நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, டிசம்பர் 30, 2022

புத்தாண்டும், இஸ்லாமும்,

01_01_2023. ஆங்கில புத்தாண்டு யார் கொண்டாடுவது

1-முஸ்லிமா 
2-இந்துவா 
3_கிறிஸ்டினா


சொல்வது எங்கள் கடமை அதை செய்வது
(தீமை) 
மற்றும் செய்யாமல் இருப்பது உங்கள் கடமை
(நன்மை)

وَعَلَيْكُمْ السَّلاَمُ وَرَحْمَةُ الله
 *وَبَرَكَاتُهُ*

*வ அலைக்கும் ஸலாம்*
*வ ரஹ்மத்துல்லாஹி*
*வ பரக்காத்துஹூ*

"""""""""""""""""""""""""""""""""""""

இறைவனின் சாந்தியும்
சமாதானமும் உங்கள்  மீதும்

உங்கள்  குடும்பத்தார்  மீதும்
என்றென்றும்  நிலவட்டுமாக
ஆமீன்
➖➖➖➖🍃🌸

*புத்தாண்டு வாழ்த்து*
*சொல்லாதீர்கள். (?)* 

அன்பிற்கினிய என் இஸ்லாமிய சொந்தங்களே.! 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.

அறிவிப்பவர் : 
             இப்னு உமர் (ரலி)
              .நூல் : அபூதாவுத் (3512)

மேலும் புத்தாண்டு
கொண்டாட்டம் அறிவுக்கு
மாற்றமான செயலாகவும்
உள்ளது. 

புதிய ஆண்டு துவங்குவதால்
இனிப்பு வழங்கி கொண்டாடும்
அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது?

புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?

ஆண்டின் துவக்கம்
சந்தோஷமாக இருந்தால் அந்த
ஆண்டு முழுவதும்
சந்தோஷமாக இருக்கலாம்
என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

இஸ்லாம் நமக்கு இரண்டு
நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய
நாட்களாக ஆக்கியுள்ளது.

தேவையற்ற
கொண்டாட்டங்களை
தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு
அடிப்படையும் இன்றி இரண்டு
நாட்களை கொண்டாட்டத்திற்குரிய
நாட்களாக கருதிவந்தனர்.
இதை கைவிட்டுவிட்டு 
நோன்புப் பெருநாள் 
ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய
இரண்டை மட்டுமே பெருநாளாக
ஆக்கிக்கொள்ளுமாறு 
நபி (ஸல்) அவர்கள்
உத்தரவிட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள்
கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் மதினாவிற்கு
வந்தார்கள். 

(மதீனத்து) மக்களுக்கு இரண்டு
நாட்கள் (பெருநாட்களாக)
இருந்தன. அதில் அவர்கள்
விளையாடுவார்கள். 

இந்த இரண்டு நாட்களும்
என்ன? என்று நபி (ஸல்)
கேட்டார்கள். 

அறியாமைக் காலத்தில்
நாங்கள் அந்த இரண்டு
நாட்களிலும் விளையாடுவோம்
என்று மக்கள் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் "அல்லாஹ்,
அவ்விரண்டையும் விட
சிறந்ததை அவ்விரண்டிற்கும்
பதிலாக உங்களுக்குத்
தந்திருக்கின்றான். 

அவை ஹஜ்ஜுப் பெருநாளும்
நோன்புப் பெருநாளுமாகும்''
என்று கூறினார்கள்.
                 நூல் : அபூதாவுத் (959)

இந்த இரண்டு நாட்களை மட்டும்
முஸ்லிம்களுடைய
கொண்டாட்மான நாட்களாக
ஏற்று நடப்போம்.  

*நம் அனைவரையும் சத்திய*
*இஸ்லாத்தை* *பின்பற்றி நடக்கும்*
*நல்லவர்களுடன்* *அல்லாஹ்*
*சேர்ப்பானாக.* விசாரனையின் அவசியம்

*நாம் புது வருடத்தில் நுழைய இருக்கிறோம்.நம்முடைய ஆயுளில் ஒரு வருடம் முடிந்து விட்டது.இது சந்தோஷமான விஷயமல்ல.மாறாக நாம் கவலை கொள்ள வேண்டிய தருணமாகும்.நாம் எவ்வளவு செலவழித்தாலும் ஒரு வினாடியைக் கூட விலைக்கு வாங்க முடியாது.திரும்ப சம்பாதிக்க முடிகிற பணத்தை இழந்தால் கவலை கொள்ளும் மனிதன் கோடி செலவு செய்தாலும் திரும்ப சம்பாதிக்க முடியாத காலம் கழிந்தவுடன் அதைக் கொண்டாடுகிறான் எனில் இது எவ்வளவு அறிவற்ற செயலாக இருக்க முடியும்.*

