ஒரு நாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் தம் தோழர்களுடன் அமர்ந்து கொண்டு இருக்கும் வேளையில் தமது தோழர்களைப் பார்த்து
*"சுவர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்கள் முன் வரப் போகிறார்!"* என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் உள்ளே நுழைந்தார், அவருடைய தாடியிலிருந்து வுழூவின் காரணமாக தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. இடது கையில் செருப்பைப் பிடித்தபடியே எமக்கு ஸலாம் கூறினார்.
.அடுத்த நாளும் , நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*"சுவர்க்கவாசிகளில் ஒரு மனிதர் இப்போது உங்கள் முன் வரப் போகிறார்!* என்று கூறினார்கள். அப்போது முதல் நாள் நுழைந்த அதே அன்சாரி உள்ளே நுழைந்தார்.
மூன்றாம் நாளும் , நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் *"சுவர்க்கவாசிகளில் ஒரு மனிதர் இப்போது உங்கள் முன் வரப் போகிறார்"* என்று கூறினார்கள்.திடீரென்று,அதே அன்சாரி மனிதர் தான்மஸ்ஜிதுக்குள் நுழைகிறார்!
சபை முடிந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வெளியேறியதும், *அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்-ஆஸ்,*எனும் ஸஹாபியவர்கள் எழுந்து சென்று அந்த அன்ஸாரியிடம் இவ்வாறு கூறினார்: *"நான் என் தந்தையிடம் வாக்குவாதப்பட்டு , மூன்று நாட்களுக்கு அவரைப் பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்தேன், நீங்கள் விரும்பினால், இந்த மூன்று நாட்கள் கழியும் வரை நீங்கள் என்னை உங்களுடன் தங்க வைத்துக்கொள்வீர்களா?"* என்று அவரிடம் வினவினார்.
அதற்கு அந்த அன்சாரி அவர்கள் *"உங்கள் வரவு நல்வரவாகட்டும்"* என்று அவரை வரவேற்று அவரது வீட்டிற்கு விருந்தாளியாக அழைத்துச் சென்றார். அப்துல்லாஹ் இப்னு அம்று இப்னு ஆஸ் (றழி) அவர்களும் அவருடன் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்.
ஆனாலும், அவர் அந்த அன்சாரி இரவுத் தொழுகைக்கு எழுவதைப் பார்க்கவில்லை, இரவில் விழிக்கும் சமயத்தில் அல்லாஹ் தஆலாவை திக்ர் செய்வதைத் தவிரவும்,பகலிலும் இரவிலும் பர்ழான தொழுகைகளைத்தவிரவும் ஏனைய நபித்தோழர்கள் செய்வதைப் போன்ற வேறு எந்த மேலதிகமான இபாதத்தையும் அவர் செய்யவில்லை.இரவில் விழித்துக்கொண்டால் முஅத்தின் பஜ்ர் தொழுகைக்கு அதான் சொல்லும் வரை அவரது படுக்கையில் இருந்தவாறு *திக்ர்* செய்தவாறு இருந்தார். அதான் ஒலித்ததும் எழுந்து தொழுகையை நிறைவேற்றுபவராக இருந்தார்.மூன்று நாட்கள் கடந்தும் , அப்துல்லா இப்னு அம்று இப்னு ஆஸ் அவர்கள் ஸஹாபாத் தோழர்கள் செய்யும் இபாதத்தின் அளவிற்கு மேலதிகமாக இந்ந அன்சாரி எதையும் செய்ததைக்காணாததால். அந்த அன்சாரியின் *இபாதத்* விடயத்தில் சிறிது தரக்குறைவாக அவரைக் கருதினார்.
பின்னர் அவர் அந்த அன்சாரி மனிதரிடம் *"தோழரே! எனக்கும் எனது தந்தைக்கும் இடையில் எந்தப் பிரிவினையோ சண்டையோ இல்லை. நாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையில் மஸ்ஜிதில் அமர்ந்து இருக்கும் வேளை "மூன்று முறை, சுவர்க்கவாசிகளில் இருந்து ஒரு மனிதர் இப்போது உங்கள் முன் வரப் போகிறார் என்று கூறினார்கள். , அந்த மூன்று முறைகளிலும் நீங்கள் தான் வந்தீர்கள்,எனவே நானும் சுவர்க்கத்தை அடைந்து கொள்ளும் வேட்கையில், நீங்கள் என்ன விஷேட அமல்கள் செய்கிறீர்கள் என்பதை அறியவிரும்பினேன்.அதனால்தான் உங்கள் வீட்டில் தங்கினேன். ஆனாலும், நீங்கள் பர்ழான தொழுகையை நிறைவேற்றுவதைத் தவிரவும், இரவில் விழிக்கும் நேரங்களில் திக்ர் செய்வதைத் தவிரவும் நபித்தோழர்கள் செய்வதைப் போன்ற மேலதிகமான எந்தவொரு அமலை நீங்கள் செய்வதையும் நான் உங்களிடம் காணவில்லையே!"* என்று ஆச்சரியமாக கூறவே, அதற்கு அந்த அன்சாரி தோழர் இவ்வாறு கூறினார்:*"ஆம்,நீங்கள் பார்த்ததைத் தவிர மேலதிகமான வேறு எந்த இபாதத்தும் என்னிடம் இல்லை.*
*ஆனாலும் எந்த முஸ்லிம்சகோதரர்களைப்பற்றி எத்தகைய குரோதமோ, வஞ்சகமோ, தீய எண்ணங்களோ எனக்கு கிடையாது.*
*அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ் தஆலாவினால்வழங்கப்பட்டுள்ளஅருட்கொடைகளுக்காக ,செல்வங்களுக்காக,நற்பாக்கியங்களுக்காக நான் யார் மீதும்பொறாமை கொள்வதுமில்லை!*
என்று கூறினார்.
