நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், அக்டோபர் 07, 2020

இயற்கையான வாழ்வியல் பயிற்சி முறை,

*🌴ஆயர்பாடியின் இயன்றளவு இயற்கை வாழ்வியல் பயிற்சி📞9965042543*

*👩‍🎤பெண்களே உங்களுக்காக..*
*(நிச்சயமாக ஆண்களுக்கும்) நூல் பதிவு-14*
💚💚💚💚💚💚💚💚
*டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் MBBS DV MD MRSH PhD (Acu)*

*மண்ணீரல் பாதிப்பைத் தடுக்க உணவு வேளையின் கவனம் தேவை*

*உணவிலுள்ள கசப்புச் சுவை இருதய மேலுறை, இருதயம் ஆகிய இரு உறுப்புகளுக்கும் உயிர்ச்சக்தி அளிக்கிறது. அதிகாலையில் வேப்பங்குச்சியால் பல் துலக்கும் போது, அதன் கசப்பும் துவர்ப்பும் கலந்த சுவையே இருதய மேலுறை, இருதயம் ஆகிய உறுப்புகளை உறுதிப்படுத்தி இரத்த ஓட்டத்தை நாள் முழுவதும் எவ்விதப்  பதட்டமுமில்லாமல் சீராக ஓட வைக்கிறது.*

*இருதய மேலுறையின் உறுதியான இயக்கம், வயிற்றின் இயக்கத் திறனுக்கு  ஊட்டமளிக்கிறது. என்பதையும், இருதயத்தின் உறுதியான இயக்கம், மண்ணீரலின் இயக்க சக்திக்கு ஊட்டமளிக்கிறது என்பதையும் சென்ற அத்தியாயத்தில் விளக்கமாகப்  பார்த்தோம்.*

*இந்த அத்தியாயத்தில் கசப்புச் சுவை ஊட்டமளிக்கும் அடுத்த இரண்டு உறுப்புக்களான தேக வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் உறுப்பு, சிறுகுடல் ஆகிய இவ்விரண்டு உறுப்புகளையும் பற்றி தெரிந்து கொள்வோம்.*

*தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு*

*உடலின் உஷ்ணம் இருக்கும் வரையில்தான், நம் உடல் உறுப்புக்கள் இயங்கும். உஷ்ணம் குறையும் போது உறுப்புக்களின் இயக்கங்களும்  குறையும்.*

*உடலில் எந்த ஒரு உறுப்பும்,  தன் இயக்கத்தில் குறையுமானால் அது பலவீனப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது அர்த்தமாகிறது. இந்த நிலை தொடருமானால் குறிப்பிட்ட உறுப்பு நாளடைவில் நோய்வாய்ப்பட ஏதுவாகிறது.*

*இவ்வாறாக உடல் அவயங்கள் முழுமைக்கும், அவை ஒவ்வொன்றின் இயக்கத்திற்கும்  தேவையான வெப்பத்தை தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு என்ற கண்களுக்குப் புலப்படாத சக்தி நிலை தான் சுற்றுப் பெறச் செய்கிறது.*

*இந்த தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, சக்தி ஓட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரதானமான உறுப்புக்கள் எவை என்றால், இருதயம், இருதய மேலுறை, வயிறு, மண்ணீரல் ஆகிய இந்நான்கு உறுப்புகளாகும். தன் உஷ்ணத்தை இருதய மேலுறைக்கும், இருதயத்திற்கும் முறையாகச்  செலுத்திக்கொண்டு இருக்கும் வரைதான் முற்றுகை இவ்வுறுப்புக்கள் இயங்கிக்கொண்டிருக்கும்.*

*ANGINA மாரடைப்பு*

*ஆனால், தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பிலிருந்து உஷ்ணம் பரவியது தடைப்படும் போது இருதய மேலுறை பலவீனமடைகிறது.  இருதய இரத்த நாளங்கள் வெப்பக் குறைவால், சுருங்கி விரியும் தன்மையில் பாதிப்படைகின்றன. இரத்தம் முறையாக ஓட்டம் பெறாமல் தேக்கம் கொண்டு பின்னர் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதற்காக எத்தனை 'பை-பாஸ் சர்ஜரி' (Bypass Surgery) செய்தாலும் உபயோகமில்லை. ஒரு தடவைக்கும்  மேல் இந்த அறுவை சிகிச்சையை எந்த நோயாளியும் தாங்க மாட்டார். காரணம், ஒருமுறை இருதயத்தில் கத்தியை வைக்கும் போதே ஏற்கனவே குறைவாகவுள்ள உஷ்ணசக்தி மேலும் இருதயத்தினின்று வெளியேறுகிறது. இருதய மேலுறை, இருதயம் ஆகிய உறுப்புகள் பலவீனத்தால் இன்னும் மோசமடைய ஆரம்பிக்கின்றன.*