*இத்தருணத்தில் ஒரு முஸ்லிமுடைய நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குர்ஆன்,ஹதீஸ் வழிகாட்டலில் பார்க்கலாம்.*

*அல்லாஹுதஆலா கூறுகிறான்:*

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏

*ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.*
(அல்குர்ஆன் : 59:18)

*இமாம் இப்னு கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:"ஒவ்வொரும் தன்னை சுய விசாரனை செய்து கொள்வது அவசியமாகும்" என இவ்வசனம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.*
*அல்லாஹுதஆலா கூறுகிறான்:*
*உங்களில் ஒவ்வொருவரும் நாளை மறுமை நாளுக்காக எதை தயார் செய்து வைத்துள்ளீர்கள்?உங்களை காப்பாற்றும் நல்லறங்களை தயார் செய்துள்ளீர்களா? அல்லது உங்களை அழிக்கும் தீய அமல்களை தயார் செய்துள்ளீர்களா?*
(إغاثة اللهفان 1/152)

*நாம் பல வருடங்களை இவ்வுலகில் கழித்து விட்டோம்!அதிகமான செல்வங்களை சம்பாதித்து விட்டோம்!பல உழைப்புகளை செய்து விட்டோம்!இதில் மறுமைக்காக நாம் எதை தயார் செய்துள்ளோம்?*
*எந்த நாள் வருவதைப் பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் எச்சரிக்கை செய்கிறானோ அந்நாளுக்காக நாம் எதை தயார் செய்துள்ளோம்?*

*1)அந்நாளில் நம்முடைய செல்வங்களும் பயனளிக்காது;பிள்ளைகளும் பயனளிக்க மாட்டார்கள்,*

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ‏
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
(அல்குர்ஆன் : 26:88)


*2)அந்நாளில் நம்முடைய பெற்றோரும்,நண்பர்களும் உதவி செய்ய மாட்டார்கள்,*

يُّبَصَّرُوْنَهُمْ‌ؕ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِىْ مِنْ عَذَابِ يَوْمِٮِٕذٍۢ بِبَنِيْهِۙ‏
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்-
(அல்குர்ஆன் : 70:11)

وَ صَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ‏
தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
(அல்குர்ஆன் : 70:12)

وَفَصِيْلَتِهِ الَّتِىْ تُــْٔوِيْهِۙ‏
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
(அல்குர்ஆன் : 70:13)

وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙ ثُمَّ يُنْجِيْهِۙ‏
இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
(அல்குர்ஆன் : 70:14)

كَلَّا ؕ اِنَّهَا لَظٰىۙ‏
அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
(அல்குர்ஆன் : 70:15)

*3)அந்நாளில் நாம் இவ்வுலகில் செய்த நல்அமல்கள் மட்டுமே பயனளிக்கும்.அந்த நல்லறங்களைக் கொண்டு மறுமை நாளுக்காக தயாராகி விட்டடோமா என்று ஒவ்வொருவரும் தங்களை விசாரனை செய்து கொள்ள வேண்டும்.*

يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا  ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ‏

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் : 99:6)

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
(அல்குர்ஆன் : 99:7)

وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ

அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
(அல்குர்ஆன் : 99:8)

*புத்திசாலியான மனிதர் யார்?*

“எவர் தன்னைக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக அமல் செய்கிறாரோ அவர் தான் புத்திசாலி - எவர் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் என்னை மன்னித்து விடுவான் என்று) அல்லாஹ் வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதி)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பத்து நபர்கள் கொண்ட ஒரு ஜமாஅத்துடன் நான் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்குச் சென்றேன். அன்ஸாரிகளில் ஒருவர் எழுந்து நின்று “அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் மிகவும் அறிவுள்ளவர், பேணுதல் மிக்கவர் யார்?’’ என்று வினவினார். “மரணத்தை மிக அதிகமாக நினைப்பவர், மரணத்திற்கு முன் அதற்குரிய தயாரிப்பை மிக அதிகமாகச் செய்து கொண்டவர், (இவ்வாறு செய்பவர்களே அறிவுடையோர்) இவர்கள் தாம் உலகத்தின் சிறப்பையும் மறுமையின் கண்ணியத்தையும் பெற்றுக் கொண்டவர்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
(தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்)

قال أبو الحسن علي بن أبي طالب - رضي الله عنه – في تعريف التقوى: "هي الخوف من الجليل، والعمل بالتنزيل، والرضا بالقليل، والاستعداد ليوم الرحيل"

(الكلم الطيب)

