1. கதீஜா
நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி. அவர் அந்த சமுதாயத்தில் நல்ல செல்வாக்கும், செல்வச் செழிப்பும் உடைய ஒரு பெண்மணி. இன்றைய மதிப்பில் சுமார்800கோடி அமெரிக்க டாலர்மதிப்புடைய சொத்திற்கு அதிபதியாக இருந்தார் என்றுஃபாத்திமா(ரலி) வாழ்வில் நடந்த படிப்பினை சம்பவங்கள்(பாகம்-1)என்ற நூலில் பன்னூலாசிரியர் மௌலானா மௌலவிS.S.முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் மன்பயீ காதிரிஎன்ற அறிஞர் கூறுகின்றார். (இந்திய மதிப்பின்படி சுமார் 36,800 கோடி ரூபாய் நம்ப முடிகிறதா? ) கதீஜா அவர்களது உறவினர் குழைமா என்ற பெண், வேலை தேடிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை, இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நபி (ஸல்) பரம ஏழையான ஒரு இளைஞர். நபி (ஸல்) அவர்களின் அழகினால் கதீஜா கவரப்பட்டார். திருமண பேச்சை முதலில் துவங்கியவரும் இவரே. இவர் ஏற்கெனவே இருமுறை விதவையானவர் முந்தைய கணவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். தன்னைவிட பதினைந்துவயது இளையவரான நபி (ஸல்) மீது மையல் கொண்டார். தன்னுடைய நாற்பதாம் வயதில் இருபத்தி ஐந்து வயதான நபி (ஸல்) அவர்களை, சில எதிர்ப்புகளை மீறி மூன்றாவதாக திருமணம் செய்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்த நபி (ஸல்) இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
தன்னை மணந்து கொள்ளுமாறு முஹம்மதிற்கு செய்தியை அனுப்பிவிட்டு, அதே சமயத்தில் தனது தந்தையார் குவைலித்-தை வீட்டிற்கு வரவழைத்து, வேண்டிய அளவிற்கு மதுவைப் பருகவைத்து, நல்ல அங்கியை அணிவித்து, வாசனை திரவயங்கள் தடவி உட்கார வைத்தார். ஒரு மாட்டை அறுத்து விருந்திற்கு ஏற்பாடுகளைச் செய்து, முஹம்மதின் பெரிய தகப்பனார்களுக்கும் அழைப்பு கொடுத்தார். அவர்கள் வந்த பிறகு, குடிபோதையிலிருந்த கதீஜாவின் தகப்பனார் குவைலித் (என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல்), கதீஜாவை முஹம்மதிற்கு திருமணம் செய்து வைத்தார். போதை நீங்கியதும் அவர் கேட்ட முதல் கேள்வி, “இந்த மாட்டிறைச்சி, வாசனை திரவயங்கள் கோடுபோட்ட புதிய அங்கி இவைகள் இங்கு வந்ததெப்படி?” என்றார். அதற்கு கதீஜா, “நீங்கள் தானே என்னை முஹம்மது பின் அப்துல்லாவிற்கு திருமணம் முடித்து வைத்தீர்களே தெரியவில்லையா?” என்றார்.
“நான் அப்படி ஒன்றும் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன். மெக்காவிலேயே சிறந்த ஆண்கள் இருக்கையில், வேறொருவருக்கு மணம் முடித்து வைக்க என்னால் முடியாது. என் அருமை மகளை முஹம்மதுவைப் போன்ற ஊர்சுற்றி, வெறும் பயலுக்கு எப்படி மணம் செய்து வைத்திருக்க முடியும்?” என்றார்.
முஹம்மதின் பெரிய தகப்பன்மார்கள் கோபமடைந்து, இந்த உறவை ஏற்படுத்தியதே உங்கள் மகள் கதீஜாதான் என்றனர். கதீஜாவின் தந்தை வாளை உறுவினார். இருதரப்பும் சண்டைக்குத் தயாரானார்கள் . நிலைமை வீபரீதமாவதை உணர்ந்த கதீஜா நடந்தவைகளைக் கூறி தன்னுடைய திட்டத்தை ஒப்புக் கொண்டவுடன், அவரது தப்பனாரால் எதுவும் பேச முடியாமல் போனது. பின், இருதரப்பும் சமாதான பேச்சுவார்த்தைகளைத் துவங்கின.
