роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ிропாро┤рой், роЕроХ்роЯோрокро░் 06, 2016

роЗро╕்ро▓ாрооிроп рооாродроо்,рооுро╣ро░்ро░роо்,

முத்தான முஹர்ரம் பத்தாம் நாள்.

قوله تعالي :  وليال عشر (89:2)

قول النبي صلي الله عليه وسلم : وصيام يوم عاشوراء أني احتسب علي الله ان يكفر السنة التي قبله (روي في الجامع الصغير)

இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்துவமே ஒரு வணக்கத்தை செய்து முடித்ததும் அடுத்த வணக்கத்தை நினைவூட்டி எல்லா நேரங்களிலும் நிலைகளிலும் அல்லாஹ்வின் தொடர்பில் அடியார்களை நிலைத்திருக்கச் செய்வதாகும்.

ஒரு ஹஜ்ஜூடைய காலம் முடிந்த மறு கணமே இஸ்லாமிய வருடத்தின்  துவக்க மாதமான கண்ணியத்திற்குரிய முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களும் நபிகள் நாயகம் ஸல் அவர்களால் சிறப்பித்து கூறப்பட்டதாக அமைந்திருக்கிறது. அதிலும் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் "ஆஷூரா தினம்" நோன்பு நோற்பது உள்ளிட்ட பல வணக்கங்களையும் , பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

ஆஷுரா என்றால் மகத்துவம் மிக்க 10 ம் நாள் என்று பொருள். அது முஹர்ரம் 10 நாளை குறிக்கிறது.
·         قال  القرطبي وهو: عاشوراء معدول عن عاشرة للمبالغة والتعظيم، وهو في الأصل صفة لليلة العاشرة،

முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்பதை நபி ஸல் அவர்கள் சிறப்பித்து கூறியுள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ)).

2157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13.

9 – 10 இரு நாட்கள் நோன்பு சுன்னத்து.

முஹர்ரம் பிறந்தவுடன் இரண்டு நோன்புக்கு தயாராகி விடு!

·       عَنْ الْحَكَمِ بْنِ الْأَعْرَجِ قَالَ انْتَهَيْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ فِي زَمْزَمَ فَقُلْتُ لَهُ أَخْبِرْنِي عَنْ صَوْمِ عَاشُورَاءَ فَقَالَ إِذَا رَأَيْتَ هِلَالَ الْمُحَرَّمِ فَاعْدُدْ وَأَصْبِحْ يَوْمَ التَّاسِعِ صَائِمًا قُلْتُ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ قَالَ نَعَمْ – مسلم 1915

2087. அல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ”ஸம்ஸம்” கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். ”ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ”முஹர்ரம் மாதத்தின் (முதல்) பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!” என்று சொன்னார்கள். ”இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு, ”ஆம்” என்று அவர்கள் விடையளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13.

சஹாபாக்களின் ஆர்வம், குழந்தைகளும் நோன்பு.

·       فعن الربيّع بنت معوذ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار: " من أصبح مفطراً فليتم بقية يومه، ومن أصبح صائماً فليصم" قالت: فكنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبة من العهن، فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار. البخاري:1960.

ருபய்யிவு பின்து முஅவ்வித் என்ற ஸஹாபிப் பெண்மணி அறிவிக்கிறார்கள். நபி ஸல் அவர்கள் ஆஷூரா தினத்தின் காலைப் பொழுதிலே அன்சாரிகளின் கிராமத்திற்கு ஆள் அனுப்பி "யார் காலையில் நோன்பு நோற்காத நிலையில் எழுந்தாரோ அவர் மீதமுள்ள பகல் நேரம் முழுவது‌ம் நோன்பு நோற்றவற்றைப் போல ஆகியிருக்கட்டும். யார் காலையில் நோன்பு நோற்றிருந்த நிலையில் எழுந்தாரோ அவர் நோன்பிருக்கட்டும் என்று அறிவிக்கச் செய்தார்கள். அதற்குப் பிறகு நாங்கள் ஆஷூராவுடைய தினத்தில் நோன்பு நோற்பவர்களாகவும் எங்களுடைய சிறு பிள்ளைகளை நோன்பிருக்கச் செய்பவர்களாகவும் ஆகியிருந்தோம்.
மேலும் நாங்கள் உரோமத்தில் விளையாட்டுப் பொருட்களை செய்து வைத்துக் கொண்டு பசியால் அழுகும் குழந்தைகளுக்கு அதைத் தருவோம் இவ்வாறே நோன்பு திறக்கும் நேரம் வரை.....ஆகியிருக்கும்.
( நூல்- புகாரி)