*அல்லாஹ்வை அஞ்சி நடப்பது,குர்ஆனின் படி அமல் செய்வது,குறைவானதை பொருந்திக் கொள்வது,மறுமை நாளுக்கான தயாரிப்பை செய்து கொள்வதுதான் இறையச்சம் என்று* *ஹஜ்ரத்* 
*அலி இப்னு அபீ தாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்* *கூறுகிறார்கள்.*

*இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:*

*கவலைகள் இரண்டு வகை உள்ளது.ஒன்று சாதகமானது,மற்றொன்று பாதகமானது ஆகும்.*

*மறுமையின் மீதுள்ள கவலை சாதகமான கவலையாகும்.*

*உலகத்தின் மீதும் அதனுடைய அலங்காரத்தின் மீதுள்ள கவலை பாதகமானதாகும்.*

(நூல்:அல்பிதாயா வந்நிஹாயா 10/141)

அறிவாளிகளுக்கான சில வழிகாட்டுதல்களை சுஹ்பு இபுறாகீமிலிருந்து  மேற்கோள் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான்)

 عَلَى الْعَاقِلِ مَا لَمْ يَكُنْ مَغْلُوبًا عَلَى عَقْلِهِ أَنْ تَكُونَ لَهُ سَاعَاتٌ :
سَاعَةٌ يُنَاجِي فِيهَا رَبَّهُ عَزَّ وَجَلَّ ،
وَسَاعَةً يُحَاسِبُ فِيهَا نَفْسَهُ ،
وَسَاعَةً يُفَكِّرُ فِيهَا فِي صُنْعِ اللَّهِ عَزَّ وَجَلَّ ،
وَسَاعَةً يَخْلُو فِيهَا بِحَاجَتِهِ مِنَ الْمَطْعَمِ وَالْمَشْرَبِ ،
وَعَلَى الْعَاقِلِ أَنْ لا يَكُونَ ظَاعِنًا إِلا لِثَلاثٍ : تَزَوُّدٍ لِمَعَادٍ ، أَوْ مَرَمَّةٍ لِمَعَاشٍ ، أَوْ لَذَّةٍ فِي غَيْرِ مُحَرَّمٍ ،
 وَعَلَى الْعَاقِلِ أَنْ يَكُونَ بَصِيرًا بِزَمَانِهِ مُقْبِلا عَلَى شَأْنِهِ ، حَافِظًا لِلِسَانِهِ ، وَمَنْ حَسَبَ كَلامَهُ مِنْ عَمَلِهِ قَلَّ كَلامُهُ إِلا فِيمَا يَعْنِيهِ "

புத்திசாலி என்பவன் தன் நேரங்களை நான்கு காரியங்களில் மட்டும் செலவு செய்வான்:

ஒன்று:தன் இறைவனுடன் வணக்கங்களைக் கொண்டு உரையாடிக் கொண்டிருப்பான்.

இரண்டாவது:தன்னை சுய விசாரனையில் உட்படுத்திக் கொண்டிருப்பான்.

மூன்றாவது:தன் ரப்புடைய படைப்பினங்களை சிந்திப்பதில் தன் நேரத்தை செலவழிப்பான்.

நான்காவது:தன் சுய தேவைகளில் ஈடுபட்டிருப்பான்.

மறுமைக்கான தயாரிப்பு,வாழ்வாதாரத்திற்காக,ஹராமாக்கப்படாத ஆகுமாக்கப்பட்ட காரியங்கள் ஆகிய மூன்று விஷயங்களுக்காக தன் நேரங்களை செலவு செய்பவனே அறிவாளி ஆவான்.

மேலும் அறிவாளி என்பவன் சமகால அறிவை கொண்டிருப்பான்.தன் நாவை பேணிப் பாதுகாப்பான்.எவர் தன் நாவை வீண் விஷயங்களை பேசுவதை விட்டும் தடுத்து கொள்கிறாரோ அவருக்கு கற்றதின் படி செயலாற்றுவது எளிதாகி விடுகிறது.

*சுய விசாரனையின் அவசியத்தைப் பற்றி நம் முன்னோர்களின் முத்தான சொற்கள்*

*ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்று:*

*மறுமையில் விசாரனை செய்யப்படுவதற்கு முன்பாக உங்களை நீங்களே இவ்வுலகில் சுயவிசாரனை செய்து கொள்ளுங்கள்.மறுமையில் அமல்களை எடை போடப்படுவதற்கு முன்பாக இவ்வுலகில் நீங்களே உங்கள் அமல்களை எடை போட்டுக் கொள்ளுங்கள்.இவ்வுலகில் நீங்கள் செய்யும் சுய விசாரனை நிச்சயமாக அது நாளை உங்களின் மறுமை விசாரனையை எளிதாக்கும்.*
(اغاثة اللهفان 1/145)

*இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:*

*முஃமினான மனிதன் தன்னை சுய விசாரனையில் உட்படுத்தி கொண்டே இருப்பான்.அதாவது,கற்றதின் படி எதை செயல்படுத்தியுள்ளேனா?உணவிலும்,குடிப்பலும் ஹராமை விட்டும்,வீண் விரயத்தை விட்டும் தவிர்ந்துள்ளேனா?என தன்னை விசாரனை செய்து கொண்டே இருப்பார்.பாவியான மனிதன் எதையும் பொருட்படுத்தாமல் நாட்களை கடந்து கொண்டிருப்பான்!*
(اغاثة الهفان 1/145)

*இமாம் மாவுரிதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:சுய விசாரனை என்பது, மனிதன் பகலில் தான் செய்த காரியங்களை அன்றைய இரவில் தனக்குள் ஆய்வு செய்வதாகும்.அவ்வாறு செய்த காரியங்கள் நல்லதாக இருந்தால் அதை தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.அதே சமயம் தீமையாக இருந்தால்  அதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.வரும் காலங்களில் அவ்வாறு செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.*
(ادب الدين والدنيا 360-361)

*இப்ராஹீமுத் தைமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:நான் என்னுடைய மனதை சுவர்க்கத்தில் இருப்பது போல காட்சிப் படுத்தினேன்.சுவர்க்கத்தின் கனிகளிலிருந்து உண்பது போலவும்,சுவர்க்க ஆறுகளிலிருந்து தண்ணீர் அருந்துவது போலவும்,சுவர்க்க கன்னிகளுடன் முஆனகா செய்வது போலவும் காட்சி படுத்தினேன்.பின்பு நரகத்தில் இருப்பது போல என்னுடைய மனதை காட்சிப் படுத்தினேன்.ஜக்கூம் என்னும் கள்ளி மரத்திலிருந்து சாப்பிடுவது போலவும்,துர்நாற்றமுள்ள சீழ் நீரை குடிப்பது போலவும்,நரகத்தின் சங்கிலிகளையும்,அரிகண்டங்களையும் கொண்டு விலங்கிடப்பட்டுள்ளதாகவும் காட்சிப் படுத்தினேன்.பின்பு என் மனதுக்குள் இவ்வாறு கூறிக் கொண்டேன்:மனமே இவ்விரண்டில் நீ எதை விரும்புகிறாய்?அம்மனம் உலகத்திற்கு சென்று நல்அமல் செய்ய வேண்டும் என விரும்பியது.அப்பொழுது நான் என் மனதிற்கு இவ்வாறு அறிவுரை கூறினேன்.அவ்வாறெனில் நீ ஆசைப்படும் உலகத்தில் இப்பொழுது இருக்கிறாய்,எனவே நல்அமல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொள்.*
(محاسبة النفس لابن ابي الدنيا ص:26)

இமாம் கஜ்ஜாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
அடியார்களில் அகப்பார்வையுடையோர் தன்னை அனைத்து நேரங்களிலும் இறைவன் கண்காணிக்கிறான் என்பதை அறிந்திருப்பார்கள்.தங்களிடம் ஏற்பட்ட தவறுகளை சுய விசாரனையைக் கொண்டு சரிசெய்வார்கள்.மறுமையில் விசாரனை செய்யப்படுவதற்கு முன்பாக எவர் இவ்வுலகில் தன்னை சுய விசாரனையில் உட்படுத்திக் கொண்டாரோ அவரின் கேள்வி கணக்கு எளிதாக்கப்படும்.மறுமையின் கேள்விகளுக்கு பதில்கள் தயாராகிவிடும்.எவர் சுய விசாரனை செய்து கொள்ள
வில்லையோ அவருக்கு நிரந்தரமான நஷ்டம் உண்டாகி விடும்.
(احياء علوم الدين للغزالي 4/418)

*வாழ்க்ககையில் ஒவ்வொரு வினாடிகளும் விலை மதிக்க முடியாதவை.காலத்தை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க முடியாது.இந்த வினாடிகளை வீணடிப்பது அல்லது வீணான காரியங்களில் ஈடுபடுத்துவது பெரும் அழிவிற்கு காரணமாகி விடும்.இதனை மக்களில் அறிவற்றவர்கள்,மடையர்கள் தவிர மற்ற அனைவரும் விளங்கிக் கொள்வார்கள்.இந்த உண்மையை மனிதன் இங்கு விளங்கமாட்டான்.அமல்கள் எடுத்துக் காட்டப்படும் மறுமை நாளில் உலகத்தினுடைய ஒவ்வொரு வினாடியின் அருமை மனிதனுக்கு விளங்கும்.*

*மரணித்தப் பின் மறுமையில் மனிதன் எதையெல்லாம் ஆசை கொள்வான் என அல்குர்ஆன் நமக்கு பட்டியலிடுகிறது.*

