நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, ஜூலை 17, 2020

வீடு ஒத்தி (போக்கியம், லீஸ்) விடுவது கூடுமா?

 ஒத்தி (போக்கியம், லீஸ்)

வீட்டை ஒத்திக்கு கொடுப்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் தண்டனையும்,*

*அதை வாங்குபவருக்கு கிடைக்கும் பத்து வகை தண்டனைகளும்*🔖


✅ *சரிபார்த்தவர்:* *ஹஜ்ரத் ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி*

🖋️தொகுத்தவர்:முஃப்தி சைபுதீன் ஹஸனி (மேலப்பாளையம்)

🌿 *======*☘ *======*🍀 *======* 🌱

கட்டுரையின் தலைப்பு பலருக்கு அதிர்ச்சியையும்,மன கஷ்டத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் இஸ்லாமிய கண்ணோட்டத்துடன் ஒத்தியை பார்த்தால் தான். எதனால் ஒத்திக்கு பத்து வகையான தண்டனைகளை அல்லாஹ் கொடுக்கிறான் ? என்பதை விளங்க முடியும்.

எனவே அந்த பத்து தண்டனைகளையும் பட்டியலிடுவதற்கு முன் இஸ்லாத்தில் ஒத்தியின் சட்டம் என்ன ? என்பதை சுருக்கமாக தெறிந்துக் கொள்வோம்.

🔮 *இஸ்லாத்தில் ஒத்தியின் சட்டம் என்ன ?*

வீடு ஒத்திக்கு கொடுப்பதும், வாங்குவதும் வட்டியுடைய வகையாகும்.

🔮 *ஒத்தி எவ்வாறு வட்டியாகும் ?*

வீட்டின் உரிமையாளர் தன்னுடைய வீட்டை யாருக்கு ஒத்திக்கு கொடுக்கிறாரோ. அவரிடமிருந்து பெரிய தொகையை பெற்றுக்கொள்வார். ஒத்தி காலம் முடிந்த பின்பு அந்த தொகையை திரும்ப கொடுத்துவிடுவார். வீட்டின் உரிமையாளர் வாங்கிய இந்தத் தொகையை கடன் தொகையாக இஸ்லாம் பார்க்கிறது. ஏனென்றால் இவர் வாங்கிய தொகையை திரும்ப கொடுத்து விடுகிறார்.

வீட்டை ஒத்திக்கு வாங்கியவரோ; தான் கடனாக கொடுத்த பெரிய தொகைக்காக அந்த வீட்டில் குறிப்பிட்ட காலம் வரை எந்த வாடகையும் இல்லாமல் தங்கிக்கொள்கிறார்.

இதுவும் வட்டி தான். ஏனென்றால் ஒருவருக்கு கடனாக பணம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து கூடுதல் பணம் பெறுவது மட்டும் தான் வட்டி என்று பலர் கருதிக் கொள்கிறார்கள். ஆனால் அது மட்டும் வட்டி கிடையாது. மாறாக கடன் கொடுத்தவர் கடனாளியிடமிருந்து எந்த வகையில் பிரயோஜனம் அடைந்துக்கொண்டாலும் அந்தப் பிரயோஜனமும் வட்டிதான் என்று இஸ்லாம் தெளிவாகக் கூறிவிட்டது.

இந்த அடிப்படையில் ஒத்திக்கு வீடு வாங்கியவர் வீட்டின் உரிமையாளருக்கு கடனாக கொடுத்த பெரிய தொகையின் காரணமாக அவர் வீட்டை குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக பயண்படுத்தும் பிரயோஜனத்தை அடைந்து கொள்கிறார். இந்த பிரயோஜனமும் வட்டியின் வகை தான்.

🔮 *சிலர் கையாளும் குறுக்கு வழி முறை:*

ஒத்தி வீட்டில் இலவசமாக தங்கினால் தானே வட்டியாகும். எனவே வாடகை என்ற பெயரில் அந்த வீட்டுக்கு தகுதி இல்லாத ஒரு குறைந்த தொகையை கொடுத்துவிட்டு. நாங்கள் தங்குவதற்கு வாடகை கொடுக்கிறோம். எனவே ஒத்தி வீட்டில் தங்குவது வட்டியாகாது என்பதாக சிலர் குறுக்கு வழி முறை ஒன்றை கையாளுகிறார்கள்.

