அல்சர் எவ்வாறு உண்டாகிறது
https://youtu.be/ZgfGtJ8VBXM
அல்சர் என்றால் புண், காயம் என்று அர்த்தம். உடலில் எங்கு புண் இருந்தாலும் அது அல்சர் என்று தான் அழைக்கப்படும். வயிற்றில் ஏற்படும் புண்ணிற்கு கேஸ்ட்ரிக் அல்சர் அல்லது பெப்டிக் அல்சர் என்று பெயர்.
சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால் தான் அல்சர் ஏற்படுகிறது என்று மக்களிடத்தில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இது தவறான கருத்தாகும்.
வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் கோடிக் கணக்கானவர்கள் சரியான நேரத்தில் சாப்பிட முடிவதில்லை. நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பதால் தான் அல்சர் வருகிறது என்பது உண்மையானால் இவர்கள் அனைவருக்கும் அல்சர் வந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. எனவே அதில் உண்மையில்லை.
அல்சர் எவ்வாறு ஏற்படுகிறது?
நாம் உண்ணும் உணவு சரியாகவும், முறையாகவும் ஜீரணிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு ஜீரணமாகாமல் அதிக நேரம் வயிற்றில் தங்கும் உணவுகளால் செரிமான கோளாறு ஏற்படுகிறது. ஜீரணக் கோளாரின் ஆரம்ப நிலையில் ஏப்பம், வாயு தொல்லை, பசிக் குறைவு, உணவு எதுகளித்தல், வயிற்று உப்புசம், வயிற்று பொருமல் போன்ற உபாதைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
அப்போது Gelusil, Digene போன்ற மருந்துகளையும், Soda, Cola போன்ற பானங்களையும் கொண்டு நாம் உண்ட உணவை ஜீரணிக்க வைக்க முயற்சிக்கின்றோம். இது மிகவும் பாதகமான செயலாகும். காரணம் ஏற்கனவே செரிமான சக்தியை இழந்து பலவீனமாக இருக்கும் வயிற்றை, மருந்துகளை கொண்டு மேலும் அடித்து துன்புறுத்தி வேலை வாங்குவது போன்றதாகும். இவை அனைத்தும் ஆரம்ப காலத்தில் சற்று நன்றாக இருப்பதாக தெரியும்.
இவ்வாறு மருந்துகளை தொடர்சியாக உட்கொள்ளும் போது நாளடைவில் அது அல்சர் அல்லது கேன்ஸராக மாறக்கூடும்.
காரம் சாப்பிடுவதால் தான் அல்சர் வரும் என்று மக்களிடத்தில் பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. அது முற்றிலும் தவறானது. அல்சர் உண்டாவதற்கு
காரம் காரணமல்ல.
செரிமான சக்தி குறைவின் காரணமாக, நாம் சாப்பிட்ட உணவுகள் அதிக நேரம் வயிற்றில் தங்கும் போது அது கெட்டுப்போய் நொதித்தல் ஏற்பட்டு புளிக்க ஆரம்பிக்கிறது.
பொதுவாக புளிப்பு அரிக்கும் தன்மையை கொண்டது. உணவில் சேர்ந்துள்ள புளிப்பு வயிற்றின் உட்புறச் சுவரில் படிந்திருக்கும் ஜவ்வு போன்ற படலத்தை (Mucus membrane) அரிக்க ஆரம்பிக்கிறது. பிறகு அது புண்ணாக மாறுகிறது. எனவே அல்சர் ஏற்பட 'காரம்' காரணமல்ல. புளிப்பு (Acid) உணவுகள் தான் காரணம்.
அடிக்கடி தலைவலி, ஜுரம், உடல் வலி என்று மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, டீ, காபி, குளிர் பானங்கள் குடித்தல், எண்ணெயில் முக்கி பொறித்த வடை, பஜ்ஜி, முறுக்கு, அப்பளம், ஊறுகாய் போன்றவைகளை சாப்பிடுதல், மற்றும் புளிப்பு தன்மையான இட்லி, தோசைகளை சாப்பிடுவது அல்சரை அதிகப்படுத்தும்.
மது அருந்துதல், புகை பிடித்தல், இரசாயனம் கலந்த பாஸ்ட் புட், ஜங்க் புட், பாக்கெட், டின்களில் அடைக்கப்பட்ட ரெடிமேட் உணவுகள் போன்றவைகளை சாப்பிடுவது அல்சரை கேன்ஸ்ராக மாற்றக் கூடும்.
அல்சர் உள்ளவர்கள்
காரம் சாப்பிட்டால் வயிற்றில் வலி ஏற்படுகிறது என்று சொல்வார்கள்.
