“ரமாளான் மாதம் பிறை

17 ல் இஸ்லாத்தில் நடந்த முதல் போர் மற்றும் மிக
*முக்கியமான போர் ” பதுர் போர் ” ஆகும்!*

 முஸ்லிம்களும்
முஸ்லிம்களின்
எதிரிகளும் கி.பி623 ம் ஆண்டு ஹிஜ்ரி 2 ம் வருடம் யுத்த களத்திற்குச் சென்று யுத்த ஆயத்தங்கள் செய்து கொண்டனர். இவ்யுத்தத்தில் கலந்துக் கொண்ட முஸ்லிம்கள் எண்ணிக்கை 313 பேர் என்றும் எதிரிகளின் தொகை ஏறக்குறைய 1000 பேர்

நபித் தோழர்களிடம் போதிய யுத்த சாதனங்கள் இருக்கவில்லை. 70 ஒட்டகங்களும், 60 கேடயங்களும் சுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி), மிக்தாத் இப்னு அஸ்வர் ஆகிய இருவரிடம் மட்டும் இரு குதிரைகள் இருந்தன!

(அப்பிதாயா வன்னிஹாயா).

 எஞ்சிய அனைவரும் காலாட்படையினர் ஆவர். அவர்கள் அனைவரும் தேவையான (போர்த்)தளவாடங்கள்கூட அவர்களிடம் இருக்கவில்லை.

 அன்று எதிரிகள் தொள்ளாயிரத்திலிருந்து ஓராயிரம் பேர்வரை இருந்தனர்.எஃகு வாட்கள், தலைக் கவசங்கள்,நிறைவான தளவாடங்கள், கண்கவர் குதிரைகள், மற்றும் அபரிதமான நகைநட்டுகள் ஆகியவற்றுடன் அவர்கள் வந்திருந்தனர். அப்போது அல்லாஹ் தன் தூதரை கண்ணியப்படுத்தினான்.

உண்மையில் பத்ர் களத்தில் நின்றவர்கள் நோன்பாளிகள், உடலில் பலம் குறைந்தவர்கள், ஆயுத,படைப்பலம் குன்றிய நிலையில் காணப்பட்டனர். ஏதிரிகளான மக்கா காபிர்கள் பலமான போர் வீரர்களுடனும், போர்க் குதிரை,தளபாடங்களுடனும் களம் புகுந்தனர். காபிர்களின் படையுடன் ஒப்பிடும் போது, முஃமின்கள் மூன்றில் ஒன்றாக குறைந்தே இருந்தனர். ஒரு சிறுவனிடம் எடைபோடச் சொன்னால் கூட, முஃமின்கள் படை நிச்சியம் தோற்றுவிடும் என்று எவ்விதத் தயக்கமுமின்றியே கூறிவிடுவான்.

 ‘பத்ர்’ போரின் போது மூவருக்கு ஒரு ஒட்டகம் என்ற அடிப்படையில் பங்கு செய்யப் பட்டது. இதன்படி அபூலுபாபா, அலி, நபி(ஸல்) ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் கொடுக்கப்பட்டது.

 ‘ஒருவர் ஏறிவர, இருவர் நடந்து வர வேண்டும்’ என்று சுழற்சி முறையில் நபி(ஸல்) அவர்கள் நடந்துவர நேரிட்டபோது, இவ்விருவரும் ‘அல்லாஹ்வின் தூதரே நாம் நடந்தே வருகின்றோம். நீங்கள் ஒட்டகத்தில் ஏறி வாருங்கள்’ என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் என்னை விடப் பலமிக்கவர்களுமல்லர்; உங்களைவிட நன்மையைத் தேடிக்கொள்ளும் விடயத்தில் நான் தேவையற்றவனுமல்ல’ எனக் கூறினார்கள்’

(அஹ்மத்).

 முஸ்லிம்களின் முழுமையான நம்பிக்கை அல்லாஹ்வின் மீதே இருக்க வேண்டும். இந்தப் போரின் போது மழை பொழிந்து அது முஸ்லிம்களுக்குச் சாதகமாகவும், காஃபிர் களுக்குப் பாதகமாகவும் அமைந்து, மலக்குகள் முஸ்லிம்களுக்குத் துணையாகப் போரிட்டனர் என்பதை குர்ஆன் குறிப்பிடுகின்றது.