ஆனால் உண்மையில் இது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இவர்கள் இப்போதும் வட்டியிலிருந்து தப்பிக்கவில்லை; ஏனென்றால் வீட்டின் உரிமையாளர் தன் வீட்டிற்கு தகுதி இல்லாத மிக குறைந்த வாடகை ஏற்றுக்கொள்ள காரணமே அவர் ஒத்திக்காக வாங்கிய (கடன்) தொகையினால் தான்.

அந்தத் தொகையை அவர் வாங்காமல் இருந்தால் தன்னுடைய வீட்டிற்கு தகுதியில்லாத குறைந்த வாடகையை அறவே ஏற்றுக்கொள்ள மாட்டார். என்பது தெளிவான விஷயமாகும்.

எனவே எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஒத்திக்கு தங்குபவர். தான் கடனாக கொடுத்த பெரிய தொகையின் மூலம் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து பிரயோஜனம் அடையவே செய்கிறார். அந்தப் பிரயோஜனம் வீட்டில் இலவசமாக தங்குவதின் மூலமாகவோ அல்லது வாடகை தொகையை மிக அதிகமாக குறைத்துக் கொள்வதின் மூலமாகவோ அடைந்து கொள்கிறார்.

எனவே இந்த குறுக்கு வழி முறையும் வட்டியில் வீழுவதை விட்டும் பாதுகாக்காது.

ஆக ஒத்தியின் மூலமாக வீட்டின் உரிமையாளர். ( தங்கும் பிரயோஜனத்தை) வட்டி(யாக) கொடுப்பவராகவும், ஒத்தி வீட்டில் தங்குபவர் (அந்த பிரயோஜனத்தை அடைவதின் மூலம்) வட்டியை வசூலிப்பவராகவும் ஆகிவிடுகிறார்கள்.

*எனவே வீட்டை ஒத்திக்கு கொடுப்பதும், வாங்குவதும் இரண்டுமே ஹராமாகும்.*

இது சம்பந்தமாக அடியேன் எழுதிய அரபி ஃபத்வா ஒன்று கீழ்வரும் லிங்கின் மூலம் டெலிகிராமில் பெற்றுக்கொள்ள முடியும்.
(ஃபத்வா எண்: 44): 
https://t.me/c/1435149686/51


🔖 *ஒத்தியின் மூலமாக வட்டியின் படுகுழியில் வீழுந்த வீட்டின் உரிமையாளருக்கும், அதில் ஒத்திகையாக தங்குபவருக்கும் அல்லாஹ் கொடுக்கும் தண்டனைகளை இங்கு குர்ஆன் மற்றும் ஹதீஸுடைய ஆதாரத்துடன் பட்டியலிடப்படுகிறது.*🔖

1️⃣ *நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சாபத்திற்கு இரையாகுவார்கள்.* 
📘 (ஆதாரம்: சுனனு அபீ தாவூது: ஹதீஸ் எண்: 3333 )
الحديث: ﻟﻌﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ -ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺁﻛﻞ اﻟﺮﺑﺎ ﻭﻣﻮﻛﻠﻪ ﻭﺷﺎﻫﺪﻩ ﻭﻛﺎﺗﺒﻪ

ஒத்திக்கு வீடு கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் மட்டும் இந்த சாபம் கிடையாது மாறாக *ஒத்தி பத்திரத்தை தயார் செய்பவருக்கும், அதற்கு சாட்சியாக கையெழுத்திடுபவர்களும் நபியுடைய சாபத்தில் அடங்குவார்கள் என்று இந்த ஹதீஸின் மூலம் தெரிகிறது.

ஒருவரின் இம்மை, மறுமை வாழ்வு நாசமாகுவதற்கு நபி (ஸல்) அவர்களின் சாபமே போதுமானது. என்பதை யாராலும் மறுக்க முடியாது.

