🎯 அல்லல்லாஹ்...! அம்மம்மா...!
அதன் அறுவடைகள் அவ்வளவா..?
ஒருமுறை நான் நபி (ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என்னை நரகத்திலிருந்து தூரமாக்கி, சுவனத்தில் நுழையச் செய்திடும் ஓர் அமலை - செயலை அறிவித்துக் கொடுங்கள்' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'மிக முக்கியமான மாபெரும் ஒன்றைக் குறித்து என்னிடம் கேட்டுள்ளீர்! இறைவன் அதை யாருக்கு எளிதாக்கினானோ அவருக்கே அது எளிதாக இருக்கும்' என்று கூறி விட்டு, பின்னர் அச்செயல்களை வரிசைப்படுத்தி சொன்னார்கள் :
• இறைவனை மட்டுமே வணங்கி வழிபடு;
அவனுக்கு யாரையும் இணை வைக்காதே!
• தொழுகையை முறையாக நிறைவேற்று!
• ஸகாத்தை வழங்கு!
• ரமளானில் நோன்பிரு!
• கஃபா சென்று ஹஜ்ஜை நிறைவேற்று!
பின்னர் நபியவர்கள், 'நன்மைகளின் வாசல்களை உமக்கு நான் அறிவிக்கவா' என்று கேட்டார்கள். 'அவசியம் அறிவியுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்றேன் நான்.
• நன்மையின் வாசல்களில் உபரியான நோன்பு
பாவங்களைத் தடுக்கும் ஒரு கேடயம்.
• உபரியான தான தர்மம் தண்ணீர் நெருப்பை
அணைப்பது போல தவறுகளை அழித்துவிடும்.
நடு இரவில் தொழும் ஒருவனின் பின்னிரவுத்
தொழுகையும் நன்மையின் வாசல்களில் ஒன்று.
பின்னர் நபியவர்கள், 'அவர்களுடைய விலாக்களை படுக்கைகளிலிருந்து உயர்த்தி அவர்கள் தங்களது இறைவனை இறைபயத்தோடும் இறையாதரவோ டும் பிரார்த்தனை செய்வார்கள். இறைவன் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்கள். அவர்கள் செய்த (நற்)செயல்க ளுக்கு கூலியாக, மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது.' (32 : 16,17) என்ற இறைவசனங்களை ஓதினார்கள்.
பின்னர், 'அனைத்துக்கும் தலையாய அம்சம், அதன் தூண் மற்றும் அதன் உயர்ந்த திமில் குறித்து உமக்கு நான் அறிவித்துத் தரவா' என்று கேட்டார்கள். 'அவசியம் அறிவியுங்கள் இறைத்தூதர் அவர்களே' என்றேன் நான்.
அதற்கு நபியவர்கள், 'அனைத்துக்கும் தலையாய அம்சம் இஸ்லாம். அதன் தூண் தொழுகை. அதன் உயர்ந்த திமில் அறப்போர்.' என்றார்கள்.
பின்னர், 'மேற்கண்ட அனைத்தையும் அடைந்து கொள்வதற்கான மூல மந்திரம் ஒன்றை உமக்கு நான் அறிவித்துத் தரவா' என்று நபியவர்கள் வினவினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அவசியம் அறிவியுங்கள்' என்றேன் நான்.
அப்போது அவர்கள், தமது நாவைப் பிடித்த நிலையில், 'இதை உமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பேசும் பேச்சுகளுக்குமா குற்றம் பிடிக்கப்படுவோம்' என்று கேட்டேன்.
அதற்கு நபியவர்கள், 'நாசமாகப் போக! அறிந்து கொள் முஆதே! நாளை மறுமையில் பெரும்பா லான மனிதர்கள் நரகில் விழக் காரணங்களாக அமைபவை, அவர்களது நாவின் அறுவடைகளே!' என்று கூறினார்கள். [முஆத் (ரளி) • திர்மிதி]
🎯 படிப்பினையும் பாடமும்
நாவினால் பெரும்பாலான மனிதர்கள் நரகில் நுழைகிறார்களா? கேட்கவே முஆதுக்கு (ரளி) ஏற்பட்டது போல நமக்கும் ஆச்சரியமாக இருக்கிறதுதானே! ஆனால், சற்று யோசித்தால் அது உண்மை என்பது நமக்குப் புரியவரும்.
இறைவன் இல்லை என்று மறுப்பதும்
இந்த நாவுதான்.
இறைவனுக்கு இணை கற்பிப்பதும்
இந்த நாவுதான்.
உள்ளொன்றும் புறமொன்றுமாக பேசுவதும்
இந்த நாவுதான்.
பொய், புறம், கோள், அவதூறு பேசுவதும்
இந்த நாவுதான்.
தவறாக திட்டுவது, ஏசுவது, சபிப்பதும்
இந்த நாவுதான்.
கேலி, கிண்டல், நையாண்டி பண்ணுவதும்
இந்த நாவுதான்.
ஆபாச பேச்சு, பாடல், கவிதை பாடுவதும்
இந்த நாவுதான்.
வீண் வழக்கு தர்க்கம் பண்ணுவதும்
இந்த நாவுதான்.
வீண் பேச்சு, மிதமிஞ்சிய பேச்சு பேசுவதும்
இந்த நாவுதான்.
இரட்டை நாக்குப் பேச்சு பேசுவதும்
இந்த நாவுதான்.
வாக்குக்கு மாறு செய்வதும்
இந்த நாவுதான்.
பொய்யாக பாராட்டிப் பேசுவதும்
இந்த நாவுதான்.
குண்டக்க மண்டக்க கேள்வி கேட்பதும்
இந்த நாவுதான்.
இப்படியாக வானம் வரை ஏணிப்படிபோல நாவின் விபரீதங்கள் விரியும்; வியாபிக்கும். எனவே, நமது நாவைக் காத்துக்கொள்வோம்.
'காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு'
என்பது திருவள்ளுவர் வாக்கு. இது இம்மையில்!
'காவாக்கால் சோகாப்பர் நரகில் தள்ளப்பட்டு'
என்பது நபிகள் நாயகம் வாக்கு. இது மறுமையில்.!