ஓதிப்பார்த்தலின் மகத்துவம்...
எதற்கெல்லாம் ஓதிப் பார்க்கலாம் என்று நாம் சமூகத்தை கேட்டால்
எதற்கு ஓதிப்பார்க்க வேண்டும் என்று திரும்ப நம்மிடம் கேட்கிறார்கள்...
நம் சமூக மக்கள் குர்ஆனையும், ஹதீஸையும் முழுமையாக விளங்கவில்லை என்று உறுதிப்படுகிறது...
நூற்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் வலிமையாக இருந்தும் கூட இடையிடையில் வரக்கூடிய சில கலங்கலான ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஒரு பெரும் புரிந்துணர்வையே இல்லாமல் ஆக்கி விட்டார்கள் இந்த கடும்போக்கு வாதிகள்...
ஓதிப்பார்த்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்து மக்கள் அதைப் பயன்படுத்திய விதத்தை வைத்தே புரிந்து கொள்ளலாம்...
இன்று ஒரு நபர் குரானை வைத்து ஓதிப் பார்க்கிறார் என்று சொன்னால் அவரை பார்த்து முதலில் முஷ்ரிக் என்ற முத்திரையை குத்தி விடுகின்றனர்...
பிறகு எப்படி இவன் முதலில் குர்ஆனை வைத்து ஓதி பார்ப்பான் ???
பல லட்சங்களை மருத்துவமனையில் செலவழித்துவிட்டு கடைசியாக எதிலும் அடங்கவில்லை என்றுதற்குப் பின்னால் குர்ஆன் மூலமாக ஓதி பார்க்கின்றனர்.
அதுவும் அரைமனதுடன் வருகின்றனர்...
குர்ஆனுடைய மகத்துவத்தை சஹாபாக்கள் எவ்வளவு புரிந்து இருந்தார்கள் ? ? ?
நாம் எவ்வளவு தூரம் புரிந்து இருக்கிறோம் ? ? ?
ஸஹாபாக்கள் குர்ஆன் நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதமாக மட்டும் பார்க்கவில்லை...
மிகப்பெரும் ஆயுதமாக பார்த்தார்கள்,
மிகப்பெரும் மருத்துவமனையாக பார்த்தார்கள், மிகப்பெரும் ஞானக் களஞ்சியமாக பார்த்தார்கள், மிகப்பெரும் கடலாக பார்த்தார்கள்,
பல ரகசியங்கள் அடங்கிய ரகசிய ஏடாக பார்த்தார்கள்,
இறைப்புறத்திலிருந்து வரும் நற்சகுனமாக பார்த்தார்கள்....
ஆனால் இன்றைய முஸ்லிம் சமுதாயம் குர்ஆனை விவாதப் பொருளாக பார்க்கிறது
அல்லது அழகிய வடிவில் ஓதக் கூடிய ஒரு இன்னிசை பாடலாக பார்க்கிறது...
ஸஹீஹான ஹதீஸ்களை மட்டுமே எடுத்துப்பார்த்தால் ஸஹாபாக்கள் குர்ஆனை எந்த அளவிற்கு கையாண்டிருக்கிறார்கள் என்று நமக்கு ஆச்சரியம் மேலிடும்...
அந்த நீண்ட பட்டியலை நாம் பார்க்கலாம்...
