நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, டிசம்பர் 11, 2020

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா?

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா?

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா?

ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத, மறுக்கப்பட வேண்டிய செய்திகளில் கண்ணேறு பற்றிய செய்தியும் ஒன்றாகும்.

(கண்ணேறு, கண்ணூறு, கண்படுதல், கண் திருஷ்டி என்றும் சொல்லப்படும்)

புனித அல்குர்ஆனின் கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பதினால் சூனியம் பற்றிய செய்திகள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அமைந்திருப்பதைப் போல் கண் திருஷ்டி பற்றிய செய்திகளும் புனித குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக அமைந்திருப்பதினால் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக அமைந்திருக்கின்றது. கண் திருஷ்டி பற்றிய செய்திகளை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

கண் திருஷ்டி உண்மை, அதனால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துப்பட பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. அந்த செய்திகளை மொத்தமாக பார்த்த பின் இதில் உள்ள பிரச்சினை தொடர்பாக ஆராய்வோம்.

صحيح البخاري (7/  132)

5740 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «العَيْنُ حَقٌّ» وَنَهَى عَنِ الوَشْمِ

“கண் திருஷ்டி என்பது உண்மையே” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மேலும் பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 5740, 5944

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணேறு உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் ஒன்று வெல்ல முடியுமானால், கண்ணேறு அதை வென்றிருக்கும். (கண்ணேறுக்குக் காரணமான) உங்களிடம் குளித்துக் கொள்ளுமாறு கோரப்பட்டால் குளித்துக்கொள்ளுங்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் – 4405

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கண் திருஷ்டியி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)

நூல் : புஹாரி – 5738

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண் திருஷ்டி ஏற்பட்டிருக்கிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

நூல் : புஹாரி – 5739

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பாம்புக்கடிக்கு ஓதிப் பார்த்துக்கொள்ள “ஹஸ்ம்‘ குடும்பத்தாருக்கு அனுமதியளித்தார்கள். மேலும், அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களிடம், “என் சகோதரர் (ஜஅஃபரின்) மக்களுடைய உடல்களை நான் மெலிந்திருக்கக் காண்கிறேனே ஏன்? அவர்கள் வறுமையில் வாடுகின்றனரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், “இல்லை; கண்ணேறு அவர்களை வேகமாகப் பாதிக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக” என்று கூறினார்கள். நான் அவர்களிடம் (ஒரு துஆவை) எடுத்துரைத்தேன். நபி (ஸல்) அவர்கள் “(அதையே) அவர்களுக்கு ஓதிப் பார்ப்பீராக‘‘ என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் – 4423

என் தந்தை ஸஹ்ல் பின் ஹுனைப் (ரலி) அவர்கள் கர்ரார் எனும் இடத்தில் குளித்தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடையை கழற்றிய போது ஆமிர் பின் ரபீஆ பார்த்துக் கொண்டிருந்தார். ஸஹ்ல் வெண்மை நிற அழகிய தோல் உள்ள மனிதர் அப்போது ஆமிர் “இன்று நான் பார்த்ததைப் போன்று வேறு எப்போதும் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணின் தோலைக் கூடப் பார்த்ததில்லை என்று கூறினார். உடனே அவ்விடத்தில் ஸஹ்ல் (ரலி) அவர்களுக்கு முடியாமல் போனது. அவருக்கு காய்ச்சல் கடுமையானது. இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று ஸஹ்ல் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் உங்களுடன் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

உடனே அவரிடம் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். ஆமிர் நடந்து கொண்ட விதம் பற்றி ஸஹ்ல் (ரலி) அவர்கள் இறைத் தூதரிடம் தெரிவித்தார்கள். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் ஏன் தன் சகோதரனை கொல்ல வேண்டும்? நீங்கள் (அவரிடம் விரும்பத்தக்க விஷயத்தைப் பார்க்கும் போது அவருக்காக) பரக்கத்தை வேண்டியிருக்கக் கூடாதா? கண்ணேறு என்பது உண்மையே. (ஆமிரே) நீங்கள் வுழூ செய்து அந்த நீரை ஸஹ்ல் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள். ஆமிர் (ரலி) அவர்கள் வுழூ செய்து அந்நீரை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இதன் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு சென்றார்கள்.

அறிவித்தவர் :  அபூ உமாமா (ரலி) அவர்கள்,

நூல் : முஅத்தா மாலிக்-1471

கண் திருஷ்டி பற்றி மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள செய்திகளில் இருந்து கீழ் வரும் தகவல்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

  • இறை நிர்ணயத்தை முந்தக் கூடிய எதுவும் இல்லை. அப்படியிருந்திருந்தால் அது கண் திருஷ்டியாகவே இருக்கும்.
  • கண் திருஷ்டியின் தீமையில் இருந்து விடுபட ஓதிப்பார்க வேண்டும்.
  • ஒரு சிறுமியின் முகத்தில் இருந்த கருஞ்சிவப்பான படர்தாமரைக்கு கண் திருஷ்டி தான் காரணம்.
  • ஜஃபர் அவர்களின் குடும்பத்தாரின் உடல் மெலிவுக்கு கண் திருஷ்டிதான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
  • குளித்துக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இன்னொருவர் ஆச்சரியப்பட்டதினால் குளித்த நபர் மயங்கி விழுந்து விட்டார்.

இந்தச் செய்திகள் பற்றி இனி விரிவாக ஆராய்வோம்.

பொதுவாகவே ஒரு பொருளை அல்லாஹ் எதற்காகப் படைத்துள்ளானோ அந்த காரியத்தைத் தான் குறித்த பொருளால் செய்ய முடியுமே தவிர, அதனைத் தவிர்த்த வேறு எந்த ஆற்றலும் அதற்கு இருக்காது.

