ஆஷுரா நோன்பின் மாண்புகள்
இஸ்லாமிய வருடப்பிறப்பின் முதல் மாதமான முஹர்ரம் மாதம் புனிதமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும்.இந்த மாதத்தின் சிறப்பிற்குரிய நாளான ஆஷூரா, அல்லாஹ்سبحانه وتعالى நமக்கு வழங்கியுள்ள அருட்கொடையாகும்.
ஆஷூரா - عَاشُورَاءَ என்ற அரபிச் சொல்லுக்கு ‘பத்தாவது' என்று பொருளாகும்.இதனடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 10 – ம் நாளின் ஆஷூரா நோன்பிற்கு மகத்தான முக்கியத்துவத்தை இஸ்லாம் அளித்துள்ளது.
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அல்லாஹ்வுடைய (பதிவுப்)புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அதில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய) நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். (அத்தவ்பா:36)
நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்:-
الزَّمَانُ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ: ذُو القَعْدَةِ وَذُو الحِجَّةِ وَالمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ، الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய)நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களைக் கொண்டதாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்)மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை.அவை துல்கஅதா,துல்ஹஜ்,முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதுல் ஆஹிருக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். (அபூபக்ரா(ரலி),புகாரி)
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا اليَوْمَ، يَوْمَ عَاشُورَاءَ، وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிட சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி صلى الله عليه وسلمஅவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!" (புகாரி)
سُئِلَ: أَيُّ الصَّلَاةِ أَفْضَلُ بَعْدَ الْمَكْتُوبَةِ؟ وَأَيُّ الصِّيَامِ أَفْضَلُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ؟ فَقَالَ: أَفْضَلُ الصَّلَاةِ، بَعْدَ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ، الصَّلَاةُ فِي جَوْفِ اللَّيْلِ، وَأَفْضَلُ الصِّيَامِ بَعْدَ شَهْرِ رَمَضَانَ، صِيَامُ شَهْرِ اللهِ الْمُحَرَّمِ
நபிصلى الله عليه وسلمஅவர்களிடம் "கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிصلى الله عليه وسلمஅவர்கள், "கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும்" என்று விடையளித்தார்கள். (அபூஹுரைரா(ரலி), முஸ்லிம்)
كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ، وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الكَعْبَةُ [ص:149]، فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ، وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ
ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள்.அதுதான் கஅபாவுக்குப் புதிய திரைச் சீலை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, (ஆஷுராவுடைய)நோன்பு நோற்க விரும்புகிறவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! அதைவிட்டுவிட விரும்புகிறவர் அதைவிட்டு விடட்டும்!' என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். (ஆயிஷா(ரலி), புகாரி)
أَنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانُوا يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ، وَأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَامَهُ، وَالْمُسْلِمُونَ قَبْلَ أَنْ يُفْتَرَضَ رَمَضَانُ، فَلَمَّا افْتُرِضَ رَمَضَانُ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ عَاشُورَاءَ يَوْمٌ مِنْ أَيَّامِ اللهِ، فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ
அறியாமைக்கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபிصلى الله عليه وسلمஅவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது நபிصلى الله عليه وسلمஅவர்கள், 'நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம்' என்று கூறினார்கள்.
(இப்னு உமர்(ரலி),முஸ்லிம்)
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا قَدِمَ المَدِينَةَ، وَجَدَهُمْ يَصُومُونَ يَوْمًا، يَعْنِي عَاشُورَاءَ، فَقَالُوا: هَذَا يَوْمٌ عَظِيمٌ، وَهُوَ يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى، وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالَ «أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ» فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ
நபிصلى الله عليه وسلمஅவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா(அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்.ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்)மூழ்கடித்தான்.ஆகவே,மூஸா(அலை)அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபிصلى الله عليه وسلمஅவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
(இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி)
حِينَ صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا: يَا رَسُولَ اللهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ» قَالَ: فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ، حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
நபிصلى الله عليه وسلمஅவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு நபிصلى الله عليه وسلمஅவர்கள், "இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் நபிصلى الله عليه وسلمஅவர்கள் மரணித்துவிட்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி), முஸ்லிம்)
…وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ؟ فَقَالَ: يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ
நபிصلى الله عليه وسلمஅவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்கு பரிகாரமாகும் என்றார்கள். (அபூகதாதா (ரலி), முஸ்லிம்)��"முஹர்ரம் மாதம் பிறை (9-10) நாளில் தாஸூஆ-ஆஷுறா நோன்பின் சிறப்புகளும்,அத்தினத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும்"��
♦புனித முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் நாள் மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தும். அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும். இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். இது சம்மந்தமான ஹதீதுகள் பின்வருமாறு.
��ஆஷுரா நோன்பின் சிறப்புகள்
1⃣ ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை. இந்த மாதத்தை (ரமழான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்.
(புகாரி,முஸ்லிம்)
2⃣ ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
3⃣ ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
குறிப்பு : மேல்கூறப்பட்ட ஹதீதில், முன் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது சிறு பாவங்களையே குறிக்கும். பெரும்பாவங்களுக்காக தவ்பா செய்வது அவசியமாகும். இதுவே அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.