( அல் குர்ஆன் 8:9-12., 8:17 )

* போரும்! நபி அவர்களின் பிராத்தனை இந்த போருக்காக 

யுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள்.

இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்) என நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான்.

(சீரத் இப்னு ஹிஷாம்)

நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்மு) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:09)

 அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பத்ருப்போர் நடைபெற்ற போது யுத்த களத்தில் இருந்த நான் மூன்று முறை நபியின் கூடாரத்துக்கு சென்றேன். நபியவர்கள் ஸஜ்தாவில் இருந்து கொண்டு ‘’யா ஹய்யு யாகய்யூம்’’என்று துஆ செய்ததை நான் கண்டேன். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான்.

(நூல்.பைஹகீ. நஸயி.)

நபியின் துஆவின் காரணமாக பத்ரின் வெற்றி கிடைத்தது மட்டுமல்ல. யுத்தம் தொடங்கும் முன்பாகவே வெற்றியின் நம்பிக்கையும் சொல்லப்பட்டது. எதிரிகளில் யார் கொல்லப்படுவார். எந்த இடத்தில் கொல்லப்படுவார் என்பதும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் போர் தொடங்கும்முன் எங்களிடம் சில குறிப்பிட்ட இடங்களில் கைவைத்து இது இவர் கொல்லப்படும் இடம் என்றார்கள். எதிரிகளில் கொல்லப்பட்ட எவரும் நபி (ஸல்) அவர்கள் கைவைத்து காட்டிய இடத்தை கொஞ்சம் கூட கடக்கவில்லை.

(நூல்: முஸ்லிம். மிஸ்காத். பக்கம்.531)

*பதுர் போரின் நோக்கம் :- 

 அபூ சுப்யான் மிகப் பெரும் வர்த்தகப் பொருட்களுடன் மதீனாவை நெருக்கிய பகுதியால் வருகின்றார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்த வியாபாரக் குழுவை மடக்கிப் பிடிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்கின்றார்கள். அபூ சுப்யான் உளவு பார்த்ததில் நபி(ஸல்) அவர்கள் தன்னைப் பிடிக்கக் கூடும் என்று அறிந்து மக்காவுக்கு செய்தி அனுப்புகின்றார். இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த மக்காவாசிகள் முஸ்லிம்களைப் பூண்டோடு அழிப்பதற்காகப் படையை திரட்டி வருகின்றனர்.

 பின்னர் அபூ சுப்யான் வேறு வழியாக மக்கா சென்றுவிட முஸ்லிம்கள் ஆயுதக்குழுவுடன் மோதும் நிலை ஏற்படுகின்றது!

 நபித் தோழர்கள் வியாபாரக் கோஷ்டியை இலக்கு வைத்தனர். அல்லாஹ் அவர்கள் யுத்தக் குழுவுடன் மோத முடிவுசெய்துவிட்டான். எனவே, இவர்கள் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அவர்களால் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி வியாபாரக் குழுவைப் பிடிக்க முடியவில்லை.

*போரின் ஆரம்ப நிலை : 

 பொழிந்தது மனம்குளிர்ந்தது :

அமைதித் தூக்கம்: முஃமின்களுக்கு அமைதியை வழங்கி, தூக்கத்தைக் கொடுத்து, அவர்களது மனநிலையை அல்லாஹ் உறுதிப்படுத்தினான்.

(விசுவாசிகளே! உங்கள் மனம் மிகக் கூடுதலான எதிரிகளைக் கண்டு பயப்படாது.) அபயம் பெறுவதற்காக அவனிடமிருந்து உங்களுக்கு சிறிய தூக்கத்தை அவன் போட்டான் என்பதை (நினைத்துப் பார்ப்பீர்களா?) (அல்குர்ஆன் 08:11)

மழை மூலம் தூய்மையாக்கல்:அல்லாஹ்வின் அருளால் அன்று மழை பொழிந்து, முஃமின்களின் முகாம் இறுக்கமடைந்தது. காபிர்களின் தங்குமிடம் சகதியாகி,நிலைத்து நிற்க முடியாமல்போனது. மழை மூலமாக முஃமின்களைத் தூய்மையாக்கி பாதங்களை உறுதிப்படுத்தினான்.

