வியாழன், அக்டோபர் 13, 2016

சிவில் சட்டம்,

ஃபாஸிச மத்திய அரசின் முஸ்லிம் விரோதப்போக்கும்.... முஸ்லிம் சமூகத்தின் அலட்சியப்போக்கும்…


சர்வதேச அளவில் தற்போது முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான நெருக்கடிகளை, தடைகளை, விமர்சனங்களை எதிர் கொண்டு வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் புர்கா, பர்தா அணியத்தடை, மேற்கத்திய நாடுகளின் சிலதில் தாடி வைப்பதற்குத் தடை, இன்னும் சில நாடுகளில் பள்ளிவாசல்கள் கட்ட தடை, இன்னும் சில நாடுகளில் இஸ்லாமியப் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், நடத்தத் தடை என பல்வேறு நெருக்கடிகள்.

இன்றல்ல, நேற்றல்ல இப்பிரபஞ்சத்தில் ஓரிறைக் கொள்கையை எடுத்தியம்ப ஆரம்பித்த காலம் முதற்கொண்டே போராட்ட்டக் களங்களை இறைத்தூதர்களும், அவர்களைக் கொண்டு நம்பிக்கை கொண்ட முஸ்லிம் சமூகங்களும் சந்தித்தே வந்துள்ளனர்.

இறுதியாக, முஸ்லிம் சமூகமே வல்லோனின் வியத்தகு சான்றுகள் மற்றும் வல்லமை, ஆகிய உதவிகளின் துணை கொண்டு வெற்றி வாகையும் சூடியுள்ளனர்.

சுதந்திர இந்தியாவிற்குப் பின்னர் இந்திய தேசத்திலும் முஸ்லிம் சமூகம் தொடர்படியாக பல்வேறு நெருக்கடிகளை, விமர்சனங்களை சந்தித்து வந்து கொண்டிருக்கின்றது.

சமீபகாலமாக, இந்த தேசத்தின் அரசு, சட்டம், நீதி சார்ந்த அத்துனை முனைகளில் இருந்தும் இஸ்லாமியச் சமூகம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது.

உதாரணமாக, மதமாற்றத்தடைச் சட்டம், பசுவதைத்தடைச் சட்டம், மாட்டிறைச்சி உண்ண தடை, ஒட்டகம் குர்பானி கொடுக்க தடை, பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம், கட்டாய யோகா என ஒரு நீண்ட பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதன் தொடர்ச்சியாக, “உத்தரகண்ட் மாநிலத்தைச் சார்ந்த சாயிரா பானு, மற்றும் ஜெய்ப்பூர், கொல்கத்தா நகரங்களைச் சார்ந்த 2 பெண்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்த போது, முஸ்லிம் அமைப்புகள் “முஸ்லிம் தனி நபர் சட்டம், புனித குர்ஆன் மற்றும் ஷரீஅத் சட்டத்தின் மூலமாக வடிவமைக்கப்பட்டது. சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இவற்றை மாற்ற முடியாது. நீதிமன்றங்கள் இதில் தலையிட அதிகாரமில்லை” என பதில் அளித்திருந்தன.

இந்நிலையில், மத்தியில் ஆளும் ஃபாஸிச பா.ஜ.க அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில் “தலாக் நடைமுறையை மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக கருத வேண்டியதில்லை. தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டமே பிரதானமாக திகழும். இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாது” எனக் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே, தலாக் நடைமுறையை ஒழித்துக் கட்டுவது மற்றும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து, சட்டக்கமிஷன் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது.

                                     ( நன்றி: தமிழ் தி இந்து தின நாளிதழ் )

மத்திய ஃபாஸிச பா.ஜ.க வின் அறிக்கை பல்வேறு குளறுபடிகளையும், முரண்பாடுகளையும் சுமந்து நிற்கின்றது.

