_மிஃராஜ் பயணம் ஏன்?
*=====================*
மிஃராஜ் நிகழ்வு நடப்பதற்க்கு பல காரணம் உண்டு என்பதை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள் அதில் ஒரு சிலதை மட்டும் பதிவு செய்கிறேன்
*காரணம்:-1* நபிகள் நாயகம் [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்களுக்கு ஏற்பட்ட மனரீதியான உடல் ரீதியான ஆழமான காயத்திற்க்கும் கவளைக்கும் மன உலைச்சலுக்கும் மருந்தாக இந்நிகழ்வு நடந்தது
நபியவர்களின் நபித்துவ வாழ்வின் தொடக்க முதல் எதிரிகளிடமிருந்து எதிர்ப்புகளும் தொந்தரவுகளும் வந்த நேரத்தில் நபியவர்களுக்கு எல்லா வகையிலும் பெரும் உருதுணையாகவும் ஆற்தலாகவும் பாதுகாப்பாகவும் இருந்தவர்கள் இரண்டு நபர்கள் மட்டுமே
*அதில் ஒருவர்:-*
நபியவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்கள் எதிரிகளின் சூழ்ச்சிகளும் அவர்களின் தந்திரங்களுக்கு மத்தியில் நபியை தொடாமல் இருக்க பெரும் உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தவர் இவர்கள் தான்
ஒரு தடவை சஹாபாக்கள் யாரசூலல்லாஹ்! உங்களுக்காக கோபம் கொண்டு உங்களுக்கு அரணாக இருந்த உங்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்துள்ளீர்களா? என கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் ஆம்! அவர்கள் நரகின் மேல்தட்டில் இருக்கிறார்கள் நான் மட்டும் இல்லையெனில் அவர்கள் நரகின் அடிப்பகுதியில் இருந்திருப்பார்கள் என்றார்கள்
*இன்னொருவர்:* நபிகளாரின் அன்பு மனைவி அன்னை கதீஜா [ரலியல்லாஹு அன்ஹா] அவர்கள்
இவர்கள் பெரும் செல்வச் சீமாட்டியான இருந்தார்கள் நபிக்காக தன் அனைத்து சொத்துக்களையும் செலவு செய்தார்கள் நபித்துவத்திற்கு முன்பு அண்ணல் அவர்கள் ஹிரா குகையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு இறை வணக்கத்தில் ஈடுபட்ட நேரத்தில் தன் வயோதிக நிலையிலும் மிக கறடு முறடான பாதைகளை கடந்து நபியவர்களுக்கு பல நாட்களாக உணவும் தண்ணீரும் எடுத்து சென்றவர்கள்
முதன் முதலாக ஜிப்ரயீல் {அலைஹி வஸல்லம்} அவர்களை சந்தித்த அதிர்ச்சியில் பதட்டத்துடனும் படபடப்புடனும் வந்த நபியவர்களை மன அமைதிபடுத்தி பின்பு என்ன நடந்தது என விசாரித்து அவர்களுக்கு ஆறுதலான சில வார்த்தைகள் கூறியதை வரலாறு பதிவு செய்கிறது
அதனால் தான் அன்னை கதீஜா [ரலியல்லாஹு அன்ஹா] அவர்கள் இறந்த விட்ட பிறகும் எப்பொழுதும் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார்கள் ஏதாவது பொருட்கள் அன்பளிப்பாக வந்தால் முதன் முதலாக அன்னை அவர்களின் நெருக்கமானவர்களுக்கு வழங்கும் படி கூறுவார்கள்
ஒரு நாள் நபியவர்கள் அன்னையை பற்றி பேசியதைக் கண்டு ஆயிஷா [ரலியல்லாஹு அன்ஹா] அவர்கள் ரோஷம் கொண்டு யாரசூலல்லாஹ்! உங்களுக்கு நாங்களெல்லாம் இல்லையா? என்று கேட்டு விட்டார்கள் கடுமையாக கோபமுற்ற அருமை நாயகம் [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்கள் ஓஆயிஷாவே! கதீஜாவை பற்றி உனக்கு என்ன தெரியும் கதீஜா அவர்களுக்கு பிறகு அவர்களை விட சிறந்த பகரத்தை இறைவன் எனக்கு வழங்கவே இல்லை அவருக்கு நிகர் யாருமில்லை மக்களெல்லாம் என்னை பொய்யாக்கிய போது என்னை உண்மைப்படுத்தியவர் மக்களெல்லாம் என்னை கைவிட்ட பொழுது எனக்காக தன் சொத்துக்களை தியாகம் செய்தவர் அவர்களின் மூலம் தான் எனக்கு குழந்தை பாக்கியத்தை இறைவன் வழங்கினான் என்றார்கள்