கண் என்பது பார்ப்பதற்காக படைக்கப்பட்டதே தவிர, மற்றவர்களை வீழ்த்துவதற்காக படைக்கப்பட்ட ஒன்றல்ல. மனித உருப்புகள் ஒவ்வொன்ருக்கும் எப்படி ஒவ்வொரு வேலைகள் தரப்பட்டுள்ளனவோ அதே போல் கண்ணுக்கு பார்த்தல் என்ற வேலை இறைவனினால் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி எந்தவொரு ஆற்றலும் கண்ணுக்குக் கிடையாது. ஆனால் மேற்கண்ட செய்திகள் கண் பார்வை மூலம் மற்றவர்களுக்கு நோய் உண்டாக்களாம், வீழ்த்தலாம் என்றெல்லாம் குறிப்பிடுகின்றன.

நாம் வாழும் இவ்வுலகில் கோடான கோடி பொருட்கள் இருக்கின்றன. மனிதக் கண்களினால் அவற்றுக்கு எந்த ஆபத்தும் நடைபெறவில்லை. ஆண்கள் பெண்களைப் பார்க்கின்றார்கள், பெண்கள் ஆண்களைப் பார்கிறார்கள், மலைகள், பூந்தோட்டங்கள், காடுகள், அருவிகள் என்று எத்தனையோ இடங்களையெல்லாம் மனிதர்களாகிய நாம் பார்க்கின்றோம், ரசிக்கின்றோம் ஆனால் அவற்றுக்கு மனித கண்களின் மூலம் எந்தத் தீங்கும் நடைபெறவில்லை.

இணைவைப்பை உண்டாக்கும் கண்ணேறு பற்றிய நம்பிக்கை.

புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் கண்ணேறு பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டிருப்பதினால் குறித்த செய்திகள் உண்மையானவை தாம் என்ற நம்பிக்கையின் காரணமாகத் தான் பெரும்பாலானவர்கள் கண்ணேறு பற்றிய செய்திகளை நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். கண்ணேறு பற்றிய செய்திகளை நுனுக்கமாக ஆய்வு செய்து பார்த்தால் கண்ணேறு பற்றிய நம்பிக்கை நம்மை ஷிர்க்கின் பக்கம் இட்டுச் செல்கின்றது என்பது தெளிவான விஷயமாகும்.

அனைத்து ஆற்றல் அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியதாகும். இறைவனுக்குறிய ஆற்றல்கள் மனிதனுக்கு இருப்பதாகவோ, அல்லது அவற்றில் சிலது இருப்பதாகவோ நம்புவது இணைவைப்பை உண்டாக்கும் காரியமாகும்.

அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவர்களாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள இயலும்.

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான்.

(திருக்குர்ஆன்:36:78.)

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(திருக்குர்ஆன்:42:11.)

அவனுக்கு நிகராக யாருமில்லை.

(திருக்குர்ஆன்:112:4.)

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த காலத்தில் மக்கா காபிர்கள் பல தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள். இதே நேரம் அனைத்து ஆற்றலும் அல்லாஹ்வுக்கும் இருப்பதாகவும் நம்பி வந்தார்கள். இவர்களின் நம்பிக்கையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவர்களை இணை கற்பித்தவர்கள், முஷ்ரிகீன்கள் என்றே இறைவன் உலகுக்கு அறிமுகப்படுத்தினான்.

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(திருக்குர்ஆன்:29:63.)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்:31:25.)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன்:39:38.)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்’ எனக் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன்:43:9.)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

(திருக்குர்ஆன்:43:87.)

‘வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக!

(திருக்குர்ஆன்:10:31.)

‘பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன்:23:84,85.)

‘ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’ எனக் கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா;?’ என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன்:23:86,87.)

‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன்:23:88,89.)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். அப்படியாயின் ‘எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

(திருக்குர்ஆன்:29:61.)

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன்:10:18.)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(திருக்குர்ஆன்:39:3.)

இறைவனுக்கு இருக்கும் பண்புகள் முழுமையாக மற்றவர்களுக்கும் இருக்கின்றது என்று நம்புவது மாத்திரம் இணைவைப்பு அல்ல. மாறாக இறைவனுக்கு இருக்கும் ஆற்றல்களில் ஒரு சிறு பகுதியை மற்றவர்களுக்கு இருப்பதாக நம்பினாலும் அது இணைவைப்பாகவே இறைவனால் கருதப்படும் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன.

மேற்கண்ட திருமறைக் குர்ஆன் வசனங்களில் இறைவன் தனக்குறியதாக சுட்டிக்காட்டியுள்ள பண்புகளை மனதில் வைத்துக் கொண்டு கண்ணேறு பற்றிய செய்திகளை நாம் ஆராய்ந்தால் கண்ணேறு பற்றிய நம்பிக்கை எந்த வகையில் இணைவைப்பை உண்டாக்குகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ் ஒருவருக்கு ஒரு கஷ்டத்தை தர நாடினால் அல்லாஹ்வே வந்து அதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. எந்தப் பொருளும் இல்லாமல், எந்தவொரு துணை சாதனமும் இல்லாமல் அதனை இறைவனால் செய்து முடிக்க முடியும். இதே வேலை மனிதன் ஒரு காரியத்தை செய்வதாக இருந்தால் ஏதாவது ஒரு துணை சாதனத்தின் மூலமே அதனை செய்ய முடியும்.

ஆனால் கண்ணேறு பற்றிய செய்திகளை நாம் பார்க்கும் போது இறைவன் மேலே குறிப்பிட்டுள்ள தனக்கே உரிய பண்புகளை மற்றவர்களுக்கும் உரியதாக ஆக்கும் விதமாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஒருவருக்கு ஏதாவது பாதிப்பை உண்டாக்க வேண்டும் என்றால் கண்ணால் பார்த்தாலே போதும் அவர் பாதிக்கப்பட்டு விடுவார் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட கண்ணேறு பற்றிய செய்திகள் நமக்கு தெரிவிக்கின்றன.

கண்ணால் பார்த்தாலே பாதிப்பு உண்டாகும் என்பது இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் ஒரு நம்பிக்கையாகும். ஒருவருக்கு பாதிப்பை உண்டாக்குவதும், நலவை நாடுவதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ள விஷயமாகும். அந்த அதிகாரத்தில் மனிதனுக்கும் பங்கு கேட்க்கும் விதமாக கண்களினால் ஒருவருக்கு தீங்கிழைக்க முடியும்  என்று நம்புவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டு இணைவைப்புக்கு இட்டுச் செல்லும் காரியமாகும்.