(அது சமயம்) உங்களை அதைக் கொண்டு தூய்மைப் படுத்துவதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தை (தீய ஊசலாட்டத்தை)ப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, அதைக் கொண்டு உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான்.
(அல்குர்ஆன் 08:11)

* போர் ஆரம்பம்* நபி (ஸல்) அவர்கள் தனது போராளிகளை அணிவகுக்கச் செய்து யுத்த தர்மங்களைப் போதித்து,அறிவுறுத்தினார்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு, ரமழான் மாதம் பதினேழாம் நாள் காலை பத்ருப் போர் நடைபெற்றது. இஸ்லாமியப் போராளிகள் நோன்புடன், காபிர்கள் ஆபாச களியாட்ட லீலைகளுடனும் களம் புகுந்தனர்.

 அன்றைய போர் முறைப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் புகுவதில்லை. ஆரம்பத்தில் சிலர் மோதிக்கொண்டு, யுத்த வெறியை ஏற்படுத்திக் கொள்வர். இதனடிப்படையில் காபிர்கள் சார்பாக மூவர் வந்தனர். முஸ்லிம்கள் சார்பாக அன்சாரிகள் மூவரை நபிகள் அனுப்பியபோது, எங்களுக்கு நிகரான குறைஷிகளை அனுப்புங்கள் என்றனர். அப்போது நபியவர்கள் உபைதா (ரலி), ஹம்ஸா (ரலி), அலி (ரலி) ஆகிய மூவரையும் அனுப்பினார்கள். இவர்கள் மூவரும் காபிர்களில் வந்த பின்வரும் மூவருடன் போரிட்டு அவர்கள் தலைகளை நிலத்தில் உருட்டினர்.

ஹம்ஸா (ரலி) X உத்பா

உபைதா (ரலி) X வலீத்

அலி (ரலி) X ஷைபா

 இதன் பின்னர் பாரிய யுத்தம் மூண்டது. யார் யாரை வெட்டினர் என்ற குறிப்பு சரியாகக் கிடைக்கவில்லை. களத்தின் நடுவில் புகுந்து போர் புரிந்ததால், அவற்றை சரியாக கூர்ந்து யாராலும் சொல்ல முடியாது. எனினும், அபூஜஹ்லைக் கொலை செய்த முஆத் பின் அஃப்ரா (ரலி ) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) ஆகிய பெயருடைய இரு இளைஞர்கள் என்பதற்கான

(புகாரி 3141)

*போரின் போது அல்லாஹ்வின் உதவி : 

 பத்ரில் கலந்து கொண்ட முஸ்லிம் போராளிகள் குறைவாக இருந்தும்,அல்லாஹ் அவர்களுக்கு காபிர்களைக் குறைவாகக் காண்பித்து, முஃமின்களின் தொகையைக் காபிர்களுக்கு அதிகமாகக் காண்பித்தான்.

 (நபியே! உம்முடைய கனவில் அல்லாஹ் (எண்ணிக்கையில்) அவர்களைக் குறைத்துக் காண்பித்ததையும், (நினைவு கூர்வீராக) அவர்களை (எண்ணிக்கையில்) அதிகபடுத்தி உமக்குக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியமிழந்து யுத்தம் செய்வதைப் பற்றி உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டு இருந்திருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களைப்) பாதுகாத்துவிட்டான். நிச்சியமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிந்தவன்.

 நீங்கள் (இரு படையினரும்) சந்தித்த சமயத்தில் அவர்க(ளுடைய எண்ணிக்கை)களை, உங்கள் கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், உங்க(ளுடைய எண்ணிக்கை)களை அவர்களுடைய கண்களுக்கு அவன் அதிகமாகக் காட்டியதையும் (நினைவு கூருங்கள்.) நடந்தேறப்பட வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக (அல்லாஹ் அவ்வாறு செய்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்) மேலும்,அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் திரும்பக் கொண்டுவரப்படும்.

(அல்குர்ஆன் 08:43-44)

 வானவர்களின் வருகை: அல்லாஹுத்தஆலா, தனது உதவியை நேரடியாக வழங்கினான். வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான். ஆயிரம் வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான்.

