அண்ணல்நபி (ஸல்)அவர்களுக்கு விஷம்கொடுத்த யூதப்பெண்
அகிலத்தின்பேரொளி
*அண்ணல்நபி*
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு
"ஒரு யூதப்பெண்
விஷம் கலந்த
ஒரு ஆட்டை
அன்பளிப்பாக
கொடுத்தாள்."
"அண்ணல்
நபியவர்கள்
அந்த ஆட்டின்
இறைச்சியைசிறிது
சாப்பிட்டார்கள்."
"அதில் விஷம்
கலக்கப்பட்டு
இருப்பதைதெரிந்து கொண்டார்கள்."
உடனே "ஸஹாபாக்களைப் பார்த்து இதைச் சாப்பிடாதீர்கள்"
என தடுத்தார்கள்.
ஆனால்
*"பிஷ்ர்இப்னுபர்ரா*
(ரலி) அவர்கள்
என்ற ஸஹாபி
இறைச்சியை முழுமையாக சாப்பிட்டதால்
இறந்துபோய் விட்டார்கள்.!"
பின்பு "அந்த
யூதப்பெண்ணை அழைத்து
ஏன் இவ்வாறு
செய்தாய்.?"எனக்
கேட்டார்கள்.
"நான் உங்களை கொல்வதற்கு
விரும்பினேன்."
என்று திமிராக பதில்சொன்னாள்.
உடனே
கொதித்து போன
ஸஹாபாக்கள்
அவளைக் கொல்வதற்கு
அனுமதி கேட்டார்கள்."
*"கருணைநபி*
(ஸல்) அவர்கள்
வேண்டாம் என
தடுத்து அவளுக்கு மன்னிப்பு அளித்து விட்டார்கள்.!"
(ஆனால் பிஷ்ர்இப்னு
பர்ரா (ரலி) அவர்களின் குடும்பத்தினர் அவளை மன்னிக்க மாட்டோம் அவளுக்கு தண்டனை தந்தேஆகவேண்டும்
என்றுசொன்னதால்
அவளுக்குமரணதண்
டனைவிதிக்கப்பட்டது.)
*அண்ணல்நபி*
(ஸல்) அவர்கள்
விஷம்கலக்கப்பட்ட
இறைச்சியை
சாப்பிட்டதினால்.."
"அவர்களின்
உள்நாக்கின்
சதையில்
விஷத்தின் அடையாளத்தை பார்த்தேன். என
அனஸ் இப்னு மாலிக்
(ரலி)கூறுகிறார்கள்.
நூல்:முஸ்லிம்=4408
*அண்ணல்நபி*
*ஸல்லல்லாஹு* அலைஹிவஸல்லம்
அவர்களின்
இறுதிநேரம்...
ஆயிஷாவே!
கைபரில் போரில்
ஒரு யூதப்பெண்
விஷம் கலந்த
இறைச்சியை
கொடுத்தாள்
அல்லவா..."
"அதை
சாப்பிட்டதால்
தொடர்ந்துஅந்த
வேதனையை அனுபவித்து வருகிறேன்."
"அந்தவிஷத்தின்
காரணத்தால்
எனது இதய
இரத்தக்குழாய் அறுந்துபோவதை
நான்உணர்கிறேன்.!"
என்றார்கள்.
நூல்:புகாரி-4428