��ஆஷுரா நோன்பு நோற்பது பற்றி ஆர்வமூட்டும் ஹதீதுகள்
1⃣ நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்றிருப்பதை பார்த்து, இது என்ன? என வினவினார்கள். அதற்கு அவர்கள், மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் (ஃபிர்அவ்னிடமிருந்து) அல்லாஹ் காப்பாற்றிய ஒரு நல்ல நாளாகும் என்றார்கள், (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்று உங்களைவிட மூஸா (அலை) அவர்கள் விடயத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி (தன் தோழர்களுக்கும்) ஏவினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில்: (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் நாங்களும் நோன்பு நோற்போம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்னும் ஒரு அறிவிப்பில்: அந்த நாளை கண்ணியப்படுத்துவதற்காக நாம் நோன்பு நோற்போம் என்றார்கள்.
2⃣(பின்வரும் அறிவிப்பை) மக்களுக்கு அறிவிக்கும்படி அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யாராவது உணவு உன்றிருந்தால் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும். யாராவது (இதுவரை) உண்ணவில்லையானால் அவர் நோன்பை நோற்கட்டும், காரணம் இன்றைய தினம் ஆஷுரா தினமாகும். (புகாரி, முஸ்லிம்)
3⃣ ஆஷுரா தினம் யூதர்கள் கண்ணியப்படுத்தும் தினமாகவும் பெருநாளக கொண்டாடும் தினமாகவும் இருந்தது, ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
��ரமழான் மாத நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பு பற்றிய நிலை
1⃣ ரமழான் (நோன்பிற்கு) முன் ஆஷுர நோன்பு (அவசியமாக) நோற்கப்படக்கூடிய ஒன்றாக இருந்தது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் அதை நோற்றார்கள். விரும்பியவர்கள் அதை விட்டார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
2) ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பை நாங்கள் நோற்கும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது அவர்கள் அதை ஏவவுமில்லை தடுக்கவுமில்லை நாங்கள் அதை நோற்றுக் கொண்டிருந்தோம் என கைஸ் இப்னு ஸஃது இப்னு உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)
குறிப்பு : மேல் கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து விளங்கக்கிடைக்கும் விடயம், ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு நோற்பது அவசியமான ஒன்றாக இருந்தது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் அவசியம் என்பதுதான் எடுபட்டதே தவிர அது நோற்பது அதிக நன்மையை எதிர்பார்க்கக் கூடிய பாவங்களை போக்கக்கூடிய சுன்னத் என்பது எடுபடவில்லை, நபி (ஸல்) அவர்கள் ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டார்கள் என்பதின் கருத்து, அது அவசியம் என்பதைத் தவிர சுன்னத்து என்பதையல்ல. அது இதுவரையும் சுன்னத்தாகவே இருக்கின்றது என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல்பாரி என்னும் தனது நூலில் குறிப்பிடுகின்றார்கள்
��பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
1⃣ அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
2⃣ ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள்.
(முஸ்லிம்)
3⃣ ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒரு நாள் அல்லது அதற்கு பின் ஒரு நாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்னறார்கள்.
(அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி,)
குறிப்பு : மேலே கூறப்பட்ட மூன்றாவது ஹதீஸின் தரம்
இந்த ஹதீது மேல் கூறப்பட்ட கிரந்தங்களிலும் இன்னும் பல கிரந்தங்களிலும் பதியப்பட்டிருந்தாலும் இந்த ஹதீது பலவீனமானதாகும். இதில் தாவூத் இப்னு அலி என்பவரும்
முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவர் இடம் பெற்றிருக்கின்றார், இவர்கள் பலவீனமானவர்கள் என்று கருதப்படுகின்றது.
எது எப்படி இருந்தாலும் முஹர்ரம் 9ம்த நாள் நோன்பு வைக்க தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் முஹர்ரம் 10/11ம் நாள் நோன்பு நோற்பது கூடும். ஏனெனில் யூதர்களுக்கு மாறு செய்வதற்காக வேண்டித்தான் ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத் என்றார்கள். எனவே 9ம் நாள் தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் அந்த மாறு செய்வதை 10/11ம் நாளிலும் செய்யலாம் “எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்” என்ற ஹதீதை ஆதாரமாக வைத்து ஒன்பதாம் நாளையும் பத்தாம் நாளையும் நோன்பு நோற்பதே மிகச் சிறந்த முறையாகும்
��ஆஷூறா தினம் அதிவிஷேடங்களை உள்ளடக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நாளாகும் இதனால்தான் இந்நாளை முஸ்லிம்கள் விஷேட நாளாக அமைத்துள்ளார்கள்.
1) நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஆதம் (அலை) அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்து அவரை ஏற்றுக் கொண்டான்.
