வேலூர்_பாக்கியத்துஸ்_ஸாலிஹாத்_அரபிக்கல்லூரியின்_ஃபத்வா...
(#மார்க்க_தீர்ப்பு)
அன்பான சகோதர , சகோதரிகளே .... !
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ... )
💚 நல்லோர்களின் கப்ருகளில் மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் மார்க்க விரோத செயல்கள் ஏராளம்...
💚 அவற்றைச் சுட்டிக்காட்டினால், வழிகெட்டவர்கள் என எண்ணி பட்டப்பெயர் வைத்து பிரித்து ஒதுக்கிவிடுகிறார்கள்...
💚 கப்ரு அனாச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் ,
மார்க்க அறிஞர்களும் தங்களின் செயல்பாடுகளை ஆதரிப்பதாக நினைக்கிறார்கள்...
💚 ஆனால் அவர்கள் மதிக்கும் மார்க்க அறிஞர்களும் அவர்களின் கப்ரு அனாச்சாரங்களை கண்டிக்கிறார்கள்...
💚 இதனை சம்மந்தப்பட்டவர்களும் , மற்றவர்களும் அறிந்து கொள்வதற்காக...
வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் ஒரு ஃபத்வாவை ( #மார்க்க_தீர்ப்பை ) கீழே தருகிறோம்...
💟 (#வினா) :
கீழ்கண்ட காரியங்கள் ஷரீஅத்துச் சட்டப்படி #கூடுமா..? அல்லது #கூடாதா..?
💎 அவ்லியாக்களின் தர்காவில் கொடியேற்றுதல்...
💎 அதை தெருக்களில் தூக்கிக் கொண்டு வலம்வருதல்...
💎 சந்தனக்கூடு எடுத்து உரூஸ் நடத்துதல்...
💎 அந்த விழாவில் கொட்டு மேளம் போன்ற கேளிக்கை நடத்துதல்...
💎 நாட்டங்கள் நிறைவேற பெரியார்கள் பெயரால் நேர்ச்சை செய்தல்...
💎 இக்காரியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இவற்றை மஸ்ஜிது முத்தவல்வி மற்றும் நிர்வாகிகள் முன் நின்று நடத்த வேண்டும் என்று சொல்வது...
💎 நேர்ச்சைகள் மூலம் கிடைக்கும் வருவாயை மஸ்ஜிது முத்தவல்லி மற்றும் நிர்வாகிகளிடம் கொடுத்து மஸ்ஜிதின் வரவு செலவில் சேர்த்தல்...
💟 (#விடை) :
மேற்கண்ட செயல்கள் #பித்அத் - களில் சேரும்... அவற்றில் சில #ஹராம் ஆகும்...
⭐ உதாரணமாக , நோக்கங்கள் நிறைவேற பெரியவர்கள் பெயரால் நேர்ச்சை செய்வதைச் சொல்லலாம்...
⭐ பெரியார்கள் , வலிமார்கள் , கூப்பிடுவோரின் அழைப்பைக் கேட்கிறார்கள் என்றும் , ஆஜராகிறார்கள் என்றும் , நம்பி அவர்கள் பெயரால் நேர்ச்சை செய்வது #குஃப்ரின் சாயலைக் கொண்டதாகும்...
⭐ பெரும்பாலான பொதுமக்கள் இறந்தவர்களுக்காக செய்யும் நேர்ச்சையும்...
⭐ அவ்லியாக்களின் நெருக்கத்தைப் பெறுவதற்காக அவ்லியாக்களுக்கு காணிக்கை செலுத்துவதும்...
⭐ மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதும்...
⭐ எண்ணெய் வார்ப்பதும்...
ஹராம் ஆகும் என #துர்ருல்_முக்தார் எனும் நூலில் கூறப்பட்டுள்ளது...
⭐ இந்நூலின் விரிவுரையான #ரத்துல்_முஹ்தாரில் இவை ஹராம் என்பதற்கான காரணங்களை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது...
