நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, ஜூன் 23, 2023

ஸெய்யிதுனா அபூ ஹனீபா அன்நுஃமான் ரழி,

ஸெய்யிதுனா அபூ ஹனீபா அன்நுஃமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்  இவர்கள் ஹிஜ்ரீ 699 இல் பிறந்து ஹிஜ்ரீ 767 மரணித்தார்கள் இவர்கள் மரணிக்கும் போது இவர்களின் வயது 68 ஆகும்.

 இவர்கள் நபிகள் நாயகத்தின் மீது அளவு கடந்த நேசம் கொண்டவர்களாவர்  பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மீது தாங்கள் கொண்ட காதலை வெளிப்படுத்தும் முகமாக ஒரு காதல் பாடல் ஒன்றை இயற்றினார்கள் அதனை அவர்கள் ஒவ்வொரு நாளும் பாடி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களோடு காதல் உரையாடல் செய்வார்கள் அந்த பாடல் வேறு எந்த மனிதருக்கும் தெரியாது அவர்கள் யாரிடமும் அந்த பாடலை பாடிக்காட்டவும் இல்லை இப்படியே சில காலங்கள் உருண்டோடின.

 ஒரு நாள் நபிகள் நாதர் வாழும் மதீன மாநகருக்கு செல்லும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது இதனை நினைத்து அவர்கள் பெரு மகிழ்ச்சியடைந்து மதீனாவை நோக்கி பயணம் செய்தார்கள் மதீனாவை வந்தடைந்ததன் பின்னர் அங்கே தொழுவதற்காக பாங்கோசையை எதிர்பார்த்து பள்ளிவாயலில் காத்திருந்தார்கள் அப்போது அங்கே பாங்கு சொல்கின்ற இடத்தில் பாங்கு சொல்கின்ற முஅத்தின் தான் யாரிடமும் கூறாமல் இரகசியமாக நாயகத்தை துதித்து வந்த அந்த பாடலை அவர் பாடுவதை கேட்டு ஆச்சரியமடைந்து அதிர்ச்சியானார்கள்.

 நான் யாரிடமும் சொல்லாமல் இயற்றிய எனக்கு மட்டும் தெரிந்த அந்த பாடல் மதீனாவில் இருக்கும் இந்த முஅத்தினுக்கு எப்படி தெரியும் யார் கூறியிருப்பார்? என்ற கேள்விகள் எழ அரம்பித்தன இறுதியில் அவரிடமே சென்று நாம் விசாரிப்போம் என்று அந்த முஅத்தினை எதிர்பார்த்திருந்தார்கள் அப்போது முஅத்தின் வந்தார் அவரை சந்தித்த அபூ ஹனீபா தாங்கள் பாடிய பாடல் யாருக்கு சொந்தமானது? என்று கேட்டார்கள் அப்போது அந்த முஅத்தின் இது இமாம் அபூ ஹனீபா அன்நுஃமான் அவர்களுக்குரியது என்று கூறினார் அவர் யார்? என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்கள் இமாம் அபூ ஹனீபா அன்நுஃமான்.

 அதற்கு அந்த முஅத்தின் இல்லை எனக்கு அவரை தெரியாது என்று கூறினார் இந்த பாடலை நீங்கள் யாரிடமிருந்து அறிந்து கொண்டீர்கள்?  என்று கேட்டார்கள் அதற்கு அந்த முகத்தின் என் கனவில் ஒரு முறை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தோன்றினார்கள் அவர்களின் திரு சன்நிதானத்தில் வைத்து இந்த பாடல் பாடப்பட்டது அதை நான் அக்கணமே மனனம் செய்து கொண்டேன் அதை நான் இந்த இடத்தில் பாடி பெருமானாரோடு உரையாடுவேன் என்று கூறினார் அந்த முஅத்தின்  இதனை கேட்ட அபூ ஹனீபா அன் நுஃமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதார்கள் உடனே தான் இயற்றியதும் அந்த முஅத்தின் நாயகத்தின் சன்நிதானத்தில் மனனம் செய்த பாடலுமாகிய அந்த பாடலை பாடினார்கள்.

இதோ அந்த பாடல்:

🌹يَا سَيِّدَ السَّادَاتِ جِئْتُكَ قَاصِدًا​
                  أَرْجُوْ رِضَاكَ وَأَحْتَمِيْ بِحِمَاك​َ
ஸாதாத்துமார்களின் தலைவரே உங்களை நாடிய நிலையில் உங்களிடம் வந்தேன் உங்கள் பொருத்தத்தை ஆதரவு வைக்கிறேன் உங்கள் பாதுகாப்பு கொன்டு நான் பாதுகாப்பு தேடுகிறேன்.