மஆரி:.புல் குர்ஆன் என்ற குர்ஆனுடைய விரிவுரை நூலின் ஆசிரியர் மு:.ப்தீ ஷ:.பீ சாஹிப் அவர்கள்" முத்தான மூன்று பத்து நாட்கள்" என்று துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களையும், முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களையும், ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களையும், குறிப்பிடுகிறார்கள். காரணம் وليال عشر என்பதற்கு விளக்கமாக இந்த மூன்று பத்து நாட்களையும் குர்ஆனுடைய விரிவுரையாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

(ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அவர்களைத் தொட்டும் துல் ஹஜ்ஜூடைய முதல் பத்து நாள் என்றும், ரமளானுடைய முதல் பத்து நாள் என்றும் இரு வேறு ரிவாயத்துகள் வந்துள்ளது. ஹஜ்ரத் அபூ ஜஅ:.பர் இப்னு ஜரீர் ரஹ் அவர்களைத் தொட்டும் முஹர்ரம் உடைய பத்து நாட்கள் என்றும் வந்துள்ளது. (நூல்: த:.ப்ஸீர் இப்னு கசீர்)
மற்றொரு காரணம் இந்த மூன்றிலும் பத்தாவது நாள் பெருநாளாக கொண்டாடப் படுகிறது.  ரமலானிலும், துல்ஹஜ்ஜிலும் நாம் கொண்டாடும் இரு பெருநாளோடு ஆஷூரா நாளிலும் நாம் நோன்பு வைத்து சிறப்பிக்கிறோம்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மதீனா நகருக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவில் இருந்த யூதர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்கக் கண்டார்கள்.  நீங்கள் ஏன் இந்த நாளில் நோன்பு நோற்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஹஜ்ரத் மூஸா அலை அவர்களையும், அவர் தம் உம்மத்தினரான பனீ இஸ்ரவேலர்களையும், :.பிர்அவ்னிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய தினம் எனவே அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டாக நாங்கள் இந்நாளில் நோன்பிருக்கிறோம் என்று சொன்ன சமயம் உங்களை விட மூஸா நபியை பின்பற்ற நாங்கள் மிகத் தகுதி வாய்ந்தவர்கள் எனக் கூறி நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்கச் சொல்லி அதில் யூதர்களுக்கு மாறு செய்வதற்காக முஹர்ரம் உடைய ஒன்பதாம் நாளையும் சேர்த்து இரண்டு நாட்களுக்கு நோன்பிருக்க கட்டளையிட்டார்கள்.

ِ عَنِ ابْنِ عَبَّاسٍ- رَضِيَ اللَّهُ عَنْهُمَا- أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ صِيَامًا يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ)). فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ أَنْجَى اللَّهُ فِيهِ مُوسَى وَقَوْمَهُ وَغَرَّقَ فِرْعَوْنَ وَقَوْمَهُ فَصَامَهُ مُوسَى شُكْرًا فَنَحْنُ نَصُومُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ)). فَصَامَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَ بِصِيَامِهِ. (صحيح البخاري)

2004. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?“ என்று கேட்டார்கள். யூதர்கள் “இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்“ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், “உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்“ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30.

«2722» وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ أَنَّهُ سَمِعَ أَبَا غَطَفَانَ بْنَ طَرِيفٍ الْمُرِّيَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ- رَضِيَ اللَّهُ عَنْهُمَا- يَقُولُ حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ- إِنْ شَاءَ اللَّهُ- صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ)). قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. (صحيح مسلم)

2088. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், ”அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.       
ஸஹீஹ் முஸ்லிம்)

ரமளானுடைய நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்பு ஆஷூராவுடைய நோன்பு கடமையாக இருந்தது.

عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((هَذَا يَوْمُ عَاشُورَاءَ كَانَتْ قُرَيْشٌ تَصُومُهُ في الْجَاهِلِيَّةِ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ، وَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ))  ( صحيح البخاري)
4501. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அறியாமைக்கால மக்கள் (குறையுயர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி(ஸல்) அவர்கள், “(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதைவிட்டுவிடலாம்“ என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை

ஆஷூரா வரலாற்றுப் பார்வை.