1. ரத்தம் நிற்பதற்காக
2. காய்ச்சல் குணமாக
3. கண் திருஷ்டி சரியாக
4. படர்தாமரை சரியாக
5. பைத்தியம் குணமாக
6. விலா புறங்களில் ஏற்படக்கூடிய புண்கள் சரியாக
7. சைத்தான் தொல்லை நீங்க
8. காது வலி குணமடைய
9.மனம் அமைதி பெற
10. விஷக்கடிகள் நீங்க
11. தேள் கடி நீங்க
12. அலர்ஜி சரியாக
13. தோல் நோய் குணமடைய
14. செய்வினை
15. சூனியம்
16. வஞ்சனை நீங்க
17. ஜின்களின் தொல்லை தீர 18.மலக்குமார்களை ஆஜராக்க
19. உடல் மன நோய்கள் நீங்க
20.வறுமை நீங்க
21. பணவரவு கிடைக்க
22. தரித்திரம் நீங்க
23. சுகப்பிரசவம் அடைய
24. முடிச்சு போட்டு முடக்கத்தை ஏற்படுத்தும் பெண்களின் தீங்கை விட்டும் காக்க
25. பொறாமை தீங்கை காக்க
26. இருளின் தீங்கு நீங்க
27. வஸ்வாஸ் நீங்க
28. கெட்டவர்களின் தீங்கை விட்டும் காக்க
29. ஷைத்தான்களின் கூட்டம் தீண்டிவிடாமல் இருக்க...
30. சாபம் ஏற்படாமல் இருக்க
31. பிரயாணத்தில் இடையூறு தரும் ஹூல் எனும் ஜின் இனம் தாக்காமல் இருக்க
32. தன்னை கொல்ல வருபவனிடமிருந்து தன்னை உடனே காக்க...
இன்னும் ஏராளமான விஷயங்களுக்கு ஓதிப்பார்ப்பது மார்க்கத்தில் உள்ளது...
இந்த 32 விஷயங்களில் குறைந்த பட்சம் எத்தனை விஷயங்களுக்கு நாம் ஓதிப் பார்க்கிறோம் என்பதை சுய பரிசோதனை செய்ய கடமைப் பட்டுள்ளோம்.....
பல்வேறு விஷயங்களுக்கு ஓதிப்பார்த்தல் முறை குர்ஆன், ஹதீஸ், ஸலஃபுஸ் ஸாலிஹீன்களிடம் கையாளப்பட்டுள்ளது...
இவை அனைத்திற்குமே ஹதீஸ்களில் ஏராளம் ஆதாரங்கள் உண்டு...
அரபுகளின் மிகப் பெரும் பலமே ஓதிப்பார்த்தல் தான்...
சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட ஓதிப் பார்க்கும் முறையை அறியாமை காலத்தில் கூட செய்து வந்து வெற்றி கண்டு விடுவார்கள்..
அல்லாஹ் இவர்களின் செயல்களை ஒரு விதத்தில் பாராட்டி ஒரு விதத்தில் சவால் விடுகிறான்...
எல்லா விஷயத்திற்கும் நீங்கள் ஓதிப் பார்த்து சரி செய்துவிடுகிறீர்களே !
மரண வேலையை அடைந்த ஒருவன் அவனுக்கு ஓதி பாருங்கள் !
முடிந்தால் அவன் உயிர் போவதை தடுத்து காட்டுங்கள் என்று அல்லாஹ் கேட்கிறான்..
كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِىَۙ
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-
(அல்குர்ஆன் : 75:26)
وَقِيْلَ مَنْ ٚ رَاقٍۙ
“மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.
(அல்குர்ஆன் : 75:27)
மரணத்தை தவிர அனைத்திற்க்கும் தீர்வை அரபுகள் தங்கள் கைவசத்தில் வைத்திருந்தார்கள்...
தமிழர்கள் எப்படி அறிவியல்,கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகம், ஆயக்கலைகள் என அனைத்திலும் தேர்ச்சி அடைந்து இருந்தார்களோ அதேபோல அரபுகளிடத்திலும் பல சிறப்புகள் இருந்தது...
சூரத்துல் கலமுடைய தஃப்ஸீரில் இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அரபுகளின் தன்மையைப் பற்றி கூறுகிறார்கள்.
அரபுகளிடம் ஒட்டகம் என்பது மிக மதிக்கத்தக்க வாகனமாக இருந்தது.
இன்றைய காலகட்டத்தில் ஒருவன் ஆடி கார் வைத்திருப்பதற்கு சமமானது அன்று ஒருவன் செந்நிற ஒட்டகம் வைத்திருப்பது..