*மரணத்திற்குப் பின் மனிதனின் ஆசைகள்*

*1)அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!*

اِنَّاۤ اَنْذَرْنٰـكُمْ عَذَابًا قَرِيْبًا ۖۚ  يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدٰهُ وَيَقُوْلُ الْـكٰفِرُ يٰلَيْتَنِىْ كُنْتُ تُرٰبًا

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
(அல்குர்ஆன் : 78:40)

*2)நல்அமல்கள் செய்திருக்கலாமே!*

يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌ۚ‏

“என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.
(அல்குர்ஆன் : 89:24)

*3)என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!*

وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ  ۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْ‌ۚ‏

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
(அல்குர்ஆன் : 69:25)

*4)தீய நட்பை தவிர்ந்து இருக்கலாமே!*

يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا‏

“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”
(அல்குர்ஆன் : 25:28)

*5)அல்லாஹ்,ரஸுலுக்கு கட்டுப்பட்டு நடந்நிருக்கலாமே!*

يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا‏

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 33:66)

*6)நல்வழியை தேர்ந்தெடுத்து இருக்கலாமே!*

وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يٰلَيْتَنِى اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا‏

அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு: “அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் கூறுவான்.
(அல்குர்ஆன் : 25:27)

*7)முஃமீன்களாக இருந்திருக்கலாமே!*

وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلَى النَّارِ فَقَالُوْا يٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰيٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏

நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், “எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின்  அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்” எனக் கூறுவதைக் காண்பீர்.
(அல்குர்ஆன் : 6:27)

*எனவே காலத்தின் அருமையை உணர்ந்து தன்னை சுய விசாரனைக்கு உட்படுத்தி நல்அமல்கள் புரிய  அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக!*

*இரண்டு வகையான சுய விசாரனைகள்:*

*1)செய்வதற்கு முன்பாக..*
*2)செய்த பின்பாக..*

*1)செய்வதற்கு முன்பாக..*

*இதில் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும்.*

*1)ஒரு செயலை செய்வதற்கு முன்பாக இச்செயல் ஷரீஅத்திற்கு உட்பட்டதா அல்லது ஷரீஅத்திற்கு அப்பாற்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.பின்பு அச்செயல் ஷரீஅத்திற்கு உட்பட்டதாக இருந்தால் செய்ய வேண்டும்.இல்லையெனில் விட்டு விட வேண்டும்.*

*அல்குர்ஆன் இதைப் பற்றி இவ்வாறு இயம்புகிறது:*

இன்னும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால், நம்பிக்கையாளனான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்வதற்கு உரிமையில்லை; எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் திட்டமாக பகிரங்கமான வழிகேடாக வழிகெட்டு விட்டார்.
(அல்அஹ்ஸாப்:36)

*2)செய்வது சிறந்ததா?அல்லது விடுவது சிறந்ததா? என்பதை பார்க்க வேண்டும்.இது கால சூழல்கள் மற்றும் மனிதர்களை கவனித்து மாறுபடும்.எனவே எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும்,எதை விட வேண்டும் என்பது காலத்தையும்,மனிதர்களையும் பொருத்ததாகும்.*

*3)ஒரு செயலை அல்லாஹ்விற்காக செய்வதாக இருந்தால் செயல்பட வேண்டும்.எனினும் அதில் பெயரும்,புகழும்,பொருளும் நோக்கமாக இருந்தால் விட்டு விட வேண்டும்.*

*செயல்களில் மனத்தூய்மையை வலியுறுத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு கூறினார்கள்:*

அனைத்து அமல்களுடைய கூலிகளும் எண்ணத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும், மனிதன் எதை எண்ணுகிறானோ அது தான் அவனுக்குக் கிடைக்கும். எனவே, எவர் அல்லாஹுதஆலாவுக்காகவும், அவனது ரஸூலுக்காகவும் ஹிஜ்ரத் (குடிபெயர்ந்தாரோ) செய்தாரோ, அல்லாஹுதஆலா, அவனது ரஸூலின் திருப்தியைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் (குடிபெயர்ந்தாரோ) ஹிஜ்ரத் செய்தாரோ, அந்த ஹிஜ்ரத்தின் நன்மை அவருக்குக் கிடைக்கும். எவர் உலக நோக்கத்திற்காகவோ, பெண்ணை மணமுடிக்கவோ, ஹிஜ்ரத் செய்தாரோ, (அவரது ஹிஜ்ரத் அல்லாஹுதஆலா, அவனது ரஸூலுக்காக இருக்காது, மேலும்) வேறு எந்த நோக்கத்திற்காக ஹிஜ்ரத் செய்தாரோ (அல்லாஹுதஆலாவிடத்திலும்) அவரது ஹிஜ்ரத் அந்த நோக்கத்திற்கே என்று முடிவு செய்யப்படும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)