இந்தளவு நெருக்கடியான நேரத்தில் ஆதரவாகவும் பெரும் உருதுணையாகவும் இருந்து உதவிகள் புரிந்த இவ்விருவரும் அடுத்தடுத்து மரணத்தை தழுவினார்கள் நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்களின் ஐம்பத்தி ஓராவது வயதில் இருவரும் இருமாத இடைவெளியில் இன்னொரு கருத்தின் படி மூன்று நாட்கள் இடைவெளியில் உலகை விட்டுப் பிரிந்தார்கள்
மிகப்பெரிய இழப்பையும் நெருக்கடியையும் சந்தித்த நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகவும் அவர்களின் உள்ளத்தில் படிந்த துயரத்தை துடைப்பதற்காகவும் தான் இந்த நிகழ்வு நடந்தது
*காரணம்:-2*
தனது எல்லா அத்தாட்சிகளையும் ஒரே இரவில் நபியவர்களுக்கு காண்பித்து உலகத்தில் நிறைவானவர்கள் சிறந்தவர்கள் அவர்கள் தான் என்பதை உலகிற்கு சொல்வதற்காகவும் காட்டுவதற்காகவும் அல்லாஹ் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தான் இது குறித்து [சூரா இஸ்ரா வசனம்-1]ல் கூறுகிறான்
*விளக்கம்:-* சமூகத்திற்கு மார்க்க போதனை நேரத்தில் இறைவனை இறைவனின் படைப்பை போதிக்கிறாயே? அவைகளை எல்லாம் நீ பார்த்துள்ளாயா? என கேட்டுக்கும் பதிலுக்குத்தான் இந்நிகழ்வு எனவே தான் இறைவனின் சந்திப்பு ஏழு வானம் சுவனம் நரகம் அர்ஷ் குர்ஷ் முன்தஹா ரப்ரப் வானவர்கள் நபிமார்கள் இன்னும் இதுபோன்றவைகளை பார்க்க செய்தான்
*காரணம்:-3*
மக்களின் ஈமானை பரிசோதிப்பதற்காக இந்நிகழ்வு நடந்ததாகவும் கூறப்படுகிறது
சிலர் இந்நிகழ்வை மறுத்தனர் ஆனால் அபூபக்கர் [ரலியல்லாஹு அன்ஹு] அவர்கள் மட்டுமே உறுதி கொண்டார்கள் இது மட்டுமல்ல இதை விட தூரமான விஷயங்கள் கூட நபி [ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்] அவர்களின் நாவிலிருந்து எது வெளிப்படுகிறதோ அதை அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்வேன் என்றார்கள் அதனால் தான் அவர்களுக்கு சித்தீக் உண்மையாளர் என்ற பெயர் வந்தது
*காரணம்:-4*
நபிமார்கள் ஏக்கத்தை பிரியத்தை தனிக்க இந்நிகழ்வு நடந்தது
இவ்வுலகில் 1-இலட்சத்திற்கு மேற்பட்ட நபிமார்கள் வந்தார்கள் இறைவன் உலகிற்க்கு ஒவ்வொரு நபிமார்களை அனுப்பும் போது இவ்வாறு கூறுவான் நான் உங்களை நபியாக உலகிற்க்கு அனுப்புகிறேன் ஆனால் உங்களுக்கு முன் ஒருவரை உங்களுக்கு நபியாக படைத்துள்ளேன் அவர் பெயர் முஹம்மது நீங்கள் நபியாக வாழும் காலத்தில் அந்த நபி உங்களுக்கு முன் தோன்றினால் நீங்கள் நபியல்ல அவரே நபி இதை ஏற்று கொள்கிறீர்களா? என கேட்பான் சரி ஏற்று கொண்டேன் என்றால் சொன்னால் தான் அவர்களை நபியாக இறைவன் அனுப்புவான் மேலும் நபியவர்களின் தன்மை மகிமை ஆளுமை போன்றவைகளை எடுத்து சொன்னதும் ஒவ்வொரு நபிமார்களும் அப்படிபட்ட நபியை பார்க்க துடித்தார்கள் ஆவல் கொண்டார்கள் எனவே தனிக்க இந்நிகழ்வு.