நின்றுக்கொண்டு தண்ணீர் குடிக்கலமா?
5393 – حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- زَجَرَ عَنِ الشُّرْبِ قَائِمً
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.
நூல் : முஸ்லிம்
صحيح مسلم
5394 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ نَهَى أَنْ يَشْرَبَ الرَّجُلُ قَائِمًا. قَالَ قَتَادَةُ فَقُلْنَا فَالأَكْلُ فَقَالَ ذَاكَ أَشَرُّ أَوْ أَخْبَثُ.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக அனஸ் (ரலி) கூறினார்கள். உடனே நாங்கள், அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா? என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், இது அதைவிட மோசமானது; அருவருப்பானது என்று கூறினார்கள்.
நூல் முஸ்லிம்
நின்று கொண்டு தண்ணீர் அருந்தாதீர்கள்..!!
அருந்துவதால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தால் கண்டிப்பாக இனி நின்றவாறு தண்ணீர் பருக மாட்டீர்கள்.
நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது, நீர் நேரடியாக வயிற்றில் விழும். இப்படி வேகமாக விழும் நீரானது உடல் உறுப்புகள் மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை பாதிப்படைய செய்கிறது. மேலும் உடலின் சமநிலையை பாதிக்கிறது. இதனால் மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் வரக்கூடும். அதுமட்டுமின்றி, செரிமான சிக்கலை ஏற்படுத்தி, உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் ஏற்படவும் ஒரு காரணியாக அமைந்து விடுகிறது.
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் இந்த தாக்கங்கள் உடனடியாக நமக்கு தெரியாத காரணத்தால் நாமும் இதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை.
இப்படி இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் எழுந்தாலும் நின்று கொண்டு அல்லது அண்ணாந்து தண்ணீர் குடிப்பதால் தான் இந்த பிரச்சனைகள் வந்திருக்கலாம் என்பதை கூட சிந்திக்க மாட்டோம்.
ஆயுர்வேத முறைப்படி நீரை வாயில் வைத்து மெல்ல மெல்ல விழுங்க வேண்டும் என்கிறார்கள். அவசர அவசரமாக அருந்துவதையும் தவிர்க்க சொல்கிறார்கள்.
அண்ணாந்து தண்ணீர் பருகுகையில், நீரானது நுரையிரலுக்குள் நுழைய வாய்ப்புகள் அதிகம். சிலர் குழந்தைகளை, எச்சில் பட்டுவிடும் அண்ணாந்து குடி என்பார்கள். சிறுவயது முதலே இப்படி பழக்கப்படுத்துவார்கள்.
இந்த முறை நாகரீகமாக பார்க்கப்பட்டாலும் இது ஆரோக்கியமான முறையாக பார்க்கப்படுவதில்லை.
நீரின்றி அமையாது உலகு' என்பதுபோல இயற்கையாக மனித உடலும் நீரின்றி அணுவளவு கூட இயங்காது. மனித உடலில் சராசரியாக 70% நீர் உள்ளது.
மூளை மற்றும் இதயத்தில் 73 சதவிகிதம், நுரையீரலில் 83%, தொழில் 64%, தசைகள் மற்றும் சிறுநீரகத்தில் 79% , எலும்புகளில் 31% நீர்ச்சத்து உள்ளது.
ADVERTISEMENT
எனவே அன்றாட உடலியல் செயல்பாடுகளுக்கு நீர் அவசியம். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க நீரில் உள்ள சத்துகள் தேவைப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு 20 கிலோ எடைக்கு 1 லிட்டர் என்ற விகிதத்தில் டீ தண்ணீர் அருந்த வேண்டும். 60 கிலோ எடையுள்ள ஒருவர் நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
ஆனால் அந்த தண்ணீரின் சத்துகள் முழுமையாக தடையின்றி உடல் உறுப்புகளுக்கு கிடைக்க தண்ணீரை அருந்தும் முறை உள்ளது.
அதில் குறிப்பாக நின்று கொண்டு தண்ணீர் பருகக் கூடாது. நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது, நீர் நேரடியாக வயிற்றின் மலக்குடலுக்குச் சென்றுவிடும். அதேபோல வேகமாகச் செல்லும். இது உடல் உறுப்புகளில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் பாதிப்பு, அல்சர் பிரச்னை, நெஞ்செரிச்சல், வயிற்று செரிமானப் பிரச்னைகள், நரம்பு கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால், இதன் தாக்கங்கள் உடனடியாக ஏற்படாது என்பதால் பலரும் இதனைக் கண்டுகொள்வதில்லை.
சிலர் வெயிலில் நடந்துவிட்டு தாகம் அதிகமாகும்போது வேகவேகமாக ஒரு லிட்டர் தண்ணீரை காலி செய்வார்கள். அதுபோல வேகமாக தண்ணீர் குடிக்கும்போது உடல் உறுப்புக்கள் பாதிப்படையும்.
ஆயுர்வேத முறைப்படி நீரை வாயில் வைத்து மெல்ல மெல்ல விழுங்க வேண்டும். கண்டிப்பாக உட்கார்ந்து நிதானமான நிலையில் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி செய்யும்போது நீரானது உடல் உறுப்புகளுக்கு சரியாக செல்கிறது
நின்றுகொண்டே தண்ணீர் அருந்தக்கூடாது, ஏன்? - https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2021/apr/08/dont-drink-water-while-standing-3599964.html