- எங்களின் இளமை காலங்களில் இஸ்லாமிய பாடல்களை பாடியஇசை முரசு இ.எம்.நாகூர் அனிபாஅவர்கள் எங்கள் நெஞ்சங்களில்நீங்காத இடம் பெற்றவர் ஆவார். பலஅன்னாரின் பாடல்களை இன்றயதலை முறையினர் அவசியம் கேட்கவேண்டும்.மற்ற சமூகத்தினரும் விரும்பி கேட்கும் அளவிற்கு இருந்தன. அவரின் பாடல்கள்இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை இஸ்லாமியர்கள்புரிந்து கொள்ள,அதன்படி நடந்துகொள்ள வலியுறுத்துவனாக இருந்தன.அன்னார் மறைந்து விட்டபோதிலும்அவர் பாடல்கள் என்றென்றும் ஒலித்துகொண்டு இருக்கும். எல்லாம் வல்ல இறைவன் அவர் செய்த பாவங்களைமன்னித்து சுவர்க்கத்தில் இடம் கொடுத்து அருள் புரிய துவா செய்வோம்.அன்னார் பாடிய பாடல்களின் பாடல்வரிகளை தொகுத்து கொடுத்து உள்ளேன் படித்து, பாடி பலன் பெறவும்.மேலும் இதை அனைவருக்கும்பகிரவும்.1.எல்லா புகழும் இறைவனுக்கு2.சொன்னால் முடிந்திடுமோ3.அல்லா அல்ஹம்து லில்லா4.ஆதி அருள் கனிந்திலங்கி அமரர்5.ஞனத்தின் திறவுகோல் நாயகம்6.கன்னியரே அன்னையரே கொஞ்சம்7.அல்லாவை நாம் தொழுதால்8.ஐந்து கடமைகளில் எத்தனை9.உலகம் இறைவனின் சந்தை மடம்10.ஃபாத்திமா வாழ்ந்த முறை11.தீனோரே நியாயமா மாறலாமா12.ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை13.மௌத்தையே நீ மறந்து14.ஒருநாள் மதீனா நகர் தனிலே15.இறைவனிடம் கையேந்துங்கள்இஸ்லாமிய பாடல்கள்——————————————————————————————1.எல்லா புகழும் இறைவனுக்குஎல்லா புகழும் இறைவனுக்குஎல்லா புகழும் இறைவனுக்குஅல்லா ஒருவனே துணை நமக்குதுணை நமக்கு…ஆற்றல் எல்லாம் கொண்டவனாம் அன்புஅருள் மழை எங்கும் பொழிபவனாம் (இசை)மாற்றம் எல்லாம் செய்பவனாம் நல்லமான் புகழ் தந்து காப்பவனாம்காற்றும் மழையும் கதிரவனும்காற்றும் மழையும் கதிரவனும்ஆற்றும் பணிகள் எல்லாம்அவன் செயலாம்அந்த வல்லோன் இறைவனை நாம்வணங்கிடுவோம் அவன்வான் மறை வழி உணர்ந்து வாழ்ந்திடுவோம்எல்லா புகழும் இறைவனுக்கு…பார்க்கும் பார்வை அவனாகும் அந்தபார்வைக்கு ஒளியும் அவனாகும்தீர்ப்பு நாளின் பதியாகும் அவன்தீர்ப்பே நமக்கு கதியாகும்கேட்க்கும் கடமை நம்மிடத்தில்கேட்க்கும் கடமை நம்மிடத்தில்கொடுக்கும் உரிமையோ அவனிடத்தில்அந்த தூயோன் ரஹ்மானைதொழுதிடுவோம் அவன்திருக் குறுஆன் வழியில் நடந்திடுவோம்எல்லா புகழும் இறைவனுக்குஎல்லா புகழும் இறைவனுக்குஅல்லா ஒருவனே துணை நமக்குதுணை நமக்கு…எல்லா புகழும் இறைவனுக்கு…——————————————————————————————2.சொன்னால் முடிந்திடுமோ..சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோசொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோஅண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகைஅண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகைவெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு…வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டுவிண்ணகத்துத் தாரகையும் வெட்க்கப்படும் பார்த்து விட்டுஎன்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பேரழகைஅண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்…அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்பண்பு வந்து நபியிடத்தில் பணிவைக் கேட்டுச் செல்லும்என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் சொல்லழகைதிரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்…திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்அருள் மறை