உதாரணமாக நீங்கள் கீழே விழுந்து கை, கால்கள் தேய்ந்து சிராய்ப்பு ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அதுபோலதான் அல்சர் நோயாளிகளுக்கும் வயிற்றில் புண் இருக்கும். அவர்கள் சாப்பிடும் உணவில் உள்ள காரம் ஏற்கனவே உருவான அல்சர் புண்ணில் படும்போது சற்று எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும்.
மேலும் பால், தயிர் சாப்பிட்டால் அல்சருக்கு நல்லது என்றும் மக்களிடத்தில் பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது. இதுவும் தவறானது. பாலும் தயிரும் புளிப்பு தன்மையை கொண்டது. பால் வயிற்றுக்கு சென்றவுடன் புளிக்க ஆரம்பித்துவிடும். பால் அதன் தன்மையிலிருந்து மாறி புளித்து கெட்டுப் போகும்போது தான் அது தயிராக மாறுகிறது. மேலும் இவைகளில் அதிகமாக கால்ஷியம் உள்ளது. கால்ஷியம் என்றால் சுண்ணாம்பு சத்து. காயத்தில் சுண்ணாம்பு படும்போது ஏற்கனவே உள்ள அல்சரில் மேலும் அது புண்ணை ஏற்படுத்தும்.
எனவே அல்சர் உள்ளவர்கள் பால், தயிர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் புளிப்பான பழ வகைகள், இனிப்பில்லாத இளநீர், வாழைப்பழம் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.
வயிற்றுக்கு இரண்டு விதமான செயல்பாடுகள் உள்ளன. ஒன்று உணவுகளை செரிக்க வைத்தல். இரண்டாவது மன அமைதியை ஏற்படுத்துதல்.
பரபரப்பான வேலை சூழ்நிலையில் உள்ளவர்கள், நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள், தூக்கம் குறைவு, Day - Night என மாறிமாறி வேலை செய்பவர்கள் ஆகியவர்களுக்கு பசி வந்தவுடன் உணவு உண்ணக்கூடிய சூழ்நிலை இல்லையென்றால் கைக்கால்கள் நடுங்கும், படபடப்பு அதிகமாகும், மயக்கம் ஏற்படும், எளிதில் எரிச்சலடைவார்கள். அவர்கள் உணவை கண்டவுடன் பரபரப்பின் காரணமாக அவசர அவசரமாக சாப்பிடுவார்கள். இந்நிலையில் சாப்பிடும் உணவு அரைகுறையாக ஜீரணிக்கப்படுவதால் பல வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
பசி இல்லாமலும்,மன அமைதி இல்லாத போதும் உண்ணப்படும் அனைத்து உணவுகளும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகும். எனவே உணவு உண்ணும் போது அமைதியும், நிதானமும் தேவை.
அல்சர் நோயாளிகள் எப்போதும் வயிறு முட்ட உணவை உண்ணக் கூடாது.
அரை வயிறு உணவாக 3 வேலைக்கு பதிலாக 4, 5 வேலையாக பிரித்து உண்ணலாம். அப்பளம், முறுக்கு, பிஸ்கட் போன்ற மொறு மொறுப்பான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
நீர் நிறைந்த காய்களை சாப்பிட வேண்டும்.
இனிப்பான பழவகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. இனிப்பு சுவை வயிற்றை குணப்படுத்தும்.
கொஞ்சம் மனதக்காளி கீரையை விதையுடன் எடுத்து, அத்துடன் சிறிது கசகசாவையும், ஒரு துண்டு தேங்காவும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அந்த ஜூசை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் 15, 20 நாட்களில் அல்சர் புண் ஆறிவிடும்.
உணவுடன் தினமும் அகத்தி கீரையை சேர்த்துக் கொள்வது நல்லது. இதற்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது.
வயிற்றில் வலி ஏற்பட்டால் கொஞ்சம் சர்க்கரையையோ அல்லது உப்பையோ வாயில் போட்டு சுவைத்தால் சிறிது நேரத்தில் வலி மறைந்து விடும்.
பசிக்கும் போது உங்கள் செரிமான சக்திக்கு ஏற்றாவாறு உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது அல்சர் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் குணமாகும்.
எந்த இயற்கை முறை மருத்துவத்தில் மருந்து எடுத்து கொண்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மருந்தை நிறுத்தி உங்கள் வாழ்க்கை முறையில் பின்பற்றப்படும் உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து பின்பற்றினால் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் அல்சர் எனப்படும் குன்மம் முற்றிலும் குணமாகும் இன்ஷாஅல்லாஹ்.
மேலும் ஆலோசனை பெற
New life nature health centre
Dr abdul jaleel
📞8807224995