நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், ஜூலை 29, 2020

நித்ய கல்யாணி என்னும் அருமருந்து,

நித்ய கல்யாணி என்னும் அருமருந்து மூலிகை!!!____________________________________________
பொதுவாக உலகிலுள்ள எல்லா செடிகளும், காய்களும், பூக்களும் ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். எடுத்துக்காட்டாக நாம் அனைவரும் விரும்பும் ரோஜா பூக்கள். இவை ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். உலகிலுள்ள பெரும்பாலான தாவரங்களுக்கு இந்த விதி பொருந்தும். நித்திய கல்யாணி செடியோ எல்லா காலங்களிலும், எல்லா தட்ப வெட்பத்திலும் வளரும். இதன் அழகிய பூக்கள் அனுதினமும் பூத்துக் குலுங்குவதாலேயே இதற்கு நித்ய கல்யாணி என்ற பெயர் ஏற்பட்டது. "நித்ய(ம்) என்றால் தினமும் என்று பொருள், "கல்யாணி" என்றால் மலர்தல் என்ற பொருளைக் குறிக்கும்.

 

நித்தியகல்யாணி என்று அழைக்கப்படும் இந்த மலரைப்பற்றிய உண்மைகளையும், அருமருந்தாகிய இதன் தன்மைகளையும் நாம் இக்கட்டுரையில் காணலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த நித்ய கல்யாணியின் தாவரவியல் பெயர் காதரென்தஸ் ரோளியஸ்.

வகைகள்

இத்தாவரத்தில் இரண்டு வகைகள் உள்ளதாக பெரிதும் அறியப்படுகின்றது. இத்தாவரவினம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவமாகவும் மேல்பகுதி மிகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

வெண்மை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இப்பூக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வின்கா ரோஸா என ஸ்பானிய மொழியிலும், பூட்டிகா என வெணிசுலாவிலும், டெரசிடா என மெக்சிகோவிலும் அழைக்கப்படுகின்றது.

மருத்துவ குணங்கள்

பல மருத்துவ குணங்கள் கொண்ட இதனை மலேசியர்கள் போகேக் "ரெம்புட் ஜலாங்" என்றும் "கெகுதிங் சினா" எனவும் பல்வேறு பெயர்களில் அழைப்பர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இதனை சிட்சிரிக்கா எனவும், வியட்நாம் நாட்டில் ஹவா ஹாய் டாங் எனவும் அழைப்பர். பாரம்பரிய மருத்துவத்தில் தன்னிகரற்ற நாடான சீனாவில் இதனை "ச்சாங் சுன் ஹூவா" என அழைப்பர். பட்டிப்பூ என அழைக்கப்படும் இந்த மூலிகைத் தாவரத்திற்கு சீன மருத்துவத்தில் மிகப்பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது. தேவாமிர்தத்தை ஒத்த தேவமலர் என்று கொண்டாடப்படும் அளவிற்கு பல்வேறு அமிர்தகுணங்களைக் கொண்டது, இரண்டரை சென்டிமீட்டர் விட்டமுள்ள இந்த சின்னஞ்சிறு மலர். இது புற்று நோய்க்கான அருமருந்தாகும். இதன் மருத்துவதன்மை ஆஸ்துமா, குளிர் ஜுரம், இரத்தப்புற்றுநோய், நீரிழிவு நோய் (இது ஒரு நோயே அல்ல) உயர் இரத்த அழுத்தம், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் நோய்களை விரட்டுவது மட்டுமின்றி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பெண்களுக்கு இந்த மூலிகை ஒரு வரம் என்றே கூறவேண்டும், பல பிரச்சினைகளை இது கண்கண்ட மருந்து. மார்பக புற்றுநோயை அடித்து விரட்டும் அமுதம். அதுமட்டுமன்று, இது மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், மன நோய்களையும் நீக்கும் அமிர்த மருந்தாகும்.