*2)ஒரு செயலை செய்த பின் சுய விசாரனையை மேற்கொள்வது.*

*தான் செய்த அமல் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா?இல்லையா என சுய விசாரனை செய்து கொள்வதாகும்.பொதுவாக அமல்கள் ஏற்கப்பட்ட நான்கு விஷயங்கள் முக்கியமானவையாகும்.*

*ஒன்று:மனத்தூய்மையுடன் அந்த அமலை நிறைவேற்றியிருக்க வேண்டும்.*

செயல்களில், அல்லாஹ்வுக்காக வேண்டி மட்டும் செய்யப்பட்ட செயலையும் அல்லாஹுதஆலாவை திருப்திபடுத்த செய்யப்படும் செயலை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயி)

*இரண்டாவது:நபியவர்கள் காட்டித்தந்த வழிமுறைப் படி அந்த அமலை நிறைவேற்றியிருக்க வேண்டும்.*

(மேலும் நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதனை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; எதனை விட்டும் உங்களை அவர் தடுத்தாரோ (அதனை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள்.
(அல்ஹஷ்ர்:7)

*மூன்றாவது:இஹ்ஸான் என்ற அழகிய முறையில் அந்த அமலை நிறைவேற்றியிருக்க வேண்டும்.*

مَا الْإِحْسَانُ؟ قَالَ : (( أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ )

இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
(புகாரி)

*நான்காவது:அமல் செய்த பின் அதில் ஏதும் குறை ஏற்பட்டு ஏற்கப்படாமல் போய்விடுமோ என்று பயப்பட வேண்டும்.*

ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், (وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مآ آتَوْا وَقُلُوْبُهُمْ وَجِلَةٌ) தானம் கொடுத்ததின் பேரில் அவர்களின் உள்ளம் அஞ்சிக்கொண்டிருக்கும் நிலையில் கொடுப்பவர்கள் என்ற இந்த ஆயத்தின் கருத்து, மது அருந்துபவர்கள், திருடுபவர்களா?'' (பாவங்களில் ஈடுபட்டதால் அவர்கள் பயப்படுகிறார்களா?) என நான் கேட்டேன். சித்தீக்கின் மகளே, இதுவல்ல கருத்து, ஆயத்தின் கருத்து, அவர்கள் நோன்புவைத்து, தொழுது, தானதர்மங்கள் செய்பவர்கள். ஆனால், அவர்கள் (ஏதேனுமொரு தீவினையின் காரணமாக) தங்களது நல்ல அமல்கள் ஏற்கப்படாமல் போய்விடுமோ என்பதை பயப்படக் கூடியவர்கள், இவர்கள் தாம் விரைவாக நன்மைகளைச் சேர்க்கின்றவர்கள், இவர்கள் தாம் அந்த நன்மைகளின் பக்கம் முன்னேறுபவர்கள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(திர்மிதி)

*எவ்விஷயங்களை தனக்குள் சுய விசாரனை செய்வது அவசியமாகும்?*

*முதலாவது:நாவைப் பேணும் விஷயத்தில் ஒவ்வொருவரும் தன்னை சுய விசாரனை செய்வது அவசியமாகும்.*

*நாம் சொல்லும் சொல்லுக்கு மிகப் பெரிய பிரதிபலிப்பு இருப்பது போன்று அதன் மூலம் பெரும் ஆபத்தும் உள்ளது.நம்முடைய பல சொற்கள் இம்மை,மறுமை வெற்றிக்கு காரணமாக ஆகிவிடுகிறது.அதேபோன்று,நம்முடைய பல சொற்கள் இம்மை,மறுமையின் நஷ்டத்திற்கும் காரணமாகி விடுகிறது.*

*எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:*

ஓர் அடியான் அல்லாஹுதஆலாவின் திருப்திக்குக் காரணமான ஒரு வார்த்தையைப் பேசிவிடுகிறான், அதை அவன் பெரிதாகக் கருதுவதில்லை. ஆனால், அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவருடைய பதவியை உயர்த்திவிடுகிறான். மேலும், ஓர் அடியான் அல்லாஹுதஆலாவின் அதிருப்திக்குரிய ஒரு சொல்லைச், சொல்லிவிடுகிறான், அதை அவன் பொருட்படுத்துவதும் இல்லை. ஆனால், இதன் காரணமாக நரகத்தில் விழுந்துவிடுகிறான்.
(புகாரி)

*இந்த உம்மத்தின் முன்னோடிகள் தங்களின் சொற்களின் மீது எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து வந்தார்கள்.நாம் சொல்லும் ஒவ்வொரு சொற்களும் மலக்குமார்களால் எழுதப்படுகிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொண்டிருந்தார்கள்.*

اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏

(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
(அல்குர்ஆன் : 50:17)

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏

கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
(அல்குர்ஆன் : 50:18)

*ரபீஃ இப்னு ஹுஸைம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை தான் பேசிய அனைத்து விஷயங்களையும் எழுதிக் கொள்வார்கள்.அதில் நன்மையான விஷயங்கள் இருந்தால் அல்லாஹ்வை புகழ்வார்கள்.தீமை இருந்தால் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.*

*அப்துல்லாஹ் இப்னு அபூ ஜகரிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:*

*மௌனத்தை கடைபிடிக்க இருபது வருடமாக பயிற்சி எடுக்கிறேன்.நாளை மறுமையில் பேசும் வார்த்தைக்கு பதில் கூற வேண்டும் எனக் கூறியவனாக பயிற்சி எடுக்கிறேன்.எனினும் போதிய அளவு மௌனத்தை என்னால் கடைபிடிக்க முடியவில்லை.*

*மேலும் தங்கள் சகோதரர்களிடம் அபூ ஜகரிய்யா இவ்வாறு கூறுவார்கள்:நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் உங்களுக்கு நான் உதவியாக இருப்பேன்.மக்களைப் பற்றி பேசுவதாக இருந்தால் என்னை நீங்கள் விட்டு விடுங்கள்.*

*அப்துல்லாஹ் இப்னு வஹப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:நான் ஒரு மனிதரைப் பற்றி புறம் பேசினால் ஒரு நாள் நோன்பிருப்பதாக நேர்ச்சை செய்து கொண்டேன்.இவ்வாறு செய்வது எனக்கு பழக்கமாகிவிட்டது.எனினும் என்னால் புறம் பேசுவதை நிறுத்த முடியவில்லை.பின்பு நான் ஒரு மனிதரைப் பற்றி புறம் பேசினால் ஒரு திர்ஹம் சதகா செய்து வந்தேன்.திர்ஹத்தின் மீதுள்ள அன்பால் புறம்பேசுவதை விட்டு விட்டேன்.*

*இரண்டாவதாக, தொழுகையைப் பற்றி ஒவ்வொருவரும் சுய விசாரனை செய்து கொள்வது அவசியமாகும்.*

*இன்று தொழுகை விஷயத்தில் அதிகமானோர் பொடுபோக்காக உள்ளனர்.அதை வீணடிக்கிறார்கள்.அல்லாஹு தஆலா தொழுகையை அதனுடைய நேரங்களில் நிறைவேற்றுமாறு நமக்கு உத்தரவிடுகிறான்.*

*(ஐந்து நேரத்) தொழுகைகளையும் (குறிப்பாக அஸர் தொழுகையாகிய) நடுத்தொழுகையையும் (விடாமல் தொழுது) பேணிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களாக நில்லுங்கள்.*
(அல்பகரா:238)

*தொழுகையை விடுவது, மனிதனை குப்ரு (இறை நிராகரிப்பு), ஷிர்க் (இறைவனுக்கு இணை வைத்தல்) வரை சேர்த்துவிடுகிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*
(முஸ்லிம்)

*இந்த உம்மத்தின் முன்னோடிகள் தொழுகையை மிகப் பேணுதலாக கடைபிடித்துள்ளார்கள்.ஜமாஅத்துடைய தொழுகையை அவர்கள் தவற விட மாட்டார்கள்.தொழுைகையைப் பற்றி தங்களுகமகுள் சுய விசாரனையில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள்.*

*உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு முறை அஸர் தொழுகையின் ஜமாஅத் தவறி விட்டது.அதற்கு பரிகாரமாக பன்மதிப்புள்ள ஒரு பூமியை சதகா செய்து விட்டார்கள்.*

*ஹஜ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஷாவுடைய ஜமாஅத் தவறி விட்டால் அதற்கு பரிகாரமாக  அந்த முழு இரவையும் வணக்கத்தில் கழிப்பார்கள்.*

*ஹாதமுல் அஸம் ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு ஒரு நாள் அஸர் தொழுகையின் ஜமாஅத் தவறிப்போய் விட்டது.அதை வீட்டில் நி றவேற்றி விட்டு ஜமாஅத் தவறியதை நினைத்து அழுது கொண்டிருந்தார்கள்.அவரின் தோழர்கள் அவரை ஆறுதல் படுத்தினார்கள்.மேலும் இவ்வாறு கூறினார்கள்:என் பிள்ளைகளில் ஒருவர் மரணமாகியிருந்தால் ஊரில் உள்ள அனைவரும் ஆறுதல் கூற வந்திருப்பார்கள்.எனினும் தொழுகை தவறிப் போனதிற்கு ஆறுதல்  கூற சிலர் மட்டும் வந்துள்ளீர்கள்.அல்லாஹ்வின் மீது ஆணையாக!என் பிள்ளைகள் அனைவரும் மரணமடைவது தொழுகையின் ஜமாஅத் தவறுவதை விட இலேசானதாகும்.*