*இதய மேல் உறை (பெரிகார்டியம்)யில் போதிய உஷ்ண சக்தி ஓட்டம் இருக்கும் வரையில்தான் வயிறு திறம்பட வேலை செய்யும். அவ்வாறே, இருதயத்தினுள் தேவையான அளவுக்கு உணவுசக்தி ஓட்டம் நடைபெறும் வரையில் தான் மண்ணீரலின் இயக்கமும் நல்ல நிலையிலிருக்கும். இவ்வாறாக, தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, இருதய மேலுறை, இருதயம், சிறுகுடல் ஆகிய உறுப்புகளுக்கு, அவற்றின் இயக்கத்திற்குத்  தேவையான சக்தியை கொடுக்கும் அதே நேரத்தில் வயிறு, மண்ணீரல் ஆகிய இவ்விரு உறுப்புகளின் இயக்கத்தையும் பாதுகாக்கிறது.*

*வயிறும் இருதய மேலுறையும் Stomach and Pericardium*

*இவ்விரண்டு உறுப்புகளுக்கும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத தொடர்புடைய உறுப்புகளாகும். வயிற்றில் ஏற்படும் தொந்தரவு இல்லையேல் மேலுறையை பாதிக்கும்; இருதய மேலுறையில்(Pericardium) ஏற்படும் பாதிப்பு வயிற்றின் ஜீரண சக்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும்.*

*ஒன்றோடொன்று தொடர்புடைய உறுப்புகளில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் ஒருவர் கீழ்காணும் தொந்தரவுகளால் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.*

*வயிறு அதிக சுறுசுறுப்புடன் இயங்கக்  கூடிய நேரம் காலை 8 மணியாகும். இருதய மேலுறை (பெரிகார்டியம்)மிக வேகமாகவும் உறுதியாகவும் இயங்கக்கூடிய நேரம் இரவு 8 மணியாகும்.*

*காலை உணவுக்குப் பிறகு சிலருக்கு நெஞ்சு கரிப்பு, வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், படபடப்பு, வயிற்றைப்  பிசைவது போன்ற உணர்வு, சாப்பிடும் போது வியர்வை, மேல் மூச்சு வாங்குதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுமானால் இதய மேலுறை (பெரிகார்டியம்) நோய்வாய்ப்பட ஆரம்பித்து இருக்கிறது என்று பொருள். சாப்பிட்டதும் வாந்தியுணர்வு இருக்குமேயானால், நிச்சயமாக பெரிகார்டியம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதைத் தெளிவாகப்  புரிந்து கொள்ளலாம்.*

*பெரிகார்டியம் (இதய மேலுறை) பிரதானமாக இயக்கக் கூடிய மணி நேரம் இரவு 8.00 மணியிலிருந்து 9.00 மணி வரையிலாகும். பொதுவாக, இரவு வேளை உணவுக்குப் பிறகு ஏற்படும் எந்த வயிற்று உபாதை யாகட்டும்; நெஞ்சு கரிப்பு, வயிற்று எரிச்சல் போன்ற எதுவாகட்டும்; இந்நிலை உணர்த்துவது என்னவெனில் பெரிகார்டியதற்கு தேக வெப்பக்  கட்டுப்பாட்டு உறுப்பிலிருந்து போதுமான சக்தி கிடைக்கப்பெறவில்லை என்பதாகும். இதற்குக் காரணம் தேக வெப்பக்கட்டுப்பாட்டு உறுப்பின் இயக்கச் சோர்வு ஆகும்.*

*தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, பிரதானமாக இயங்கக்கூடிய நேரம் இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரையிலாகும். இந்த நேரம் தான் உடலில் உள்ள ஒட்டுமொத்த உறுப்பு தத்தம் உறுப்புகளின் இயக்கத்திற்குத் தேவையான வெப்ப சக்தியை, தேச வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்புக்குத் தெரிவித்து அதன் இயக்கத்தைத்  துரிதப்படுத்தும் நேரம், ஒரு நாள் முழுவதும் நமது உடலின் பல பாகங்களில் ஏற்படும் உபாதைகள் நீக்கம் பெறுவதற்காக அதிகமான வெப்ப (இயக்க) சக்தியின் தேவையை, தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு நிவர்த்திக்கும் பொருட்டு இவ்வுறுப்பு மிக வேகமாக இயங்கக்கூடிய நேரம், இந்த 9 மணியிலிருந்து 11 மணி வரையிலான இரவு நேரம்.*