இதைக்கேட்ட
அப்துல்லாஹ் இப்னு இப்னு அம்று இப்னு ஆஸ் அவர்கள் அவரைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள்:
*"ஓ..அப்படியா? உங்களது இந்த நற்பண்பு தான் சுவர்க்கவாசி என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கான காரணமாக இருந்திருக்கும்."அதனைத் தான் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எம்மிடம் மூன்று நாட்களும் சுவர்க்கவாசி என்று உங்களைக் குறிப்பிட்டிருப்பார்கள்"*
*படிப்பினை:*
*1.உங்கள் இதயத்தை சீர்திருத்திக்கொள்ளுங்கள்,அதனை பொறாமை, குரோதம், வஞ்சகம் போன்றவற்றை விட்டும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பர்ழான, கடமையான அமல்களை மாத்திரமே செய்கிறீர்கள் என்பது உங்களை வருத்தாது, உங்களைக்காயப்படுத்தாது.*
*ஏனென்றால் மக்களின் இதயங்களை அழித்து விடக்கூடிய செயல்களை நீங்கள் செய்தால் மட்டுமே அது உங்களைக் காயப்படுத்தும், உங்களை வருத்தும்!*
*2 "நான் எவருடனும் வஞ்சகத்துடன் நடந்து கொள்வதும் இல்லை" என்றஅவரது கூற்று அதாவது:வியாபாரத்தில் நேர்மை, கொடுக்கல் வாங்கலில் நேர்மை , விற்பதில் நேர்மை , வாங்குவதில் நேர்மை,அறிவுரை கூறுவதில் கூட நேர்மை இப்படி எல்லா விஷயங்களிலும், என்று அர்த்தம் கொள்ளலாம். ஏனெனில் "யார் எங்களை ஏமாற்றுவாறோ அவர் எங்களைச் சார்ந்தவரல்ல" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.*
*3."அவர்களுக்கு அல்லாஹ் தஆலாவினால்வழங்கப்பட்டுள்ளஅருட்கொடைகளுக்காக ,செல்வங்களுக்காக, நற்பாக்கியங்களுக்காக நான் யார் மீதும் பொறாமையோ, குரோதமோ கொள்வதுமில்லை! என்பதன் அர்த்தம்: "ஷிர்க்" என்ற தீய கொள்கைக்கு அடுத்தபடியாக இதயத்தை மாசுபடுத்தும் தீயகொள்கை பொறாமை எனும் தீயபண்பாகும் , மற்றும் "பொறாமை" என்ற தீய பண்பு தான் அல்லாஹ் தஆலாவின் கட்டளைக்கு ,அடிபணியாது மாறு செய்யப்பட்ட முதல் பாவம், அல்லாஹ் தஆலாவின் கட்டளை பிரகாரம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இப்லீஸ் ஸஜ்தா செய்ய மறுத்ததன் காரணம் பொறாமை என்ற இத்தீயபண்பு தான்.அவன் ஆதம் மீது வெறுப்பு கொள்வதற்கும் அல்லாஹ் தஆலாவின் கட்டளைக்குஅடிபணிய மறுத்ததற்கும் இந்த பொறாமையைத் தவிர வேறொன்றுமிருக்கவில்லை.ஆதமை விட அவன் சிறந்தவன், அவன் தான் அந்தஸ்தில் உயர்ந்தவன், ஆதமை விட, தானே இந்த நிலைக்கு அதாவது ஸஜ்தா செய்யப்படுவதற்கு தகுதியானவன் என கருதினான்.*
*4.* *"அல்லாஹ் தஆலா உங்களுக்கு அருளியிருப்பவற்றில் திருப்தியடையுங்கள், அப்படியாயின், நீங்கள் தான் மக்களிலே மிகவும் செல்வந்தராக இருப்பீர்கள், மற்றவர்களிடம் உள்ள அருட்கொடைகளைப் பார்க்காதீர்கள், ஏனென்றால்,நீங்கள் அவ்வாறு செய்யுமிடத்து,அல்லாஹ் தஆலா உங்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளுக்காக அவனைப்புகழுவதற்கு, நன்றி சொல்வதற்கு நேரம் இருக்காது.*
*5.நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்:*
*"பொறாமையைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள், நெருப்பு மரத்தை எரிப்பது போல பொறாமை நல்ல செயல்களை எரித்து விடும்"!*
அல்லாஹ் போதுமானவன்❤️