வேதத்திலே அவர் புகழ் நிறைந்திருக்கும்என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பெருமைதனைசொன்னால்…முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோஅண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகைஅண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகைசொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ…——————————————————————————————3.அல்லா அல்ஹம்து லில்லாஅல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லாஉனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…யா…ரஹுமானே யா…ரஹீமே யா…ரஹுமானே யா…ரஹீமே அருளைப் பொழிய வேண்டும் உலகில் அமைதி நிலவ வேண்டும் அருளைப் பொழிய வேண்டும் உலகில் அமைதி நிலவ வேண்டும் அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…வையகம் எங்கும் அமைதி இல்லை தீய வன்முறையால் மக்கள் படும் தொல்லை (இசை) வையகம் எங்கும் அமைதி இல்லை தீய வன்முறையால் மக்கள் படும் தொல்லை நியாயம் தருமம் வர வேண்டும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் வல்லவனே மிக நல்லவனே வாழ்வின் நன்னெறி காப்பாய் இறையோனே வல்லவனே மிக நல்லவனே வாழ்வின் நன்னெறி காப்பாய் இறையோனே அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…நெருப்பினை பூங்கா வனமாக்கி நபி இபுறாஹீம் உயிர் காத்தவனே (இசை) நெருப்பினை பூங்கா வனமாக்கி நபி இபுறாஹீம் உயிர் காத்தவனே சிறப்புடன் நைல் நதி பிளந்திடவே நபி மூசா நலம் பெறச் செய்தவனே ரஹ்மத்தாய் நபியை தந்தவனே புவி அமைதிக்கு அருள்வாய் மறையோனே ரஹ்மத்தாய் நபியை தந்தவனே புவி அமைதிக்கு அருள்வாய் மறையோனே அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…தூதர் நபியை பகைவர்கள் பின் தொடர்ந்ததும் தௌர் என்னும் குகையினிலே (இசை) தூதர் நபியை பகைவர்கள் பின் தொடர்ந்ததும் தௌர் என்னும் குகையினிலே ஊதினால்ப் பறக்கும் சிலந்தி வலைக் காவல் உதவினாய் உனக்கே ஈடும் இல்லை காத்தமுன் நபியைக் காத்தவனே அவர் கௌமையும் காப்பாய் கனிவுடனே காத்தமுன் நபியைக் காத்தவனே அவர் கௌமையும் காப்பாய் கனிவுடனே அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…——————————————————————————————–4.ஆதி அருள் கனிந்திலங்கிஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாகஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாகநீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குர்ரானாம்ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாகநீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குர்ரானாம்மெய்யுணர்வின் நல்லடியார் மேதினியில் வாழ்வர்க்கேஐய்யமற வழி காட்டும் ஆண்டவனின் திருமறையாம்மக்கா நகர் அருகிருக்கும் மலைக் குகையாம் ஹீராவில்தக்க நபி மனம் குளிர தழைத்துயர்ந்த திருமறையாம்ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாகநீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குர்ரானாம்வான் கமழும் ரமலானாம் வளம் கொழிக்கும் திங்களிலேதீன் கமழ வந்துற்ற திகழொளியின் திருமறையாம்ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாகநீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்கதி அளிக்கும் லைலத்துல் கதிர் இரவில் இறை அளித்தநிதி அனைத்தும் கொண்டிலங்கும் நிகரில்லா திருமறையாம்ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாகநீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்...