1. முஸ்லிம்களின் வழிபாடு என்பது வேறு.
2. முஸ்லிம்களின் வாழ்க்கை நெறி என்பது வேறு.
3.  உலகளாவிய ஒரு மார்க்கத்தின் சட்டங்கள் குறித்து அந்த மார்க்கத்திற்கு சற்றும் தொடர்பில்லாத மக்களிடம் கருத்தும், அபிப்பிராயமும் கேட்க முனைந்திருப்பது.
4. மதச் சார்பற்ற நாட்டில் மத சம்பந்தப்பட்ட அம்சங்களுக்கு இடமில்லை.
5. பாலினபாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தைப் பற்றிய தெளிவான பார்வையோ, இஸ்லாம் சம்பந்தப்பட்ட அடிப்படை புரிதலோ இல்லாமல் முழுக்க, முழுக்க சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் குரல்வளையை நெறிப்பதற்காகவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
வாருங்கள்! ஃபாஸிச பா.ஜ.க வின் (அறிக்கையின்) முகத்திரையை கிழித்து, மக்கள் மன்றத்தின் முன்னர் குளறுபடிகளையும், முரண்பாடுகளையும் தெளிவு படுத்துவோம்!

1. ஃபாஸிச பா.ஜ.க அரசு தாக்கல் செய்திருக்கிற அறிக்கையில் ”அரசியலமைப்புச் சட்டமே பிரதானம் என்றும் மதச் சார்பற்ற நாட்டில் மத சம்பந்தப்பட்ட அம்சங்களுக்கு இடமில்லை என்றும் முரண்பாடான தகவல்களை தந்திருக்கின்றது.

அரசியலமைப்புச் சட்டம் கூறுவதென்ன?....

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முன்னுரையில் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் “  The seven fundamental rights recognized by the Indian constitution are: 1. Right to equality   2. Right to freedom  3. Right against exploitation   4.Right to freedom of religion 5. Cultural and Educational rights  6. Right to constitutional remedies  7. Right to independence, privacy and security”   சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சமய உரிமை, கல்வி, கலாச்சார உரிமை, சமநீதி, தனிமனித பாதுகாப்பு மற்றும் சுதந்திர உரிமை, அடக்குமுறைக்கு எதிராக அணுகும் முறை. ஆகிய ஏழு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Right to equality is an important right provided for in Articles 14, 15, 16, 17 and 18 of the constitution. It is the principal foundation of all other rights and liberties, and guarantees
The Constitution of India contains the right to freedom, given in articles 19, 20, 21, 21A and 22, with the view of guaranteeing individual rights that were considered vital by the framers of the constitution.
Right to freedom of religion, covered in Articles 25, 26, 27 and 28, provides religious freedom to all citizens of India. The objective of this right is to sustain the principle of secularism in India. According to the Constitution, all religions are equal before the State and no religion shall be given preference over the other. Citizens are free to preach, practice and propagate any religion of their choice.
As India is a country of many languages, religions, and cultures, the Constitution provides special measures, in Articles 29 and 30, to protect the rights of the minorities. Any community that has a language and a script of its own has the right to conserve and develop it. No citizen can be discriminated against for admission in State or State aided institutions
Right to constitutional remedies [Article 32 to 35] empowers the citizens to move a court of law in case of any denial of the fundamental rights. For instance, in case of imprisonment, the citizen can ask the court to see if it is according to the provisions of the law of the country. If the court finds that it is not, the person will have to be freed. This procedure of asking the courts to preserve or safeguard the citizens' fundamental rights can be done in various ways. The courts can issue various kinds of writs. These writs are habeas corpus, mandamus, prohibition, quo warranto and certiorari. When a national or state emergency is declared, this right is suspended by the central government.
இது தவிர்த்து அரசியல் சாசனத்தின் பல பிரிவுகள் சமய ரீதியிலான பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகும் கூறுகின்றன. மேற்கூறிய ஆங்கில மூலத்தில் சமத்துவ உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 14 முதல் 18 வரையிலும், சுதந்திர உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 19 முதல் 22 வரையிலும், சமய உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 25 முதல் 28 வரையிலும், கல்வி, கலாச்சார உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 29 மற்றும் 30 –ம், சமநீதி குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 32 முதல் 35 வரையிலும் இவைகள் விளக்கப் பட்டிருக்கின்றன.