2) நபீமார்கள் அனைவரும் நபிப்பட்டம் கிடைத்த பின்னும்,அதற்கு முன்னும் குற்றம் செய்யாதவர்களாயிருக்கும் பட்சத்தில் ஆதம் நபீ செய்த குற்றம் என்ன என்ற கேள்விக்கு இத்துண்டுப் பிரசுரத்தில் விளக்கம் சொல்ல முடியாதுள்ளது
3) இன்றுதான் நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பல் ஜூதி எனும் மலையில் தரை தட்டியது. இந்தக் கப்பல் தூபான் என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயம் நூஹ் நபீ (அலை) அவர்களால்தான் செய்யப்பட்டது. ஜூதி மலையில் தட்டிய கப்பலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். ஜூதி மலை இன்னும் இருக்கிறது. இந்த மலையில் நபீ நூஹ் (அலை) அவர்கள் கட்டிய பள்ளிவாயல் ஒன்று இன்றும் அவ்வாறே இருக்கிறது. மனிதர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அதைப் பார்த்து வருகிறார்கள்.இன்றுதான் நபீ மூஸா (அலை) அவர்களும், நபீ ஈஸா (அலை) அவர்களும் பிறந்தார்கள்.இன்றுதான்
4) நும்றூத் எனும் சர்வாதிகாரி நபீ இப்றாஹீம் (அலை) அவர்களை நெருப்புக் கிடங்கில் எறிந்தான்
5)இன்றுதான் நபீ யூனுஸ்(அலை) அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது
6)இன்றுதான் நபீ ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நீங்கியது.
7)இன்றுதான் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் இழந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
8)இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்டிருந்த நபீ யூசுப் (அலை) அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
9)இன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நாள்
10)இன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்த நாள்
11)இன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியிலுள்ளவர்களுக்கு முதன் முதலில் இறங்கியது
12)நபீ நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் பின்பு முதன் முதலாகஇப்பூமியில் சமையல் செய்யப்பட்டது பத்தாம் நாளான ஆஷூறா தினம்தான்.
நபீ நூஹ் (அலை) அவர்கள்தான் முதலில் சமையல் செய்தார்கள்
13)இன்றுதான் சுலைமான் நபீ (அலை) அவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
14)இன்றுதான் நபீ ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) மகனாகப் பிறந்தார்கள்.
15)இன்றுதான் நபீ மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னையும், அவனுடைய சூனியக்காரர்களையும் தோற்கடித்தார்கள்
16)இன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கி இறந்தான்.
17)இன்றுதான் நபீ பேரர் ஹுஸைன் (ரழி) ஷஹீதாக்கப்பட்டார்கள்
18)இன்றுதான் அஹ்லுல்பைத் என்று அழைக்கப்படுகின்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் இனபந்துக்களில் அநேகர் கொலை ஷஹீதாக்கப்பட்டார்கள்.
1⃣ “ஆஷூறா” தினத்தில் ஒருவன் தனது குடும்பத்தவர்களையும்,உறவினர்களையும் பேணி நடந்தால் அல்லாஹ் அவனுக்கு அருள் நிறைந்த விசாலமான வாழ்வைக் கொடுக்கிறான் என்றும், அந்த வருடம் முழுவதும் அவனுக்கு அளவற்ற அருள் செய்கிறான் என்றும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
“அல்பறகா” எனும் நூலில் இது பற்றிக் கூறுகையில் ஐம்பது ஆண்டுகளாக இந்த விடயத்தை நாங்கள் பரீட்சித்து வருகிறோம். எந்த மாற்றமுமின்றிச் சொன்னபடியே நடந்து வருகிறதென்று ஆத்ம ஞானி சுப்யான் தௌரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்
1⃣ இம்மாதத்தின் நான்காம் நாள் நஜ்றான் வாசிகளான நஸாறாக்களுடன் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்
2⃣ இம்மாதத்தின் ஏழாம் நாள் நபீ யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வெளியேறிய நாளாகும்
3⃣ இம்மாதத்தின் பதினேழாம் நாள் உஹது யுத்தம் நடந்த நாளாகும்
4⃣ இம்மாதத்தின் பதினேழாம் நாள்தான் நபீ மணி ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.
��ரமழான் மாதத்தில் நோற்கத் தவறிய கழா நோன்புள்ளவர்களும் நேர்ச்சை நோன்புள்ளவர்களும் தாஸூஆ - ஆஷூறா ஒன்பதாம் பத்தாம் நாட்களில் தம்மீதுள்ள கழா அல்லது நேர்ச்சை நோன்பு நோற்றால் அவர் நோற்ற நோன்பு நிறைவேறுவதுடன் இவ்விரு சுன்னத்தான நோன்புகளின் நன்மையும் கிடைக்கும், ஆனால் நிய்யத் வைக்கும் பொழுது பர்ழான ரமழான் நோன்பு என்றும், நேர்ச்சை நோன்பு என்றும் நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும்.
கழா நோன்பு அல்லது நேர்ச்சை நோன்பு இல்லாதவர்கள் ஆஷூறா - தாஸூஆ நோன்பு என்று நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும். எனவே, இம்மாதத்தின் ஒன்பதாம்,பத்தாம் நாட்களில் நோன்பு நோற்றும், குடும்பத்தவர்கள் உறவினர்களைப் பேணியும்,ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் முதலியன வழங்கியும் நல்லடியார்களில் சேர்வோமாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் யாரப்பல்