நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, மே 05, 2018

வேற ஸ்கூல்ல சேர்க்க டிசி தரமாட்டோம்னு பயமுறுத்துறாங்களா?கவலை வேண்டாம்

வேற ஸ்கூல்ல சேர்க்க டிசி தரமாட்டோம்னு பயமுறுத்துறாங்களா?கவலை வேண்டாம்*

பல பள்ளிக் கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் பள்ளிக் கூடங்களில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழ் நிலையில், சில பள்ளிக் கூடங்கள், வேறு பள்ளியில் சேரப் போகும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் T.C தர மறுக்கின்றன.

இல்லையெனில் பெற்றோர்களை டி சி க்காக வேண்டி, பல முறை அலைய விட்டு நோகடிக்கின்றனர்.
இதனால் மனம் ஒப்பவில்லை என்றாலும்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதே பள்ளியில் தொடர்ந்து படிக்க வைக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
பள்ளிக் கூடங்களின் இந்த நெருக்கடியால் பலருக்கு நல்ல கல்வி கிடைக்காமல் போய் விடுகின்றது.

*இனி இந்தக் கவலை வேண்டாம்*

தமிழக அரசு கல்வித் தகவல் மேலாண்மை முறைமை. *Educational Management Information System* என்ற ஒரு இணைய த்தின் மூலம் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் *Unique Emis  எண்* வழங்குகிறது.

ஒரு மாணவர் டி சி இல்லாமல் , இந்த *EMIS எண்* மூலமாக வேறு பள்ளியில் சேரலாம்.

 அவர்கள் சேரும் அந்த புதிய பள்ளியிலிருந்து இந்த மாணவர் ஏற்கனவே பயின்ற அரசு அல்லது தனியார் பள்ளிக்கு இந்த இணைய தளம் வாயிலாக *Online  REQUEST* வேண்டுகோள் அனுப்பப்பட்டு டி சி வழங்க ஏற்பாடு செயப்படும்.இதனை அரசு அதிகாரிகள் கண்காணித்து வருவார்கள்..

*இனி என்ன கவலை ? டி சி இல்லாட்டியும் பரவாயில்ல... நீங்கள் விரும்பும் பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேருங்க. டி சி தானா வரும்.*

சரிங்க... டி சி வாங்கவே முடியலைங்க ..இப்போ என்ன செய்றதுன்னு கேக்குறீங்களா?
உங்க குழந்தைக்கு என்ன வயசாகுதோ அந்த வயசின் அடிப்படையில் நீங்க டி சி இல்லாமலே *RTE ACT* மூலமாக  8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிக் கூடத்துல நேரடியாக சேர்க்கலாம்.

*இனி என்ன கவலை ? நீங்க விரும்பும் பள்ளிக் கூடத்துல உங்க பிள்ளையை படிக்க வைங்க*

BJP

பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்.
-நக்கீரன் இதழ்
1.இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
2.இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?
3.இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
4.இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?
5.இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
6.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
7.இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
8.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?
9.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?
10.இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
11.இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?
12.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை கேட்டிருக்கிறீர்களா?
13.இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?
14.இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில் ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறாரா?
********
இந்த 14 கேள்விகள் இப்போது பரபரப்பாக உலா வருகின்றன. சமூகவலைத்தளங்களில் பரவும் இந்தக் கேள்விகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றவை.
அனைத்து நிகழ்வுகளிலும் பா.ஜ.க. அரசுக்கும், பாஜக ஆட்களுக்கும் தொடர்பு உண்டு.

பிரபல்யமான பதிவுகள்