குர்ஆன் கூறும் நிதர்சன உண்மைக்கு மாற்றமானதாகும்

ஒரு பொருளுக்கு இல்லாத ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாக யாராவது கூறினால் அந்த ஆற்றலை அவர் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் ஒரு மன்னன் இறைவனுக்குரிய ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிட்டான். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க ஒரே ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கே உதிக்கச் செய்கிறான். மேற்கே மறையச் செய்கிறான். உனக்கு இறைத்தன்மை இருந்தால் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்குமாறு செய். மேற்கே மறையும் சூரியனை கிழக்கில் மறையுமாறு செய். என்று கேட்டார்கள். அந்த மன்னன் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப்போனான்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் (2 : 258)

இப்றாஹீம் நபியவர்கள் எந்த விதத்தில் கேள்வி கேட்டு மன்னன் சொல்வதை அசத்தியம் என்று நிரூபித்தார்களோ அதே விதத்தில் கண் திருஷ்டி பற்றிய செய்திகள் தொடர்பாகவும் கேள்வியெழுகின்றது. குறித்த செய்தி உண்மையானது, சத்தியமானது, புகாரி இமாம் பதிந்து விட்டால் அது அனைத்தும் உண்மை தான் என்றெல்லாம் பேசுபவர்கள் கண் திருஷ்டி பற்றிய செய்திகளுக்கு நிதர்சன ஆதாரங்களை முன் வைத்து நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இந்தச் செய்தியை சரியான செய்தி என்று வாதிடும் பலரும் இதனை நிரூபித்துக் காட்ட பின்வாங்குவதிலிருந்து, இவர்கள் யாரும் இதனை உளப்பூர்வமாக நம்பவில்லை, நம்மை எதிர்ப்பதற்காக வெற்று வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ள முடிகின்றது.

அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ நிதர்சனத்திற்கு மாற்றமாக பொய் கூற மாட்டார்கள் என்று திருமறைக் குர்ஆன் தெளிவாக கூறுகின்றது.

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

அல்குர்ஆன் (4 : 87)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத்-15478

கூர்ந்து பார்த்தவரை தடுக்காத நபியவர்கள்

நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு பெண்ணை ஃபழள் பின் அப்பாஸ் என்ற நபித் தோழர் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது குறித்த நபித் தோழரின் முகத்தை திருப்பி விட்ட நபியவர்கள் கண்ணேறு தொடர்பில் எந்தவொரு தகவலையும் அந்த இடத்தில் குறிப்பிடவில்லை.

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(“விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) “கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

நூல் : புகாரி-6228

கண்ணேறு மூலம் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்றிருக்குமானால் நபியவர்கள் பழ்ள் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் முகத்தைத் திருப்பி விடும் போது இது பற்றி எச்சரித்திருப்பார்களே? ஏன் அந்தப் பெண்ணை அப்படிப் பார்க்கின்றாய்? இப்படிப் பார்த்தால் கண்ணேறு ஏற்பட்டு விடும் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? ஆனால் மேற்கண்ட செய்தியில் அவ்வாறு எதனையும் நபியவர்கள் குறிப்பிடவில்லை என்பதிலிருந்து கண்ணுக்கு அவ்வாறான எவ்விதமான தாக்கமும் இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

நபியவர்களின் தலைமுடி கண் திருஷ்டியை நீக்குமா?

நபியவர்களின் மனைவி உம்மு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய தலை முடியினால் கண் திருஷ்டிக்கு மருத்துவம் செய்ததாக ஒரு செய்தி புகாரி உள்ளிட்ட கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.

உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். (உம்மு சலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி (ஸல்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டு விட்டால், அவர் தமது நீர் பாத்திரத்தை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்.

நூல் : புகாரி – 5896

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு சலமா (ரலி) அவர்கள் நபியவர்களின் தலை முடிகளில் சிலதை புனிதமென்று எடுத்து வைத்திருந்ததாகவும், கண் திருஷ்டி அல்லது நோய் ஏற்பட்டவர்களுக்கு அதன் மூலம் மருத்துவம் செய்ததாகவும் மேற்கண்ட செய்தி சொல்கின்றது.

இது இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் ஒரு செய்தியாகும்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் அவர்கள் கண்டிப்பாக இப்படியானதொரு செயலை செய்திருக்க மாட்டார்கள். இது பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு அந்தச் செய்தியின் கடைசி பகுதியே போதிய ஆதாரமாக அமைந்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.

“நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்”. என்ற இந்த வாசகம் குறித்த செய்தி உண்மையில்லை என்பதை விளக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் தலை முடி தொடர்பாக வந்துள்ள செய்திகளில் நபியவர்களின் தலைமுடி கருப்பாக இருந்தது பற்றியும், சில முடிகள் வெண்மையாக இருந்தமை பற்றியுமான அறிவிப்புக்களே இடம் பெற்றுள்ளது. ஆனால் குறித்த செய்தியில் – “நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்”.- என்று இடம் பெற்றுள்ளது.

