роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ிропாро┤рой், роЖроХро╕்роЯ் 25, 2016

рокொродு роЪிро╡ிро▓் роЪроЯ்роЯрооுроо் рооுро╕்ро▓ிроо்роХро│ிрой் роиிро▓ைрокாроЯுроо்

بسم الله الرحمن الرح
பொது சிவில் சட்டமும் முஸ்லிம்களின் நிலைபாடும்
*********************************************************

ثُمَّ جَعَلْنٰكَ عَلٰى شَرِيْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏ (45:18 القران)
2955- صحيح البخاريٍ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((السَّمْعُ وَالطَّاعَةُ حَقٌّ، مَا لَمْ يُؤْمَرْ بِالْمَعْصِيَةِ، فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ وَلاَ طَاعَةَ)). .

அல்லாஹ்வின் அருளால்  நமக்கு உன்னதமான மார்க்கம் வழங்கப்பட்டு அதை பின்பற்றி நடப்பதற்கு அருமையான ஷரீஅத் சட்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதை மீறி நடப்பதற்கோ அதில் மாற்றுக் கருத்து தெரிவிப்பதற்கோ எந்த முஃமினான ஆணிற்கோ பெண்ணிற்கோ எந்த உரிமையுமில்லை

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ  وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏  

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால்,அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை;ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 33:36)

எனவே உலகத்தில் எந்த மூலையில் வசிக்கக்கூடிய முஸ்லிமாக இருந்தாலும் ஷரீஅத்திற்கு உட்பட்ட கட்டளைகளைத்தான் ஏற்பார்களே தவிர ஷரீஅத்திற்கு மாற்றமான சட்டங்களை எவர் கொண்டு வந்தாலும் சட்டங்களை மீறுவார்களே ஒழிய ஷரீஅத்தை கைவிட மாட்டார்கள்.

2955- صحيح البخاريٍ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((السَّمْعُ وَالطَّاعَةُ حَقٌّ، مَا لَمْ يُؤْمَرْ بِالْمَعْصِيَةِ، فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ وَلاَ طَاعَةَ)). .

2955. இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, தலைவரின் கட்டளையைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது.  என இப்னு உமர் رضي الله عنه அவர்கள் அறிவித்தார்கள்  (புகாரி)

நம்முடைய இந்திய நாட்டில் நாம் இரண்டு நிலைபாட்டில் இருக்கின்றோம் .1.நம் நாட்டின் அரசியல் சட்டம் .2.நாம் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய ஷரீஅத்சட்டம் .அரசியல் சட்டம் ஷரீஅத் சட்டத்திற்கு முரன்படாதவரை பிரச்சினை இல்லை எங்காவது முரன்படுமேயானால் ஷரீஅத் சட்டத்தைத்தான் முஸ்லிம்கள் பின்பற்றுவார்கள் இதற்கு இந்திய அரசியல் சட்டம் 25 ம் பிரிவு வழிவகுக்கின்றது.( இந்திய நாட்டில் வசிக்கக்கூடிய எவரும் அவர் விரும்பிய மதத்தை ஏற்று அதன் சட்டதிட்டங்களை பின்பற்றலாம்) இது இன்று மட்டுமல்ல ஆங்கிலேய ஆட்சியில் கூட முஸ்லிம் வழக்குகள் நீதி மன்றங்களுக்கு வருமேயானால் ஆலிம்களை அழைத்து இதற்குறிய தீர்ப்பை சொல்லிவிட்டு போங்கள் என்பார்கள்

இந்த நாட்டில் மதச்சார்பற்ற ஓர் அரசின் கீழ் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சில விவகாரங்களுக்கு மட்டும் இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்து வருகிறது. இதேபோல் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய,ஜைன, புத்த சமயத்தினருக்கும் அவர்களுக்கென்று தனியார் சட்டங்கள் அமலில் இருந்து வருகிறது. ஆனால்,குற்றவியல் நடைமுறைக்கு மட்டும் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான I.P.C. ( INDIAN PENAL CODE )எனும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தனியார் சட்டம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. மொகலாய மன்னர்கள் என்று இந்தியாவில் தன் கால்களை ஊன்றினார்களோ,அன்றிலிருந்தே அவரவர்கள் சார்ந்திருந்த மதங்களுக்குரிய சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வந்தார்கள்.

