நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், ஆகஸ்ட் 07, 2019

தக்வாவுடைய பெண்மணி,

*இவர்கள் தான் தக்வாவுடைய குடும்பத்தினர்*

_கணவன்_:- (இருபது ஆயிரங்களுடன் வீட்டிற்கு வந்தார். )

வாருங்கள் பெருநாள் துணிமணி எடுத்து வருவோம்

_மனைவி_ :-
அல்ஹம்து லில்லாஹ்
துணிமணி எடுக்க பணம் வைத்துள்ளீர்கள்.  மாஷாஅல்லாஹ் பாரகல்லாஹ்

_மனைவி :-_
*குர்பானி கொடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் அன்புக் கணவரே*

__கணவன்_ :-

அதற்கு வசதி இல்லையே என்ன செய்வது?

நம்முடைய அத்தியாவசிய தேவைப் போக மீதி ,
ஆடு வாங்கும் அளவிற்கு பணம் இருந்தால் தானே கொடுக்க முடியும்

_மனைவி :- _( 20000)
*இவ்வளவு பணத்தை கொடுத்து ஆடை வாங்கும் தாங்கள் ஆட்டை வாங்கலாமே....*

_கணவன் :-_ புத்தாடைக்கு என்ன செய்வது என் அன்பு மனைவியே

_மனைவி :-_
புத்தாடை
எடுக்கனும்" என்று அவசியம் இல்ல

ஆடைக்கு அந்த அளவிற்கு
நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வலியுறுத்த வில்லை .
இருப்பதில் நல்லதை அணிந்து கொள்ளலாம்

எனவே நோன்பு பெருநாளில் எடுத்த துணி எனக்கும், பிள்ளைகளுக்கும் (ஒரு இரு தடவை உடுத்தியதோடு)
புதிதாகவே இருக்கிறது"

அதையே உடுத்திக் கொள்கிறேன்
உங்களுக்கு வேண்டும்னா துணி எடுத்துக் கொள்ளுங்கள் அன்பு கணவரே

_கணவன்_ :- மற்றவர்கள் புத்தாடை அணிந்திருக்க நாம் மட்டும் எப்படி. .........

_மனைவி_ :-  அரபு நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதி கலீஃபா உமர் ப்னு  அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு பெருநாள் துணிமணி எடுக்க வசதி இல்லையாம் .

எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருப்பார்கள்.

நாம் ஒன்றும் கிழிந்ததை உடுத்த போவதில்லை ,

இரண்டுமாதங்களுக்கு முன் எடுத்த புதியது தான்.

_கணவன் :-_ *மற்ற பெண்கள் என்ன சொல்வார்கள்? என்ன பதில் சொல்வது?*

_மனைவி :-_ *மற்றவர்களுக்காக நாம்* *வாழவில்லை*
*நாம் அல்லாஹ்க்காக* *வாழ்கிறோம்*

எதை உடுத்தினாலும் அல்லாஹ் பொருந்திக் கொள்வான், பெருநாள் தொழுகையும் தொழ முடியும்

ஆனால் பெருநாள் அன்று நம் ரப்புக்கு மிகவும் பிடித்த அமலை வசதி இருந்தும் எப்படி விட்டுட்டு இருப்பது?

ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை கிடைக்குமே'

மூன்று மாதங்கள் நபியவர்களின் வீட்டில் அடுப்பு  எரிந்ததில்லை,

ஏழ்மையாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வாழ்ந்தார்கள்,

ஆனால் மதினாவின் 10 வருட காலமும் குர்பானி கொடுக்காமல் இருந்ததில்லை
என்பதெல்லாம் உங்களுக்கு தெரியாதா?

_கணவன் :-_
ஆம் குர்பானி பிராணியின் ஒவ்வொரு பாகமும் மறுமையில் நம்முடைய நன்மையின் தட்டை கணக்கச் செய்கிறது,
இலகுவாக ஸிராத் பாலத்தை கடக்க  காரணமாகுகிறது .
இப்படிப்பட்ட மனைவியை எனக்களித்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

இதோ குர்பானி ஆடு வாங்கி வந்து விடுகிறேன்

_பிள்ளைகள்_:- நல்ல கொலுத்த ஆட்டை வாங்குங்க வாப்பா

துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று அடியார்கள் செய்யும் அமல்களில் குர்பானியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதை விட அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான அமல் வேறொன்றும் இல்லை.நிச்சயமாக அவை கியாம நாளில் தங்களின் கொம்புகளுடனும். உரோமங்களுடனும்.

குழம்புகளுடனும்( நகங்களுடன்) வரும். நிச்சயமாக குர்பானி கொடுக்கப்படும் கால்நடைகளின் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அக்குர்பானி. அல்லாஹ்வின் அங்கீகாரத்தை பெற்றுவிடுகிறது. எனவே அதனை மனமுவந்து செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ( ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.

திருமண விருந்துக்கும்,
வீடு குடிபோகும் விருந்துக்கும் லட்சக்கணக்கில் செலவு அழிக்கும் நாம்,

ஒரு விஷேசத்திற்கு பல சேலைகள் எடுக்கும் தாய்மார்கள் ,

புதிதாகவே பல பட்டு சேலைகளை மடித்து மடித்து பத்திரமாக வைத்திருக்கும் இல்லத்தரசிகள்

நன்மையின் வாக்குறுதி இல்லாத இந்த விஷயத்தில் இவ்வளவு செலவு செய்து விட்டு,

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வலியுறுத்திய குர்பானியை விட்டு விடுவது

நமது நஷ்டமே!
கைசேதமே! இவ்வுலகத்தின் ஆடம்பரத்தையும் ஆசைகளையும் விட்டு அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக

பிரபல்யமான பதிவுகள்