கருப்பு முடிகளை கண்டேன் அல்லது வெள்ளை முடிகளை கண்டேன் என்று இடம் பெற்றிருந்தாலும் ஒரு வாதத்திற்காகவாவது இதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இரண்டுக்கும் அப்பால் சென்று சிகப்பு முடிகளை கண்டேன் என்பதே இது பொய்யான செய்தி என்பதற்கு போதுமானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள்

நூல்: முஸ்லிம்-01

இஸ்லாம் கூறும் தூய்மைக்கு மாற்றமானதாகும்

உலகில் உள்ள அத்தனை மதங்களையும் விட தூய்மையை வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கின்றது. ஆனால் கண்ணேறு பற்றிய செய்தியோ இஸ்லாம் கூறும் தூய்மையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக அமைந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

என் தந்தை ஸஹ்ல் பின் ஹுனைப் (ரலி) அவர்கள் கர்ரார் எனும் இடத்தில் குளித்தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடையை கழற்றிய போது ஆமிர் பின் ரபீஆ பார்த்துக் கொண்டிருந்தார். ஸஹ்ல் வெண்மை நிற அழகிய தோல் உள்ள மனிதர் அப்போது ஆமிர் “இன்று நான் பார்த்ததைப் போன்று வேறு எப்போதும் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணின் தோலைக் கூடப் பார்த்ததில்லை என்று கூறினார். உடனே அவ்விடத்தில் ஸஹ்ல் (ரலி) அவர்களுக்கு முடியாமல் போனது. அவருக்கு காய்ச்சல் கடுமையானது. இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று ஸஹ்ல் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் உங்களுடன் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

உடனே அவரிடம் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். ஆமிர் நடந்து கொண்ட விதம் பற்றி ஸஹ்ல் (ரலி) அவர்கள் இறைத் தூதரிடம் தெரிவித்தார்கள். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் ஏன் தன் சகோதரனை கொல்ல வேண்டும்? நீங்கள் (அவரிடம் விரும்பத்தக்க விஷயத்தைப் பார்க்கும் போது அவருக்காக) பரக்கத்தை வேண்டியிருக்கக் கூடாதா? கண்ணேறு என்பது உண்மையே. (ஆமிரே) நீங்கள் வுழூ செய்து அந்த நீரை ஸஹ்ல் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள். ஆமிர் (ரலி) அவர்கள் வுழூ செய்து அந்நீரை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இதன் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு சென்றார்கள்.

அறிவித்தவர் :  அபூ உமாமா (ரலி) அவர்கள்,

நூல் : முஅத்தா மாலிக்-1471

கண்ணேறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நபியவர்கள் சொன்ன மருத்துவமாக இங்கு குறிப்பிடப்படும் செய்தி என்ன?

“(ஆமிரே) நீங்கள் வுழூ செய்து அந்த நீரை ஸஹ்ல் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள். ஆமிர் (ரலி) அவர்கள் வுழூ செய்து அந்நீரை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இதன் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு சென்றார்கள்.”

மேற்கண்ட செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல் உண்மைக்குப் மாற்றமானதாகும். இதனை கீழ்வரும் செய்தியின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும்.  மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளூ செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும்போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறியமாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி-162

தூக்கத்திலிருந்து தொழுகைக்காக எழுந்திருப்பவர் வுழு செய்வதற்கு முன் தமது கைகளை கழுவிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. காரணம் இரவில் தூங்கிய நேரத்தில் கை மர்ம உறுப்பிலோ அல்லது வேறு இடங்களிலோ அசுத்தங்களிலோ கூடப் பட்டிருக்கலாம் என்பதினால் தான் இஸ்லாம் மேற்கண்ட சட்டத்தினை நமக்கு சொல்லிக் காட்டுகின்றது.

நாம் தூங்கிய போது நமது கை வேறு எங்காவது பட்டிருக்குமோ என்பதற்காகவே கையை கழுவிய பின் வுழு செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்தும் போது இன்னொருவரை வுழு செய்யுமாறு கூறி அவருடைய வுழு செய்த தண்ணீரைக் கொண்டு இன்னொருவருடைய உடலை கழுவுமாறு நபியவர்கள் கட்டளையிடுவார்களா? இது இஸ்லாம் வலியுறுத்தும் தூய்மையை கேள்விக்குள்ளாக்கும் காரியமல்லவா? கண்டிப்பாக நபியவர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள் என்பதே முஃமினான மக்களின் நம்பிக்கையாக இருக்க முடியும்.

கண்ணேறு தான் என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அதற்குக் காரணம் கண்ணேறுதான் என்பதை இன்றுள்ளவர்கள் எப்படி கண்டு பிடிப்பது? இந்தக் கேள்விக்கு கண்ணேறு உண்டு என்று நியாயம் பேசுவர்கள் பதில் தரக் கடமைப் பட்டுள்ளார்கள். ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் இன்னாரின் பார்வை காரணமாகத் தான் நோய் ஏற்பட்டது என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

அப்படி கண்டு பிடித்தால் சம்பந்தப்பட்டவரை வுழு செய்யுமாறு கூறி அந்தத் தண்ணீரில் பாதிக்கப்பட்டவர் தனது உடம்பைக் கழுவிக் கொள்ள வேண்டுமா?

இது முஸ்லிம்களுக்கு மாத்திரமா? காபிர்களுக்கும் சேர்த்ததா?

ஒரு காபிருக்கு முஸ்லிமினால் கண்ணேறு ஏற்படுமா?

ஏற்படும் என்றால் அதனை எவ்வாறு கண்டு பிடிப்பது?

ஏற்படாது என்றால், முஸ்லிமுக்கு மாத்திரம் தான் ஏற்படும் என்பதற்கு என்ன ஆதாரம்?

காபிருக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் முஸ்லிம் வுழு செய்து காபிருக்கு கொடுத்தால் சரியாகிவிடுமா?

ஒரு காபிர் மூலம் முஸ்லிமுக்கு கண்ணேறு ஏற்பட்டால், காபிர் வுழு செய்து முஸ்லிமுக்கு கொடுக்க வேண்டுமா?

காபிர் வுழு செய்த தண்ணீர் மூலம் முஸ்லிமுக்கு நோய் இல்லாமல் போகுமா?

வுழு பற்றிய சட்டங்கள் காபிர்களுக்கும் உண்டா?

இது போன்ற இன்னோரன்ன கேள்விகளுக்கு கண்ணேறு ஆதரவாளர்கள் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். இந்தக் கேள்விகளைத் தவிர்த்து கண்ணேறு உண்டென்று அவர்களினால் வாதிட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

நபி தோழியர் வாழ்வினிலே,

நபி தோழியர் வாழ்வினிலே


وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏
மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள்: “எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!”
(அல்குர்ஆன் : 25:74)

இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகம்தான் கியாமத் நாள் வரை தோன்றும் சமூகங்களிலேயே சிறந்த சமுதாயமாகும்.

