அன்புடையீர் :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது முஸ்லீம் சமுதாயத்தில் இன்று பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்றாக “பைத்துல்மால்” காணப்படுகின்றது. இஸ்லாமிய வரலாற்றலில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனமே “பைத்துல்மால்” ஆகும். “பைத்துல்மால்” என்ற சொல் பிரயோகம் முதன் முதலில் முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களது காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது.
அறம் தர்மம் ஜக்காத் செய்வது இஸ்லாமிய கடமைகளின் ஒன்று. அதனை செம்மையாக நிhறைவேற்றும் முகமாகவும் நமது சமுதாயத்தை வட்டி என்ற பாவத்திலிருந்து காப்பற்ற நம்மீது பொறுப்பாக உள்ளது.
தற்காலத்தில் மனிதனுடய பொருளாதாரத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. திடீரென அவர்களுக்கு ஏற்படும் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருளாதார வசதி இல்லாத போது அவர்கள் வட்டிக் கடைகளை நாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றார்கள். எனவே அவர்களை வட்டி என்ற பாவத்திலிருந்து விடுவிப்பதற்கு பைத்துல்மால் போன்ற நிறுவனங்கள் அவசியம் என்பதை உணர்ந்து நமதூர் சமூக அக்கறை கொண்ட 10 ulama
சிந்தனையாளர்களால் கடந்த 2005 ஆம் ஆண்டு “ அல்ஹுதாபைத்துல்மால” உருவாக்கபட்டது.
நமது “அல்ஹுதாபைத்துல்மால்”
நமதூர் மக்களை வட்டி கொடுக்கும் பெரும் பாவத்திலிருந்து பாதுகாப்பதின் அடிப்படையில் இதுவரை பெருந்தொகையை வட்டியில்லா கடனாக கொடுத்து வசூல் செய்துவருகிறது. மேலும் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் அரசு பதிவு(REGISTER) பணி உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.
எனவே நமதூர் சகோதரர்கள் விரைந்து உறுப்பினர்களாக சேர்ந்து நமது “ அல்ஹுதாபைத்துல்மால்”;; சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இணைuந்து செயல்ப்பட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அல்லாஹ் நம் அனைவர்களையும் ஒற்றுமையாகவும் தானதர்மம் செய்யக்கூடியவர்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக ஆமீன். மேலும் நம்முடைய அல்ஹுதாபைத்துல்மால் மென்மேலும் சிறந்து வளர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் அல்ஹுதா பைத்துல்மால் நிர்வாகக்குழு
AL HUDA BAITULMAAL.BLOGSPOT. COM