ஃபித்ரா என்றால் என்ன?
பனித ரமளான் மாதத்தின் இறுதியில் பெருநாள் பிறை பார்த்ததிலிருந்து பெருநாள் தொழுகை க்கு முன்பு வரை கொடுக்கப்டும் தர்மத்திற்கு ஃபித்ரா என்று கூறப்படும்.
*2.சதகத்துல் ஃபித்ரின்* *அளவு* (ஒரு நபருக்கு)
*ஹனபி* : 1 கிலோ 635 கிராம் கோதுமை அல்லது அதன் கிரயம் 90 ருபாய் கொடுக்க வேண்டும் அதிகமாக கொடுத்தாலும் கூடும்
*ஷாஃபி* :2 கிலோ 400 கிராம் அரிசி அல்லது கோதுமை *( கிரயம்* கொடுக்க கூடாது
*சதகத்துல் ஃபித்ரு*
*நபர் ஒருவருக்கு ....* *90ருபாய்*
நோன்பு நோற்றவர்,நோற்க்காதவர், சிறியவர்,பெரியவர் ஆண்கள், பெண்கள்,குழந்தைகள்,வயோதிகர்கள் *என* *அனைவருக்காகவும் ஜகாத் கடமையானவர்கள் கொடுக்க வேண்டும்*
சதகத்துல் ஃபித்ரு
தர்மம் கொடுப்பதால்
ஏழைகள் பெருநாளை மிகிழ்ச்சியோடு கொண்டாட உதவியாக ஆகும்
சதகத்துல் ஃபித்ரு
தர்மம் கொடுப்பதால்
நமது நோன்பில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டிருந்தால் அந்த குறைகளை நீக்கி விடும்
*பெருநாள் பிறை பார்த்தது முதல் பெருநாள் தொழுகைக்கு* *முன்பு வரை* கொடுக்க வேண்டும் .
அவசியத் தேவை ஏற்பட்டால் முன் கூட்டியே கொடுக்கலாம்.
அனைவரின் ஃபித்ராவையும் ஒருவருக்கே கொடுக்கலாம் அல்லது பலருக்கும் பிரித்தும் கொடுக்கலாம்
எனவே உங்கள் தர்மத்தை
நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களோ ஏழைகளுக்கு உங்கள் கையாலேயே வழங்குங்கள் அவர் இவர் என எவரிடமும் கொடுத்து கொடுக்க சொல்லாதீர்கள்
*நமது தர்மத்தை நாமே கொடுப்பதே சிறப்பாகும்* *மற்றவர்களிடம் ஒப்படைப்பதை விட* .
முனாவலத்துல் மிஸ்கீனி துத்ஃபிவு கழபர் ரப்பி
வதத்ஃபவு மீத்ததஸ் ஸுஇ
ஏழைக்கு தன் கையால் தர்மம் செய்வதால் ரப்பின் (அல்லாஹ்) கோபம் அணைகிறது
கெட்ட மரணத்தை தடுக்கிறது என நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்
உங்கள் தர்மங்களுக்கு அதிக நன்மை வேண்டுமென்றால் உங்கள் உறவினர்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்குங்கள்
அடுத்து உங்கள் பக்கத்து வீட்டு ஏழைகள்
உங்கள் தெருவில் வசிக்கும் ஏழைகள்
உங்கள் மஹல்லாவில் வசிக்கும் ஏழைகளுக்கு வழங்குங்கள் அதுவே சிறந்த தர்மமாகும்
இன்று செவ்வாய் இரவு பிறை 29 இந்த வருடத்தின் புனித ரமளான் மாதத்தின் கடைசி ஒற்றைப்படை இரவாகும்
கடைசி இரவாகவும் இருக்கலாம் எனவே
அதிகமாக அமல் செய்யுங்கள்
நல் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்
யாஅல்லாஹ்!
கிருபையாளனே!!
புனித ரமளானை தந்து நல்லமல் செய்திட அருள் புரிந்தவனே !!! உனக்கே எல்லா புகழும் நன்றியும் உரித்தாகட்டுடமாக
இந்த ரமளானை எங்களுக்கு கடைசி ரமளானாக ஆக்கி விடாதே அல்லாஹ்வே!
இன்னும் அதிகமான ரமளானை அடைந்து இதை விட அதிக அமல் செய்திட அருள் புரிவாயாக ஆமீன்
யாஅல்லாஹ்!
கிருபையாளனே!!
புனித ரமளானை தந்து நல்லமல் செய்திட அருள் புரிந்தவனே !!! உனக்கே எல்லா புகழும் நன்றியும் உரித்தாகட்டுமாக
இந்த ரமளானை எங்களுக்கு கடைசி ரமளானாக ஆக்கி விடாதே அல்லாஹ்வே!
இன்னும் அதிகமான ரமளானை அடைந்து இதை விட அதிக அமல் செய்திட அருள் புரிவாயாக ஆமீன்
அல்லாஹ்வே !
அன்பாளனே !!
கருனையாளனே !!
இந்த புனித ரமளான் மாதத்தில்
இந்த மாதத்திற்கோ...
நோன்பிற்கோ...
நோன்பாளிகளுக்கோ...ஏதேனும் கண்ணிய குறைவாக நடந்திருந்தால் எங்களை மன்னித்தருள்வாக
இப்புனித ரமளானில்
யாஅல்லாஹ்! நீ யாருக்கெல்லாம் உனது ரஹ்மத் என்னும் அருளை வழங்கினாயோ மஃபிரத் என்னும் மன்னிப்பை வழங்கினாயோ
நரகிலிருந்து யாரையெல்லாம் விடுதலை செய்தாயோ அவர்களில் எங்களையும் சேர்த்துக்கொள்வாயாக ஆமீன்