இறைத்தூதர் உருவாக்கிய அந்தச் சிறந்த சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பல்வேறு மார்க்க விஷயங்களில் தலைசிறந்தவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அப்படிப் பட்ட நபித்தோழியர் வாழ்விலிருந்து சில வரலாற்றுத் துளிகளை இக்கட்டுரையில் நாம் காணவிருக்கின்றோம்.

ஆயிஷா (ரலி) அவர்களின் குர்ஆன் ஞானம்

அல்லாஹ்வின் தூதரின் அருமை மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திருக்குர்ஆன் ஞானத்தில் மிகவும் தலைசிறந்து விளங்கியுள்ளனர். அவர்களின் திருக்குர்ஆன் ஞானத்திற்கு பின்வரும் சம்பவம் மிகச் சிறந்த உதாரணமாகும்.

மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘‘அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்’ என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும், நன்கறிந்தவனும் ஆவான் எனும் (6:103ஆவது) வசனத்தையும், எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், ‘‘எவர் உங்களிடம் ‘முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்’ என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள் என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்… எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-4855

உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் பேணுதல்

நபி (ஸல்) அவர்களின் மனைவியாராகிய உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கடமையான தொழுகைகளைப் பேணியதுடன் சொர்க்கத்தில் ஒரு வீட்டைப் பெறுவதற்காக சுன்னத்தான தொழுகைகளில் மிகவும் பேணுதலாக இருந்துள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.

இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

நூல்: முஸ்லிம்-1319

தர்மத்தில் சிறந்து விளங்கிய இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். ‘‘மக்களே! தர்மம் செய்யுங்கள்!’’ என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, ‘‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்’’ என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?’’ எனப் பெண்கள் கேட்டதும், ‘‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்’’ என்று நபி (ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள்.

இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர். ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார்’’ என்று கூறப்பட்டது. எந்த ஸைனப்? என நபி (ஸல்) அவாகள் வினவ, ‘‘இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்’’ என்று கூறப்பட்டது. ‘‘அவருக்கு அனுமதி வழங்குங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்வது?)’’ என்று கேட்டார். ‘‘இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும், உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி-1462

நற்காரியங்களில் கணவனுக்குத் துணை நின்ற ஸஹாபி பெண்மணி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், ‘‘எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை’’ என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?… அல்லது இவருக்கு விருந்தளிப்பவர் யார்?… என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (விருந்தளிக்கிறேன்) என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார்.

(மனைவியிடம்) ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து’’ என்று சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, ‘‘நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை’’ என்று சொன்னார்.

அதற்கு அந்த அன்சாரித் தோழர், ‘‘உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு’’ என்று சொன்னார்.

அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும், அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள்.

பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்…அல்லது வியப்படைந்தான் என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், ‘தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்’ என்னும் (59:9ஆம்) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி-3798

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இறைநம்பிக்கை

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

அபூதல்ஹாவின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபூதல்ஹா (ரலி) வெளியே சென்றிருந்த போது குழந்தை இறந்து விட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா (ரலி) அவர்களின் மனைவி, உடனே கொஞ்சம் உணவைத் தயாரித்தார். பிறகு மய்யித்தை வீட்டின் மூலையில் வைத்தார்.

வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா (ரலி) வீடு திரும்பியதும், மகன் எவ்வாறு இருக்கின்றான்? என்று விசாரித்தார். அதற்கு அவரது மனைவி, “அமைதியாகி விட்டான். நிம்மதி பெற்று விட்டிருப்பான் என்பதே என் எதிர்பார்ப்பு’’ என்று பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) தம் மனைவி கூறியது உண்மை தான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார்.

பொழுது விடிந்து குளித்து விட்டு வெளியே செல்ல நாடிய போது மகன் இறந்து விட்டதை மனைவி கூறினார். அபூ தல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களோடு தொழுது விட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் செய்யக் கூடும்‘’ என்று கூறினார்கள்.

“அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என்று மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்’’ என்று சுஃப்யான் கூறுகின்றார்.

 நூல்: புகாரி-1301

இதே ஹதீஸ் முஸ்லிமில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

உம்மு சுலைம் மூலமாக அபூ தல்ஹாவுக்குப் பிறந்த குழந்தை இறந்து விடுகின்றது. உடனே உம்மு சுலைம் தம் குடும்பத்தாரை நோக்கி, அவரது மகனின் (இறப்புச்) செய்தியை நான் அவரிடம் தெரிவிக்கும் வரை நீங்கள் தெரிவிக்காதீர்கள் என்று சொன்னார். அவர் வந்ததும் இரவு உணவை வழங்கினார். அவர் சாப்பிட்டு முடித்து நீர் பருகவும் துவங்கினார். பிறகு உம்மு சுலைம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபூதல்ஹாவிடம் காட்சியளித்தார். அவர் நன்றாகச் சாப்பிட்டு விட்டு இல்லறத்தில் ஈடுபட்டதும், “அபூ தல்ஹாவே! ஒரு கூட்டத்தார் ஒரு பொருளை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுக்கின்றனர். பின்னர் தாங்கள் இரவல் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்கும் போது, அவ்வீட்டார் கொடுக்காமல் இருப்பது முறையாகுமா?’’ என்று கேட்கின்றார். அதற்கு அபூ தல்ஹா (ரலி), “கூடாது’’ என்று பதிலளித்தார். “(அது போலத் தான்) உங்கள் மகனின் நிலையைக் கருதிக் கொள்ளுங்கள்’’ என்று சொல்கின்றார்.