இன்னும், சில உரிமைகளும் வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் சாசனம் மற்றும் அமைப்புச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிவு 25: இந்திய அரசியலமைப்பு சட்டம் - 1950: இந்திய நாட்டில் வாழும் அனைவருக்கம் எந்த சமயத்தையும் தழுவவும், தழுவியபடி வாழவும், பரப்பவும் உரிமை உண்டு. ஆனால் பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நல வாழ்வு, ஆகியவற்றிற்கு பங்கம் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிரிவு-51 அ : இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950: இந்தியாவில் வாழக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் தனது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மதித்துப் பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்.
பிரிவு 29:1 : இந்திய அரசியல் சாசனம் பகுதி 3, அடிப்படை உரிமைகள், 1950: இந்தியாவின் ஆட்சிப்பரப்பில் வாழக்கூடிய மக்கள் அவர்களின் மொழி, பண்பாடு, போன்றவை சிதையாமல் பாதுகாத்து வாழ உரிமை உள்ளவர்கள்.
பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது.
பிரிவு 3, ஐ. நா சபை மனித உரிமைப்பிரகடனம், 1948 ஒவ்வொருவரும் தாங்கள் உயிர் வாழ்வதற்கும், தங்களது சுதந்திரத்திற்கும் மற்றும் பாதுகாப்பிற்கும் உரிமை உள்ளவர்கள்.
இந்திய அரசியல் சாசனம் மற்றும் அரசியலைப்புச் சட்டங்கள் வழங்கியிருக்கும் உரிமைகளின் படி முஸ்லிம் சமூகம் தலாக், மற்றும் திருமணம், சொத்து சம்பந்தமாக இஸ்லாமிய சமயத்தின் அடிப்படையில் வாழ்ந்து வருவது எப்படி தவறான, பிழையான ஒன்றாகும்.

2. பாலின பாகுபாட்டை இஸ்லாம் ஊக்குவிக்கின்றதா?....

مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ()

“ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எவர் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ, அவர்களை (இவ்வுலகில்) மணமான வாழ்வு வாழச்செய்வோம். மேலும், (மறுமையில்) அவர்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கூலி வழங்குவோம்.”
                                                                                                                               (அல்குர்ஆன்; 16:97)

وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ()

 ”கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவணங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் நிரந்தரமாய் தங்கி வாழ்வார்கள்.

 மேலும், அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக உயர்வான அல்லாஹ்வின் திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும் இதுவே மாபெரும் வெற்றியாகும்.”
                                                                                                                                  (அல்குர்ஆன்; 9:72)

إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

            ”ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன் பணிபவர்களாகவும், தர்ம்ம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களின் மறைவிடங்களை பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்பவர்களாகவும் இருக்கின்றார்களோ நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்காக மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.”
                                                                                                                                    (அல்குர்ஆன்; 33:35)

إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ ()

“ ஆண்கள் மற்றும் பெண்களிலிருந்து எவர்கள் ஸதகா – தான தர்மங்கள் வழங்குபவர்களாய் இருக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் அளித்தார்களோ, அவர்களுக்கு பன்மடங்கு பகரம் வழங்கப்படும். அவர்களுக்கு கண்ணியமான கூலியும் உண்டு .”
(அல்குர்ஆன்; 57:18)

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ ()

“ ( நபியே! ) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்களின் பார்வைகளைப் பேணிக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.”                               ( அல்குர்ஆன்: 24:30 )

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ

“மேலும், ( நபியே! ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்! தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும்!                           ( அல்குர்ஆன்: 24:31 )

والسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைகளுக்கான கூலியாகும். மேலும், அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்.”                                     (அல்குர்ஆன்:5:38)

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ

“திருமணமாகா விபச்சாரி, விபச்சாரகன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் தண்டனையாக நூறு கசையடி அடியுங்கள்”.                    ( அல்குர்ஆன்: 24: 2 )

கற்பொழுக்கமுள்ள  விஷயங்கள் ஆகட்டும்,  ஆன்மீக வழிபாடாகட்டும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இஸ்லாம் எவ்வித பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.

