ஓதிப் பார்ப்பதின் மகத்துவம்
இஸ்லாத்தில் ஜின்கள் மனிதனுள் புகுந்தால் ஓதி பார்க்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.
அல்லாஹ்வின் அற்புத படைப்புகளில் ஜின்களும் ஒன்றாகும் இதை பற்றி அல்குர்ஆனிலும் ஸஹீஹான பல ஹதீஸ்களிலும் நம்மால் காண முடியும்.
ஜின்கள் மனிதர்களை விட மிகவும் ஆற்றல் மிக்க ஒரு படைப்பு ஆகும் இவர்கள் நம்முடைய கண்களுக்கு புலப்பட மாட்டார்கள் ஆனால் அவர்களின் கண்களுக்கு நாம் தெரிவோம் *!*
ஜின்கள் மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சில காரணங்களால் தீங்கு ஏற்படுத்தும் அது உள்ளம் உடல் சார்ந்ததாக இருக்கலாம் *!*
📗 *இதற்கு பல ஹதீஸ்கள் உள்ளன* ‼️
நம்மில் பலருக்கு இதில் இருந்து குணம் ஆக வழி தெரியாததால் பல மக்கள் சூனியகாரர்கள் காஃபிர்கள் ஜோதிடம் பார்க்க கூடியவர்கள் போன்றவர்களிடம் இதற்கு தீர்வு தேடி செல்லுகிறார்கள் *!* அவர்களும் சில கண்கட்டி வித்தைகளை காட்டுகிறார்கள் *!*
*இது ஷிர்க் ஆன செயல் ஆகும்*
நாம் இவர்களிடம் இவ்வாறு செய்ய கூடாது என்று எடுத்து கூறினால் அவர்கள் கேள்வி இதற்க்கு மார்க்கம் கூறும் தீர்வு தான் என்ன❓அதற்க்கு வழி தெரியாமல் தான் நாங்கள் இவ்வாறு செல்லுகிறோம் என்று கூறுகிறார்கள் *!*
இது தற்பொழுது மட்டும் அல்ல ஆரம்ப காலத்திலும் இந்த பிரச்சனை இருந்தது ஜின்கள் தீண்டுதல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் எப்படி அதை அணுக வேண்டும் ⁉️
ஜின்கள் மற்றும் ஷைத்தானின் தீண்டுதலை விட்டு பாதுகாப்பு பெற வழிகள் என்ன ❓
சூனியம், ஜின், ஷைத்தான் தீண்டுதல் போன்றவற்றை மார்க்கம் கூறிய முறையில் ஓதி பார்க்கும் முறை❓
💀 *ஜின்கள்* ⁉️
ஜின்கள் மறைவான ஒரு படைப்பு ஆகும் இதை முஃமின் பார்க்க வில்லை என்றாலும் அதன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் *!* இதை நம்ப மறுப்பது ஒருவனை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடும் *!*
📗 *அல்குர்ஆன் : 2 : 1 & 3*
*الٓمّٓ*
*அலிஃப், லாம், மீம்* அல்லாஹுதஆலா, வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக, நபி முஹம்மது ﷺ அவர்களுக்கு அருட்செய்ததிருக்குர்ஆனாகிய
📗 *அல்குர்ஆன் : 2:1*
*ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ*
இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறை அச்சம் உடையவர்களுக்கு இது நேரான வழியைக் காட்டும்.
📗 *அல்குர்ஆன் : 2:2*
*الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ*
அவர்கள் மறைவானவற்றை உண்டென்று நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் தவறாது கடைபிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கிய பொருள், செல்வம் போன்றவற்றிலிருந்து தானமாக செலவும் செய்வார்கள்.
📗 *அல்குர்ஆன் : 2:3*
*ஜின்கள் பற்றி அல்லாஹ் பல இடங்களில் அல்குர்ஆனில் கூறி உள்ளான் !*
📗 *அல்குர்ஆன் : 46 : 29 - 6 : 130 - 55 : 33 - 72 : 1 & 6*
*يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اَلَمْ يَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِىْ وَيُنْذِرُوْنَكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا قَالُوْا شَهِدْنَا عَلٰٓى اَنْفُسِنَا وَغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ*
இறைவன் மறுமையில் மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி *மனித, ஜின் கூட்டத்தார்களே !* உங்களில் தோன்றிய நம்முடைய தூதர்கள் உங்களிடம் வந்து நம்முடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்து நீங்கள் நம்மைச் சந்திக்கும் இந்நாளைப் பற்றியும் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா *?* என்று கேட்பான். அதற்கவர்கள் *எங்கள் இறைவனே ! உண்மைதான்* இவ்வுலக வாழ்க்கை எங்களை மயக்கி விட்டது என்று தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறுவதுடன், நிச்சயமாக தாங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்குத் தாமே எதிராக அவர்கள் சாட்சியம் கூறுவார்கள்.
📗 *அல்குர்ஆன் : 6:130*
*يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ*
*மனித, ஜின் கூட்டத்தார்களே !* நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், அவைகளை ஆட்சி புரியக்கூடிய மிகப்பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது.
📗 *அல்குர்ஆன் : 55:33*
*قُلْ اُوْحِىَ اِلَىَّ اَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوْۤا اِنَّا سَمِعْنَا قُرْاٰنًاعَجَبًا* ۙ
*நபியே !* நீங்கள் கூறுங்கள் *வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது*. மெய்யாகவே ஜின்களில் சிலர் இவ்வேதத்தைச் செவியுற்றுத் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி, *நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம்*.
📗 *அல்குர்ஆன் : 72:1*
*يَّهْدِىْۤ اِلَى الرُّشْدِ فَاٰمَنَّا بِهٖ وَلَنْ نُّشْرِكَ بِرَبِّنَاۤ اَحَدًا* ۙ
அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இனி நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம்.
📗 *அல்குர்ஆன் : 72:2*
*وَّاَنَّهٗ تَعٰلٰى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا* ۙ
நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது. அவன் எவரையும் தன்னுடைய மனைவியாகவோ, மக்களாகவோ எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார்கள்.
📗 *அல்குர்ஆன் : 72:3*
*وَّ اَنَّهٗ كَانَ يَقُوْلُ سَفِيْهُنَا عَلَى اللّٰهِ شَطَطًا* ۙ
பின்னும் அவர்கள் கூறியதாவது நிச்சயமாக நம்மிடமுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது அவனுடைய பரிசுத்தத் தன்மைக்குத் தகாத விஷயங்களைக் கூறுகின்றவனாக இருந்தான்.
📗 *அல்குர்ஆன் : 72:4*
*وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَى اللّٰهِ كَذِبًا* ۙ
மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ் மீது பொய் கூறமாட்டார்களென்று மெய்யாகவே இதுவரையில் நாங்கள் எண்ணிக் கொண்டு இருந்தோம்.
📗 *அல்குர்ஆன் : 72:5*
*وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ يَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا* ۙ
மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே தங்களை பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகரிக்கச் செய்துவிட்டனர்.
📗 *அல்குர்ஆன் : 72:6*
*யா அல்லாஹ்❗உனக்கு வழிபட்டு நடந்த கூட்டத்தில் எங்களை சேர்த்தருள்வாயாக*❗
*யா அல்லாஹ்❗எங்களை பொருந்திக் கொள்வாயாக* ❗
*ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்*