*குறிப்பு:‌* இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ள குர்ஆன் வசனத்திலும், பின்னால் வரவிருக்கின்ற வசனங்களிலும், ஹதீஸ்களிலும் "வட்டியை சாப்பிடுபவர்" (آكل الربا) என்ற வார்த்தைதான் அரபியில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அந்த வார்த்தையின் கருத்து: எந்த வகையில் வட்டியை அனுபவித்தாலும் இந்த தண்டனைகள் அவர்களுக்கு பொருந்தும் என்று குர்ஆனுடைய விரிவுரையாளர்களும், ஹதீஸுடைய விரிவுரையாளர்களும் இந்த வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.

இனி சொல்லப்படும் ஒன்பது தண்டனைகளும் ஒத்தி வீட்டில் தங்குபவருக்கு மட்டுமாகும்

2️⃣ *இந்த பாவத்தினால் அவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும் எதிர்க்கத் துணிந்து விட்டதாக கருதப்படுவார்*
📘 (ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம்: 279)
الآية: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ ◇ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ

3️⃣ *அவருடைய வாழ்க்கையில் அழிவு ஏற்படுவதற்கு இந்த பாவமே காரணமாக அமைந்துவிடும்.*
📘(ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 2766)
الحديث: اﺟﺘﻨﺒﻮا اﻟﺴﺒﻊ الموبقات - وقال فيها - : ﻭﺃﻛﻞ اﻟﺮﺑﺎ

*இமாம் இப்னு தகீக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்:* இந்த பாவத்தினால் கெட்ட மரணம் ஏற்படுவதை அனுபவ ரீதியாக அறியப்பட்டுள்ளது. 
(நூல்: ஃபைழுல் கதீர்: பாகம்: 1 பக்கம்: 153)

4️⃣ *இந்த பாவம் மக்களுக்கு மத்தியில் பரவலாகிவிட்டால் அல்லாஹுத்தஆலா அவர்களின் மீது வரட்சியை சாட்டி விடுவான்.*
📘 (ஆதாரம்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 17822)
الحديث: ﻣﺎ ﻣﻦ ﻗﻮﻡ ﻳﻈﻬﺮ ﻓﻴﻬﻢ اﻟﺮﺑﺎ، ﺇﻻ ﺃﺧﺬﻭا ﺑﺎﻟﺴﻨﺔ

5️⃣ *அவர் கியாமத் நாளில் இரத்த வெள்ளத்தில் மிதப்பார். அதிலிருந்து அவர் தப்பிக்க முயற்சி செய்யும் போதெல்லாம் அவர் வாயை நோக்கி ஒரு கல் வீசப்படும். இதனால் அந்த இரத்த ஆற்றிலிருந்து அவரால் வெளி வரவே முடியாது.*
📘 (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் எண்: 2085)
الحديث: ﺭﺃﻳﺖ اﻟﻠﻴﻠﺔ ﺭﺟﻠﻴﻦ ﺃﺗﻴﺎﻧﻲ، ﻓﺄﺧﺮﺟﺎﻧﻲ ﺇﻟﻰ ﺃﺭﺽ ﻣﻘﺪﺳﺔ، ﻓﺎﻧﻄﻠﻘﻨﺎ ﺣﺘﻰ ﺃﺗﻴﻨﺎ ﻋﻠﻰ ﻧﻬﺮ ﻣﻦ ﺩﻡ ﻓﻴﻪ ﺭﺟﻞ ﻗﺎﺋﻢ ﻭﻋﻠﻰ ﻭﺳﻂ اﻟﻨﻬﺮ ﺭﺟﻞ ﺑﻴﻦ ﻳﺪﻳﻪ ﺣﺠﺎﺭﺓ، ﻓﺄﻗﺒﻞ اﻟﺮﺟﻞ اﻟﺬﻱ ﻓﻲ اﻟﻨﻬﺮ، ﻓﺈﺫا ﺃﺭاﺩ اﻟﺮﺟﻞ ﺃﻥ ﻳﺨﺮﺝ ﺭﻣﻰ اﻟﺮﺟﻞ ﺑﺤﺠﺮ ﻓﻲ ﻓﻴﻪ، ﻓﺮﺩﻩ ﺣﻴﺚ ﻛﺎﻥ، ﻓﺠﻌﻞ ﻛﻠﻤﺎ ﺟﺎء ﻟﻴﺨﺮﺝ ﺭﻣﻰ ﻓﻲ ﻓﻴﻪ ﺑﺤﺠﺮ، ﻓﻴﺮﺟﻊ ﻛﻤﺎ ﻛﺎﻥ، ﻓﻘﻠﺖ ﻣﺎ ﻫﺬا؟ ﻓﻘﺎﻝ: اﻟﺬﻱ ﺭﺃﻳﺘﻪ ﻓﻲ اﻟﻨﻬﺮ ﺁﻛﻞ اﻟﺮﺑﺎ

