தன் இனம் அழியும் ஆபத்து வரும்போது அது சார்ந்த இனம் எப்படி துடிக்க வேண்டும்..
அந்த இனத்தின் பாதுகாப்பிற்கு எவ்வாறு கவலைப்பட வேண்டும் என்று குர்ஆனில் தன் வசனங்களின் கொண்டு பாடம் எடுக்கிறான் இறைவன்...
இதைப் பார்த்தாவது மனிதன் படிப்பினை பெற வேண்டும்
படிப்பினை பெறாத மனிதன் மிருகத்தை விட கேவலமானவன்
(ஒருமுறை ஸுலைமான் அப்படைகளுடன் சென்று கொண்டிருந்தார்.) அவர்கள் அனைவரும் எறும்புகளின் பள்ளத்தாக்கிற்கு வந்தபோது ஓர் எறும்பு கூறியது: “எறும்புகளே! உங்களுடைய புற்றுகளில் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய படையினரும் தெரியாமல் உங்களை மிதித்துவிடக்கூடாது.”
(அல்குர்ஆன் : 27:18)
தெரியாமல் தன் இனம் அழிந்து விடக்கூடாது என்று கவலைப்படும் எறும்பைவிட அற்பமாகி விட்டான் மனிதன்
ஆம்
இன்று தன் இனம் ஈவு இரக்கமற்று தெரிந்தே அழிக்கப்படுகிறது ஆனால் அது சார்ந்த சமூகம் எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை...
இறைவன் பாதுகாக்க வேண்டும்.
எறும்பை விட
அற்ப்பமாகி விட்டானா மனிதன்?
ஐந்தறிவு படைப்பினத்தைக் கொண்டு மனிதன் உணர்வு பெற வேண்டும் என்பதற்காக வேண்டி இறைவன் காட்டும் உதாரணங்கள் ஏராளம் சிந்தனை செய் மனிதா