அதற்கு அபூ தல்ஹா (ரலி), “என்னை நீ அசுத்தமடைய விட்டு விட்டு இப்போது என்னுடைய மகனைப் பற்றி அறிவிக்கின்றாயே?’’ என்று கோபப்படுகின்றார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சென்று விட்ட அந்த இரவில் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக’’ என்று துஆச் செய்தார்கள். அது போல் அவர்களுக்குக் குழந்தை பிறக்கின்றது. நபி (ஸல்) அவர்களிடம் அந்தச் செய்தி எடுத்துச் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழத்தை மென்று கொடுத்து அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4496

பொதுவாக பிள்ளைகளை இழந்த பெண்கள் தங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் அரிது! அதனால் அழுது தீர்ப்பதோடு அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைக் கூட அள்ளி வீசுவார்கள். ஆனால் இங்கு உம்மு சுலைம் (ரலி) தமது கணவரிடம், பொய்யைத் தவிர்ப்பதற்காக, “அமைதியடைந்து விட்டான், நிம்மதியடைந்து விட்டான் என்று கருதுகின்றேன்’’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். மேலும் இரவல் பற்றிய பீடிகையைப் போட்டு நேரமறிந்து, மகன் இறந்த செய்தியை எவ்வளவு பக்குவமாக எடுத்து வைக்கின்றார்கள் என்று நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற ஒரு பக்குவத்தையும், அணுகுமுறையையும் தமது கணவனிடம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

கதீஜா (ரலி)யின் கனிவான ஆறுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதன் முதல் மிகப் பாரமான இறை வஹீயைப் பெற்று விட்டு நடுநடுங்கிக் கொண்டு வந்த நேரத்தில் கதீஜா (ரலி) உதிர்த்த வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் அழியாத வைர வரிகள் ஆகும்.

(நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது) இதயம் படபடத்தவர்களாக – அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி)யிடம் வந்து, “என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள்’’ என்று கூறினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரலி)யிடம், நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டு, தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி), “அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கின்றீர்கள். வறியவர்களுக்காக உழைக்கின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி-3

உம்மு ஸலமா (ரலி)யின் உயரிய ஆலோசனை

நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் உம்ரா செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.

இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எழுந்திருங்கள்! அறுத்துப் பயிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!’’ என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது உம்மு ஸலமா (ரலி) யோசனை வழங்குகின்றார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! மக்கள் பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்’’ என்று உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி-2732

இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் புத்திக் கூர்மைமிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா (ரலி)யின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சாதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

வீரப் பெண்மணி உம்மு சுலைம்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று வில்களை உடைத்து விட்டார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், அதை அபூதல்ஹாவிடம் போடு என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்.

எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும், (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் (காயமுற்றவர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன்.

அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகளை நான் கண்டேன். அபூ தல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

நூல்: புகாரி-4064

போர்க்களத்தில் நீர் புகட்டிய உம்மு சலீத் (ரலி)

மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை) பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதனைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்து விடுங்கள்’’ என்று கூறினர்.

அலீ (ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே (இப்படிக்) கூறினர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உம்மு குல்ஸூமை விட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்.’’ என்று கூறினார்கள். (மேலும்) “அவர் எங்களுக்காக உஹுதுப் போர் நடந்த நாளில் தோலினால் ஆன தண்ணீர்ப் பைகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்’’ என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅலபா பின் அபீ மாலிக்(ரலி)

நூல்: புகாரி-4071

நாயகத்திற்கு மருந்திட்ட அன்னை ஃபாத்திமா

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

 உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களுடைய (முன் வாய்ப்பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்) பல் உடைக்கப்பட்டது. (அவர்களுடைய) தலைக் கவசம் அவர்களுடைய தலை மீதே (வைத்து) நொறுக்கப்பட்டது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மேனியிலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அலீ -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் ரத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்து வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், இரத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டு தான் போகிறது (நிற்கக் காணோம்) என்பதைப் பார்த்த போது ஒரு பாயை எடுத்துச் சாம்பலாகும்வரை அதை எரித்தார்கள். பிறகு, அதைக் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, இரத்தம் (வெளியேறுவது) நின்று விட்டது.

நூல்: புகாரி-2911

அல்லாஹ்வின் வாக்குறுதி

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன்:33:35.)

மரணத்திற்கு முன் என்ன செய்யவேண்டும்,


மரணத்திற்கு முன்..


அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே

குர்ஆனில்


كُتِبَ عَلَيْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَيْرَا  اۨلْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَ‏

உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது: உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும்போது, அவர் ஏதேனும் செல்வத்தை விட்டுச் செல்வாரானால் தம் பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் முறைப்படி அவர் வஸிய்யத் (மரண சாஸனம்) செய்தல் வேண்டும். இறையச்சமுடையோர் மீது இது கடமையாகும். யாரேனும் அ(ந்த வஸிய்யத்)தைக் கேட்டு,

(அல்குர்ஆன் : 2:180)



இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் கொள்கை ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர். எத்தனை கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் ஒன்றிணைவது, “அனைவரும் மரணிக்கக் கூடியவர்கள்” என்ற ஓர் உண்மையில் தான்.

கடவுள் நம்பிக்கையில் இருக்கும் ஆத்திகனாயினும், கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகனாயினும் கண்களால் அனுதினமும் கண்டு கொண்டிருக்கின்ற இப்பேருண்மையை மறுக்காமல் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், மரணத்திற்குப் பிறகுள்ள மறுமை வாழ்வு விஷயத்தில்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து தெரிவிக்கின்றனர்.

மறுமை வாழ்வு என்பது இவ்வுலகில் மனிதன் செய்த செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்பட்டு நன்மை புரிந்தோர் சுவனத்திலும் தீமை புரிந்தோர் நரகத்திலும் பிரவேசித்து நிரந்தரமாக வாழ்கின்ற வாழ்க்கையாகும். இத்தகைய மறுமை வாழ்வை நம்புபவர்களே மூஃமின்கள் ஆவார்கள்.

பிறக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணிக்கக் கூடியதே என்பதை ஒப்புக்கொள்ளும் மனிதன், அந்த மரணம் எப்போதும் வரலாம் என்றும் அதற்குள் நன்மைகளை விரைவாகப் புரிய வேண்டும் என்றுமில்லாமல் மரண சிந்தனையற்று பாராமுகமாக இருப்பதினால் இஸ்லாம் மரணத்தை அதிகமாக நினைவூட்டுகிறது. மரண சிந்தனையோடு சில கடமைகளை நிறைவேற்ற மார்க்கம் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட கடமைகளைப் பற்றி சில தகவல்களை இந்த உரையில் காண்போம். 