——————————————————————————————–5.ஞனத்தின் திறவுகோல்ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவாஞனத்தின் திறவுகோல்..பள்ளி சென்று படிக்கவில்லை பாடம் ஏதும் கேட்கவில்லை(2)சொல்லிதரும் தகுதி இந்த துனியாவில் எவர்க்குமில்லை (2)அல்லாஹ்வே ஆசியுடன் அனைத்துமே ஆச்சரியம்சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளேஞனத்தின் திறவுகோல்..வானம் அதை பார்த்திருந்தார் வல்லல் நபி சிந்தித்தார்(2)வான் மழை கடல் அலையை கண்டிரையை புகழ்ந்திட்டார்(2)இறைவன் சொல்லி தந்தான் சாந்த நபி எழுதி கொண்டார்சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளேஞனத்தின் திறவுகோல்..கலிமா தொழுகை நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜுடனே(2)பலுது ஏதுமில்லாத பண்பான வாழ்க்கை முறை(2)பகுப்புகள் நடந்தனறே வாஞ்சை நபி தொடர்ந்தனறேசொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளேஞனத்தின் திறவுகோல்..பொருளியல் அரசியலில் புதுமை விஞ்கானமதில்(2)அருளியல் இல்லறத்தில் ஆன்மிக வழிமுறையில்(2)எத்துரையும் கற்றிருந்தார் ஏகன் அருள் பெற்றூயர்ந்தார்சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளேஞனத்தின் திறவுகோல்..பண்பான நபிபெருமான் பல்கலைகழகமன்றோ(2)அன்பான மாணவராம் அவர்வழி உம்மத்தன்றோ(2)தேர்வினிலே வென்றிடுவோம் தீன்வழியில் நின்றிடுவோம்சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளேஞனத்தின் திறவுகோல்..ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..ரசூல் நாயகம் அல்லவா..கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவாஞனத்தின் திறவுகோல்.——————————————————————————————–6.கன்னியரே அன்னையரேகன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்.மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து பிறந்தார்போதில்லாத முழுமதியெனவே குலகொடியாக வளர்ந்தார்தந்தையின் சொல்லை சிந்தையில் ஏந்தி சங்கை வளர்மங்கையானரே..கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)அன்னை கதிஜா நன்னைய பண்பை அகமதில் தாங்கி சிறந்தார்கன்னில் கருனை கையில் தானம் கல்பில் இறைவேதம் சுமந்தார்செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று சீமாட்டியாகவெ வாழ்ந்தாரே..கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)வானவர் வாழ்த்த யாவரும் போற்ற வீரர் அலியை மணந்தார்தீன் குல பெண்கள் துறைவை ஒழிக்க சிறப்புடன் இல்லறம் புகுந்தார்கணவர் அலியை கன்னுக்குள் வைத்து கணிவாய் பணிவிடை செய்தாரெ..கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)சொர்க்கத்தின் நிழழாய் கணவரை மதித்து சோபன வாழ்வில் மிதந்தார்அருமை மைந்தர்கள் ஹசன் ஹுசைனின் அன்பு தாயகி மகிழ்ந்தார்புவன தூதர் தந்தை முஹம்மதை பொக்கிசமாகவே மதித்தாரே...கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)அராபாத் வெளியில் இறைவன் தூதை அண்ணல் நபி முடித்தார்கள்இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள் இம்மை வாழ்வை விடுத்தார்கள்தந்தையை இழந்த செல்வி பாத்திமா தனலில் குழுவாய் துடித்தார்கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)எம்பெருமானார் இதயமாகவே இலங்கிய மாதர் திலகம்தம்முடன் மெலிந்து கன்னொலி மங்கி சருஹென மாறிபோனார்விந்தைகள் சூலும் இப்புவிமீது விரைந்தே கழிந்தன மாதங்கள்கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)இம்மையின் வாழ்வு முடிவதை அன்று இதயத்தினலே உணர்ந்தார்தம்முடன் குளித்து கஃபன் உடை தரித்து கணவரின் மார்பில் சரிந்தார்கண்ணீர் முத்துகள் கன்னத்தில் உருள கணவரை கணிவுடன் பார்த்தாரே..கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)வல்லோன் நல்கிய அர்சின் உயிரை விடைகொடுத்து அனுப்புங்கள் என்றார்பிள்ளை செலவங்கள் ஹசன் ஹுசயினை பிடித்தவர் கையில் கொடுத்தார்அல்ஹம்ந்துலில்லாஹ் என்றே கூறி அகிலத்தின் வாழ்வை முடித்தாரே..அகிலத்தின் வாழ்வை முடித்தாரேஇன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்——————————————————————————————–7.அல்லாவை நாம் தொழுதால்…அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்அந்த வல்லோனை நினைத்திருந்தால்...நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்நல்ல வாழ்க்கையும் தேடி வரும்அல்லாவை நாம் தொழுதால்...பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோபள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோஅல்லாவை நாம் தொழுவோம்...வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோவிழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோஅல்லாவை நாம் தொழுவோம்...இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்——————————————————————————————–8.ஐந்து கடமைகளில் எத்தனைஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்அத்தனையும் சொர்கத்தின்சங்கை மிகு முத்திரைகள்ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்அத்தனையும் சொர்கத்தின்சங்கை மிகு முத்திரைகள்தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம்வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம்சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின் சொத்தாக கிடைத்திட்ட வேதம்சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்சொத்தாக கிடைத்திட்ட வேதம்தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்துகனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்துகலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்துகனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்துநலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்துநலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்துதீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையைமறையாய் கொண்டது இஸ்லாம்இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையைமறையாய் கொண்டது இஸ்லாம்முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம்முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம்தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டிகண்ணியம் காத்திடும் மார்கம்உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டிகண்ணியம் காத்திடும் மார்கம்மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்குபுண்ணிய