இந்த உலகில் இறைவனால் நிகழ்த்தப் பட்ட பத்து பெரும் நிகழ்வுகள் இந்த நாளில் நடந்ததன் பின்னனியில் இந்தப் பெயர் (ஆஷூரா) வந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

العرف الشذى شرح الترمذي للكشميري - (2 / 43)
قوله : ( ولا تقوم الساعة ) ورد في حديث قوي : أن قيام القيامة يكون يوم عاشوراء ، عاشر المحرم .

************
عمدة القاري شرح صحيح البخاري - (17 / 135)

النوع الثالث لم سمي اليوم العاشر عاشوراء اختلفوا فيه فقيل لأنه عاشر المحرم وهذا ظاهر وقيل لأن الله تعالى أكرم فيه عشرة من الأنبياء عليهم الصلاة والسلام بعشر كرامات الأول موسى عليه السلام فإنه نصر فيه وفلق البحر له وغرق فرعون وجنوده الثاني نوح عليه السلام استوت سفينته على الجودي فيه الثالث يونس عليه السلام
أنجي فيه من بطن الحوت الرابع فيه تاب الله على آدم عليه السلام قاله عكرمة الخامس يوسف عليه السلام فإنه أخرج من الجب فيه السادس عيسى عليه السلام فإنه ولد فيه وفيه رفع السابع داود عليه السلام فيه تاب الله عليه الثامن إبراهيم عليه السلام ولد فيه التاسع يعقوب عليه السلام فيه رد بصره العاشر نبينا محمد - صلى الله عليه وسلم - فيه غفر له ما تقدم من ذنبه وما تأخر
هكذا ذكروا عشرة من الأنبياء عليهم الصلاة والسلام قلت ذكر بعضهم من العشرة إدريس عليه السلام فإنه رفع إلى مكان في السماء وأيوب عليه السلام فيه كشف الله ضره وسليمان عليه السلام فيه أعطي الملك

1.  ஹஜ்ரத் ஆதம் அலை அவர்களின் தவ்பா ஏற்கப்பட்டது.

2.  ஹஜ்ரத் நூஹ் நபி அலை அவர்களின் கப்பல் ஜூதி மலையில் தடம்பதித்தது.

3. ஹஜ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் நெருப்பு குண்டத்திலிருந்து இறைவனின் வல்லமையால் பாதுகாக்கப் பட்டது.

4.  ஹஜ்ரத் அய்யூப் அலை அவர்கள் பெரும் பிணியிலிருந்து விடுதலையானது.

5. ஹஜ்ரத் யூசுஃப் நபி அலை அவர்கள் கிணற்றிலிருந்து மீட்கப் பட்டது.

6.  ஹஜ்ரத் மூஸா அலை அவர்கள்   தன் கூட்டத்தினரோடு(:.பிர்அவ்ன் அவனுடைய படையோடு நைல் நதியில் மூழ்கடிக்கப் பட்ட பிறகு) பாதுகாக்கப் பட்டது.

7. ஹஜ்ரத் யூனுஸ் நபி அலை அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளியேறியது.

8. ஹஜ்ரத் தாவூத் நபி அலை அவர்களின் பிழை பொருக்கப்பட்டது.

9.  ஹஜ்ரத் சுலைமான் நபி அலை அவர்களுக்கு ஆட்சி திரும்பக் கிடைத்தது.

10. ஈஸா நபி அலை அவர்கள் யூதர்களிடமிருந்து பாதுகாக்கப் பட்டு வானின் பால் உயர்த்தப் பட்டது.

இது மட்டுமல்லாமல் இறுதி நாள் (கியாமத்) இந்த ஆஷூராவுடைய  ஒரு வெள்ளிக் கிழமையில் தான் வரும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيهِ أُخْرِجَ مِنْهَا وَلاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ فِي يَوْمِ الْجُمُعَةِ)) (صحيح مسلم)

1548. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 7. ஜும்ஆ

ஆஷூரா, மற்றும் ந:.பிலான நோன்பின் சிறப்புகள்.

عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ سَمِعَ ابْنَ عَبَّاسٍ- رَضِيَ اللَّهُ عَنْهُمَا- وَسُئِلَ عَنْ صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ.
فَقَالَ مَا عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَامَ يَوْمًا يَطْلُبُ فَضْلَهُ عَلَى الأَيَّامِ إِلاَّ هَذَا الْيَوْمَ وَلاَ شَهْرًا إِلاَّ هَذَا الشَّهْرَ يَعْنِي رَمَضَانَ.  (صحيح البخاري)

2006. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
“ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!“
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30.

عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ يَوْمَ عَاشُورَاءَ رَجُلاً مِنْ أَسْلَمَ: ((إِنَّ الْيَوْمَ يَوْمُ عَاشُورَاءَ، فَمَنْ كَانَ أَكَلَ أَوْ شَرِبَ فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ، وَمَنْ لَمْ يَكُنْ أَكَلَ أَوْ شَرِبَ فَلْيَصُمْهُ)). [صحيح البخاري)

2007. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, “இன்று ஆஷூரா நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!“ என்று அறிவிக்கச் செய்தார்கள்!
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30.

عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ مَعْبَدٍ الزِّمَّانِيَّ عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِهِ قَالَ فَغَضِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ رَضِينَا بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولاً وَبِبَيْعَتِنَا بَيْعَةً. قَالَ فَسُئِلَ عَنْ صِيَامِ الدَّهْرِ فَقَالَ: ((لاَ صَامَ وَلاَ أَفْطَرَ)). أَوْ: ((مَا صَامَ وَمَا أَفْطَرَ)). قَالَ فَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمَيْنِ وَإِفْطَارِ يَوْمٍ قَالَ: ((وَمَنْ يُطِيقُ ذَلِكَ)). قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمٍ وَإِفْطَارِ يَوْمَيْنِ قَالَ: ((لَيْتَ أَنَّ اللَّهَ قَوَّانَا لِذَلِكَ)). قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمٍ وَإِفْطَارِ يَوْمٍ قَالَ: ((ذَاكَ صَوْمُ أَخِي دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ)). قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الاِثْنَيْنِ قَالَ: ((ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ وَيَوْمٌ بُعِثْتُ أَوْ أُنْزِلَ عَلَيَّ فِيهِ)). قَالَ فَقَالَ: ((صَوْمُ ثَلاَثَةٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانَ إِلَى رَمَضَانَ صَوْمُ الدَّهْرِ)). قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ: ((يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ)). قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ: ((يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ)).
(صحيح مسلم)
2152. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களது நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட போது, அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும், எங்கள் உறுதிப் பிரமாணத்தை (முழுமையான) உறுதிமொழிப் பிரமாணமாகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம்” என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், காலமெல்லாம் நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு ”அ(வ்வாறு நோன்பு நோற்ப)வர் (முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர். (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்” அல்லது ”அவர் (முறைப்படி) நோன்பு நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை” என்று விடையளித்தார்கள்.
இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, ”அ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எவரால் முடியும்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, ”இதற்கான வலிமையை அல்லாஹ் நமக்கு அளித்தால் நன்றாயிருக்கும்!” என்றார்கள். ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, ”அதுதான் என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்” என்று சென்னார்கள்.
திங்கட்கிழமையன்று நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, ”அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன்; அன்றுதான் ”நான் நபியாக நியமிக்கப்பட்டேன்” அல்லது ”எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது” என்றார்கள். மேலும், ”மாதந்தோறும் மூன்று நோன்புகள் நோற்பதும் ரமளான் தோறும் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்” என்றும் கூறினார்கள். அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, ”முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்” என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு ”அது கடந்த ஆண்டின் பாவப்பரிகாரமாகும்” என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13.

ஆஷூரா தினத்தின் நன்மைகள்.

