புழுக்கள் நம் உடல் முழுதும் மொய்த்து, கண், காது மூக்கு, வாய் வழியாக உடலில் உள்புகுந்து நம் உடலை தின்னும் இந்த மண்ணறை வாழ்க்கையை வாழத்தான் போட்டி, பொறாமை, வஞ்சகம், பகை, விபச்சாரம், போதை என எத்தனை எத்தனை..
கடலில் கை விடும்போது , நம் கையிலிருந்து விழும் ஒரு சொட்டு நீரின் அளவு வாழும் இந்த இம்மை வாழ்க்கையை பெரிதுப்படுத்தி, அந்த கடலிலுள்ள நீரின் அளவுக்கு வாழப்போகும் மறுமை வாழ்க்கையை மறந்து வாழ்கிறோமே....
பணம் பணம் என அலைந்து இம்மையிலேயே அதனை செலவு செய்து, மறுமைக்கு நன்மைகளை சேமிக்க மனம் இல்லாமல் வாழ்ந்து , யாரும் உதவிக்கு வராத அந்த நாளில் நொடித்து போய் நிற்க போறோமே..
நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதை நாம் உணர வேண்டும்..