வழி சொல்லும் மார்கம்மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்குபுண்ணிய வழி சொல்லும் மார்கம்தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்அத்தனையும் சொர்கத்தின்சங்கை மிகு முத்திரைகள்ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்அத்தனையும் சொர்கத்தின்சங்கை மிகு முத்திரைகள்தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்——————————————————————————————–9.உலகம் இறைவனின் சந்தை மடம்உலகம் இறைவனின் சந்தை மடம்இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்உலகம் இறைவனின் சந்தை மடம்இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்இதுவல்ல நமக்கு சொந்த இடம்இதுவல்ல நமக்கு சொந்த இடம்அங்கே இருக்குது வேறு உரிய இடம்உரிய இடம்...கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம்களைப்பாற இங்கே தங்கிடுவான்உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்இதை விட்டுப் போனவன் திரும்பவில்லைமறுப்பவன் இதனை யாரும் இல்லைமனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லைபிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன்இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லைபுரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதைபுரியாதவன் அறிவு தெளிவதில்லைதொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்ததூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீநினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்உலகம் இறைவனின் சந்தை மடம்இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்உலகம் இறைவனின் சந்தை மடம்——————————————————————————————–10.ஃபாத்திமா வாழ்ந்த முறைஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா?ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா?அந்த பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா.உத்தம திருநபியின் மகளலல்லவாநமது உண்மை சீலர் அலியாரின் மனைவியல்லவாசத்தியம் காத்து நின்ற இதயம் அல்லவாநல்ல செல்வங்கள் ஹஸன் ஹூஸைன் அன்னையல்லவாஅருமை அன்னையல்லவா.கணவரின் சொல்வணங்கி நடந்தவரன்றோபெரும் கண்ணியத்தின் இருப்பிடமாய் திகழ்ந்தவரன்றோகுணமுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்தவரன்றோநல்ல குடும்பந்தன்னில் குலவிளக்காய் இருந்தவரன்றோஇருந்தவரன்றோஇன்னும் தயக்கமென்ன எண்ணிப் பாரம்மா இந்தஇக வாழ்க்கை நிலையல்ல உணர்ந்து கொள்ளலமா உண்மைதீன் வழியை மறந்ததேனம்மா நல்ல உத்தமியாம் பாத்திமா போல் வாழ்ந்து காட்டம்மா வாழ்ந்து காட்டம்மா——————————————————————————————11.தீனோரே நியாயமா மாறலாமாதீனோரே நியாயமா மாறலாமாதூதர் நபி போதனையை மீறலாமாஉள்ளம் சோறலாமாகாணல் நீராகும் புவி வாழ்வு இங்கேஅது கரை சேரும் ஒரு நாளில் அங்கேதீனை உணராமலே திரும்பி பாராமலேஇந்த தரை மீது தடுமாறி தேயலாமாவாசல் வழியோரம் கையேந்தி நின்றுகெஞ்சும் எளியோரின் துயர் கோலம் கண்டுநெஞ்சம் இறங்காமலே கொஞ்சம் வழங்காமலேநாவு கூசாமல் நிலை மாறி ஏசலாமாவட்டி தொழிலாலே கிடைக்கின்ற லாபம்ஏழை விழிநீரில் எரிகின்ற தீபம்என்று அறியாமலே நன்கு புரியாமலேஏக இறையோனின் நெறியிழந்து வாழலாமாதிருமறையின் அருள்திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன? அறிவு.