🌹​وَاللّٰهِ يَا خَيْرَ الْخَلَائِقِ إِنَّ لِي​ْ 
                      قَلْبًا مُشَوِّقًا لَا يَرُوْمُ سِوَاك​َ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக எனக்கு காதல் செய்யும் உள்ளம் இருக்கிறது அது உங்களை தவிர வேறெதையும் நாடாது

🌹​وَبِحَقِّ جَاهِكَ إِنَّنِيْ بِكَ مُغْرِم​ٌ
                           وَاللّٰهُ يَعْلَمُ أَنَّنِيْ أَهْوَاك​َ
உங்களின் உயர் பதவி கொண்டு நிச்சயமாக நான் உங்களை பற்றிப்பிடித்திருக்கிறேன் இன்னும் இறைவன் நான் உங்களை அதிகமாக நேசிப்பவன் என்பதனை அறிந்தவன்

🌹​أَنْتَ الَّذِيْ لَوْلَاكَ مَا خُلِقَ اِمْرُؤ​ٌ
                      ​كَلَّا وَلَا خُلِقَ الْوَرَى لَوْلَاك​َ
நீங்கள் எத்தகையவர்கள் எனின் நீங்கள் இல்லையென்றால் எந்த மனிதனும் ஏன் எந்த படைப்பும் படைக்கப்பட்டிருக்காது
 
🌹​أَنْتَ الَّذِيْ مِنْ نُوْرِكَ الْبَدْرُ اِكْتَسَى​
                    ​وَالشَّمْسُ مُشْرِقَةٌ بِنُوْرِ بَهَاك​َ
நீங்கள் எத்தகையவர்கள் எனின் உங்களுடைய ஒளியிலிருந்தே சந்திரன் அணிந்து கொண்டது இன்னும் சூரியனும் உங்களுடைய பிரகாச ஒளியை கொண்டே ஒளிவீசுகிறது

🌹​أَنْتَ الَّذِيْ لَمَّارَفَعْتَ إِلَى السَّمَاء​ِ
                 بِكَ قَدْ سَمَتْ وَتَزَيَّنَتْ لِسُرَاك​َ
நீங்கள் எத்தகையவர்கள் எனின் நீங்கள் மிஃறாஜுடைய இரவில் வானத்திற்கு சென்ற போது உங்கள் வருகைக்காக அது அழகு படுத்தப்பட்டது இன்னும் அது உயர்ந்து விட்டது

🌹​أَنْتَ الَّذِيْ نَادَاكَ رَبُّكَ مَرْحَبًا​
                       ​وَلَقَدْ دَعَاكَ لِقُرْبِهِ وَحَبَاك​َ
நீங்கள் எத்தகையவர்கள் எனின் உங்களுடைய இறைவன் உங்களை வரவேற்றான் இன்னும் அவனுடைய நெருக்கத்திற்காக உங்களை அழைத்தான் இன்னும் உங்களுக்கு கொடைகளை அருளினான்

🌹​أَنْت الَّذِيْ فِيْنَا سَأَلْتَ شَفَاعَة​ً
                       ​نَادَاكَ رَبُّكَ لَمْ تَكُنْ لِسِوَاك​َ
நீங்கள் எங்களுடைய விடயத்திலே பரிந்துரைசெய்வதை கேட்பீர்கள் உங்களுடைய இறைவன் உங்களை அழைப்பான் அந்த பரிந்துரை உங்களை தவிர வேறு யாருக்கும் சொந்தமல்ல

🌹​أَنْتَ الَّذِيْ لَمَّا تَوَسَّلَ آدَم​ُ
                      ​مِنْ زَلَّةٍ بِكَ فَازَ وَهُوَ أَبَاك​َ
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த தவறிலிருந்து உங்களை கொண்டே உதவிதேடி வெற்றி பெற்றார்கள் அவர்களுமோ உங்களுடைய உடலின் தந்தையாக இருக்கும் நிலையில்

🌹​وَبِكَ الْخَلِيْلُ دَعَا فَعَادَتٔ نَارُه​ُ
                    ​بَرْدًا وَقَدْ خَمِدَتْ بِنُوْرِ سَنَاك​َ
உங்களை கொண்டே இறைவனின் நண்பர் இப்றாஹீம் அழைத்தார் நெருப்பு குளிர்சியாக மாறியது உங்களின் பிரகாச ஒளியை கொண்டே அது அணைந்து போனது 

🌹​وَبِكَ الْمَسِيْحُ أَتَى بَشِيْرًا مُخْبِرًا​
                   بِصِفَاتِ حُسْنِكَ مَادِحًا لِعُلَاك​َ
உங்களை கொண்டே நபீ ஈஸா சுபச் செய்தி சொல்பவராகவும் உங்களின் அழகிய தன்மைகளை அறிவிக்கக்கூடியவராகவும் உங்களின் உயர்வை பற்றி புகழக்கூடியவராகவும் வந்தார்கள்

🌹​وَكَذَاكَ مُوْسَى لَمْ يَزَلْ مُتَوَسِّلآ​
                  بِكَ فِيْ الْقِيَامَةِ مُحْتَمٍ بِحِمَاك​ِ
அவ்வாறுதான் நபி மூஸாவும் மறுமை நாளில் உங்களை கொண்டு உதவி தேடுவார் உங்களுடைய பாதுகாப்பை கொண்டு பாதுகாப்பு தேடுவார்

🌹​وَالْأَنْبِيَاءُ وَكُلُّ خَلْقٍ فِيْ الْوَرَى​ 
                 وَالرُّسُلُ وَالْأَمْلَاكُ تَحْتَ لِوَاك​َ
எல்லா நபிமார்களும் இன்னும் எல்லா படைப்புக்களும் ரஸுல்மார்களும் அரசாட்சி கொண்டவர்களும் உங்கள் கொடிக்கு கீழேதான் இருப்பார்கள்.

இந்த அருள்மிகு பாடல் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் ரவ்ழா ஷரீபினுல் எழுதப்பட்டிருக்கிறது இந்த பாடலை ஒருவர் தொடர்ந்து பாடி பெருமானாரோடு உரையாடும் பட்சத்தில் நாயகத்தின் நெருக்கமும் காட்சியும் உண்டாகும் ...


பிரபல்யமான பதிவுகள்