*பொதுவாக 9 மணியளவில் உருவாகும் அதிகப்படியான வெப்பம் 10 மணி அல்லது 11 மணிக்கு உச்சத்தை அடைகிறது. உடல் உள்ளுறுப்புகளில் ஏதேனும் ஒரு பாகத்தில் பலமான பாதிப்பு ஏற்படுகிறது எனில், அது சீர்படும் வரை தொடர்ச்சியாக வெப்ப சக்தியை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். இதன் காரணமாகத்தான் சாதாரணமாக, குழந்தைகளுக்கு பெரும்பாலும் இரவு 9.00 மணிக்கு மேல் அகால இரவு வேளைகளில் ஜுரம் ஆரம்பிக்கிறது.*

*தாய்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு, பொதுவாக இரவு வேளைகளில் தான் ஜுரம் ஆரம்பமாகும். இவ்வாறு இரவில் ஆரம்பமாகும் ஜுரம், உங்கள் குழந்தைகளின் தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு மிகவும் நல்ல இயக்க நிலையில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு ஏற்படும் ஜுரம் அதிகாலையில் 4 மணி வரையில் நீடிக்கும். அனலாகக் கூட கொதிக்கும். உங்கள் குழந்தைகளுக்கு எதுவும் நேர்ந்து விடாது. ஆங்கில மருந்துகளின் பக்கம்( ஜுரம் மாத்திரைகளின் பக்கம்) திரும்பியும் பார்த்து விடாதீர்கள். தேவைப்பட்டால் அக்குளிலும்,  நெற்றியிலும் சிறிய ஈரத்துணியால் போர்த்துங்கள். ஜுரம் ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்திற்கு ஜுரம் மாத்திரைகளைக் கொடுத்து உடல் உஷ்ணத்தைத் தணிப்பது உங்கள் குழந்தைகளின் தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பின் இயக்கத்தை சீர்குலைப்பதற்கு ஒப்பாகும்.*

*இந்த நேரத்தில் ஒரு சிறு குறிப்பை உங்களுக்கு எடுத்துச் சொல்லக்  கடமைப்பட்டிருக்கிறோம்.*

*ஹோமியோபதி கடையில் FERRUM PHOS 6X மாத்திரைகளையும், KALI MUR 6 என்ற மாத்திரையையும் வாங்கி உங்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் வையுங்கள்.*

*ஜுரம் ஆரம்பமாகி அரை மணி முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாக FERRUM  PHOS 6X என்று மாத்திரையின் 2 மாத்திரைகளை பத்து  டீ ஸ்பூன் தண்ணீரில் கரைத்துக்  கொடுத்து விடுங்கள். ஜுரம் குறைந்துவிடும்.*

*ஜுரத்தின் காரணமாக வலிப்பு பெரும்பாலும் குணமாகியும்  விடும். அது எவ்வளவு கடுமையான ஜுரமாக இருந்தாலும் சரியே. கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால், ஜுரம் தணிய வில்லையென்றால்,6 மணி நேரத்திற்குப் பிறகு இன்னொரு டோஸ் FERRUM PHOS 6X இரண்டு மாத்திரைகளை அதே அளவு தண்ணீரில் கலந்து கொடுங்கள்.*

*மறுநாளும் ஜுரம் தொடருமானால் 24 மணி நேரத்திற்குப் பிறகு KALI MUR 6X என்ற மருந்தில் 2 மாத்திரைகளை 6 மணி நேர இடைவெளியில் இரண்டிரண்டு மாத்திரைகளைத்  தண்ணீரில் கலந்து கொடுத்து விடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு வரும் 90 சதவீத ஜுரங்கள் பூரணமாக குணமாகிப் போகும்.*

*அகுபங்சர் முறையில் இதைவிட சுலபமாக ஜுரத்தை குணப்படுத்தும் புள்ளியை, தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பிலிருந்து ஒரு பிரதான புள்ளியை தூண்டும் முறையை இப்போது நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும்.*

