நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
ஞாயிறு, ஜனவரி 22, 2023
இஸ்லாமிய இத்தாவின் முறை,
இத்தா- வேண்டியவைகளும் வேண்டாதவைகளும்
இத்தாவின் வகைகள்:
×××××××××××#×××××××××××
1.தலாக் விடப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் இத்தா இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:228)
2.தங்களின் கணவர்கள் மரணித்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் இத்தா இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:234)
3.மாதவிடாயிலிருந்து நிராசையான பெண்களும், இதுவரை மாதவிடாய் ஏற்படாத பெண்களும் கணவர் தலாக் விட்டுவிட்டால் மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 65:4)
4.கர்ப்பமுடைய பெண்கள் அவர்களின் இத்தா காலம் குழந்தை பெற்றெடுக்கும் வரையுமாகும். (அல்குர்ஆன் 65:4)
குறிப்பு: இத்தாவுயை கால அளவுகளை பிறைக் கணக்கின் அடிப்படையில் சந்திர ஆண்டில் அடிப்படையில் கணக்கிட வேண்டும். ஆங்கிலக் காலண்டரின் அடிப்படையில் கணக்கிடக் கூடாது.
இத்தா வேண்டியவைகளும் வேண்டாதவைகளும்
கணவர் இறந்ததற்காக இத்தா இருக்கும் பெண்கள் அலங்காரத்தை தவிர்க்க வேண்டும். கவர்ச்சியான சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணிவது, வாசனை - எண்ணெய்த் திரவியங்களை பாவிப்பது, கண்ணுக்குச் சுர்மா இடுவது, மருதாணி பூசுவது, நகைகள் அணிவது அனைத்தையும் தவிர்க்க வேண்டும். (மேலும் பார்க்க:புகாரி 5341, 5342, 5343, 5336, 5337)
கணவனின் மரணித்திற்காக 4 மாதங்கள் 10 நாட்களுக்கும் இத்தாவில் காத்திருக்கும் பெண் அந்த கால எல்லை முடியும் வரை மணமுடிக்கக்கூடாது.
கணவன் உயிரோடு இருக்கும்போது கடைபிடித்து வந்த அத்தனை ஆடை அலங்காரங்கள் மற்றும் மேனி அலங்காரங்களையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அவள் தனது கணவனின் இழப்பை எண்ணி வாழ்கிறாள் என்ற நிலையில்தான் இருக்க வேண்டும். சாதரணமான அலங்காரமற்ற ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அதற்காக வெள்ளைப் புடவை மட்டும் அணிந்து சோகத்துடன் தலைவிரி கோலமாக குடும்ப உறவுகளுடனான தொடர்புகளை துண்டித்து கொண்டு தனி அறையில் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதல்ல. அப்படி கட்டளையிப்படவுமில்லை.
இத்தாவுடைய பெண் வெள்ளை புடவை அணிவது கடமையல்ல என்றும் நகம் வெட்டுதல், அக்குள் முடிகள் மர்மஸ்தான முடிகள் கலைதல் தடுக்கப்பட்டவையல்ல. அவை அனுமதிக்கப்பட்டவை என்றும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும், இமாம் இப்னு கைய்யும் (ரஹ்) அவர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.
(நூல்:ஃபத்ஹுல் பாரி9/402,அஸ்ஸாதுல் மஆத் 5/705)
இத்தாவின்போது அலங்காரங்களிலிருந்து இப்பெண் தவிர்ந்து கொள்வதோடு சுத்தமாக ஆரோக்கியமாக அன்றாட நடவடிக்கைகளில் பங்கு பெறக்கூடியவளாக இருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்ட எந்த ஒழுங்குகளையும் தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு விதிக்கப்படவில்லை. அவள் கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்துவதற்கான நிலையில் இருப்பதனால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு சொல்லப்படவில்லை. அன்றாட நடைமுறையில் கணவனோடு தலாக் சொல்லப்பட்ட முன் எப்படி இருந்தாலோ அப்படியே தலாக்குடைய காலத்திலும் இருந்து கொள்ளலாம்.
இத்தா குறித்து மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கைகள்:
வயது போன பெண்கள் 40 நாட்கள் இத்தா இருந்தால் போதும்.
அவர்கள் இருட்டறையில் இருக்க வேண்டும்.
ஆண்பிள்ளைகள், சிறுவர் எவரையும் அப்பெண் பார்க்கவோ பேசவோ கூடாது.
கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் ஆண்பிள்ளை இருக்கலாம் என்பதால் கர்ப்பிணிகளும் அவர்களை பார்க்கக் கூடாது.
வெண்ணிற உடை அணிவது, தலையனை மற்றும் கண்ணாடிக்கு வெண்ணிற உறையை மட்டும் பயன்படுத்துவது.
இத்தா காலத்தில் மட்டும் அந்நிய ஆண்களை பார்க்கக் கூடாது.(பெண் எக்காலத்திலும் அந்நிய ஆண்களை பார்க்கக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் சட்டமாகும்.)