َ عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عَلِيٍّ يَسْأَلُهُ عَنْ شَهْرٍ يَصُومُهُ، فَقَالَ لَهُ عَلِيٌّ: مَا سَأَلَنِي أَحَدٌ عَنْ هَذَا بَعْدَ إِذْ سَمِعْتُ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ: أَيُّ شَهْرٍ يَصُومُهُ مِنَ السَّنَةِ؟ فَأَمَرَهُ بِصِيَامِ الْمُحَرَّمِ وَقَالَ: ((إِنَّ فِيهِ يَوْماً تَابَ اللَّهُ عَلَى قَوْمٍ وَيَتُوبُ فِيهِ عَلَى قَوْمٍ)). [سنن الدارمي)

ஹஜ்ரத் அலீ ரலி அவர்களிடம் ஒரு மனிதர் வந்து நோன்பு நோற்க உகந்த மாதம் எது என வினவினார்.  அதற்கு அலி ரலி அவர்கள் இது சம்பந்தமாக நபி ஸல் அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டு அதற்கு அவர்கள் பதிலளித்ததை நான் செவியுற்ற பின்பு யாரும் என்னிடம் இதுவரை கேட்கவில்லை (நீங்கள் தான் முதலில் கேட்கிறீர்கள்) நபி ஸல் அவர்களிடம் வருடத்தில் நோன்பு நோற்பதற்கு தகுதியான மாதம் எது? என அந்த மனிதர் கேட்க அவருக்கு முஹர்ரம் மாதத்தில் நோன்பிருக்கும் படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள் மேலும் "அந்த மாதத்தில் தான் அல்லாஹ் ஒரு கூட்டத்தினரின் பிழையை பொறுத்தான். இன்னும் ஒரு கூட்டத்தினரின் பிழையை பொறுத்துக் கொள்ளவிருக்கிறான்" என்றும் நபிகள் ஸல் அவர்கள்  கூறினார்கள்.

عن  ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم " من وسع علي عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته" قال سفيان انا قد جربناه فوجدناه كذالك.
மேலும் ஆஷூராவுடைய தினத்தில் யார் தன் குடும்பத்தினருக்கு விசாலமாக செலவு செய்வாரோ அவருக்கு வருடம் முழுவதும் அல்லாஹ் பொருளாதாரத்தை விசாலப் படுத்தி வைப்பான். என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இமாம் தஹபீ அவர்கள் இந்த ஹதீஸ் ஆதாரமாக எடுக்க தகுதியற்றது என்றும்,  வேறு சிலர்கள் பலஹீனமானது என்று சொல்லியிருந்தாலும்.

இந்த கருத்துடைய ஹதீஸ் ஹஜ்ரத் ஜாபிர் ரலி, அபூஹுரைரா ரலி, அபூ சயீதுல் ஹூத்ரீ ரலி,  போன்ற ஸஹாபாக்களின் வாயிலாகவும் அறிவிக்கப் பட்டுள்ளதால் இமாம் பைஹகீ ரஹ் அவர்கள் எல்லாம் சேர்ந்து பலமான ஹதீஸாக ஆகிவிட்டது என சாட்சி பகர்கிறார்கள்.

மேலும் இமாம் சுயூதி அவர்கள் ஜாமிஉஸ்ஸகீரில் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்று அடையாளப் படுத்தியுள்ளார்கள்.
இதை
" நவாதிருல் ஹதீஸ்" என்ற நூலில் ஷைக் யூனுஸ் ஸாஹிப் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

ஆஷூரா ஈமானிய நாட்களில் ஒரு  சிறந்த நாள்.
அச்சத்தின் விளிம்பில் மூஸா நபியவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

فَلَمَّا تَرَاءا الْجَمْعَانِ قَالَ أَصْحَـابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ) [الشعراء:61

அல்லாஹ்வின் உதவிக்கு சில தனிச்சிறப்புக்கள் உண்டு. 

வெற்றிக்கான காரணிகளை நாம் கற்பனை கூட செய்ய முடியாது.

   முழுமையான வெற்றி. அதன் பிறகு வேறு கவலை இருக்காது.

யூதர்கள் காப்பாற்றப் பட்டார்கள் என்பது மட்டுமல்ல. அவர்கள் கண் முன்னிலையிலேயே பிர் அவ்னும் அவனுடைய ஆட்களும் அழிக்கப் பட்டார்கள். அதற்குப் பிறகு யூதர்கள் பயப்படத் தேவையிருக்கவில்லை.

ஏராளமான தொல்லைகள், சதிச் செயல்கள், அவமரியாதைகளால் முஸ்லிம் உலகு நிராசையின் விளிம்பில் நிற்கிற சூழ்நிலையில் ஆஷூரா வருகிறது.
சமுதாயம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் சக்திக்கு முன்னாள் எந்தச் சக்தியும் வெற்றிபெற முடியாது.
அல்லாஹ் நினைத்தால் அது நடந்தே விடும், சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் சரி ‘

وَلَيَنصُرَنَّ اللَّهُ مَنْ يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ) [الحج:40].
அல்லாஹ்வின் வாக்குறுதி கிடைத்தே தீரும் என்பதில் முஃமின்களுக்கு தடுமாற்றம் கூடாது. அக்கிரமச் சக்திகளின் கை ஓங்குவது கண்டு அவர்கள் சஞ்சல மடையவும் கூடாது.