*கர்ப்ப சக்தி நாளத்தின் 5- வது புள்ளி CV5*

*CV5 என்ற கர்ப்ப சக்தி நாளத்தின் ஐந்தாவது புள்ளி ஜுரத்தை குணப்படுத்தும். ஜுரத்தின் தீய விளைவுகளை முறிக்கும் சக்தியை வெளிப்படுத்தும் புள்ளியாகும்.*

*CV5 என்ற இந்தப் புள்ளி அமையப்பெற்றுள்ள இடம்,  தொப்புளுக்குக்  கீழே,  தொப்புளின் மையப்பகுதியிலிருந்து(நோயளி யின் ஆட்காட்டி விரலின்) இரண்டரை அங்குல தூரத்தில் உடலின் நேர் மையக் கோட்டில் அமைந்துள்ளது.*

*புள்ளியைத்  தூண்டும் முறை*

*இந்தப் புள்ளியின் மேல், லேசாக முதலில் உங்கள் ஆட்காட்டி விரலைக் கொண்டு பட்டும் படாதவாறும் அவ்வளவு மயிரிழை போன்று தொடுங்கள். பின்னர் அப்புள்ளியின் மீதிருந்து விரலை எடுக்காமல் 30 வினாடிகளுக்கு நிலை நிறுத்துங்கள். CV-5 புள்ளியைத் தூண்டிக்  கொண்டிருக்கும். உங்கள் விரலின் நுனிப் பகுதியில் மிக லேசானதொரு துடிப்பு ஏற்படுவதை உணருவீர்கள். இந்தத் துடிப்பை உணர்ந்ததும் உங்கள் விரலை CV-5 என்ற அந்தப் புள்ளியிலிருந்து மெதுவாக விடுவித்து பின்னர் விரலை எடுத்து விடுங்கள்.*

*ஜுரத்தின் காரணமாக உள்ள அசதி உடனே மாறிவிடும். ஜுரத்தின் தீவிரம் ஒரு மணி நேரத்தில் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஜுரத்தின் வீரியம் என்ன இருந்தாலும் எதுவும் மூளையைப்  பாதிக்காது.*

*குறிப்பு; CV-5 என்ற புள்ளிக்கு கொடுக்கும் தூண்டுதல் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது 12 மணி நேர இடைவெளிக்குப் பிறகு மிக அவசியமானால்,2-வது முறை அழுத்தம் கொடுப்பதேயே கூட முடிந்தவரை தவிர்த்து விடுதல் அதிக அளவு நன்மையைக்  கொடுத்துக்கொண்டிருக்கும்.*

*சிறுகுடல் இயங்கும் நேரம் மதியம் 2.00 மணி ஆகும். மதிய வேளை உணவிற்குப் பிறகு 3.00 மணிக்குள்ளாக வயிறு உப்புசம் அதிகமாகக் காற்றுப் பிரிதல், தூக்கம் கண்ணயர்ந்து விடுதல், 2 மணியிலிருந்து 3 மணி வரையிலான வெயில் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் கஷ்டப்படுதல், இந்த நேரத்தில் அதிகப்படியான வியர்வை போன்றவை தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பிலிருந்து சிறுகுடலுக்குப்  போதுமான உஷ்ண சக்தி ஓட்டம் பெறவில்லை. என்பதை உணர்த்துகிறது. மேற்கண்ட தொந்தரவுகள் மிக அதிகமாக உள்ளவர்கள் சிறுகுடலின் இயக்கத்தை உறுதிப்படுத்தும் கர்ப்ப சக்தி நாளத்தின் 4-வது புள்ளிக்கு மேலே குறிப்பிட்டவாறு 3 நாட்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தால் அதன் பலன் இன்னும் சிறப்பாக இருக்கும்.*

*CV-5 என்ற சிறுகுடலை உறுதிப்படுத்தும் கர்ப்ப சக்தி நாளத்தின் 4-வது புள்ளி தொப்புளின் நடுமையத்திலிருந்து நேர் கீழாக, நோயாளியின் ஆட்காட்டி விரலின் அளவில்31/2 அங்குல தூரத்தில் உடலின் நேர்மையக்  கோட்டில் அமைந்துள்ளது.*

