பெண்ணின் இவ்வுலக வாழ்க்கை,காதல்.காதல்.காதல்
கதை சொன்னான்
காதலித்தான்
கதை கதையாய்ச்
சொல்லி
கல்யாணமும்
செய்து கொண்டான்..!
கலப்புமணம் என்றான்
காதல்மணம் என்றான்
புரட்சியென்றான்
புதுமையென்றான்
பொய் பொய்யாய்ச் சொல்லி
புள்ளை ஒன்றைக்
கொடுத்துவிட்டான்..!
போய் வருகிறேன் என்று
ஒருநாள் போனவன்
போன இடம் தெரியவில்லை,,!
பெற்றவர்களோ
பெரியவர்களோ
உற்றாரோ உறவினரோ
ஒருவரும் எனக்காக
அனுதாபப்படுவதில்லை..!
ஒவ்வொரு நாளும்
ஒய்வு தேவைப்படுகிறது
உணவு தேவைப்படுகிறது
உழைக்க முடியாத
ஒன்பது மாத கர்ப்பிணியை
ஒதுங்கவும் இடம்தருவார்
யாரும் இல்லை..!
பெண்கள் காப்பகமோ
பெரியாஸ்பத்திரியோ
கண்ணுக்குத் தெரிந்தால்
கை ஊன்றிப்
படுத்துக் கொள்வேன்.
அங்கேயும்
நீ யார் என்று கேட்டால்
என்ன சொல்லுவேன்,,!?
ஓடிப்போனவன்
போய்த்தொலையட்டும்
உறவுக்காரர்கள்
நாங்கள் இருக்கிறோம் வா
என்று சொல்ல
அவர்கள் பார்த்து வைத்த
பையனோடு
சேர்த்திருக்க வேண்டும்..!?
சேர்த்திருந்தால்...
போனவன்
போயே தொலைந்தாலும்
ஊரோடும்
உறவுகளோடும்
வாழ்ந்திருக்கலாம்..!
வாரிசுகளை தலைமுறை
தொடர்ச்சியென
தாய்மாமன்கள் என்றாவது
நாலு நண்பர்கள்
வந்திருப்பார்கள்..!
எந்தப் பாதுகாப்பும் இல்லாத
இந்தக் கல்யாணத்தை
இளமையில்
காதல் திருமணம் என்று
கனவுகண்டு கனவுகண்டு
தோற்றுப் போய்விட்டேன்..!
தோழிகளே....
துவண்டு விழும்போது
துணைக்குவர நாதியில்லாத
வாழ்க்கைக்கு பெயர்
காதலென்றால்...
அந்தக்காதல்
அவசியம்தானா..?
யோசித்துப் பாருங்கள்,,,!?