கல்யாண ராமன் முகநூல் பக்கத்தில் போய் பாருங்கள் இந்து மதத்தில் ஓரினச்சேர்க்கை இருக்கிறது என்று சொல்லும் ஸனீம் கல்யாணி ராமன் இவர். 

முதலில் ஆண்மையற்றவன் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுும

உண்மையில் முஸ்லிம்கள் என்றால் யார் தெரியுமா வெறுமனே வாயால் அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் ஈமான் கொள்பவர்களா? நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் உண்மையாக உள்ளத்தால் ஈமான் கொண்டு, அவர்களது ஸிபத்துகளை அதாவது அவர்களுடைய பண்புகளை உள்ளதை உள்ளபடி உளப்பூர்வமாக ஏற்று ஈமான் கொண்டு, இன்னும் அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் தனது உயிரை விடவும் மேலாக நேசித்து, அவர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்பவர்களே உண்மையான முஸ்லிம்களாவார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் நபியை கேவலமாக ஏசிய திட்டியவர்கள் அவர்களின் முடிவு என்னவாக ஆனது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளட்டும்.تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّ‏

அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!

(அல்குர்ஆன் : 111:1)


مَاۤ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَ‏

அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப் பவைகளும் அவனுக்கு யாதொரு பயனுமளிக்காது.

(அல்குர்ஆன் : 111:2)


سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍ ‏

வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அடைவான்.

(அல்குர்ஆன் : 111:3)


وَّامْرَاَ تُهٗ  حَمَّالَةَ الْحَطَبِ‌‏

விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,

(அல்குர்ஆன் : 111:4)


فِىْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ‏

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்துவிடுவாள்.)

(அல்குர்ஆன் : 111:5)


ஒன்பது துர்குணங்கள்

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِيْنٍۙ‏
அதிகமாக சத்தியம் செய்கின்ற, அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர்.
(அல்குர்ஆன் : 68:10)

هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِيْمٍۙ‏
அவன் திட்டுகின்றவனாகவும், புறம்பேசித் திரிபவனாகவும்,
(அல்குர்ஆன் : 68:11)

مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏
நன்மை செய்யவிடாமல் தடுப்பவனாகவும்,
(அல்குர்ஆன் : 68:12)

عُتُلٍّ بَعْدَ ذٰلِكَ زَنِيْمٍۙ‏
கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும், பாவச் செயல்கள் அதிகம் செய்பவனாகவும், இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழி பிறவியாகவும் இருக்கின்றான்;
(அல்குர்ஆன் : 68:13)

இந்த அத்தியாயத்தில் உயர்தோன் அல்லாஹ் 9 துர்குணங்கள் உள்ள மனிதனை பற்றி பேசுகிறான்.

1. எடுத்ததற்கெல்லாம் சத்தியம் செய்பவன் (ஹல்லாப்)
2. அற்பமான புத்தியுள்ளவன் மஹீன்.
3. புறம் பேசுபவன் (ஹம்மாஸ்)
4. கோள் சொல்லித் திரிபவன் (மஷ்ஷாஇன் பி நமீம்)
5. நன்மையைத் தடுப்பவன் (மன்னாஇன் வில் கைர்)
6. எல்லை மீறுபவன் (முஅததின்)
7. பாவம் புரிபவன் ( அஸீம்)
8. கல்நெஞ்சக்காரன் ( உத்துல்லின் )
9. தவறான வழியில் பிறந்தவன் அல்லது கெட்டவன் என்ற அடையாளம் உள்ளவன் ( ஸனீம் )

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ரலி (நூல் : தப்ரானி ,அல் கபீர், அல்அவ்ஸத்)

இந்த ஒன்பது துர்குணத்தில் பிறந்தவன் பற்றி இந்த ஜும்ஆ பயானில் பார்க்கலாம்.

இந்த ஒன்பது துர்குணத்திற்கு சொந்தக்காரர்கள் 1. அபூஜஹ்ல் 2.வலீத் பின் அல்முகீரா
3. அக்னஸ் பின் ஷரீக்

அபூஜஹ்லின் அராஜகம்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், “உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?” என்று கேட்டான். அப்போது “ஆம்” என்று சொல்லப்பட்டது. அவன், “லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்” என்று சொன்னான்.

அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான்.

அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர்.

அவனிடம், “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்” என்று சொன்னான்.

(இதைப் பற்றிக் கூறுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்” என்று சொன்னார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5390.


ஹம்ஜா (ரழி) அவர்கள் அபூஜஹ்லை புரட்டி எடுத்தார்கள்

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக்கருகில் அமர்ந்திருந்தபோது அவ்வழியாக வந்த அபூ ஜஹ்ல் நபி (ஸல்) அவர்களை சுடும் வார்த்தைகளால் இம்சித்தான். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு எவ்வித பதிலும் கூறாமல் வாய்மூடி மௌனமாகவே இருந்தார்கள். பிறகு அபூஜஹ்ல் ஒரு கல்லால் நபி (ஸல்) அவர்களின் மண்டையில் அடித்து காயப்படுத்திவிட்டு கஅபாவிற்கு அருகில் அமர்ந்திருந்த குறைஷிகளின் சபையில் போய் அமர்ந்து கொண்டான்.

நபி (ஸல்) அவர்களின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது. ஸஃபா மலையில் இருந்த தனது வீட்டில் இருந்துகொண்டு இக்காட்சியை அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆனின் அடிமைப் பெண் பார்த்து, வேட்டையிலிருந்து வில்லுடன் வந்து கொண்டிருந்த ஹம்ஜாவிடம் இச்சம்பவத்தைக் கூறினார். (ஹம்ஜா (ரழி) குறைஷிகளில் மிகவும் வலிமைமிக்க வாலிபராக இருந்தார்.) ஹம்ஜா (ரழி) சினம்கொண்டு எழுந்தார்.

அபூஜஹ்லை தேடி பள்ளிக்குள் நுழைந்து “ஏ கோழையே! எனது சகோதரன் மகனையா திட்டிக் காயப்படுத்தினாய்! நானும் அவரது மார்க்கத்தில்தான் இருக்கிறேன்” என்று கூறி தனது வில்லால் அவனது தலையில் அடித்து பெரும் காயத்தை ஏற்படுத்தினார். அபூஜஹ்லின் குடும்பமான பனூ மக்ஜுமில் உள்ள ஆண்கள் கொதித்தெழுந்தனர். ஹம்ஜாவிற்கு ஆதரவாக ஹாஷிம் கிளையார்களும் கொதித்தெழுந்தனர். இதனைக் கண்ட அபூஜஹ்ல் “அபூ உமாரா (ஹம்ஜா)வை விட்டுவிடுங்கள். நான் அவரது சகோதரனின் மகனை மிகக் கொச்சையாக ஏசி விட்டேன்” (அதுதான் என்னை அவர் தாக்குவதற்குக் காரணம்) என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

பத்ர் யுத்தகளத்தில் அபூஜஹ்ல் கதை முடிந்தது

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனுடைய நண்பர்களும் (அங்கு) அமர்ந்திருந்தனர். அதற்கு முந்தையநாள் (இறைச்சிக்காக மக்காவில்) ஓர் ஒட்டகம் அறுக்கப்பட்டிருந்தது.

அபூஜஹ்ல், “உங்களில் யார், இன்ன குடும்பத்தார் (நேற்று) அறுத்த ஒட்டகத்தின் கருப்பையைச் சுற்றியுள்ள சவ்வுகளைக் கொண்டுவந்து முஹம்மத் (தொழுகையில்) சிரவணக்கத்திற்குச் செல்லும்போது, அவருடைய தோள்கள்மீது வைப்பவர்?” என்று கேட்டான்.

அங்கிருந்தவர்களில் மாபாதகன் ஒருவன் கிளம்பிச் சென்று, அதைக் கொண்டுவந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்தபோது, அவர்களுடைய தோள்களுக்கு மத்தியில் அதை(த் தூக்கி) வைத்தான்.

அதைக் கண்டு அவனுடைய சகாக்கள் ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரிக்கலாயினர்.

நான் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குச் சக்தி இருந்திருந்தால் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முதுகிலிருந்து அப்புறப்படுத்தியிருப்பேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கத்திலிருந்து தலையை உயர்த்தாமல் (அப்படியே) இருந்தார்கள்.