இறை தூதர் நபி பொன் மொழியில் பொதிந்திருப்பது என்ன? அன்பு.அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன? ஞானம்அந்த ஞானத்தை வழங்கிடும் மூலப் பொருள் என்ன? மௌனம் மௌனம்.உருவமற்ற இறைவன் வாழும் இடம் எதுவோ? உள்ளம்.அந்த உள்ளத்தினில் சுடர் போல் விளங்குவது எதுவோ? உண்மைஉண்மையினை ஈன்ற அன்னையவள் யாரோ? பொறுமைஅந்த பொறுமை நபிகள் நாதர் போதித்தது என்ன? கடமை 5 கடமைஏக இறையோனை ஏற்றுக் கொள்வதென்ன? கலிமாஅந்த கலிமா பொருள் உணர்ந்து கடைப்பிடிப்பதென்ன? தொழுகைதொழுகையினை மேலும் தூய்மை செய்வதென்ன? நோன்புநோன்பிருந்த பின்பு மாண்பளிப்பதென்ன? ஜகாத்துஅந்த ஈகை வழியில் செல்லும் இறுதிக் கடன் என்ன? ஹஜ்ஜூ புனித ஹஜ்ஜூ——————————————————————————————12.ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்உபவாச நன்மை சொல்லுறேன்கேட்பீரே மாந்தரேஉயர் நோன்பு மாத பெருமையேஇதுவாகும் மாந்தரேஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்ஓயாது எண்ணினான் மனதில் நோன்பையே நிதம்பெரும் ஆனந்தம் கொண்டான் ரமழான் மாதம் வந்ததும்தன் தாயை கட்டி தழுவிக் கொண்டு கெஞ்சினான் சனம்மறவாது சஹரு நேரமதில் எழுப்ப வேண்டுமாய்மன்றாடினானே நோன்பு நோற்க வேண்டும் என்றவன்மாதா மதிக்க வில்லை அருமை மைந்தன் சொன்னதைமறு நாளின் காலை எழுந்து மனம் பதறி வருந்தினான்ஆதாரமின்றி வருந்துவதை கண்ட தாயவள்அன்போடனைத்து ஆறுதலாய் சாற்றினாள் இதைபோதாத வயதில் நோன்புனக்கு கடமையல்லவேபொறு இன்னும் கொஞ்சம் காலம் வரை என்று கூறினாள்வல்லோன் உரைத்த திருமறையாம் குர்ஆன் என்பதைவையம் சிறக்க நமக்களித்த மாதம் அல்லவோசொல்வார்கள் நோன்பு நோற்பவர்க்கு சொர்க்கம் மீதிலேசுகமுண்டு என்ற போதனையை நீ அறியாயோகல்லோ உன் நெஞ்சு கூறும் தாயே கருணையில்லையாகண்ணாலே எந்தன் ஆண்டவனை காண வேண்டுமேஅந்நாள் இரவு முழுதும் அவன் தூங்க வில்லையேஆசை அவனின் கண்களிலே ஆட்சி செய்ததேஏண்ணம் போல் சஹரு நேரமது வந்த போதிலேஎழுந்தோடி நோன்பு வைத்து மனம் புரிப்பெய்தவேஆனாலும் அன்னை தந்தை கூடி அதட்டினார்களேஆகாது என்று சாதனையால் வம்பு பேசினான்திருவான அஸரு என்னும் தொழுகை நேரம் நெருங்கவேதண்ணீரின் தாகம் அதிகமாகி நாவரண்டதால்பாரிதாபமான நிலையில் பையன் மூச்சு திணறியேபாரிவோடு தாயின் மடியில் சாய்ந்து மூர்ச்சையாகினான்பிரியம் மிகுந்த செல்வன் உயிர் பிரிந்து சென்றதால்போனாயே என்று கூவி அழுது புலம்பி வாடினாள்இனிமை நிறைந்த பாங்கின் ஓசை செவியில் கேட்கவேஇறையோனை தொழுது வேண்டினார்கள் ஒன்று கூடியேதனிமையில் அன்னை ஆண்டவன் பால் கைகளேந்தியேதகுமோ இறைவா என்று துஆ கேட்டு புலம்பினாள்இனி யாது செய்வேன் என்று அன்னை மனது நோகவேஇதயம் உடைந்து வேதனையால் இன்பம் நீங்கினாள்தந்தை அருகில் சோகமதாய் தவிக்கும் போதிலேதலைவாசலிலோர் சாதுமகான் வந்துமே நின்றார்எந்தைகளே நான் நோன்புடையோன் ஏழை ஆதலால்ஏதேனும் உணவு தந்துதவ இயலுமோ என்றார்சிந்தை இரங்கி வீட்டிலன்று சமைத்திருந்ததைசந்தோஷமாக தந்த போது சாது வினவினார்.