மார்பகப் புற்றுநோய்

பெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். மார்பக திசுக்கள் மாற்றங்கண்டு கட்டிகளாக மாறி புற்றுநோயாக உருவெடுக்கும். இந்த நோயானது இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பிரச்சினையாக இருக்கின்றது. கட்டிகள் பெரிதாக உருவான பின்னரே இவற்றை நம்மால் அடையாளங்காண முடிகின்றது. இவற்றிற்கு ஆங்கில மருத்துவத்தில் பல்வேறு கண்டறியும் முறைகள் உள்ளன. இந்த வகை புற்றுநோயால் அவதிப்படுபவர்கள், நமது நித்தியகல்யாணியைக் கொண்டு நோயைக் கட்டுப்படுத்தலாம். முதலில் இதற்கு நித்தியகல்யாணி சூரணத்தை உபயோகிக்க வேண்டும்.

செய்முறை 

நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடியிலிருந்து ஆறு கிராம் முதல் பதினைந்து கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 400 மில்லி சுத்தமான நீரிலிட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைக்க வேண்டும்.

இந்த குடிநீரை கஷாயம் என்று அழைக்கலாம் அல்லது டானிக் என்றும் அழைக்கலாம். தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் புற்று நோய் குணமாகும்.

கருப்பை புற்றுநோய்

கருப்பை புற்றுநோய் தற்காலத்தில் பெண்களின் பெரும்பாலானவர்களுக்கு எளிதில் பற்றும் நோயாக இருக்கின்றது. இவ்வகை புற்று உண்டாவதற்கு பலவகை காரணிகள் கூறப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வகை புற்று நோய்கள் வந்தால் கருப்பையை அகற்றி விடுவதையே நிரந்தர தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை பாரம்பரிய வைத்தியமான நித்திய கல்யாணியின் துணை கொண்டு முழுபலன் பெற முடியும்.

பதினைந்து கிராம் அளவுள்ள நித்தியகல்யாணிப்பூக்கள் மற்றும் அறுநூறு மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு வேலைக்கு 100 மில்லி வரை குடிக்க வேண்டும். இதனை தினமும் நாள் தவறாமல் மூன்று வேளையும் நோய் தீரும் வரை குணமாகும் வரை குடிக்க வேண்டும்.

நிலையில்லா மாதவிடாய்

மாதவிடாய் என்று உலகின் எல்லா பெண்களுக்கு நிகழும் ஒரு மாதாந்திர சுழற்சியாகும். இது பொதுவாக மாதமொருமுறை நிகழும். இவ்வாறு காலம் தவறாமல் நிகழ்வது நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்பதை உறுதிபடுத்துகின்றது. இவ்வாறு மாதந்தவறாமல் நிகழும் மாதவிடாய் நாட்கள் தவறி நடக்க ஆரம்பிப்பது ஆபத்தின் அறிகுறியாகும். பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இந்த சுழற்சி 20 நாட்களோ அல்லது முப்பத்தைந்து முதல் நாற்பத்தைந்து நாட்களோ ஆனால் இது "நிலையற்ற மாதவிடாய்" என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நிகழும் முறையற்ற மாத விடாய் கோளாறுகளை முழுவதுமாக நீக்க நித்திய கல்யாணி என்னும் பேரமுதத்தை பயன்படுத்தலாம்.

நித்திய கல்யாணியின் வேரை இருபது கிராம் அளவிற்கு எடுத்து சுத்தப்படுத்தி அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். அந்த குடிநீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி பின் ஆற வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதை காலை மாலை இருவேளை 40 மில்லி முதல் 100 மில்லி வரை நோயின் தன்மைக்கேற்ப வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களது மாதவிடாய் சுழற்சி நேர்த்தியாகிவிடும்.

இரத்த சோகை

இதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட வியாதிதான். மற்றவர்களுக்கும் (ஆண்களுக்கும்) வருமென்றாலும் பிரசவித்த தாய்மார்களுக்கே அதிகம் வரும் ஒரு சத்துக்குறைவு நோயாகும். இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் அளவில் குறைந்து உடலின் பிற பகுதிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கொண்டு செல்ல இயலாமல் போய்விடும். இதனால் உடல் சோர்வு மயக்கம், முதலியவை ஏற்படும். பெண்களின் பிரசவத்தினால் ஏற்படும் இரத்த இழப்பினாலும் இந்த நோய் ஏற்படும்.

இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த நித்தியகல்யாணியின் நான்கு பூக்களை ஒரு டம்ளர் தண்ணீரில் முக்கி வைக்க வேண்டும். இதனை ஓர் இரவு காற்றோட்டமாக வைத்துவிட வேண்டும். காலையில் இதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் குடித்த பின்னர் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் தேவைக்கேற்றபடி இதனை தொடரலாம்.

நீரிழிவு

இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய நோயாளிகள் குழாம் என்பது இந்த நீரிழிவு நோயாளிகள் தான். இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு நீரழிவு நோய் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு நோயே அல்ல, உடலில் ஏற்படும் மாற்றங்களே. இரத்த சர்க்கரையின் அளவு உச்சமாக இருக்க அதனால் உடலில் ஏற்படும் விளைவுகளே நீரிழிவு நோயாகும். கணையத்தின் சுரப்பாகும் இன்சுலின் உடலுக்கு போதுமானதாக இல்லாமல் போவது தான் நீரிழிவு நோயாகும்.

இந்த நீரழிவு நோய்க்கு நித்தியகல்யாணியை சிறந்த மருந்தாக கொள்ளலாம். இது பழுதுபட்ட கணையத்தை சரிசெய்வதோடு, உடல் செல்களின் இயக்கங்களை சரி செய்கிறது.

நித்திய கல்யாணியின் ஆறு இலைகள் மற்றும் 15 பூக்களை 800 மில்லி நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டியவுடன், அதாவது 400 மில்லியானவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை என ஒரு நாளைக்கு இரு முறை இந்த குடிநீரை பருகவேண்டும். இன்னொரு முறையில் இந்த நித்தியகல்யாணியின் 15 அல்லது 16 இலைகளை மட்டுமே கொதிக்க வைத்து, நீர் பாதியாக சுண்டியவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை இருவேளையும் நாள் தவறாமல் பருகவேண்டும்.

இரத்த புற்றுநோய்

இரத்த புற்று நோய் என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஒரு சிதை மாற்றமேயாகும். இவை பொதுவாக இரத்த வெள்ளையணுக்களின் அசாதாரண பெருக்கத்தால் அறியப்படுகின்றது.

இந்த புற்று நோயை நித்திய கல்யாணி இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தால் குணப்படுத்த இயலும். நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

ஆஸ்துமா

இது நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் நோயாகும். இதனால் மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாகும். சுவாசக் குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் தடித்தும், நுரையீரல் தசைகளில் ஏற்படும் வீக்கம் இவைகளே ஆஸ்துமா எனப்படுகின்றது. இந்நோயின் காரணமாக ஆண்டொன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லட்சம் பேர் வரை இறக்கிறார்கள்.

இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

விஷ ஜுரம்

மிகக் கடுமையான நாட்பட்ட காய்ச்சலை குணமாக்கக்கூடியது இந்த நித்தியகல்யாணி. நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

மனநோய்கள்

அல்சீமர் என்று அழைக்கப்படுகின்ற நினைவு இழப்பு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகின்றது. இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

எச்சரிக்கை 

கருத்தரித்த தாய்மார்கள் நித்தியகல்யாணியின் எந்தவித மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது.

பக்ரீத் பெருநாள்,பக்ரீத் பொருளாதாரம்,

பக்ரீத் பொருளாதாரம்*
-----------------------------------
20 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாடுவர்.
10% முஸ்லிம்கள் குறைந்தபட்சம் ரூ.5000/- மதிப்புள்ள ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள்.

*2 கோடி x ரூ.5000 = ரூ.10000 கோடி*

இந்த அளவிலான பொருளாதாரத்தால் யார் பயனடைவார்கள்...?

இவை சீன தயாரிப்புகளோ
பெருநிறுவன தயாரிப்புகளோ அல்ல,
100% தேசிய கிராமப்புற பொருளாதாரம்.
இதனால் பயன் அடைவது இந்திய விவசாயிகள் மட்டுமே...