 (நபியே!) உமதிரட்சகன்பால்,நிச்சியமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் விசுவாசம் கொண்டோரை உறுதிப்படுத்துங்கள், (என்று கட்டளையிட்டு) நிராகரிப்போருடைய இதயங்களில் திகிலை நான் போட்டுவிடுவேன். ஆகவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துக்களுக்கு மேல் வெட்டுங்கள்ளூ அவர்களின் (உடலில் உள்ள உறுப்புக்களின்) இணைப்புகளைத் துண்டித்து விடுங்கள் என்று (விசுவாசிகளுக்குக் கூறுமாறு வஹீ மூலம்) அறிவித்ததா (நினைத்துப் பார்ப்பீராக!)

(அல்குர்ஆன் 08:12)

 பத்ர் களத்தில் வானவர்கள் இறங்கி கடுமையாகத் தாக்கினார்கள். அவர்களின் தாக்குதலால் பலர் மாண்டனர். புறமுதுகு காட்டியும் ஓடினர்.

 அன்ஸாரிகளில் ஒருவர் அப்பாஸ் (ரலி) (அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை) அவர்களைக் கைது செய்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்த போது, அப்பாஸ் (ரலி),அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சியமாக இவர் என்னை கைது செய்யவில்லை. அழகிய முகமுடைய தலையில் முடியில்லாத ஒருவர் கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்துடைய குதிரையில் வந்து என்னைக் கைது செய்தார். ஆனால்,அவரை இப்போது இக்கூட்டத்தில் நான் பார்க்கவில்லை! என்று கூறினார். அதற்கு, அன்ஸாரித் தோழர் அல்லாஹ்வின் தூதரே! இவரை நான் தான் கைது செய்தேன் என்று கூறினார். நீர் அமைதியாக இரும். கண்ணியமிக்க வானவர் மூலம் அல்லாஹ் (இவரை) உன் கையால் பிடித்துத் தந்துள்ளான் என்று நபி (ரளி) அவர்கள் கூறினார்கள்

(அஹ்மத்)

 (விசுவாசிகளே பத்ருப் போரில் எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொல்லவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (நபியே! விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்த போது (அதனை) நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் (உம் மூலம் அதனை) எறிந்தான். (அதன் மூலம்) அழகான முறையில் விசுவாசிகளுக்கு அருட்கொடையை நல்குவதற்காக (இவ்வாறு அல்லாஹ் செய்தான்.) நிச்சியமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.

(அல்குர்ஆன் 08:17)

 எழுபது
ஒட்டகங்களையும் இரண்டு,குதிரைகளையும் மிகக்
குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313
முஸ்லிம்கள், ஆயுதம்
தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷ்களை
எதிர்த்தனர் என்றால், அந்த முஸ்லிம்களின் நெஞ்சுறுதியையும் இறை .
நம்பிக்கையையும் நாம்
எண்ணிப் பார்க்க
வேண்டும். நோன்பு
வைத்துள்ளோமே
இச்சமயத்தில் எப்படிப்
போராடுவது என்றெல்லாம் அவர்கள் தயங்கிக்
கொண்டிருக்கவில்லை.
இறை நெறிக்கு. ஓர்
ஆபத்து என்ற போது
தங்கள் இன்னுயிர்களைத்
தியாகம் செய்யவும்
அவர்கள்
தயங்கவில்லை.

இறைவன் அளித்த
உயிர் அவனுடைய
மார்க்கத்திற்காக
அவனுடைய வழியிலேயே அர்ப்பணமாவதை
நபிதோழர்கள் பெரும்
பேராய்க் கருதினார்கள்.
இறைநெறியை நிலை
நாட்டுவதையும் அதற்காக உழைப்பதையும் மையமாக கொண்டே அவர்களின்
வாழ்க்கை சுழன்றது. அந்த 313 முஸ்லிம்களின்
வாழ்வோடு எதிர்கால
இஸ்லாத்தின் வாழ்வும்
வளர்ச்சியும் பின்னிப்
பிணைந்திருந்தன. இறைநெறியை அழிக்க முனைந்தோரை எதிர்த்துப்
போரிடும்படி இறை கட்டளை கிடைத்த
உடனேயே அந்த சிறு பான்மை சத்திய குழுவினர் போருக்குத்
தயாராகிவிட்டனர்.
ஆர்ப்பரித்து வரும்
குறைஷ்களின் படையை
எந்த இடத்தில் சென்று
சந்திப்பது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களும்
தோழர்களும் கலந்து
ஆலோசித்தனர். பல போர்த் திட்டங்களை வகுத்தார்கள். போருக்காக இஸ்லாமியப் படைகள் முகாமிடும்
இடங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள்
ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்க முடிவு செய்த போது
நபிதோழர்களில் ஒருவர்
இது இறை அறிவிப்பா
அல்லது தங்களின் சொந்த முடிவா என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ இது இறை அறிவிப்பு அல்ல, என் சொந்த முடிவு’ என்று கூறியதும், அந்த நபி
தோழர் தண்ணீர் வசதியுள்ள மற்றோர் இடத்தைக்
குறிப்பிட்டு அங்கு சென்று முகாமிடலாம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்களும் அத்திட்டத்தை ஏற்றுக்
கொண்டு செயல்பட்டார்கள் அத்துடன் எதிரிகளின் போர் நிலைகளையும்,
தந்திரங்களையும் வேவு
பார்த்து வருவதற்காக ஒற்றர்களையும் அனுப்பி
வைத்தார்கள்.