இத்தாவிலுள்ள பெண் அண்டை வீட்டு பெண்களுடன் பேசக்கூடாது.அவர்கள் நோய்வாய்ப்பட்டால் சென்று பார்க்கக் கூடாது.
உறவினர்களில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால்
சென்று நோய் விசாரிக்கக் கூடாது.
நல்ல காரியங்களில் பங்கு கொள்ளக் கூடாது.
மரணித்தவர்களை சென்று பார்க்கக் கூடாது.
நோய்வாய்ப்பட்டால் மருத்துவமனைக்கு செல்லக் கூடாது.
புதிதாக மணம்முடித்த தம்பதிகளை பார்க்க விடாமல் தடுப்பது.
நாட்டு நடப்புகளை அறிய விடாமல் தடுப்பது.
இவ்வாறு பல்வேறு மூடநம்பிக்கைள் பரவி கிடக்கின்றன.இவைகள் அனைத்தும் மாற்று மதத்தவரிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட விஷயங்களாகும்.இவைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்ந சம்மந்தமும் இல்லை.
பார்க்கக் கூடாத ஆண்கள் உண்டா?
ஒரு அந்நிய ஆண்மகனை ஒரு அந்நிய பெண்ணை பருவ வயதை அடைந்த காலத்திலிருந்து தனிமையில் பார்க்கக் கூடாது; பேசக் கூடாது; அந்த இடத்தில் இருக்கக் கூடாது. பேச வேண்டிய தேவை ஏற்பட்டால் மஹ்ரமிய்யத்தான (திருமணம் முடிப்பதற்கு தடுக்கப்பட்டுள்ள முஸ்லிமான) ஒருவரின் முன்னிலையில் பேச வேண்டும். அவசரதேவை கருதி பேச வேண்டி வந்தாலும் ஒழுக்க வரம்புகளை பேணி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இஸ்லாமிய சட்டமே தவிர கணவன் மரணித்த பின் மட்டும் அப்பெண் அந்நிய ஆணை பார்க்கக் கூடாது என்ற சட்டம் கிடையாது.
இத்தாவின் போது திருமணம் பேசலாமா?
இத்தாவில் காத்திருக்கும் அப்பெண்ணுக்கு இத்தா முடியும் முன் திருமணம் பேசக் கூடாது. திருமணம் நிச்சயப்படுத்தக் கூடாது. சாடையாக எடுத்துக் கூறலாம். வேண்டுமானால் மறுமணத்திற்கான அவசியத் தேவைப் பற்றி உணர்த்தலாம்.
(இவ்வாறு இத்தாவில் காத்திருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப் பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் இரகசியமாக அவர்களிடம் திருமணம் பற்றி வாக்குறுதி செய்த கொள்ளாதீர்கள். ஆனால் இதுபற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்.
இன்னும் இத்தாவின் கெடு முடியும் வரை திருமண பந்நத்தைத் தீர்மானித்து விடாதீர்கள். அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 2:235)
தேவை ஏற்படின் வெளியில் செல்லலாமா?
இத்தாவுடைய காலத்திலுள்ள பெண்ணுக்கு மருத்துவ தேவை உட்பட அத்தியாவசிய தேவைகள் ஏற்பட்டால் வெளியில் சென்று இரவு நேரத்திற்கு முன்பாக வந்துவிட வேணடும் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
என் தாயின் சகோதரி தலாக் சொல்லப்பட்ட பெண்ணாவாள். இத்தாவின் போது தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிப்பதற்காக வெளியில் செல்ல விரும்பினாள்.அப்போது நீர் வெளியே செல்லக் கூடாது என ஒரவர் கண்டித்தார். ஆகவே என் தாயின் சகோதரி நபி ஸல் அவர்களிடம் வந்து இது குறித்து வினவினார். அப்போது நபியவர்கள் ஆம்! நீர் சென்று உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக் கொள். ஏனெனில் அதில் கிடைக்கும் வருமானத்தில் நீ தர்மம் செய்யக் கூடும். அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும் என்றார்கள்.
(அறிவிப்பவர்:ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழி நூல்:முஸ்லிம் 2727)
நபிகளாரின் காலத்தின் பின் இமாம்கள் காலத்திலும் இந்த அனுமதி பேணப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஹதீஸின் விளக்கவுரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இமாம்களான இமாம் மாலிக் ரஹ், இமாம் ஷாபி ரஹ், இமாம் அஹ்மத் ரஹ்,இமாம் லைஸ் ரஹ் ஆகியோர் இத்தாவிலுள்ள பெண் பகல் பொழுதில் வெளியில் செல்லலாம் என இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகின்றனர்.
(நூல்:ஷரஹ் முஸ்லிம்)
பெண்கள் வீடுகளில் பாதுகாப்பான சூழலில் தொழிலில் ஈடுபடக்கூடியவர்களாக இருந்தால் உதாரணமாக தையல் தொழில்,கைப்பணித் தொழில் போன்றவற்றில் ஈடுபடக்கூடியவர்களாக இருந்தால் இத்தாவுடைய காலத்திலும் அந்த தொழிலை முறையாக தாரளாமாக செய்யலாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...