ஒரு விவசாயி ஆண்டுக்கு சராசரியாக 10 ஆடுகளை வளர்த்தால்
*2 கோடி ÷ 10 ஆடு = 20 லட்சம் குடும்பங்கள்* வேலைவாய்ப்பு பெறும்.

எனவே பக்ரீத் பண்டிகை, 10000 கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது மற்றும் சுமார் 20 லட்சம் சிறு விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.

ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டு, குறைந்தது 20 பேர் சாப்பிடுகிறார்கள்.
*2 கோடி x 20 பேர் = 40 கோடி மக்களுக்கு* உணவு வழங்குகிறார்கள். (முஸ்லிம் ஏழைகள் மட்டும் அல்ல. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளும்  பயனடைகின்றனர்)

*பக்ரித்தின் முக்கிய பொருளாதார நன்மைகள்:*

வணிகம் - ரூ.10000 கோடி
இலவச உணவு - 40 கோடி மக்கள்
வேலைவாய்ப்பு - 20 லட்சம் பேர்.

இது குறைந்தபட்ச மதிப்பீடு, உண்மையானது இரு மடங்காக இருக்கலாம்.

கால்நடைகள் மூலம் கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, அதன் வர்த்தகத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்.


பெருநாள் தொழுகை (ஹனபி)

ஜும்ஆத் தொழுகை யார் யார் மீது எல்லாம் கடமையாகிறதோ இரு ஈது பெருநாள் தொழுகைகளும் அவர்கள் மீது கடமையாகிறது. ஆனால் ஈது தொழுகை வாஜிபு ஆகும். இம்மாதிரியே ஜும்ஆவில் குத்பா பர்ளு, ஆனால் ஈதில் குத்பா வாஜிபாகும்.

ஜும்ஆவில் குத்பா தொழுகைக்கு முன்னால் ஓதப்படும். ஈதுகளின் குத்பா தொழுகைக்குப் பின்னால் ஓதப்படும்.

பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும்.

ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது.

தொழுகை முறை:

ஈது பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத் வாஜிபாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் மும்மூன்று விகிதம் இரண்டு ரக்அத்துகளில் 6 அதிகப்படியான தக்பீர்கள் உண்டு.

முதலில் நிய்யத்து செய்து அல்லா{ஹ அக்பர் சொல்லி இமாமுடன் ரக்அத் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லா{ஹ அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹ அக்பர்' சொல்லி (ரக்அத்தில் கை கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் கிராஅத்தும் ஓதுவார். அதைக் கேட்க வேண்டும்.

நோன்புப் பெருநாள் தொழுகை நிய்யத்:

نَوَيْتُ اَنْ اُصَلِّ لِلهِ تَعَااٰى رَكَعَتَيْنِ صَلٰوةَ عِيْدِ الْفِطْرِ اِقْتَدَيْتُ بِهٰذَالْاِمَامِ مُتَوَجِّهًا اِلٰى جِهْةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرُ

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிய்யத்:

نَوَيْتُ اَنْ اُصَلِّ لِلهِ تَعَااٰى رَكَعَتَيْنِ صَلٰوةَ عِيْدِ الْاَضْحٰى اِقْتَدَيْتُ بِهٰذَالْاِمَامِ مُتَوَجِّهًا اِلٰى جِهْةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرُ

இரண்டாவது ரக்அத்தில் ஓத வேண்டியதை ஓதி முடித்து ருகூவுக்கு போகும் முன்னர், முன்போல் 3 தக்பீர் சொல்ல வேண்டும். மூன்று முறை அல்லா{ஹ அக்பர் சொல்லி கையைத் தொங்கவிட்டு விட்டு நாலாவது முறை அல்லா{ஹ சொல்லி ருக்கூவுக்கு போய் வழக்கம் போல் தொழுகையை முடிக்க வேண்டும்.

அதன்பிறகு இமாம் குத்பா ஓதுவார். அதை காது தாழ்த்தி கேட்க வேண்டும். பின்பு துஆ திக்ருகள் ஓதப்படும்.