அதன்பின், கி.பி. 1862-ல்தான் I.P.C. ( INDIAN PENAL CODE ) என்ற புதிய சட்ட முறையைக் கொண்டு வந்தார்கள். இதுவும் கூட இங்கிலாந்தின் சட்ட முறையினை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்பட்டது. பின்னர், 1937-ல் முஸ்லிம் தனியார் சட்டம் ( MUSLIM PERSONAL LAW – Shariath Application Act – 1937 )அமலுக்கு வந்தது. பின்னர், அதனைத் தொடர்ந்து 1939-ல் முஸ்லிம் திருமணச் சட்டம் ( MUSLIM MARRIAGES ACT – 1939 )ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

ஆதாரம் http://googleweblight.com/?lite_url=http://www.islamkalvi.com/?p%3D361&ei=i7DqVXVE&lc=en-IN&s

இந்த நிலை இன்று வரை நீடித்து வருகிறது என்றாலும்கூட,சமீபகாலமாக முஸ்லிம் தனியார்  சட்ட எல்லைக்குள் வருகின்ற சில விஷயத்தில் சில ஆட்சியாளர்களும் நீதி மன்றங்களும் கைவைக்கிறது.
எந்த ஆட்சியாளர்களின் திருப்திக்காகவும் நீதி மன்றங்களின் உத்தரவிற்காகவும் முஸ்லிம்கள் ஷரீஅத் சட்டத்தை விட முடியாது.அதை விட்டுவிடுவதற்கோ அதை மாற்றுவதற்கோ எந்த முஸ்லிமுக்கும் உரிமை இல்லை என்பதுதான் ஷரீஅத் சட்டத்தின் நிலைபாடு. 
ஒரு நாட்டில் வாழுகின்ற மனிதர்களுக்கு அவர்களின் மத சட்டப்படி வாழுகின்ற உரிமையை தரவேண்டும் அப்படி தந்தால்தான் அது நீதமான ஆட்சியாக கருதப்படும் சிறுபாண்மை இனருக்குரிய உரிமை பறிக்கப்படுமேயானால் அது எல்லா விதத்திலும் நாட்டை பாதிக்கும்

பொது சிவில் சட்டத்தைப் பாராளுமன்றம் அங்கீகரிக்க முயன்றால் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் விருப்பத்திற்கேற்ப,அவர்களின் கலாச்சாரத்தை ஒட்டிய சட்டமாகவே அமையும். அவ்வாறாகும் பட்சத்தில் அதை பொது சிவில் சட்டம் (COMMON CIVIL CODE) என்று சொல்வதைவிட ஹிந்து சிவில் சட்டம் (HINDU CIVIL CODE) என்று அழைப்பதே பொருத்தமாயிருக்கும்.

முஸ்லிம்கள் தலாக் உடைய விஷயத்தில் மறு பரிசீலினை செய்ய வேண்டும் கோர்ட் தீர்ப்பு.
*************************************************
சில மாதங்களுக்கு முன்பு சாயிரா பானு என்ற பெண் கோர்ட்டில் இவ்வாறு வழக்கு தொடுக்கின்றார். இஸ்லாத்தில் பெண் உரிமை பறிக்கப்படுகிறது   தலாக் கொடுக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறது. ஆண்கள் தனக்கு பிடிக்கவில்லையென்றால் உடனே தலாக் விட்டு விடுகிறார் இதற்கு முஸ்லிம் ஜமாஅத்தும் ஒத்துப் போகின்றது. 
தலாக் உரிமையை ஆண்களிடமிருந்து பறிக்கப்படவேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார் அதை விசாரித்த நீதிபதிகள் ஒரு குழு அமைத்து தலாக் விஷயத்தில் பெண்கள் அநீதம் இழைக்கப்படுகிறார்களா ? என்று விசாரித்து ஆறு மாத காலத்திற்குள் அறிக்கை வெளியிட வேண்டும் என்று தீர்ப்பு வெளியானது.

தலாக் உடைய சட்டம் நமக்கு தெளிவாக இருக்கிறது.
வாழ முடியவில்லை  என்கிற போது வாழ்க்கையிலிருந்து பிரிந்து கொள்கிற உரிமையை இஸ்லாம் ஆண்களுக்கும் தந்திருக்கிறது பெண்களுக்கும் தந்திருக்கிறது. பெண்களுக்கு குலாஉ என்று பெயர் ஆண்களுக்கு தலாக் என்று பெயர்.