இவர்களின் திருமணம் கிபி 595 ல் நிகழ்ந்தது. கதீஜா அம்மையாரின் பெரும் செல்வமும் முஹம்மது நபியின் நிர்வாகத்தின் கீழ்வந்தது. கதீஜா அம்மையாரின் வயது ஏறக்குறைய நபி (ஸல்) அவர்களின் தாய்க்கு சமமான வயது. இவர்களுக்கு காசிம், தைய்யிப், தாஹிர் என்ற ஆண் குழந்தைகளும், ஜைனப், ருக்கையா, உம்மு குல்தும் மற்றும் ஃபாத்திமா என்ற பெண் குழந்தைகளும் இருந்தனர், ஆண் மக்கள் குழந்தைப் பருவத்திலேயே இறந்ததால் நான்கு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். கதீஜா அவர்களுடனான திருமண வாழ்க்கையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தனிமையை நாடி ஹீரா குகையில் இருப்பதையே விரும்பினார்.
குடும்பத்தையும், கதீஜா அவர்கள் திறம்பட நிர்வகித்து வந்த வியாபாரத்தையும் முஹம்மது நபி (ஸல்) சரியாக கவனிக்கவில்லை. அவர் தனது குடும்பத்திற்காக எவ்விதமான வியாபாரத்திலோ அல்லது தொழிலிலும் ஈடுபடவில்லை. குழந்தைகளையும், பொறுப்பின்றி இருக்கும் கணவனையும் வியாபாரத்தையும் ஒருசேர கதீஜாவால் கவனிக்க முடியவில்லை. இதன் காரணத்தால் கதீஜாவின் வியாபரம் நொடிந்து, சுமார்36,800கோடிரூபாய் மதிப்புடைய செல்வங்கள் அனைத்தும் கரைந்து குடும்பம் தரித்திர நிலையைடைந்தது. இவ்வளவு செல்வத்தையும் ஒன்றுமில்லாமல் செய்தது முஹம்மது நபியின் மகத்தான சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இறுதிக் காலத்தில் அணிவதற்குக் கூட நல்ல ஆடைகளின்றி, மிகவும் வறுமையில் வாழந்தாகவும் ஹதீஸ்கள் கூறுகிறது. இன்றைய நிலவரப்படி இந்திய மதிப்பில் சுமார்264,000 கோடிருபாய்களை இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்துள்ளார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பதிமுன்று ஆண்டுகள் பிரச்சாரத்தில்,264,000 கோடிசெலவு செய்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் என்பதிற்கும் குறைவான அவர்களையே இஸ்லாமில் இணைக்க முடிந்துள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் நிறைந்திருக்கும் முரண்பாடுகளுக்கு இதுவும் ஒரு உதாரணம். அன்றைய மெக்கா நகரத்தில் ஆயிரம் குடும்பங்கள் இருந்ததாகக் கொண்டாலும் முஹம்மது நபி தனது பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும்264கோடிரூபாய்களை செலவு செய்ததாகவே பொருள் தருகிறது. ஒரு கோடி ரூபாய் என்பது இன்றைய காலத்திலும் மிகப்பெரிய செல்வம்தான் அப்படியானால், ஆயிரக் கணக்கானவர்கள் மிகப்பெரும் செல்வத்தில் திளைத்திருக்க வேண்டும், பெரும் பணக்காரர்கள் நிறைந்த நகரமாக மெக்கா மாறியிருக்க வேண்டுமே? இப்படியொரு மாற்றம் நிகழ்ந்ததா? உங்களால் இந்தச் செய்தியை நம்பமுடிகிறதா?
கதீஜா கிபி619அல்லது623-ல் மரணமடைந்தார் குறிப்பிடப்படுகிறது. கதீஜா அவர்களின் மரணத்திற்கு பிறகு ஒரு சில மாதங்கள் தனிமையில் வாழ்ந்தார். நபி (ஸல்) அவர்களுக்கு, நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் பலம் கதீஜா அம்மையாரின் மரணத்திற்கு பிறகே வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால், கதீஜாஅவர்கள் உயிருடன் இருந்தவரை வேறு எந்த பெண்ணையும் அவர் நாடிச் சென்றதாக ஆதாரங்கள் எதுவுமில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
செவ்வாய், ஏப்ரல் 29, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...