தனக்கு பிடிக்காத ஒரு நபர் ஒட்டகம் வைத்திருப்பதைப் பார்த்தால் அந்த பொறாமை கொண்ட அரபி தனியாக ஒரு குகைக்கு சென்று மூன்று நாட்கள் சாப்பிடாமல் விரதம் இருந்து பிறகு வெளியே வந்து அந்த ஒட்டகத்தை பார்த்து இந்த ஒட்டகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கூறுவான்
அவ்வளவுதான் கதை ! ! !
அந்த ஒட்டகம் சிறிது நாட்களில் நோய்வாய்ப்பட்டு மரணித்து விடும்...
கண்திருஷ்டியையும், தவத்தையும் எப்படி பிரயோகிப்பது என்பதை அரபுகள் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்கள் என்பது இந்த சம்பவம் ஒரு சான்று...
இந்த கண் திருஷ்டியின் பிரயோகத்தின் மூலமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் வீழ்த்தி விடலாம் என்று அரபுகள் நினைத்தார்கள்...
அதற்காக அவர்கள் முயற்சியும் செய்தார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்து ஒரு வசனத்தை இறக்கினான்...
وَاِنْ يَّكَادُ الَّذِيْنَ كَفَرُوْا لَيُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌۘ
மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் : 68:51)
இவர்களின் பார்வை தந்திரம் அல்லாஹ்வின் பார்வையை விட்டும் மறைந்தது அல்ல...
இப்படிப்பட்ட மாந்திரீகத்தில் தேர்ச்சியடைந்த அரபுகளுக்கு தான் அவர்களின் மாந்திரீகத்தை வெல்லும் அளவிற்கு குர்ஆனைக் கொண்டு அல்லாஹுத்தஆலா கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்பித்தான்...
குர்ஆனைக் கொண்டே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனையோ அற்புதங்களை செய்து காட்டினார்கள்...
குர்ஆன் இந்த அகில உலக உலகத்தில் மக்கள் அனைவருக்கும் பொதுவானது...
அதை பெருமானார் பயன்படுத்தியதை போன்று நாமும் பயன்படுத்த முடியும்.
ஆனால் அதைத்தான் நாம் எப்படி என்று தெரியாமல் இழந்து தவிக்கிறோம்...
பெருமானாரின் பெரிய தந்தை அபூ லஹப் உடைய மனைவி உம்மு ஜமீல் என்பவள் பெருமானாரை தாக்குவதற்காக பெரிய ஒரு கல்லை எடுத்துக் கொண்டு காபாவின் அருகில் வந்து தேடிக் கொண்டிருந்தாள்...
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனில் வரும்
وَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًا ۙ
(நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்.
(அல்குர்ஆன் : 17:45)
இந்த வசனத்தை பெருமானார் ஓதியபொழுது அவளின் கண்களை விட்டும் மறைந்துவிட்டார்கள்...
அதே போல் ஹிஜ்ரத்தின் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கொலை செய்வதற்காக குறைஷிகள் அவர்களின் வீட்டை சுற்றி முற்றுகையிட்டிருந்த பொழுது சூரத்துல் யாஸீனில் வரும்
وَجَعَلْنَا مِنْ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
(அல்குர்ஆன் : 36:9)
என்ற இந்த வசனத்தை ஓதி மண்ணை எடுத்து அவர்களின் தலையில் வாரி இறைத்து விட்டுப் போய்விட்டார்கள்....
யார் கண்ணுக்கும் தெரியவில்லை...
இதுபோன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆன் வசனத்தை பல சூழ்நிலைகளுக்கு பயன்படுத்தியுள்ளார்கள்...
ஹதீஸ்களில் ஏராளமான இடங்களில் சஹாபாக்களும் பயன்படுத்திய ஆதாரங்களும் நிறைய இருக்கின்றன...
மந்திரித்தல் ஓதிப்பார்த்தல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயமாகும்...