إنها سُنَّةٌ من سنن الله التي لا تتبدل ولا تتغير،
மூஸா ( அலை) வரலாறு 21 ம் நூற்றாண்டிலும் திருப்பத்தை ஏற்படுத்தும்.

ஆஷூரா தரும் முக்கிய பாடம்.

அரசியல் என்பது நீதியை நிலை நாட்டுவதற்காக, மக்களுக்கு நன்மை செய்வதற்காக அவர்களுக்கு உதவுவதற்காக அமைய வேண்டும். அப்படி அமைந்தால் சின்ன இயக்கம் கூட பெரிய அரசியல் சக்தியாக வளரும்.
யூசுப் (அலை) எகிப்தில் அடிமையாக விற்கப்பட்டார்கள். ஆனால் அவரிடம் இந்த உணர்வு இருந்ததால் தான் அவரும் அவருடைய குடும்பத்தினரும் எகிப்தின் அரசர்களாக உயர்ந்து புகழ் பூக்க வாழ்ந்தார்கள்.

அரசியல் என்பது சுயநலத்திற்கானதாக ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்டதாக மக்களை நியாயமற்ற முறையில் அடக்கியாள்வதாக இருக்குமென்றால் அந்த அரசியல் எவ்வளவு வல்லாட்சியாக இருந்தாலும் சில நாட்களில் அது அழியும். பிர் அவ்னுடைய அரசியல் இப்படித்தான் முடிவுக்கு வந்தது.

அரசியலில் ஈடுபட நினைக்கிற யாரும் மறந்து விடக்கூடாத பாடம் இது.

மக்களுக்கு இன்னும் ஒரு செய்தி இருக்கிறது
அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுகிற மக்கள் , கொடூரமாக ஆக்கிரமிக்கப் படுபவர்கள், தொல்லைக்கு ஆளாகிறவர்கள் ஒன்று பட்டு ஓரணியில் திரண்டால் - இன்றைக்கு அல்லது நாளை அவர்களுக்கு விடுவு கிடைக்கும். புது வாழ்வு பிறக்கும். யூதர்களுக்கு கிடைத்தது போல.
அல்லாஹ் இந்த ஆஷூரா தினத்தன்று தனது நபிமார்களுக்கும், நல்லடியார்களுக்கும் பாதுகாத்து உதவியதைப் போல நமக்கும், நம் சமுக மக்களுக்கும் எல்லா விதமான நன்மைகளையும், உதவிகளையும் செய்வானாக ஆமீன்.

ஆஷூரா நாளில் விரும்பத்தகாத நிகழ்வுகள்.

ஷீயாக்கள் இந்த ஆஷூரா தினத்தை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள். ஹிஜ்ரீ 61-ம் வருடம்  ஹூசைன் ரலி அவர்களும், அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த 16 நபர்களும், அநீதமாக கர்பலா களத்தில் கொலை செய்யப்பட்ட தாங்க முடியாத வடுவை ஏற்படுத்தி விட்ட அந்த கோர நிகழ்வும் அல்லாஹ்வின் நாட்டப்படி இதே நாளில் நிகழ்ந்து விட்டமையால் இந்த நாளை துக்க நாளாக அனுசரித்து, தேவையற்ற சடங்குகளை கடைபிடிக்கிறார்கள்.  இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அதற்கு முன்பு ஹிஜ்ரீ 40-ம் வருடம்
ஹூசைன் ரலி அவர்களின் தந்தை ஹஜ்ரத் அலீ ரலி அவர்கள் ஷஹீதாக்கப் பட்ட நிகழ்வையே நாம் துக்க நாளாக அனுசரிப்பதில்லை. அப்படி நாம் செய்ய துவங்கினால் அது அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொள்ளாமல் முறையீடு செய்வதாகி விடும். அல்லாஹ் அந்த நிலையிலிருந்து நம்மை பாதுகாப்பானாக ஆமீன்.

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்