*ஒருவருக்கு ஒரு நேரத் தொழுகை தவறிவிடுவது, அவரது வீட்டார், பொருட்கள், செல்வங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டது போலாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் நவ்ஃபல் இப்னு முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*
(இப்னு ஹிப்பான்)


*3)மூன்றாவதாக நேரத்தைப் பற்றிய சுய விசாரனை அவசியமாகும்.*

இன்று நேரங்களை வீணடிப்பது சர்வ சாதரணமாகி விட்டது.பொருள் விரயத்தை விட நேர விரயம் மிக மோசமானது.ஆனால் அதை இன்று எவரும் உணருவதில்லை.

நாம் வணக்கங்களில் கழிக்க வேண்டிய பல நேரங்களை இன்று வீண்விஷயங்களில் கழித்து கொண்டிருக்கிறோம்.

இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம், மற்றது ஆரோக்கியம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), (நூல்: புகாரி.)

இறுதித்தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை: 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய், 2) உன் இளமையை எவ்வாறு கழித்தாய். என்பதாகும். (ஆதாரம்: திர்மிதி)

இந்த உம்மத்தின் முன்னோடிகள் நேரத்தின் அருமையை உணர்ந்தார்கள்.தங்கத்தை விட நேரத்தை வில மதிப்புடையதாக கருதினார்கள்.எனவே தான் வணக்க வழிபாடுகளில் தங்களின் ஒவ்வொரு நேரத்தையும் செலவழித்தார்கள்.அவ்வாறு வணக்கத்தில் ஈடுபடாத நேரங்களை பற்றி தங்களுக்குள் சுய விசாரனையையும் மேற்கொண்டார்கள்.

ஹஜ்ரத் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்:என்னுடைய ஆயுள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.எனினும் என்னுடைய அமலில் முன்னேற்றம் இல்லையே!நான் இவ்விஷயத்தில் மிக அதிகமாக கைசேதம் கொள்கிறேன்.

இமாம் ஷாஃபியி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுவார்கள்:
நேரத்தை நீ சரியான வழியில் செலவு செய்யவில்லையானால் அது உன்னை தவறான வழியில் பயன்படுத்திக் கொள்ளும்.

நாம் நம்முடைய நேரங்களை வணக்கங்களில் ஈடுபடுத்த வில்லையானால் தானாக அந்நேரங்கள் பாவங்களிலும்,வீணான காரியங்களிலும் செலவாகி விடும்.

இமாம் கஜ்ஜாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுவார்கள்:

உன்னுடைய நேரங்கள் தான் உன்னுடைய வாழ்க்கையாகும்.உன்னுடைய நேரங்கள்தான் உன்னுடைய முதலீடாகும்.அதுதான் உன் வியாபாரமாகும்.அந்த நேரங்களைக் கொண்டு நீ சுவர்க்கத்தைப் பெற முடியும்.உன்னுடைய ஒவ்வொரு வினாடியும் விலை மதிக்க முடியாத ரத்தினம் ஆகும்.காலத்திற்கு  எதையும் பகரம் எனக் கூற இயலாது.அது தவறினால் திரும்ப வரவும் செய்யாது.
(قيمة الزمن عند العلماء)

*காலத்தின் அருமை*

ஒரு வருடத்தின் அருமையை தெரிய வேண்டுமெனில்  தேர்வில் தோல்வியுற்றவனை கேட்டுப் பாருங்கள்.

ஒரு மாதத்தின் அருமை தெரியவேண்டுமெனில் சம்பளம் கிடைக்காதவனிடம் கேட்டுப் பாருங்கள்.

ஒரு வாரத்தின் அருமையை தெரிய வேண்டுமெனில் மருத்துமனையில் நுழைந்தவரிடம் கேட்டுப் பாருங்கள்.

ஒரு நாளின் அருமையை தெரிய வேண்டுமெனில் நோன்பு வைத்திருப்பவரிடம் கேட்டுப் பாருங்கள்.

ஒரு நிமிடத்தின் அருமையை தெரிய வேண்டுமெனில்  பிறரை எதிர்பார்த்து இருப்பவரிடம் கேட்டுப் பாருங்கள்.

ஒரு வினாடியின் அருமையை தெரிய வேண்டுமெனில் இரயிலை தவற விட்டவரிடம் கேட்டுப் பாருங்கள்.

பிரபல்யமான பதிவுகள்