ஆனால் இந்த முரட்டு மற்றும் குருட்டு வஹ்ஹாபிகள் ஹதீஸில் சொல்லப்பட்டு இருக்கும் அனைத்தையும் மறைத்துவிட்டு நமக்கு விஞ்ஞானத்தை போதிக்கிறேன் என்ற பெயரில் மார்க்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர்...
கீழே கொடுக்கப்பட்ட கூடிய ஒவ்வொரு ஹதீஸையும் பாருங்கள்...
அதற்கு மாற்று விளக்கம் கொடுக்க கூடிய வஹாபிகளின் கமெண்ட்களையும் பாருங்கள்...
இவர்கள் எப்பேர்பட்ட ஹதீஸ் மூடர்கள் என்பது உங்களுக்கு தெரியும்...
இவர்கள் போதிப்பது உண்மையில் இறை நம்பிக்கை இல்லை என்பது நன்றாக தெரியும்...
* ஹதீஸ் :
ஓதிப் பார்ப்பதை பெருமானார் ஆரம்ப கட்டத்தில் தடை செய்திருந்தார்கள் பிறகு அதை அனுமதித்து விட்டார்கள்
முஸ்லிம் - 4425.
நபிகளார் ஓதிப் பார்ப்பதற்கு பொதுவாக அனுமதி கொடுத்துள்ளார்கள்...
முஸ்லிம் - 4428
* வஹ்ஹாபி:
ஓதிப்பார்த்தல் என்பது அவசியமற்றது.
அதுவும் அடுத்தவரிடம் போய் ஓதிப் பார்ப்பது மிகப்பெரிய இணைவைப்பாகும்...
* ஹதீஸ்
நபிகளார் கற்றுக் கொடுக்காத வார்த்தைகளைக் கொண்டு ஓதிப் பார்ப்பதையும் பெருமானார் அனுமதித்து உள்ளார்கள்...
முஸ்லிம் - 4426.
* வஹ்ஹாபி :
குர்ஆன் சுன்னா தான் ஆதாரம். வேறு எதிலும் மருத்துவத்தையும் தேடக் கூடாது.
( குருட்டு இறை நம்பிக்கை)
* ஹதீஸ் ;
தேள் கடிக்கு விஷ கடிக்கு ஓதிப் பார்ப்பதை பெருமானார் அனுமதித்து உள்ளார்கள்
முஸ்லிம் - 4425
* வஹ்ஹாபி ;
இந்த காலத்தில் யாராவது விஷகடிக்கு ஓதிப் பார்த்ததை நாம் கண்ணால் பார்த்து இருக்கிறோமா ???
எந்த காலத்தில இருக்கிறீங்க? ? ?
விஷகடிக்கு
Aspirin 10 mg/kg மற்றும்
II Idem போன்ற டேபிளட்களை உடனடியாக எடுக்க வேண்டும்...
* ஹதீஸ் ;
ஓதிப் பார்ப்பதற்காக பணம் வாங்குவதை பெருமானார் அனுமதித்து உள்ளார்கள்.
அந்தப் பணத்தில் ஒரு பகுதியை தனக்கும் கேட்டார்கள்....
புகாரி - 2276
* வஹ்ஹாபி :
இந்த ஆலிம்ஸாக்கள் வயிறு வளர்ப்பதற்காக ஓதிப் பார்க்கிறார்கள்...
அப்படி ஒன்னு இஸ்லாத்தில் கிடையவே கிடையாது...
* ஹதீஸ் :
நபிகளார் காது வலிக்காக ஓதிப் பார்ப்பதை அனுமதித்தார்கள்...
புகாரி - 5720
* வஹ்ஹாபி :
நல்ல காது, மூக்கு, தொண்டை ஸ்பெஷலிஸ்ட முதல்ல பாருங்க...
அது ஷிர்க் கிடையாது...
மாறாக கிரீன் தவ்ஹீத்....
* ஹதீஸ் :
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்திருஷ்டிக்கு ஓதிப் பார்க்க அனுமதித்தார்கள்...
புகாரி - 5739
* வஹ்ஹாபி :
கண் திருஷ்டி என்று ஒன்று கிடையவே கிடையாது...