மேலும், சமயக்கடமைகள் ஆகட்டும்,   சுமத்தப்பட்ட பொறுப்புகளாகட்டும் அங்கேயும் இஸ்லாம் எந்தவிதமான பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.

குற்றவியல் தண்டனைகளில் ஆண், பெண் இருவருக்கும் சமமான தண்டனை, ஆணுக்கு தலாக் என்றால் பெண்ணுக்கு ஃகுலா என்றும் சமமாகவே உரிமைகள் வழங்கி பாகுபாட்டை ஏற்படுத்தவில்லை.

 மேலும், அல்லாஹ் வழங்குகின்ற இவ்வுலக பாக்கியங்களும் மறு உலக சுவனமும் ஆண்,  பெண் என்ற பாகுபாட்டினைக் கொண்டும் கொடுக்கப்படுவதில்லை.

மாறாக,  நல்லறங்களைச் செய்கிற முஃமினாக இருக்க வேண்டும் என்றே இஸ்லாம் சொல்கின்றது என்பதையே இவ்வசனங்கள் அனைத்தும் ஒரு சேர நமக்கு உணர்த்துகின்றன.

ஆகவே, இஸ்லாமிய வழிகாட்டுதல்கள், சட்டங்கள் பாலின பாகுபாட்டை உண்டு பண்ணுகின்றது என்கிற குற்றச்சாட்டு மிகவும் தவறானதும் பிழையானதும், இட்டுக்கட்டப்பட்டதும் ஆகும்.

3. முஸ்லிம்களின் வழிபாடும், வாழ்க்கை நெறியும் வெவ்வேறானதா?..

இஸ்லாம் என்பது  தத்துவங்களின் தொகுப்புகள் என்றோ, அல்லது  சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், வழிபாடுகளையும், கடைப்பிடிக்கச் சொல்லும்  சமய அமைப்பு என்றோ கூறிட இயலாது.

மாறாக,  ஒரு முஸ்லிமுடைய இருபத்து நான்கு மணிநேர  வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஓர் உன்னதக் கோட்பாடு. 

நாளொன்றுக்கு ஐந்து வேளைகள் இறைவனைத் தொழுதுவிடுவதனாலோ, வசதி வாய்ப்புகள் வருகிற போது ஹஜ் செய்வதாலோ, வருடத்திற்கு முப்பது நாள் பட்டினி கிடந்து நோன்பு நோற்று விடுவதோலோ மட்டும் ஒருவர் உண்மை முஸ்லிமாகிவிட முடியாது.

பிறப்பு முதல் இறப்புவரை, காலை எழுந்தது முதல் இரவில் உறங்கும்வரை மனிதனின் எல்லாப் பருவங்களிலும், அவன் எவைகளோடு எல்லாம் தொடர்பு வைத்திருக்கின்றானோ அத்துனை துறைகளிலும், தனிமனித, கூட்டுவாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் உறவுகள், பொதுவாழ்க்கை, அரசியல், அதிகாரம். வியாபாரம், கொடுக்கல், வாங்கல் என வாழ்க்கையில் அங்குலம் அங்குலமாக அவன் பின்பற்றி ஒழுக வேண்டிய நடைமுறைகள், குணநலன்கள் அடங்கிய வாழ்க்கை நெறியே இஸ்லாம்.