*குறிப்பு; பகல் வேளைகளில் ஆஸ்துமா தொந்தரவினால் கஷ்டம் ஏற்படுமானால் அமைதியாகப் படுத்துக் கொண்டு CV -4 என்ற இந்தப் புள்ளியை, மேலே சொன்னவாறு பட்டும் படாமல் தூண்டுங்கள். ஆஸ்துமாவினால் சுருங்கி கொண்டிருக்கும் சுவாசப்பைகளின் இறுக்கம், படிப்படியாக தளர்ந்து ஆஸ்துமா குணமாவதை நீங்கள் உணர்வீர்கள். இந்தப்  புள்ளியே உங்கள் ஆஸ்துமாவை முழுவதுமாகக்  குணப்படுத்தியும் விடும்.*

*இரவு 9.00 மணியிலிருந்து இரவு 11.00 மணி வரை தான் தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு மிகுதியாக இயங்கக்கூடிய நேரம்.*

*அவ்வாறே  காலை 9.00 மணியிலிருந்து காலை 11.00 மணி வரை மண்ணீரல் சுறுசுறுப்பாக இயங்கக்  கூடிய நேரம் குறிப்பிட்ட இந்த 2 மணி நேர காலை,  இரவு வேளைகளில் உணவருந்துதல் தவிர்க்கப்பட்டால் உடலின் உஷ்ண நிலை அல்லது வெப்ப சக்தி ஓட்டம், உடல் உறுப்புகள் முழுமையிலும் சீராக அமையும். இதய மேலுறை, இருதயம், சிறுகுடல், தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, மண்ணீரல் ஆகிய உறுப்புகளின் இயக்கம் பாதிப்புக்குள்ளாகாதவாறு பாதுகாக்கப்படும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு காலை 8 மணிக்குள்ளாக காலை உணவையும், இரவு 8 மணிக்குள்ளாக இரவு உணவையும், இரவு உணவையும் தவறாது கொடுத்து விடுங்கள். பிற்காலத்தில் மண்ணீரல் பாதிப்பின் காரணமாக சக்கரை நோய், இரத்த அழுத்த நோய் ஏற்படுவதைத் தவிர்த்து விடலாம்.*

*🌴ஆயர்பாடி இயற்கை துணை உணவுகள் & வாசி யோக ஆராய்ச்சி மையம், பழனி,📞9965042543,8778102307, வாட்ஸ்அப் 9585436122*
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

பொன்னேரி வட்டாரஜமாஅத்துல் உலமா தேர்தல்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தேர்தல் பொதுக்குழு கூட்டம்* பழவேற்காடு *மஸ்ஜிதுல் முஷர்ரஃப் சின்னப் பள்ளிவாசல் வளாகத்தில் 6-10-2020 செவ்வாய்கிழமை ஹிஜ்ரி 18.02.1442* அன்று மதியம் 2.30 மணியளவில்
*தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மண்டல பொறுப்பாளர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் MMS ஹாஸ்மிஸ்பாஹ் ரஷீதி ஹழரத் தலைமையில்* நடைபெற்றது

 பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் *உலமா சபையின் புதிய நிர்வாகிகளாக* கீழ் கண்ட உலமாக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் 

*தலைவர். மௌலவி J.காதர் பாஷா மன்பயீ*

*செயலாளர். மௌலவி Mk.ஷேக் தாவூத் ரஹ்மானி அத்ரமீ*

*பொருளாளர். மௌலவி ஷிஹாபுத்தீன் ஜமாலி*

 துணைத் தலைவர். மௌலவி K.அப்துல் காதர் ஜெயிலானி ரப்பானி

துணைச் செயலாளர். மௌலவி சாதிக் மீரான் மன்பயீ

கௌரவ தலைவர். மௌலானா PA.முஹம்மது ஹுசைன் பாகவி

கௌரவ ஆலோசகர். மௌலானா AM.சுல்தான் ரியாஜி

வழிகாட்டுதல் குழு. உறுப்பினர்கள்:
மௌலவி AM. உபைதுல்லாஹ் பாஜில் பாகவி ஹழ்ரத்

மௌலவி A.முஹம்மது அலி மன்பயீ ஹழ்ரத்

மௌலானா 
மாபாஷா ஹஜ்ரத்

மௌலானா LU. பத்ருஜ்ஜமான் ஹழ்ரத் 

மௌலவி முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி

ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்
 
தகவல் : *மௌலவி MMS.ஹாஸ் மிஸ்பாஹ் ரஷீதி, ஃபாஜில் கங்கோஹி ஹலரத், மண்டல பொருப்பாளர் மாநில ஜமாஅத்துல் உலமாசபை*
7.10 2020 காலை 8.மணி

பிரபல்யமான பதிவுகள்