தலாக்கை கேட்டு வாங்கும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது
*****************************

5273 عن ابن عباس  رضي أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يا رَسُولَ اللَّهِ ثَابِتُ بْنُ قَيْسٍ مَا أَعْتُبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الإِسْلاَمِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ)). قَالَتْ نَعَمْ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((اقْبَلِ الْحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً)).رواه البخاري

5273. இப்னு அப்பாஸ்(ரலி)அறிவித்தார் 
ஸாபித் இப்னு கைஸ் இப்னுஷம்மாஸ்(ரலி) அவர்களின்துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம்வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என்கணவர்) ஸாபித் இப்னு கைஸின்குணத்தையோ, மார்க்கப் பற்றையோநான் குறைகூறவில்லை. ஆனால்,நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டேஇறைநிராகரிப்புக்குரியசெயல்களைச் செய்து விடுவேனோஎன்று அஞ்சுகிறேன்' என்று கூறினார்.அப்போது, 'இறைத்தூதர்(ஸல்)அவர்கள் , 'ஸாபித் உனக்கு(மணக்கொடையாக) அளித்ததோட்டத்தை நீ அவருக்கே திருப்பித்தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள்அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்றுகூறினார். இறைத்தூதர்(ஸல்)அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு,அவளை ஒரு முறை தலாக் சொல்லிவிடுங்கள்!' என்று கூறினார்கள்.புஹாரி

2639- صحيح البخاريَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ الْقُرَظِيِّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ كُنْتُ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَنِي فَأَبَتَّ طَلاَقِي، فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ، إِنَّمَا مَعَهُ مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ. فَقَالَ: ((أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ لاَ حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ)). وَأَبُو بَكْرٍ جَالِسٌ عِنْدَهُ وَخَالِدُ بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ بِالْبَابِ يَنْتَظِرُ أَنْ يُؤْذَنَ لَهُ، فَقَالَ يَا أَبَا بَكْرٍ، أَلاَ تَسْمَعُ إِلَى هَذِهِ مَا تَجْهَرُ بِهِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

2639. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
ரிஃபாஆ அல் குரழீ(ரலி) அவர்களின்மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் ரிஃபாஆவிடம் (அவரின் மணபந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர்என்னை மணவிலக்கு செய்துமணவிலக்கைமுடிவானதாக்கிவிட்டார். எனவே, நான்அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி)அவர்களை மணந்தேன். அவரிடம்இருப்பதெல்லாம் (உறுதியின்றித்தொங்கும்) முந்தானைத் தலைப்பைத்போன்றது தான் (அவர் ஆண்மைகுறைந்தவர்)' என்று கூறினார்.நபி(ஸல்) அவர்கள், 'நீ ரிஃபாஆவிடம்திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதையை உன் கணவரான)அவரின் இனிமையை நீ சுவைக்காதவரையிலும் உன்னுடையஇனிமையை அவர் சுவைக்காதவரையிலும் உன் முன்னாள் கணவரைநீ மணந்து கொள்வதென்பதுமுடியாது' என்று கூறினார்கள்.அப்போது அபூ பக்ர்(ரலி), நபி(ஸல்)அவர்களிடம் அமர்ந்துகொண்டிருந்தார்கள். காலித் இப்னுஸயீத் இப்னு ஆஸ்(ரலி), தமக்குஉள்ளே நுழையஅனுமதியளிக்கப்படும் என்றுஎதிர்பார்த்த வண்ணம் வாசலில்நின்றிருந்தார்கள். அவர்கள், 'அபூபக்ரே! இந்தப் பெண் நபி(ஸல்)அவர்களிடம் எதை பகிரங்கமாகச்சொல்லிக் கொண்டிருக்கிறாள்என்பதைக் கேட்க மாட்டீர்களா?' என்று(வாசலில் நின்றபடியே)சொன்னார்கள். (புகாரி) 

  

ஆனால் இதற்கு மாற்றமாக ஷரீஅத் சட்டங்கள் ஆண்களுக்கு சாதகமாக இருப்பதைப் போன்றும் பெண்களுக்கு அநீதம் இழைக்கப்படுவது போன்றும் தவறாக சித்தரிக்கப்பட்டு பொது சிவில் சட்டம் அவசியம் என்பதைப்போன்று பேசப்படுகிறது.