அப்படி கண்திருஷ்டினு ஒன்னு இருந்தா இன்னக்கி நடிகைகளால நடிக்க முடியுமா???
நம்மலாலத் தான் பாக்க முடியுமா???
* ஹதீஸ் :
படர்தாமரைக்காக பெருமானார் ஓதிப் பார்க்க சொன்னார்கள்....
புகாரி - 5739
* வஹ்ஹாபி :
ஈச் கார்டு பயன்படுத்துங்க அப்ப தான் வெளிநாட்டு கம்பெனியின் தவ்ஹீது வளரும்...
* ஹதீஸ் :
எந்த ஒரு விஷக்கடியாக இருந்தாலும் ஓதிப்பார்க்க பெருமானார் பொதுவான அனுமதி கொடுத்தார்கள்...
புகாரி - 5741
* வஹ்ஹாபி :
உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கவும்....
* ஹதீஸ் :
ஸஹாபி ஒருவர் தாபியீக்கு ஓதிப் பார்த்தார்கள்...
புகாரி - 5742
* வஹ்ஹாபி :
பள்ளிவாசலுக்கு வரும் மக்களுக்கு ஆலிம்சா ஓதி பார்த்தால் அவர் முஷ்ரிகான இமாம் ! ! !
அவர் பின்னால் நின்று தொழக் கூடாது...
* ஹதீஸ் :
காயம்பட்ட இடத்தில் மண்ணையும் , எச்சிலையும் வைத்து நபிகளார் ஓதிப் பார்த்தார்கள்...
முஸ்லிம் - 2194
* வஹ்ஹாபி :
மண், எச்சில், தகடு, தாயத்து அனைத்தும் படைப்புகள் அதை பயன்படுத்துவது இணைவைப்பாகும்...
மேலும் நபிகளார் இவ்வாறு சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை ! ! !
இது பொய்யான ஹதீஸ் ! ! !
* ஹதீஸ் :
மந்திரித்தல் என்பது காய்ச்சல் மற்றும் கண் திருஷ்டிக்கு மட்டுமே பிரத்தியேகமானது...
தப்ரானீ - 2/121
* வஹ்ஹாபி :
காய்ச்சல் வந்தால் அனாசின் மற்றும் ஹால் பால் போட வேண்டும்.
மாறாக ஓதிப் பார்ப்பது அறியாமைக் காலம்...
* ஹதீஸ் :
ஓடக்கூடிய ரத்தத்தை நிறுத்துவதற்காக ஓதிப் பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்தது...
அபூதாவூத் - 3889
ஹாகிம் - 8271
* வஹ்ஹாபி :
ஆலிம்சா எந்த காலத்தில் இருந்து கிட்டு இருக்கீங்க? ? ?
உங்க கைய கத்திய வச்சு கிழிச்சு ஓடிய ரத்தத்தை நிப்பாட்டிட்டு அதை நிரூபித்து விட்டு பிறகு எனக்கு ஓதி பார்க்கவும்...
* ஹதீஸ் :
குர்ஆன் வசனத்தை ஓதி தண்ணீரில் ஊதி பூமியில் இருந்து மண்ணை எடுத்து ஓதிய தண்ணீரில் போட்டு பிறகு அந்த தண்ணீரை அவர் முகத்தில் அடிப்பது சுன்னத்.
அபூ தாவூத் - 3885
* வஹ்ஹாபி :
தண்ணில ஓதி ஊதெல்லாம் கூடாது...
ஊதும்போது கார்பன்-டை-ஆக்சைடு தண்ணீரில் கலந்து விடுகிறது...
இது விஞ்ஞானத்திற்கு முரணாக இருக்கிறது...
எனவே கூடாது...
* * நபிகளார் கற்றுத் தந்த சுன்னத்தான துஆக்கள் அல்லாத வேறு வார்த்தைகளை கொண்டும் ஓதிப் பார்க்கலாம் என்பது பொது விதி.