அல்குர்ஆன் ஒற்றை வசனத்தில் இப்படிக் கூறும்:

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ()

“நிச்சயமாக! என்னுடைய தொழுகையும், என்னுடைய இதர வணக்கமும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அனைத்துலகங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவையாகும்”.                           ( அல்குர்ஆன்: 6: 162 )

உதாரணத்திற்கு ஒன்றை குறிப்பிடலாம்.

أخبرنا قبيصة أخبرنا سفيان عن أبي حمزة عن الحسن عن أبي سعيد 
عن النبي صلى الله عليه
 وسلم قال
 التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “உண்மை பேசி, நேர்மையுடனும், நாணயத்துடனும் நடந்து கொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் ஆகியோருடன் இருப்பார்.”   ( நூல்: திர்மிதீ )

வியாபாரம் என்பது உலகக்காரியங்களோடு தொடர்புடைய ஒன்று அதில் ஒரு முஸ்லிம் நேர்மையோடும், நாணயத்தோடும் நடந்து கொள்வான் எனில் அவன் மறுமையில் சுவனத்தில் இருப்பான் என்பதோடல்லாமல், மனிதர்களில் புனிதர்களான நபிமார்களோடும், அதற்கடுத்த, அதற்கடுத்த உயர் நிலை முஸ்லிம்களோடு தோழமையோடு இருப்பான் என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறுகின்றார்கள்.

இன்னுமொரு உதாரணத்தை சுட்டிக்காட்டலாம்.

قال رسول اللَّه صلى الله عليه وسلم
 "ثلاثة يرزقون مرافقة الأنبياء: رجل يدفع إليه قاتل وليّه ليقتله فعفى عنه، ورجل عنده أمانة لو يشاء لخانها فيردها إلى من ائتمنه عليها، ورجل كظم غيظه عن أخيه ابتغاء وجه اللَّه"
- المستدرك، ج‏9، ص‏12، حديث 7.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “மூன்று நற்பண்புகளைக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் சுவனத்தில் நபிமார்களுடன் உறவாடிடும் நற்பேற்றை அடைந்து கொள்வார்கள்.

“1. உயிருக்கு உயிர் பழி வாங்கும் உரிமை இருந்தும் சம்பந்தப்பட்ட மனிதரை மன்னித்து விடுபவர்.

2. மோசடி செய்வதற்கு ஆற்றல், அதிகாரம் இருந்தும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தை உரிய முறையில் நிறைவேற்றுபவர்.

3. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தன் சக முஸ்லிம் சகோதரன் ஒருவன் செய்த ரோஷமூட்டும் செயலால் தான் பாதிக்கப்பட்டும் தன் ரோஷத்தை விட்டு விட்டவர்.

                       ( நூல்: முஸ்தத்ரக், பாகம்:9, பக்கம்:12, ஹதீஸ் எண்:7 )

மனிதனின் உணர்வுகளோடும், உணர்ச்சிகளோடும் சம்பந்தப்பட்டிருக்கின்ற பண்புகளை சரி செய்து கொள்கின்ற முஸ்லிம் ஒருவருக்கு கிடைக்கும் சன்மானத்தை மாநபி {ஸல்} அவர்கள் இங்கே கூறுகின்றார்கள்.

எப்படி, வணக்க வழிபாடுகளுக்கு சுவர்க்கம் கிடைக்குமோ, அது போன்று ஒரு முஸ்லிமிடம் இடம் பெற்றிருக்கும் குண நலன்களுக்கும், பண்பாடுகளுக்கும் சுவர்க்கம் பரிசாக கிடைக்கும் என மாநபி {ஸல்} அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

எனவே, முஸ்லிம்களுக்கு வழிபாடு என்பது வேறு, வாழ்க்கை நெறி என்பது வேறு என்று பிளவு படுத்த வேண்டும்.

வாழ்க்கையே வழிபாடாக, வழிபாடே வாழ்க்கையாக ஆக்கிக் கொள்பவர்களே முஸ்லிம்கள் என்பதை ஃபாஸிச வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.