வந்தே மாதரம். பாரத மாதாகிஜே என்று சொல்லலாமா?
*********************************************
இன்று சிலர் இவ்வாறு கூறுகின்றார்கள்.ஒவ்வொரு இந்தியனும் நாட்டை நேசிக்க வேண்டும் அவ்வாறு நேசிப்பதன் அடையாளமாக வந்தே மாதரம் என்றோ பாரத மாதாகிஜே( பாரத தாயே உன்னை வணங்குகிறோம்) என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள். இது பற்றி முஸ்லிம்களின் நிலைபாடு என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இணை வைப்பதை இறைவன் மன்னிப்பதில்லை
*************************************************

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌  وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏ 

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
(அல்குர்ஆன் : 4:48)

இறைவனை நிராகரித்தல் என்பது இவ்வுலகில் மிகப் பெரிய குற்றம் .எப்படி உலகில் எல்லாச் செயல்களை விடவும் ஈமான் சிறந்தோ அதுபோல எல்லா பாவங்களை விடவும் குஃப்ரு மிகப்பெரிய பாவம் .

குஃப்ரு மூன்று வகைப்படும்
1. كفر باالاعتقاد        2. كفرباالفعل         كفر باالقول 3
1. கொள்கையளவில் குஃப்ரு.  அதாவது அல்லாஹ்வை ஏற்கவில்லை கப்ருடைய வாழ்க்கை.மறுமைநாள் உண்டு சுவர்க்கம் நரகம் உண்டு இவைகள் அனைத்தையும் ஏற்கவில்லை என்றால் இது கொள்கை சார்ந்த குஃப்ருகள் ஆகும்.

2) செயல்பாடுகளில் குஃப்ரு.
சில செயல்கள் முஸ்லிம்கள் செய்கிறார்கள் ஆனால் அந்த செயல் உலகில் காஃபிர்களுக்கு மட்டும் உண்டான அடையாளம் முஸ்லிமுக்கு எந்த வகையிலும் அது பொருந்தாது.அப்படிப்பட்ட அடையாளத்தை ஏற்றுக் கொண்டால் அதை செய்து கொண்டால் அதுவும் குஃப்ரு என்று சொல்லப்படும். உதாரணமாக பிற மதங்களின் வழிபாடுகளை இவன் செய்கிறான் பூநூல் அணிவது நெற்றியில் நாமம் இடுவது பொட்டு வைப்பது இது போன்ற வைகள் இது  كفر باالفعل ஆகும்.

3) சொல்லில் குஃப்ர்
இறைவனை மறுக்குகின்ற வார்த்தைகளை.இணைவைக்கின்ற வார்த்தைகளை.இறைவனுக்கு உருவம் கற்பிக்கின்ற வார்த்தைகளை பேசினால் இதை சொல்ரீதியான குஃப்ர் என்கிறோம்.எனவேதான் ஒரு முஸ்லிமின் அடிப்படை தாரக மந்திரம் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ர்ரசூலுல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை முஹம்மது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை உள்ளத்தாலும் நம்பி நாவாலும் மொழிய வேண்டும்.

ஷிர்கின் வாடை அடிக்கின்ற சொல்லைக் கூட ஒரு முஸ்லிம் சொல்லக்கூடாது.அந்த அடிப்படையில்தான் இந்த நாட்டில் முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாரத மாதாகிஜே போன்ற வார்த்தைகளை சொல்ல மறுக்கின்றார்கள்.

4170- ِ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ: ((لاَ تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُطِّعْتَ وَحُرِّقْتَ وَلاَ تَتْرُكْ صَلاَةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَمَنْ تَرَكَهَا مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ وَلاَ تَشْرَبِ الْخَمْرَ فَإِنَّهَا مِفْتَاحُ كُلِّ شَرٍّ)). رواه ابن ماجة

துண்டு துண்டாக நீ வெட்டப்பட்டாலும் அல்லது தீயிலே நீ கரிக்கப்பட்டாலும் அல்லாஹ் விற்கு எதையும் இணை வைத்து  விடாதீர்.

இந்த வார்த்தையை சொல்வதால் குற்றம் பிடிக்கப்படுமா? இதனால் ஷிர்க் உண்டாகி விடுமா? என்று சாதாரணமாக எந்த சொல்லையும் நினைத்து விட முடியாது.

اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌   وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏ 

இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு,உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்;இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.
(அல்குர்ஆன் : 24:15)

[6478 - ، ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺇﻥ §اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺭﺿﻮاﻥ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﺮﻓﻌﻪ اﻟﻠﻪ ﺑﻬﺎ ﺩﺭﺟﺎﺕ، ﻭﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺳﺨﻂ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﻬﻮﻱ ﺑﻬﺎ ﻓﻲ ﺟﻬﻨﻢ» رواه البخاري

6478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ( புகாரி)

ஆனால் ஒருவன்  ஷிர்கான வார்தைகளை கூறும்படி நிர்பந்திக்கப் படுகின்றான் சொல்லாவிட்டால் உயிர் போய்விடும் என்கின்ற நிலையில் உள்ளத்தில் ஈமானை உறுதியாக வைத்துக் கொண்டு நாவளவில் ஷிர்க்கான வார்த்தைகளை மொழிவதில் தவறில்லை.

مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْ بَعْدِ اِيْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَٮِٕنٌّ بِالْاِيْمَانِ وَلٰـكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّٰهِ‌ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ‏  

எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 16:106)

அம்மார் இப்னு யாசிர் ( ரலி) அவர்களை காஃபிர்கள் தனியாக கட்டிவைத்து குஃப்ரான வார்தைகளை சொல்லும்படி கடுமையான  முறையில் அடிக்கின்றார்கள் 
முடிந்தளவு அந்த நபித்தோழர் வேதனையை தாங்கிக் கொள்கிறார் ஒரு கட்டத்தில் வேதனை தாங்க முடியாமலும் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலையிலும் தாம் கொண்ட கொள்கைக்கு மாற்றமான வார்த்தைகளை நாவளவில் சொல்லி விடுகின்றார் .இந்த செய்தியை கேள்விப்பட்ட நபியவர்கள் அந்த தோழரை வரவழைத்து நடந்த விபரத்தை கேட்கிறார்கள் அந்த வார்த்தையை கூறும்போது உன் உள்ளம் எப்படி இருந்தது என்றார்கள் அதற்கு அந்த நபித்தோழர் யாரஸூலல்லாஹ் என் உள்ளம் ஈமானைக் கொண்டு நிம்மதியடைந்திருந்தது என் உள்ளத்தில் கொஞ்சமும் ஈமான் குறையவில்லை என்றார் இந்த பதிலைக் கேட்ட நபியவர்கள் யா அம்மார் நீர் ஈமானுடன்தான் இருக்கின்றீர். மீண்டும் இதே நிலை எற்பட்டால் அவ்வாறே செய்துகொள் என்றார்கள்.

எனவே முஸ்லிம்கள் எவரும் ஷிர்கை கற்பிக்கும் வார்தையை பயன்படுத்தமாட்டார்கள் இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு என்ற நிலையில் தான் இருப்பார்கள்.

தீவிரவாதத்தை தூண்டுவதாகDr.ஜாகிர் நாயக் 
மீது குற்றச்சாட்டு !

காவி ஊடகங்களை முடுக்கிவிட்டு'Peace Tv'யை முடக்குவதற்கு முனைப்புடன் செயல்படும் மோடி அரசு!!
=============================================

உலகறிந்த இஸ்லாமிய அழைப்பாளராகிய டாக்டர் ஜாகிர்நாயக்கின் ஆதாரபூர்வமானதும்,தர்க்கரீதியானதுமான இஸ்லாமிய அழைப்பிற்கு முகம்கொடுக்க முடியாமல், தங்களது பிரச்சார இயந்திரங்களான காவி ஊடகங்களை முடுக்கிவிட்டு, அவரது இஸ்லாமிய அழைப்பை முடக்கிவிட முனைகிறது,காவிகள் மோடி அரசு.

20 கோடி பார்வையாளர்களைகொண்டPeace Tv யையும், 2கோடி பேர் பின்பற்றும் அவரது முகநூல் தளத்தையும் முடக்கிவிட மனப்பால் குடிக்கின்றனர்.

ஆனால் இத்தகையவர்களின் செயல்களை ஏக நாயனான அல்லாஹ் எவ்வாறு முறியடிக்கின்றான் என்பதை கீழ்வரும் அல்குர்ஆன் வசனங்கள்
சாட்சி பகர்கின்றன.

