தலைவி* ஆவார்கள்.

10.நபி(ஸல்) அவர்களுக்கு *நுபுவத்திற்கு பின் பாத்திமா(ரலி) பிறந்தார்கள்.*

11.பாத்திமா(ரலி) மீது தான் நபி(ஸல்) *அதிகம் அன்பு வைத்தார்கள்*

12.நபி(ஸல்) பயணம் செய்யும் போது *கடைசியாக செல்லும் வீடு பாத்திமா(ரலி) வீடு.*

13.பாத்திமா(ரலி) அவர்களுக்கு மொத்தம் *6 குழந்தைகள்.*

14.பாத்திமா(ரலி) *3 பெண் குழந்தைகள் பெற்றார்கள்.*

15.பாத்திமா(ரலி)க்கு *3 ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.*

16.நபி(ஸல்) *பரம்பரை பாத்திமா(ரலி) மூலமாக பரவியது.*

17.பாத்திமா(ரலி) *சிறு வயதில் தாயை இழந்தார்கள்.*

18.பாத்திமா(ரலி) அவர்களின் *தாயார் பெயர் கதீஜா(ரலி).*

19.பாத்திமா(ரலி)யை *நபி(ஸல்) ஈரக்குலைத் துண்டு என்றார்கள்.*

20.பயணத்திலிருந்து நபி(ஸல்) திரும்பியதும் *முதல் சந்திப்பு பாத்திமா(ரலி).*

21.நபி(ஸல்) இறந்து *6 மாதங்கள் சென்ற பின் பாத்திமா(ரலி) இறந்தார்கள்.*

22.பாத்திமா(ரலி) *முதல் குழந்தை ஆண் குழந்தை ஆகும்.*

23.பாத்திமா(ரலி) *இரண்டாவது பெண் குழந்தை பெயர் -உம்மு குல்தூம்(ரலி)*

24.பாத்திமா(ரலி)யின் *பிரபலமான குழந்தைகள் ஹஸன், ஹுஸைன்(ரலி).*

25.பாத்திமா(ரலி) *முதல் பெண் குழந்தை பெயர்- ருகையா(ரலி).*

26.ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு *ஹுசைன்(ரலி) பிறந்தார்கள்.*

27.பாத்திமா(ரலி)க்கு *2 வருடம் கழித்து குழந்தை பிறந்தது.*

28.பாத்திமா(ரலி) *முகத்தோற்றம் நபி(ஸல்) அவர்கள் போன்றே இருந்தது.*

29.பாத்திமா(ரலி)யின் *மூன்றாவது பெண் குழந்தை ஜெய்னபு(ரலி).*

30.பாத்திமா(ரலி)க்கு *முதலில் பிறந்த குழந்தை ஹஸன்(ரலி).*

31.பாத்திமா(ரலி)யின் *மூன்றாவது குழந்தை முஹ்ஸின்(ரலி).*

32.பாத்திமா(ரலி)யின் *இரண்டாவது குழந்தை ஹுஸைன்(ரலி).*

33.முஹ்சின்(ரலி) *குழந்தை பருவத்தில் இறந்தது.*

34.பாத்திமா(ரலி) *ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் நோன்பு பிடிப்பார்கள்.*

35.பாத்திமா(ரலி) *ரமலான் பிறை 20-யில் பிறந்தார்கள்.*

36.பாத்திமா(ரலி)யின் *சிறப்பு பெயர் ஸZஹ்ரா ஆகும்.*

37.ஸZஹ்ரா என்றால் *பிரியமானவர் எனப் பொருள்.*

38.பாத்திமா(ரலி)க்கு *8 சிறப்பு பெயர்கள் உண்டு.*

39. சித்தீ்கா- *சிறப்பு பெயர்களில் ஒன்றாகும்*
40.ஷியாக்கள் பாத்திமா(ரலி)க்கு *69 பெயர்கள் சூட்டியுள்ளார்கள்.*

41.பாத்திமா(ரலி) *மதீனாவில் பருவமெய்தினார்கள்.*

42.பாத்திமா(ரலி) *திருமணம் அல்லாஹ்வின் உத்தரவு படி தான் நடந்தது.*

43.பாத்திமா(ரலி)யை *அபுபக்கர்(ரலி) பெண் கேட்டார்கள்.*

44.பாத்திமா(ரலி)யை *அப்துர் ரஹ்மான் இப்னு அவுஃப் பெண் கேட்டார்கள்.*

45.பாத்திமா(ரலி) *பெரிதும் நாணமுள்ளவராக இருந்தார்கள்.*

46.பாத்திமா(ரலி)யை *உமர்(ரலி)யும் பெண் கேட்டார்கள்.*

47.பாத்திமா(ரலி) *திருமணம் எளிமையாக நடந்தது.*

48.பாத்திமா(ரலி)யை *உஸ்மான்(ரலி)யும் பெண் கேட்டார்கள்.*

49.பாத்திமா(ரலி) *மிகவும் இரக்க குணம் உள்ளவர்கள்.*

50.பாத்திமா(ரலி) *ஒருபோதும் கடுஞ்சொல் பேசியது இல்லை.*

51.பாத்திமா(ரலி) *வீட்டு வேலை செய்வதில் ஒரு போதும் சோம்பல் கொண்டதில்லை.*

52.பாத்திமா(ரலி) *ஒரே நேரத்தில் 5 வேலை செய்வார்கள்.*

53.பாத்திமா(ரலி) *வீட்டு வேலை செய்யும் போது குர்ஆன் ஓதுவார்கள்.*

54.பாத்திமா(ரலி) *வேலையை வேலைக்காரியுடன் பகிர்ந்து முறை வைத்து கொள்வார்கள்.*

55.பாத்திமா(ரலி) *நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்கள்.*

56.பாத்திமா(ரலி) *பழைய ஆடைகளை விரும்பி அணிவார்கள்.*

57.பாத்திமா(ரலி) *ஓட்டுப்போட்ட துணிகளையே அணிந்துள்ளார்கள்.*

58.உலகில் *ஏழைப் பெண்களில் கொடையாளி பாத்திமா(ரலி).*

59.பாத்திமா(ரலி) *வீட்டை விட்டு வெளியேறுவது மிக குறைவு.*

60.பாத்திமா(ரலி) *வியாழன்,சனி ஜியாரத் செய்வார்கள்.*

61.நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு *பாத்திமா(ரலி) ஒரு போதும் சிரிக்கவே இல்லை.*

62.நபி(ஸல்) இறந்த பின் *பாத்திமா(ரலி) இரவு பகல் அழுது கொண்டே இருந்தார்கள்.*

63.உலகில் *அதிகம் அழுதவர்களில் 8-வது நபர் பாத்திமா(ரலி).*

64.பாத்திமா(ரலி) *29-வது வயதில் வஃபாத்தானார்கள்.*

65.சுவனப் பெண்களில் *பாத்திமா(ரலி)யே சிறந்த பெண் ஆவார்கள்.*

66.மறுமையில் *பெண்களுக்கு பாத்திமா(ரலி) சிபாரிசு செய்வார்கள்.

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்