6️⃣ *அவர் கியாமத் நாளில் கப்ரிலிருந்து எழுப்பபடும்போது ஷைத்தான் (ஜின்களால்) தாக்கப்பட்டு பித்து பிடித்த மனிதனை போன்று இருப்பார்*
📘 (ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம்: 275)
الآية: الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ

7️⃣ *அவருடைய வயிறு வீட்டை போன்று பெரியதாக விகாரமான தோற்றத்தில் இருக்கும்.*
📘 (ஆதாரம்: சுனனு இப்னு மாஜா: ஹதீஸ் எண்: 2273)
الحديث: ﺃﺗﻴﺖ ﻟﻴﻠﺔ ﺃﺳﺮﻱ ﺑﻲ ﻋﻠﻰ ﻗﻮﻡ ﺑﻄﻮﻧﻬﻢ ﻛﺎﻟﺒﻴﻮﺕ، ﻓﻴﻬﺎ اﻟﺤﻴﺎﺕ ﺗﺮﻯ ﻣﻦ ﺧﺎﺭﺝ ﺑﻄﻮﻧﻬﻢ، ﻓﻘﻠﺖ: ﻣﻦ ﻫﺆﻻء ﻳﺎ ﺟﺒﺮاﺋﻴﻞ؟ ﻗﺎﻝ: ﻫﺆﻻء ﺃﻛﻠﺔ اﻟﺮﺑﺎ

8️⃣ *அவர் வயிற்றில் பாம்புகள் நிரப்பப்படும்.*
📘 (ஆதாரம்: சுனனு இப்னு மாஜா: ஹதீஸ் எண்: 2273)
الحديث السابق نفسه

9️⃣ *அவரை இழிவுபடுத்துவதற்காக அந்தப் பாம்புகளை வெளியிலிருந்து பார்க்க கூடிய வகையில் அமைக்கப்படும்.*
📘 (ஆதாரம்: சுனனு இப்னு மாஜா: ஹதீஸ் எண்: 2273)
الحديث السابق نفسه

1️⃣0️⃣ *அவர் மீது அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கும்.*
📘 (ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான் : ஹதீஸ் எண்: 4410)
الحديث: ﻣﺎ ﻇﻬﺮ ﻓﻲ ﻗﻮﻡ اﻟﺰﻧﻰ ﻭاﻟﺮﺑﺎ ﺇﻻ ﺃﺣﻠﻮا ﺑﺄﻧﻔﺴﻬﻢ ﻋﻘﺎﺏ اﻟﻠﻪ ﺟﻼ ﻭﻋﻼ

எனவே நாம் ஒத்தி விஷயத்தில் அறவே தலையிடாமல் இருக்க வேண்டும். வீடு ஒத்திக்கு கொடுப்பது, வாங்குவது, பத்திரம் தயாரிப்பது, சாட்சி கையெழுத்திடுவது போன்ற எந்த வகையிலும் நாம் ஒத்தியுடன் சம்பந்தப்பட்டுவிடக்கூடாது.

இங்கு சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களும் வீடு ஒத்திக்கு மட்டும் கிடையாது. மாறாக எந்த பொருளை ஒத்திக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் இங்கு சொல்லப்பட்ட அனைத்து தண்டனைகளும் பொருந்தும்.

ஒத்தி என்ற கொடூர பாவத்திலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக... ஆமீன்

✨✨✨✨✨✨

பிரபல்யமான பதிவுகள்