..............................................
9:32 يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِــُٔــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ 

9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.

0   وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ؕ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ 

8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்;அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். 
.............................................

டாக்டர் ஸாகிர் நாயக் கடந்த 25வருடங்களாக இஸ்லாமிய அழைப்புப்பணியில் சமாதானத்தையும், ஒற்றுமையையும்,பயங்கரவாதத்திற்கெதிராகவும் அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மனித குலத்திற்கு தனது நேர்மையான பிரச்சாரத்தின்மூலம்,குறிப்பாக இனமோதல்கள் இடம்பெறும்  இந்திய மண்ணில் துணிச்சலோடு சேவையாற்றி வருகின்றார்.

இவரது சேவையை மதித்து இஸ்லாமிய உலகில் உயரிய விருதான சமாதான விருது சவூதி அரேபியாவில் 2015ல் வழங்கப்பட்டது.

இப்படிப்பட்ட மனிதர் தனது பேச்சுகள்மூலம்
வன்முறையை தூண்டுகின்றாரென இந்துத்துவா காவி மீடியாக்கள் அவரை ஓரம்கட்ட எத்தனிக்கின்றது.

தேசிய துப்பறியும் நிறுவணம் (NIA); டாக்டர் ஸாகிர் நாயக்கின் Video - Audioஎன்பவற்றை ஆராய்ந்து வருவதாகவும், இதன் மூலம் அவரை சட்டத்தின்முன் குற்றவாளி ஆக்கக்கூடிய ஆதாரங்களை தேடி வருவதாகவும் இந்த காவி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அவதூறு பரப்பும் மீடியாக்களுக்கு ஜாகிர் நாயக் பகிரங்க சவால்....!!
****************************************************
அவதூறு பரப்பும் மீடியாக்களுக்கு  ஜாகிர் நாயக் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது...

பங்களாதேஷில் நடந்த தாக்குதலுக்கு நான் தான் காரணம் என்றும் எனது பேச்சால் தான் அவ்வாறு நடந்தது என பங்களாதேஷ் அரசு தெரிவித்திருப்பதாக ஒரேயொரு ஆதாரப்பூர்வமான செய்தியை கொண்டு வாருங்கள் பார்ப்போம்.

பங்களாதேஷ் அரசு அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டு பேசினேன்,அதற்கு அவர்கள் உங்கள் மீது இதுப்போன்ற குற்றச்சாட்டை எங்கள் நாட்டின் அரசு வைக்கவில்லை, இது இந்திய மீடியாக்கள் வெளியிட்டுள்ள பொய்யான செய்தி என்று தெரிவித்தார்கள்.

பங்களாதேஷில் நடந்த தாக்குதலுக்கு நான் தான் காரணம் என்று ஒரேயொரு ஆதாரம் தர முடியுமா என்று இந்திய மீடியாக்களுக்கு ஜாகிர் நாயக் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
மேலும் ஜாகிர் நாயக்கின் இந்தப் பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக
பங்ளாதேஷ் அரசு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் பங்களாதேஷின் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் அவர்கள் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் இதோ : http://www.bbc.com/news/world-asia-36462026

சம்பந்தபட்ட அரசே ஒன்றும் சொல்லாத நிலையில் வரிந்து கட்டிக் கொண்டு பிஜேபி அரசும்,மீடியாக்களும் முனைப்பு  காட்டுவது ஏன் ?

முஸ்லிம்களுக்கு இந்தியாவில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

முடிவுரை
***********
இந்த நேரத்தில் முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியவை என்னவென்றால் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களும் சட்டங்களும் வரும்பொழுது ஒன்றுபட்டு குரல்கொடுக்கவேண்டும் .நாட்டில் அனுமதிக்கப்பட்ட விதத்தில் நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்

قَالَ اللهُ تَعَالي: (وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللهِ جَمِيْعًا وَّلاَ تَفَرَّقُوْا۞).

(ال عمران: ١٠٣)

1-இன்னும் நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் (வேதமாகிய) கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்துவிடாதீர்கள்.

عن عبد الله ابن عمر رضي الله عنهما قال ,قال رسول الله صلى الله عليه وسلم" يد الله مع الجماعة" رواه البخاري

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்