“பத்ரு” போர் களத்தில்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த
படைத் தளபதியாகச் செயல்பட்டார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ளார்கள். நபி
(ஸல்) அவர்கள் தங்கள்
அறிவை மட்டுமே பெரிதாக எண்ணாமல் அல்லாஹ் வின் மீது முழுமையான
நம்பிக்கை வைத்திருந்தார்கள். இறைவனிடம் இருகையேந்தி இறைஞ்சினார்கள்.

*“இறைவா! எங்களுக்கு
துணை புரிவதாக நீ
அளித்த வாக்கை
நிறைவேற்று சத்திய திற்காகப் போராடும் இந்தச் சிறுகுழு இன்று அழிந்து விட்டால்
இனி உலகில் உன்னை
வணங்கிட எவரும் இருக்க மாட்டார்கள்’

என உருக்கமாக
பிரார்த்தனை செய்தார்கள்.

 அபூபக்கர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின்
அருகில் வந்து,
“அல்லாஹ்வின் உதவி
நமக்கு நிச்சயம் உண்டு;
கலங்காதீர்கள்’ என்று
ஆறுதல் கூறினார். அந்த
சிறுபான்மை சத்தியக்
கூட்டம் “நாங்கள் இறைவனுக்காகவே’ என்று முழுமையாக முன்வந்தபோது
இறைவனும் தன் அருளைப் பொழியத் தொடங்கினான். போர் நடைபெறும்
வேளையில் மழை பெய்வித்தும், வானவர்களை
அனுப்பியும் இன்னும் பல்வேறு வடிவங்களில் அவர்களுக்கு அல்லாஹ் உதவி
செய்தான். அவர்களின்
பாதங்களை வலுப்படுத்தி இறுதி வெற்றியையும் அளித்தான். நபியவர்களோ, நபிதோழர்களோ இந்த வெற்றி குறித்து சிறிதும் கர்வம் கொள்ளக்கூடாது என்பதற்காக இறைவன் பின்வரும் குர்ஆன் வசனத்தை அருளினான். “உண்மையாதெனில், நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை.
அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். மேலும் (நபியே!) நீர் எறிந்தபோது, உண்மையில் எறிந்தது நீரல்லர்; மாறாக அல்லாஹ்தான் எறிந்தான்.

(8:17)

*பத்ருபோரின் குறித்த சில முக்கிய விபரம் : 
1, நபி(ஸல்) நேரடியாக
களத்தில் நின்று
எதிரிகளை சந்தித்த
போர்கள் மொத்தம் 19
ஆகும். (ஜைத் பின் அர்கம்

(ரலி) புகாரி 3949) அதில்
முதலாவது போர் பத்ருதான்

2, பத்ரு போர் ஹிஜ்ரி 2,
ரமளான் மாதத்தில் பிறை 17ல் நடைப் பெற்றது.