கவலை மிகுந்த முகத்துடனே காணப்படுவதேன்கடவுள் கருணை உங்கள் மீதுண்டாகுக வென்றார்சவமாகினானே எங்கள் ஒரே செல்வ பாலகன்சாகா வரமே தருக உம்மால் ஆகுமோ வென்றார்தேவா சிறுவன் நோன்பிருந்து உயிரை நீத்ததால்தெய்வீக சக்தி உண்டெனில் உயிர் வாழ செய்குவீர்ஆயாசமாக வீனில் யாரும் வருந்திட வேண்டாம்அடியேனுக்கந்த பையனை நீர் காட்டுவீரென்றார்வாயாற வாழ்த்தி வாருமென்று உள்ளே அழைத்தார்வந்தார் உடனே சாது பையன் பக்தியைக் கண்டார்நீயே எழுவாய் என்று சாது கூறினாரதேநிமிஷத்திலே எழுந்து சிறுவன் இறையை வணங்கினான்ஆனந்த காட்சி இதனை கண்ட அன்னை தந்தையும்அன்போடு சாதை தழுவிக் கொண்டு இறையை போற்றினார்தீனோர்களே ரமழான் மாதம் மேன்மையானதேதுன்பங்கள் தீரும் இறைவனுக்கே நன்றி நவிலுவீர்என்றும் பெறுவார் நோன்பிருந்தார் இறைவன் ஆசியைஎனக்கூறி மறைந்தாரே சாது உலக மாந்தரேஉலக மாந்தரே உலக மாந்தரே—————————————————————————————--13.மௌத்தையே நீ மறந்து…வானகம் வையகம் யாவும் மறைந்து விடும்ஆனதினால் மானிடனே ஆண்டனவனை நீ தொழுவாய்மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமாமாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமாமன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.மகத்தான நெறியில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லைபொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லைபுகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.பூதலத்தின் இந்த நிலை புரிந்திடாமல் பேசுகிறாய்.ஆல்லாஹ்வின் அருட்சுடராம் அண்ணல் தாஹா நபி எங்கேஆஞ்சாத வீரம் கொண்ட ஆண்மை அலியார் எங்கேஏல்லோரும் போற்றுகின்ற அன்னை ஃபாதிமா எங்கேஇணையில்லா தியாகிகளாம் இமாம் ஹஸன் ஹூஸைன் எங்கேஇந்த நிலை அறிந்திடாமல் எத்தனை நாள் நீ இருப்பாய்;நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கில் ஏறிடுவாய்அத்தான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்ஆந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்நன்மை தீமை செயல்கள் மீஜானில் நிறுக்கப்படும்நன்மை தட்டு கனத்து விட்டால் நல்ல சுவர்க்கம் கிடைத்து விடும்தின்மை எடை கூடி விட்டால் தீய நரகம் வீழ்ந்திடுவாய்தீங்கான இந்த நிலை தோன்றிடாமல் தவிர்த்திடுவாய்திருமறை நபி வழியில் தினமும் சென்று வாழ்ந்திடுவாய்.——————————————————————————————–14.ஒருநாள் மதீனா நகர் தனிலே…ஒருநாள் மதீனா நகர் தனிலேஓங்கும் மஸ்ஜிது நபவியிலே (2)பெருமான் நபிகள் பகர்ந்தார்கள் (2)பண்புடன் தோழர்கள் மத்தியிலேஉதய நிலவின் குளிராகஉலகில் தோன்றிய உம்மி நபிநீதி மறையின் திரு உருவாய்நிதமும் வாழ்ந்த தூதர் சொன்னார்இறுதி நாள் நெருங்கி வருகிறதுஇறைவன் அழைப்பும் தெரிகிறதுகருணை இறைவன் சொல் கேட்டுகடமையை செய்ததில் குறையுள்ளதோயாருக்கும் தவறுகள் செய்தேனோஎவருக்கும் துன்பம் தந்தேனோ (2)கூறுங்கள் அன்பு தோழர்களேகுறைகள் இருந்தால் கூறுங்கள்எப்போதேனும் சிறு பிழைகள்என் வாழ்வில் ஏதும் செய்தேனோதப்பாது இங்கே சொல்லிடுவீர்தயங்காமல் அதனை ஏற்றிடுவேன்அது கேட்ட தோழர்கள் நெஞ்சங்கள்அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியேநீதி தவறாத நாயகமேதாங்கள் நன்மையின்றி தீமை செய்ததில்லைஅப்போது ஒருவர் எழுந்து நின்றார்அவர் தான் உகாஷா எனும் தோழர்ஒப்பில்லாத இறை தூதேஓர் குறை உமக்கு உண்டு என்றார்சொன்னதும் ஸஹாபா பெருமக்கள்சினத்தால் துடித்து எழுந்தார்கள்அண்ணல் பெருமான் அமைதியுடன்ஆத்திரம் வேண்டாம் அமர்க என்றார்என்ன குறைகள்; இருந்தாலும்;;இயம்புக அதனை நீக்கிடலாம்திண்ணமாய் அல்லாஹ் அறிந்திடுவான்தீமைகளின்றி காத்திடுவான்.