நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், பிப்ரவரி 03, 2014

ஹஜ் கடமை, துஆ,

தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துஆக்களையும் அறிந்து கொள்ளவேண்டும்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயீப் நூல்கள்: அஹ்மத், அபூதாவுத், நஸயீ, ஹாகீம்) கஃபாவை தவாஃப் செய்வது, ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன”(அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், அபூதாவுத், திர்மிதீ) துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படும் இடங்கள் *.திருக்கஃபா வை முதலில் காணும் போது *.தவாஃபிலும் தவாஃப் சுற்ரும் இடத்தில் *.முல்தசிம் (ஹஜறுல் அஸ்வதுக்கும், திருகஃபாவின் நுழைவாயிலுக்கும் இடைப்பாட்ட இடம்) *.ஹஜறுல் அஸ்வதுக்கும் ருக்னல் யமானிக்கும் இடையில் உள்ள பகுதியில் *.திருக்கஃபாவின் உள்ளே *.ஹதீமின் உள்ளே *.மீஜாபுர் ரஹ்மத் (திருக்கஃபாவின் மேல் பகுதியில் இருந்து தண்ணீர் விழும் குழாயின் அருகே *.மகாமு இப்ராஹிமிற்கு அருகே *.சம்சம் கிணற்றருகே; நீர் அருந்திய பின்னும் *.ஸஃபாவிலும், ம்ர்வாஅவிலும் *.ஸயீ செய்யும் இடங்களில் (ஸஃபா-மர்வாவிற்கு இடையில் உள்ள பகுதி) *.அறஃபாத்தில் *.முஸ்தலிஃபாவில் *.மினாவில் 2 சைத்தன்களுக்குக் கல்லெறிந்த பிறகு *. இஹ்றாமின்தொழுகைக்குப் பின் ஆகிய இடங்களில் அவரவர்களின் பாவச் செயலுகளையும் தவறுகளையும் நினைத்து வருந்தி இறைவனிடம் மன்றாடி மண்ணிப்பு கேட்டும், அல்லாஹ் வின் கருணையும் அருளும் வேண்டி துஆ செய்வர். சடங்குகள் தவாஃப் தவாஃபின் பொழுது சுற்றிவரும் முறை தவாஃப் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்வார்கள். தவாஃபின் பொழுது சாப்பிடக் கூடாது அனால் தாகத்தை தவிர்க்கத் தண்ணீர் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளையும் ஓடிச் செய்ய வேண்டும், மீதம் உள்ள நான்கை நடந்து செய்யலாம். [10]இறைவனை நினைவுகூரும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். ‘அல்லாஹு அக்பர்’ போன்ற வார்த்தைகளைக் கூறிக் கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம். முதலில் வரும் மூன்று சுற்றுகளிலும் இவை நிச்சயமாக சொல்ல வேண்டும். அனால் பலரும் ஏழு சுற்றுகளிலும் இதை சொல்லுவார்கள். தவாஃப் செய்து முடித்தவுடன் ஹாஜிகள் மகாமு இப்ராஹீம் எனப்படும் இப்ராஹீமின் இடத்தில் இரண்டுரக்அத்கள்தொழ வேண்டும். இந்தப் இடம் கஃபாவின் அருகில் இருக்கிறது. எனவே கூட்ட நெரிசலை தடுக்க பள்ளியில் உட்கட்டினுள்ளாக எங்கு வேண்டுமானாலும் இவ்வாறு தொழலாம். கஃபாவை சுற்றி ஹாஜிகள் நடக்கும் இந்த பாதையை முக்தாஃப் என்று அழைப்பர். கூட்ட நெரிசலின் காரணமாக இப்பொழுது பள்ளிவாயிலின் மேல்தளத்திலும் தவாஃப் செய்யப்படுகிறது. புனித நீர் பருகுதல தவாஃப் செய்து முடித்த உடன் அன்றே ஹாஜிகள் 'சஃயு' எனப்படும் தொங்கோட்டம் ஓட வேண்டும். அதாவது இப்ராகீமின் மனைவி ஹாஜர் தன குழந்தைக்காக தண்ணீர் தேடி ஓடியதை போன்றே ஹாஜிகளும் ஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓட வேண்டும். அவர்கள் ஏழு முறை ஓடிய பின்னரே சம்சம் புனித நீர் கிடைத்தது என்பதால் ஹாஜிகளும் ஏழுமுறை ஓடிய பின் அந்த நீரைப் பருகலாம். [12]ஹாஜிகளின் வசதிக்காக தற்பொழுது இந்த நீர் குளிர்ந்த நீராக குளிராக்கிகளில் அங்கேயே கிடைக்கிறது.

பிரபல்யமான பதிவுகள்