இதற்கிடையில், யாரோ ஒருவர் சென்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டார். உடனே சிறுமியாயிருந்த ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து அதை அப்புறப்படுத்தினார்.

பிறகு அ(ந்தக் கய)வர்களை நோக்கிச் சென்று அவர்களை ஏசினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் உரத்த குரலில் எதிரிகளுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

-பொதுவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தால் ஒவ்வொரு வாக்கியத்தையும் மூன்று முறை கூறுவார்கள்.-
பிறகு “இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள்” என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.

நபியவர்களது குரலைக் கேட்டதும் எதிரிகளின் சிரிப்பு அடங்கிவிட்டது. அல்லாஹ்வுடைய தூதரின் பிரார்த்தனையைக் குறித்து அவர்கள் அஞ்சினர்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரை நீயே கவனித்துக்கொள்” என்று பிரார்த்தித்தார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்தப் பிரார்த்தனையில்) பெயர் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் மாண்டு கிடந்ததை நான் கண்டேன். பின்னர் அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப்பட்டு, பத்ரிலிருந்த ஒரு பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டனர்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3670.


அபூஜஹ்ல் வெட்டப்பட்டு உயிரிழந்தான்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.

பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இளவயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள்.

அப்போது, ‘அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா’ என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, ‘என் பெரிய தந்தையே! நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா?’ என்று கேட்டார். நான், ‘ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!’ என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், ‘அவன் இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)’ என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன்.

அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, ‘இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!’ என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள்.

ஸஹீஹ் புகாரி : 3141.

மக்கா மாநகரில் தன்னை யாரும் அசைக்க முடியாது என்று கருதிய அபூஜஹ்ல். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏசி பேசியதனால் அவனது கதையை முடிக்க இளம் வயது சிறுவர்கள் கண்டந்துண்டமாக வெட்டி வீசினார்கள்.

வலீத் இப்னு முகீரா

பகிரங்க இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஹஜ்ஜின் காலம் நெருங்கி வந்தது. ஹஜ்ஜுக்கு வரும் அரபுக் கூட்டத்தினர் முஹம்மதின் அழைப்பினால் மனம் மாறிவிடலாம். எனவே, ஹாஜிகளை சந்தித்து முஹம்மதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக குறைஷியர்கள் வலீத் இப்னு முகீராவிடம் ஒன்று கூடினர். குறைஷிகளிடம் அவன் “இவ்விஷயத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறுங்கள். இல்லையென்றால் ஒருவன் கூற்றுக்கு மற்றவன் கூற்று மறுப்பாகி ஒருவர் மற்றவரை பொய்யராக்கிக் கொள்வீர்கள்” என்று கூறினான். அம்மக்கள் “நீயே ஓர் ஆலோசனையைக் கூறிவிடு. நாங்கள் அதற்கேற்ப நடந்து கொள்கிறோம்” என்றனர். அவன் “இல்லை! நீங்கள் கூறுங்கள், அதைக் கேட்டு நான் ஒரு முடிவு செய்கிறேன்” என்றான்.

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

உடனே “அல்லாஹூ தஆலா
கோபம் கொண்டு அவனைப் பற்றி கடுமையான
வார்த்தைகளால் குர்ஆன் வசனத்தை இறக்கி விட்டான்.”

அண்ணல் நபியவர்களை ஒருதடவை தான் வலீத் இப்னு முகீரா திட்டினான்.

ஆனால் அல்லாஹ் அவனை
பலமுறைத் திட்டி ஆயத்தை இறக்கினான்.

هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِيْمٍۙ‏

அவன் திட்டுகின்றவனாகவும், புறம்பேசித் திரிபவனாகவும்,
(அல்குர்ஆன் : 68:11)

مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏

நன்மை செய்யவிடாமல் தடுப்பவனாகவும்,
(அல்குர்ஆன் : 68:12)

عُتُلٍّ بَعْدَ ذٰلِكَ زَنِيْمٍۙ‏

கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும், பாவச் செயல்கள் அதிகம் செய்பவனாகவும், இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழி பிறவியாகவும் இருக்கின்றான்;
(அல்குர்ஆன் : 68:13)