உத்தம நபியே இரஸூலேஒட்டகை மேல் தாங்கள் இருக்கையிலேசித்த மகிழ்வோடு நான் பிடித்துசீராய் மணலில் நடக்கையிலேசாட்டையை சுழற்றி ஒட்டகையைசட்டென தாங்கள் அடித்தீர்கள்ஒட்டி நடந்த என் உடம்பில்ஓரடி விழுந்தது அப்போதுஅதற்கு பதிலாய் தங்களை நான்அடித்திட அனுமதி வேண்டுகிறேன்எதிலும்; நீதி தவறாதஇரஸூல் நபியதை ஏற்றார்கள்உண்மை உரைத்தீர் என் தோழரேஉமது உள்ளம் சாந்தி பெறஎன்னை அடியும் என்றார்கள்இசைவாய் அங்கே நின்றார்கள்.என்னை அடித்த சாட்டை இங்கேஇல்லே தங்களின் வீட்டில் உண்டுஎண்ணம் நிறைவேற வேண்டுமதைஏந்தலே எடுத்து வர சொல்லுங்கள்இனிய பிலாலே ஏகிடுவீர்எடுத்து வாரும் சாட்டை தனைகண்ணீரோடு பிலால் விரைந்தார்கருணை நபியின் இல்லத்துக்கேஅங்கே அன்னை ஃபாதிமாவும்ஆருயிர் மக்கள் ஹஸன் ஹூஸைனும்பாங்காய் மூவரும் வீட்;டினிலேபண்பின் உரைவிடமாய் திகழ்ந்தார்பாச மிகுந்த அன்பர் பிலால்பாரிவுடன் ஃபாதிமா எதிர் நின்றுநேசம் தவழ்ந்திடும் சபைதனிலேநடந்ததை நயமுடன் எடுத்துரைத்தார்செய்தியை செவியில் கேட்டவுடன்சிந்தையில் வேதனை பொங்கியதுதூய என் தந்தை உடல் நலமில்லைதண்டனை எப்படி தாங்கிடுவார்ஏன்றே கூறி சாட்டை தனைஏடுத்து பிலாலிடம் தரும் போதுநன்றே சொல்லும் உகாஷாவிடம்நானே அடியை ஏற்றிடுவேன்.அருமை குழந்தைகள் ஹஸன் ஹூஸைனும்அழுது கண்ணீர் வடித்தார்கள்பெருமை நிறைந்த பாட்டனாருக்குபதிலாய் எங்களை அடிக்கட்டுமேதுயரம் மேலிட சாட்டைதனைதுரிதமுடன் பிலால் எடுத்து சென்றார்பயமில்லாது உகாஷாவிடம்பெருமான் நபிகள் கொடுத்தார்கள்சாட்டையை கையில் வாங்கியதும்சாந்த நபியிடம் அவர் சொன்னார்சட்டையில்லாது நான் இருந்தேன்செம்மலே தாங்கள் அடிக்கயிலேகேட்டதும் ஹாத்தமுன் நபியவர்கள்பாpவுடன் சட்டையை நீக்கியதும்சாட்டையை தூக்கி எறிந்து விட்டுதாவியனைத்தார் ஆவலுடன்நுபுவத்தொளிரும் நபி முதகில்நினைத்தது போல முத்தமிட்டார்உணர்ச்சி உள்ளம் குளிர்ந்திடவேஉவகையில் மீண்டும் முத்தமிட்டார்சுற்றிலும் நின்ற ஸஹாபாக்கள்சோபனம் கூறி வாழ்த்தினரேமட்டில்லாத மகிழ்ச்சியிலேமஸ்ஜிதுந்நபவி திளைத்திடுமேஸல்லல்லாஹூ அலா முஹம்மதுஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்——————————————————————————————-15.இறைவனிடம் கையேந்துங்கள்…இறைவனிடம் கையேந்துங்கள்அவன் இல்லையென்று சொல்வதில்லைபொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன்பொக்கிஷத்தை மூடுவதில்லை.இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்ஈடு இணையில்லாது கருணை யுள்ளவன்இன்னல் பட்டு எழும் குரலை கேட்கின்றவன்எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளி தருபவன்அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லி காட்டுங்கள்அன்பு நோக்க தருகவென்று அழுது கேளுங்கள்தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன்வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்அலையின் மீதும் கடலின் மீதும் ஆட்சி செய்பவன்தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்தரணி எங்கும் நிலைத்து நிற்கும் மகா வல்லவன்
நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
சனி, அக்டோபர் 08, 2022
ஹாஜி.நாகூர் ஈ.எம்.ஹனிபா பாடல்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...