ஆனால் அதில் இணைவைப்பு இருக்கக் கூடாது என்பது மட்டுமே நிபந்தனை...
* ஹதீஸ் :
அறியாமைக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மந்திரிக்கும் வார்த்தைகளை கொண்டு நாங்கள் ஓதி பார்க்கலாமா என்று கேட்ட பொழுது அதில் ஷிர்க் இல்லாதபட்சத்தில் அதை ஓதுங்கள் ! என்றார்கள்.
முஸ்லிம் - 2200
* வஹ்ஹாபி :
குர்ஆன் சுன்னா மட்டும் தான் எங்களின் மார்க்க ஆதாரம்...
அது அல்லாத அனைத்தும் இணைவைப்பு ஷிர்க் ஷிர்க் ஷிர்க்....
* ஹதீஸ் :
ஜாஹிலிய்யா காலத்தில் ஷிஃபா என்ற பெண் விலாப் புறங்களில் வரக்கூடிய புண்களுக்கு ஓதிப் பார்த்து மருத்துவம் செய்பவராக இருந்தார்.
அந்தப் பெண்ணை தன் மனைவி ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அருகில் பார்த்த பொழுது
علميها حفصة
ஹஃபாஸாவிற்கு இந்த மந்திரித்தல் முறையை கற்றுக் கொடு என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நஸயீ அல் குப்ரா - 7542.
* வஹ்ஹாபி :
உனக்கு வலிச்சா நீயே ஓதிக்க...
நீ ஏன் அவன்கிட்ட போற?
* ஹதீஸ் :
ஆற்றிலிருந்து குளித்து வந்தவுடன் ஒரு ஸஹாபிக்கு (சீர் அடித்ததைப் போல) காய்ச்சல் வந்துவிட்டது.
அபூ ஸாபித் எனும் மனிதரிடம் ஓதிப்பாருங்கள் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே அறிவுறுத்தினார்கள்.
அபூதாவூத் - 3888
நஸயீ - 10873
அஹ்மத் - 15978
* வஹ்ஹாபி :
70,000 நபர்கள் கேள்வி கணக்கு இல்லாமல் சொர்க்கம் செல்பவர்கள்.
பிறரிடம் அவர்கள் ஓதிப் பார்க்காமல் இருப்பார்கள்...
பிறரிடம் ஓதிப்பார்த்தால் கேள்வி கணக்கு இல்லாமல் சொர்க்கம் போக முடியாது....
* ஹதீஸ் :
(அரபு எழுத்துக்களை) எழுத கற்றுக் கொள்வதைப் போல உடலில் ஏற்படும் புண்களுக்கு ஓதிப் பார்க்கும் முறையை (மந்திரிப்பவர்களிடமிருந்து) கற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமூட்டி வலியுறுத்திக் கூறினார்கள்...
அபூதாவூத் - 3887.
* வஹ்ஹாபி :
உடலில் புண்கள் ஏற்பட்டால்
Clotrimazole (Lotrimin), ketoconazole (Nizoral), and terbinafine (Lamisil AT) போன்ற ஆயில்மெண்ட்டுகளை பயன்படுத்த வேண்டும்...
குர்ஆன் சுன்னாவில் உடல் புண்களுக்கு என்று ஓதிப் பார்ப்பதற்கு என்று எதுவுமே கிடையாது...
ஏன்னா அது எங்களுக்கு தெரியாது....
இப்பொழுது புரிகிறதா இந்த மொரட்டு முட்டாள்களைப் பற்றி ...
இவர்கள் இறைவனின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறி குருட்டுத்தனமான நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியவர்கள்...
இவர்களுக்கும் சுன்னாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ...
ஓதிப்பார்த்தலின் நிலைப்பாடு மார்க்கத்தில் என்ன என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்...
எதைக் கொண்டு ஓதிப்பார்க்கலாம் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த தலைப்பில் பார்க்கலாம்...
அல்லாஹுவே நேர்வழிக்கு போதுமானவன் ...
அல்லாஹுவே மிக அறிந்தவன்....