⭐ நேர்த்திக்கடன் என்பது ஒரு வழிபாடு (இபாதத்) ஆகும்...
⭐ வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்யக்கூடாது...
⭐ எனவே படைப்புகளுக்கு நேர்ச்சை செய்வது கூடாது...
⭐ மேலும் இப்படி நேர்ச்சை செய்பவன் தன் விவகாரங்களை அல்லாஹ்வை அன்றி இறந்து போனவர் கவனிக்கிறார் என எண்ணுகிறான்...
⭐இப்படி நம்பிக்கை கொள்வது #குஃப்ர் ஆகும்.
⭐ #பதாவா_பஸாஸிய்யா எனும் நூலில் மஷாயிகுமார்களின் ஆன்மா (ரூஹ்) ஆஜராகிறது... விஷயங்களைப் புரிகிறது என்று எவர் நம்புகின்றாரோ , அவர் காஃபிராகிவிட்டார் என எழுதப்பட்டிருக்கிறது...
⭐ அந்த பெரியவர்களும் அவ்லியாக்களும் சின்னஞ்சிறு பாவங்களிலிருந்தும் சுத்தமாகி அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட நல்லடியார்களாக விளங்கியவர்கள்...
⭐ அவர்களின் அடக்க ஸ்தலங்களிலும் அவர்கள் பெயரால் தெருக்களிலும் சுற்றித் திரிவதால் அவர்கள் வெறுப்பே அடைவார்கள்...
⭐ இந்தக் கெட்ட காரியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து , அவற்றை மஸ்ஜிது முத்தவல்லிகளே ஏற்று நடத்த வேண்டும் என்று சொல்வது பாவமாகும்...
⭐ இந்த நேர்த்திக்கடன்கள் எப்போது ஹராமாகிவிட்டதோ... அவற்றின் மூலம்வசூலாகும் காசை மஸ்ஜிதுக்கு செலவழிப்பதும் கூடாது...
⭐ இந்த மார்க்கத் தீர்ப்பு வழங்கி கையெழுத்திட்டிருக்கும் வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத்தின் அறிஞர்கள்...
( #முன்னால்_ஆசிரியர்கள் )
1) ஜியாவுதீன் முஹம்மது ,
2) முஹம்மது அப்துல் ஜப்பார் ,
3) ஷைகு ஆதம் ,
4) அப்துர் ரஹீம்
💙 மேற்கண்ட ஃபத்வாவில் கப்ராளிகளுக்காக நடைபெறும் நேர்ச்சையை
#குஃப்ரு_இறைநிராகரிப்பு - என்ற அளவிற்கு கடுமையாக சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்...
இதைச் சொல்வது...
#அஹ்லுஸ்_ஸுன்னத்_வல்ஜமாஅத்தைச்_சேர்ந்த_உலமாக்கள்_தான்...
💙 இந்த ஃபத்வாவில் தடை செய்யப்பட்டுள்ளவற்றை செய்யக் கூடியவர்கள் இந்த உலமாக்களை மதிக்கத்தான் செய்கிறார்கள்...
💙 தங்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்வோர் தங்களின் உலமாக்களின் மார்க்க தீர்ப்பை ஏற்று ஃபத்வாவில் கண்டுள்ள தடை செய்யப்பட்ட அனாச்சாரங்களை விட்டொழிக்க வேண்டும்...
💙 #மேற்கண்ட_ஃபத்வா...
பாகிய்யாத்துஸ் ஸாலிஹாத் ஃபத்வாத் தொகுப்பு ஓர் அறிமுகம் " எனும் சிறு நூலில் (பக்கம் 57. 58 - ல்) இடம் பெற்றுள்ளது...
💙 இந்நூலை தொகுத்தது...
சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரி முதல்வர்
முஹம்மது யாகூப் (அவர்கள்) .
💙 பாகியாத் பேராசிரியர் ரஈசுல் இஸ்லாம் (அவர்கள்)
மதிப்புரை வழங்கி கையெழுத்திட்டுள்ளார்கள் .
தேதி : 07.07.1987