ஸனீம் என்றால் என்ன

عُتُلٍّ بَعْدَ ذٰلِكَ زَنِيْمٍۙ‏

கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும், பாவச் செயல்கள் அதிகம் செய்பவனாகவும், இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழி பிறவியாகவும் இருக்கின்றான்;
(அல்குர்ஆன் : 68:13)

இந்த வசனத்தை விவரமாக விரிவுரையாளர்களின் பார்வையில் நாம் பார்க்க வேண்டும்

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுவதாவது ஸனீம் என்பது குறைஷியரில் ஒருவரின் பெயராகும். ஆட்டிற்கு (மற்ற ஆடுகளை விட்டு வேறுபடுத்திக் காட்டும்) ஒரு அடையாளம் இருப்பது போல் அவனுக்கும் கழுத்தில் ஒரு அடையாளம் இருந்தது.

இதன் கருத்து என்னவென்றால் மற்ற ஆடுகளுக்கு இடையே காதணி உள்ள ஆடு அடையாளம் காட்டப்படுவது போல்.. ஒட்டகத்திற்கு காதைக் கிழித்து விட்டு அடையாளம் காட்டப்படுவது போல்… அதாவது பார்த்தவுடன் இவன் தான் என இனம் கண்டுகொள்ள உதவும் அடையாளம் அதற்கு தான் ஸனீம் என்று சொல்லப்படும்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அரபியர் மொழியில் ஸனீம் என்ற வார்த்தை யாருக்கோ பிறந்து ஒரு சமூகத்தாரோடு தன்னை இணைத்து சொல்லிக் கொள்பவன் என்பதே இதன் பொருள்.

ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலி அவர்கள் பாடிய கவிதை

நீ பிறந்தாய்..
யாருக்கோ (ஸனீம்) பிறந்து..
மாட்டி விடப்பட்டாய்..
ஹாஷிம் குடும்பத்தோடு..

குறைஷி இறைமறுப்பாளர்கள் ஒருவனை சுட்டி காட்டி பாடப்படும் கவிதை இது.

மற்றொரு அறிவிப்பில் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விளக்குகிறார்கள்..

யாருக்கோ பிறந்து ஒரு சமூகத்தாரோடு தன்னை இணைத்துச் சொல்பவன். அருவருப்பானவன். பழிப்பிற்குரியவன் என்று விளக்கம் கூறுவார்கள். (தஃப்ஸிர் இப்னு கஸீர்)

இந்தத் திருக்குர்ஆன்
வசனங்கள் இறங்கியதும்…

“வலீதுப்னு முகீரா
வேகமாக வீட்டுக்குச் சென்று அவனுடைய தாயின் கழுத்தில் வாளை வைத்தான்.!” “என்னைப் பற்றி
முஹம்மத்
சொன்னதெல்லாம்
உண்மைதான் நான் அயோக்கியன்தான்!”

ஆனால் “முஹம்மத் என்னை
விபச்சாரத்தில் பிறந்தவன் என சொல்லி விட்டார்அவர் பொய்
சொல்லமாட்டார்.”

“உண்மையைசொல் நான் விபச்சாரத்தில் பிறந்தவனா? என்தந்தை யார்? முகீரா இல்லையா?” எனக் கேட்டான்.

“ஆமாம்..! நான் ஆட்டு இடையனை வைத்திருந்தேன் நீ அவனுக்கு பிறந்தவன் தான்.
என்ற உண்மையை சொன்னதும் துடிதுடித்துப்போய் விட்டான்.!”

மேலும் “அவன் மூக்கு
அழகாக இருக்கும்!”

“அவன் மூக்கின் மீது
மிக விரைவில்
ஓர் அடையாளம்
விடுவோம்! (68:16) என்றும்
அல்லாஹ் ஆயத்
இறக்கினான்.

“பத்ருப் போரில் அவன் மூக்கில் வாள் முனைப்பட்டு பெரிய காயம் ஏற்பட்டதால் அவன் முகமும் விகாரமாகி விட்டது!”

அதனால் “வலீத் இப்னு முகீரா
மக்களுக்கு முன் வெளியில் வர வெட்கப்பட்டு மனம் நொந்து இறந்து போனான்.!”

நூல்: குர்துபீ மஆரிஃப் ஷஃபீவுல் அன்வார்