தக்பீர்:

للهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ

பெருநாள் தொழுகை (ஷாபிஈ)

பொழுது உதயமானதிலிருந்து ளுஹரின் வக்து வரும் வரை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளின் நேரங்களாகும். இவ்விரு பெருநான் தொழுகைகளும் களாவாகிவிட்டால் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும்.  உளுஹிய்யாவை அறுக்க வேண்டியிருப்பதால் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை அதன் ஆரம்ப வக்திலும்இ ஃபித்ரு ஜகாத்தை கொடுத்து முடிப்பதற்காக நோன்புப் பெருநாள் தொழுகையை சற்றுக் காலம் தாழ்த்தியும் தொழுவது சுன்னத் ஆகும்.

ஈத் தொழுகையானது தொழுகையின் எல்லாவித ஃபர்ளு, ஷர்த்துகளைக் கொண்ட இரண்டு ரக்அத் தொழுகை ஆகும். எனினும் முதல் ரக்அத்தில் வஜ்ஹத்து ஓதிய பின் ஏழுமுறை  தக்பீர் கூறுவதும், இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்த பின்பு ஐந்து முறை தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும். ஒவ்வொரு தக்பீர் கூறும்போதும்  இரு கைகளையும் உயர்த்தி பின்பு அவைகளைக் கட்டிக் கொள்வதும் மற்றும் இந்த தக்பீர்களுக்கிடையில் 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லா{ஹ வல்லா{ஹ அக்பர்' எனச் சொல்வதும் சுன்னத்துக்களாகும். ஃபாத்திஹா சூராவிற்குப் பின் 'காஃப்'; (50வது) சூரா  அல்லது 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்'; சூராவும் இரண்டாவது ரக்அத்தின் ஆரம்பத்தில் 'ஹல்அதாக' சூராவும் ஓதுவதும் சுன்னத்தாகும்.

நோன்புப் பெருநாள் தொழுகை நிய்யத்:

اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْفِطْرِ رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ

`[;[{ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிய்யத்:

اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْاَضْحٰى رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ

இரு பெருநாட்களின் முதல் நாள் மாலை சூரியன் மறைந்தது முதல் பெருநாள் தொழுகை தொழத் தொடங்கும் வரை எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் தெருக்களிலும், வீதிகளிலும், வீடுகுளிலும் நின்ற, அமர்ந்த, படுத்த அமைப்புகளிளெல்லாம் தக்பீர் சொல்லிக் கொண்டே இருப்பது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முர்ஸல் என்று பெயர். ஹஜ்ஜுப் பெருநாளில் அரபா தினத்தின் ஸுப்{ஹத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் பிறை 13) அஸர் வரை எல்லாத் தொழுகைகளுக்கும் பின்பு மட்டும் தக்பீர் சொல்வது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முகய்யத்' என்று பெயர் மேலும் துல்ஹஜ் பிறை 1 முதல் 10 வரை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய குர்பானிப் பிரயாணிகளைப் பார்க்ககும் போதோ, இவைகளின் சப்தங்களைக் கேட்கும்போதோ தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.

தக்பீர்:

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ…..۲

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَّاَصِيْلًا لاَ اِلٰهَ اِلَاَّ اللهُ وَلَا نَعْبُدُ اِلَّا اِيَّاهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ لَااِلٰهَ اِلَاّ اللهُ وَحْدَهْ وَصَدَقَ وَعْدَهْ وَنَصَرَ عَبْدَهْ وَاَعَزَّ جُنْدَهُ وَهَزَمَ الْاَحْزَابَ وَحْدَهْ لَا اِلٰهَ اِلَّا الله وَالله اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِللهِ الْحَمْدُ .

தொழுகைக்குப் பின்பு குத்பா ஓதுவது சுன்னத்தாகும். ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டும், இரண்டாவது குத்பாவை தொடர்ச்சியான ஏழு தக்பீர்களைக் கொண்டும் தொடங்குவதும் பெருநாள் குத்பாவின் சொற்றொடர்களுக்கு இடையே தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும்.

பிரபல்யமான பதிவுகள்