3, குர்ஆனின் 3:123முதல்127வரையுள்ள வசனங்கள், 8:7,9-13வரையுள் வசனங்கள் பத்ரு பற்றி பேசுகின்றன. (இப்னு மஸ்வூத்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 3952,3953,3954)

4, பத்ரு போரில் 60க்கும்
கூடுதலான முஹாஜிர்(மக்காவாசி)களும், 240க்கும் கூடுதலான
அன்சாரி(மதினாவாசி)களும் கலந்துக் கொண்டனர். (பரா இப்னு ஆஸிப்(ரலி)

புகாரி 3956,3957,3958)

5, குர்ஆனின் 22:19,20,21 ஆகிய வசனங்கள் பத்ருபோரின் ஆரம்ப நிலை
குறித்து இறக்கப்பட்டது. (அலி(ரலி) அபுதர்(ரலி)
புகாரி 3965,3966,3967)

6, பத்ரு களத்தில் கலந்துக் கொள்ள போர் கவசங்களுடன் ஜிப்ரயீல் (அலை) இறங்கி வருவதை நபி(ஸல்) அறிவிக்கிறார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி)

புகாரி 3995

7, அபூஜஹல் என்ற பெரிய எதிரியை பத்ரில் கொன்ற வர்கள் முஆத், முஅவ்வித்
என்ற இரு சிறுவர்கள். (அனஸ்(ரலி)

புகாரி 3962,3963,3988,4020)

8 ,24 காபிர்களின்
சடலங்கள் பத்ரு போர்
நடந்த இடத்திலுள்ள
கிணற்றில் தூக்கிப்
போடப்பட்டன. ‘நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை
இப்போது உணர்கிறீர்களா..’ என்று நபி(ஸல்)
கேட்டார்கள்.
(ஆய்ஷா(ரலி) அபூதல்ஹா(ரலி) இப்னுஉமர்(ரலி) புகாரி 3976,3980,4026)

9, பத்ரில் கொல்லப்பட்ட ஹாரிஸா பின் சுராகா(ரலி)க்கு ஜன்னத்துல்
ஃபிர்தவ்ஸ் என நபி(ஸல்)
நன்மாராயம்
கூறுகிறார்கள். (அனஸ்(ரலி) புகாரி 3952)

10, ஒரு திருமணத்தின்
போது பத்ரு போரில்
கொல்லப்பட்டவர்களை
புகழ்ந்து சிறுமிகள் தப்ஸ்
அடித்து பாட்டுப்பாடுகிறார்கள். (பின்த் முஅவ்வித் – புகாரி 4001)

இஸ்லாமியர்கள்
தரப்பில் கொல்லப்பட்டு
ஷஹீதானவர்கள் விபரம் :இவர்கள் அனைவரும் முஹாஜிர்கள் : . உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி)

02. ஸஃப்வான் இப்னு
வஹப்(ரலி)
03. துஷ்ஷம்மாஃ இப்னு
அப்து அம்ர்(ரலி)
04 .முஸஜ்ஜஃ இப்ன
ஸாலிஹ்(ரலி)
05.ஆகில் இப்னுல் பக்ரு
(ரலி)
06.உபைதா இப்னுல்
ஹாரித் இப்னு அப்துல்
முத்தலிப்(ரலி)

இவர்கள் அனைவரும் அன்சாரிகள் : 

.உமைர் இப்னுல்

ஹம்மாம்(ரலி)
08 .யஸீது இப்னுல் ஹாரித் இப்னு கைஸ்(ரலி)
09 .அவ்ஃப் இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ (ரலி)
10 .மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ(ரலி)
11 .மஸ்அத் இப்னு ஹத்மா
(ரலி)
12 .முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்(ரலி)
13 .ஹாரிதா இப்னு ஸுராக்கா (ரலி)
14 .ராஃபிஃ இப்னுல் முஅல்லா (ரலி)

மொத்தம் 14 சஹாபா
பெருமக்கள் தன்
இன்னுயிரை தந்து, பத்ரு போரின் வரலாற்றிலும்,
அல்லாஹ்வின் இருப்பிடத்திலும் அழிவில்லா நிலை கொண்டார்கள். இந்த 14
பேரில், முஹாஜிர்கள் (மக்காவாசிகள்) 6 பேர்கள், அன்சாரிகள் (மதினாவாசிகள்) 8 பேர்கள் அடங்கும்.

 காஃபிர்களில் கொல்லப்பட்டவர்களின் விபரம் :- மொத்தமாக 70 பேர் கொல்லப்பட்டு, 70நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்காவில் நபியவர்கள் கஃபாவில்தொழும்போது ஒட்டகக் குடலை கழுத்தில் போட்டு வேதனை படுத்தியவர்கள் பத்ரு களத்தில் வேரறுத்த மரங்களாக சரிந்தனர்.