அனைவருக்கும் வரும் மரணம் 

29:57 كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ‏

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

(அல்குர்ஆன்:29:57.)

எந்த மனிதரும் தான் எப்போது? எங்கே? எப்படி மரணிப்பார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான ஞானம்.

31:34 اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ‌ ۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ‌ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا‌ ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ 

யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

(அல்குர்ஆன்:31:34.)

எந்த மனிதனும் தன்னை மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது

4:78 اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ

“நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.

(அல்குர்ஆன்:4:78.)

இத்தகைய மரணம் வருவதற்கு முன்னால் ஒவ்வொரு மனிதனும் தன் மறுமை வாழ்வை செம்மையாக்கிக் கொள்வதற்காக இறைவன் சொன்ன நன்மையான காரியங்களைச் செய்து முடித்துவிட வேண்டும்.

அவ்வாறில்லாமல் நல்ல செயல்களையும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யாமல் அலட்சியமாக இருந்தால் அது மறுமையில் மிகப்பெரும் கைசேதத்தை ஏற்படுத்தும்.

63:10 وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏

63:11 وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ

“உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே’’ என்று அப்போது (மனிதன்) கூறுவான். எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்”

(அல்குர்ஆன்:63:10, 11.)

23:99 حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏
 23:100 لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!’’ என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்:23:99,100.)

35:37 وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ

 

“எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம்‘’ என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். “படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித் திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனு பவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை’’ (என்று கூறப்படும்)

(அல்குர்ஆன்:35:37.)

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களையும் நாம் செய்த பாவங்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுதல் போன்ற அனைத்து நன்மையான காரியங்களையும் மரணத்திற்கு முன்பாக நாம் நிறைவேற்றிவிட வேண்டும். இல்லையேல் அது மறுமையில் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மேற்படி வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

அதே போன்று மரணத்திற்கு முன்னால் சக மனிதனுக்கு நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. அதை விட்டும் நம்மில் பலர் அலட்சியமாக இருக்கிறோம்.

கடனை அடைப்போம்

பிறரிடமிருந்து கடன் வாங்குவதற்கு இஸ்லாம் அனுமதியளித்திருக்கிறது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ ؕ وَلْيَكْتُبْ بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِ

நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும்.

(அல்குர்ஆன்:2:282.)

கடன் கொடுக்கல் வாங்கலுக்கு அனுமதியளிக்கும் இஸ்லாம் அந்தக் கடனை எழுதிக் கொள்ள வேண்டும் என்றும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனையிடுகிறது. இந்த நிபந்தனைகளில் இன்றைக்குக் கவனம் செலுத்துபவர்கள் மிக குறைவானவர்களே.

லட்சக்கணக்கான மதிப்புள்ள கொடுக்கல் வாங்கல் தங்களுக்கு மத்தியில் இருந்தாலும் அதை இன்றைக்கு எழுதிக் கொள்வதும் கிடையாது, சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வதும் கிடையாது. நிபந்தனையுடன் கடனுக்கு இஸ்லாம் அனுமதியளித்தாலும் கடனைப் பற்றி அதிகம் எச்சரிக்கையும் செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடத்தில் அதிகமாகப் பாதுகாவல் தேடியது கடனை விட்டுத்தான்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’’

இறைவா! மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன் படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்?’’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி-832

கடன் வாங்குபவன் பொய் பேசுபவனாகவும், வாக்குறுதி மோசடி செய்பவனாகவும் மாறி விடுகிற காரணத்தினால் தான் கடனிலிருந்து அதிகமாக நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். கடன் என்று ஒரு வாசலைத் திறந்துவிட்டால் அது பல பாவங்களுக்கான வழியாக அமைந்துவிடுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உணவுக்கும் அத்தியாவசிய தேவைக்கும் கஷ்டப்பட்ட காலத்தில் கூட அதிகமாகக் கடனிலிருந்து பாதுகாவல் தேடியுள்ளார்கள். ஆனால் இன்றைக்குக் கடன் என்பது அத்தியாவசியத் தேவைக்கு, சிரமம் ஏற்படும் போது கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை மாறி அடுத்தவரைப் போன்று தானும் வாழ வேண்டும் என்ற பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் கடன் வாங்குகின்ற சூழ்நிலை இருக்கிறது.

கடனை வாங்குபவர்கள் அதைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணமில்லாமல் மரணம் வரை அலட்சியமாக இருந்து மரணித்து விடுகின்றனர். கடன் இருக்கும் நிலையில் மரணித்துவிட்டால் அது இறைவனால் மன்னிக்கப்படாத மிகப்பெரும் பாவமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம்-3832

ஷஹீத் என்பது இஸ்லாத்தில் ஆகச்சிறந்த காரியமாக இருக்கிறது. அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் அந்தஸ்தைப் பெற்றுத்தரும் செயல். அவரது அனைத்து பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அத்தகையை ஷஹீத் கடன் இருக்கும் நிலையில் மரணித்துவிட்டால் அவருக்கு அதன் பாவங்கள் மன்னிக்கப்படாது என்றால் மரணத்திற்கு முன்னரே நிறைவேற்ற வேண்டிய காரியங்களில் கடன் முதன்மையானதாக இருக்கிறது.

மனம் திருந்தி மன்னிப்பு கேட்போம்

ஒரு மனிதன் மற்றொரு மனிதனை ஏதேனும் விதத்தில் சார்ந்திருப்பவனாக இருக்கிறான். அவ்வாறு சார்ந்திருக்கும் போது ஒருவர் மற்றவரை சர்வ சாதரணமாகப் புண்படுத்திவிடுகின்றனர். உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ, சொல்லாலோ அல்லது செயலாலோ மற்றவர்கள் புண்படும் படி நடந்துகொள்கின்றனர்.

இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டவர்கள் அதற்காக சம்பந்தபட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, தமது தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்கின்றனர். இவ்வாறு சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிப்பு வழங்குவதில்லை. மறுமையில் மிகப்பெரிய கைசேதமும் ஏற்படும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-5037

இதுபோன்று மறுமையில் மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் காரியத்திலிருந்து நாம் பாதுகாப்பு பெற்றுக் கொள்வதற்காக நாம் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் நமது மரணத்திற்கு முன்னால் அவர்களிடம் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். இதை கவுரவக் குறைச்சலாக எண்ணக் கூடாது. அவ்வாறு எண்ணி மன்னிப்பு கேட்காமல் இருந்துவிட்டால் நிலையான வாழ்க்கையாகிய மறுமையில் மிகப்பெரும் அவமானமாகவும் இழப்பாகவும் மாறிவிடும்.

வஸிய்யத் (மரண சாசனம்) செய்வோம்

வஸிய்யத் என்பது ஒருவர் மரணத்தை நெருங்கும் போது தன்னுடைய பொருளாதாரத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அடுத்தவர்களுக்கு ஒதுக்கிவிட்டுச் செல்வதாகும்.

2:180 كُتِبَ عَلَيْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَيْرَا  ۖۚ اۨلْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَؕ‏

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

(அல்குர்ஆன்:2:180.)

இந்த வசனத்தில் ‘பெற்றோர் மற்றும உறவினர்களுக்கு’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது மாற்றப்பட்டுவிட்டது. பெற்றோருக்கும், வாரிசு முறையில் சொத்து பங்கீட்டில் உள்ளவர்களுக்கும் வஸிய்யத் என்பது கிடையாது.

திருக்குர்ஆன் (4:11,12.) ஆகிய வசனங்களில் யாரையெல்லாம் வாரிசுதாரர்கள் பட்டியலில் இறைவன் சேர்த்து விட்டானோ அவர்களுக்கு வஸிய்யத் செய்ய கூடாது. அவர்கள் அல்லாத மற்ற உறவினர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் வஸிய்யத் செய்யலாம்.

வஸிய்யத் செய்ய வேண்டும் என்பதற்காக எந்த வரம்புமின்றி அனைத்துப் பொருளாதாரத்தையும் வஸிய்யத் செய்வதற்கும் மார்க்கம் அனுமதிக்கவில்லை.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடைபெறும்  ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத் தறுவாயை அடைந்துவிட்டேன்.  நான் தனவந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா?’’ எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘வேண்டாம்’  என்றார்கள்.  பின்னர் நான் ‘பாதியைக் கொடுக்கட்டுமா?’ எனக் கேட்டேன்.  அதற்கும் நபி (ஸல்)  அவர்கள் ‘‘வேண்டாம்: மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு செல்வதைவிட தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது’’ என்று கூறினார்கள். 

நூல்: புகாரி-1295 (ஹதீஸின் சுருக்கம்)

நமது சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் வஸிய்யத் செய்யக் கூடாது என்றும் மூன்றில் ஒரு பங்கு செய்வதே அதிகம் என்றும் இந்தச் செய்தியிலிருந்து நமக்குத் தெளிவாகிறது.

வஸிய்யத் செய்கிறோம் என்கிற பெயரில் ஒட்டுமொத்த சொத்தையும் மரண சாசனம் செய்துவிட்டு வாரிசுகளுக்கு ஒன்றுமில்லாமல் ஆக்குவதும் பாவமாகிவிடும்.

ஒருவர் வஸிய்யத் செய்திருக்கிறார் எனில் அவர் மரணித்த பிறகு சொத்து பங்கீடு செய்வதற்கு முன்னால் அவருக்கு ஏதேனும் கடனோ, அல்லது அவர் யாருக்கேனும் வஸிய்யத் செய்திருந்தாலோ அதை நிறைவேற்றிய பிறகுதான் சொத்தைப் பங்கிட வேண்டும்.

செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன்: 4:12, 13, 14.)

இவ்வாறு அதிகம் வலியுறுத்திக் கூறியுள்ள வஸிய்யத் செய்வது சில சமயம் அவசியமாகிறது.

உதாரணமாக, ஒருவர் மரணத் தருவாயில் இருக்கிறார். அவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள். அவரது மகனோ அல்லது மகளோ தந்தையாகிய இவர் இறப்பதற்கு முன்னால் இறந்து விட்டனர் என வைத்துக் கொள்வோம். அந்த இறந்த மகன் அல்லது மகள் வழியாகப் பேரன், பேத்தி போன்ற உறவுகள் இவருக்கு இருக்கிறது.

இந்நிலையில் சொத்திற்கு சொந்தக்காரர் இறந்து விட்டால் ஏற்கனவே இறந்து விட்ட இவரது மகன் வழியாக உள்ள பேரக்குழந்தைகளுக்கு வாரிசு முறையில் எந்தப் பங்கீடும் கிடைக்காது. ஏனெனில் சொத்திற்குச் சொந்தக்காரர் இறந்த பிறகுதான் அந்தச் சொத்தில் பங்கீடு ஏற்படும். அவர் இறப்பதற்கு முன்னால் அவரது மகன் அல்லது மகள் இறந்துவிட்டால் அவர்களுக்கு இவரிடமிருந்து எந்தப் பங்கும் கிடையாது.

இவ்வாறு தந்தைக்கு முன்னால் இறந்த பிள்ளைகளுக்கு எந்தப் பங்கும் கிடைக்காதென்றால் அவர்கள் வழியாகவுள்ள பேரக்குழந்தைகளுக்கும் எந்தப் பங்கும் கிடைக்காது. இந்தச் சூழ்நிலையில் சொத்திற்குச் சொந்தக்காரர், தான் இறப்பதற்கு முன்னால் தனது பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு அவர்களைப் பரிதவிக்க விட்டுவிடாமல் அவர்களுக்கு தனது சொத்திலிருந்து வஸிய்யத் செய்வது அவசியமாகிறது.

இதுபோன்று வாரிசுதாரர்களின் பட்டியலில் தன்னுடைய உறவினர்களுக்கு வஸிய்யத் செய்வது மிக அவசியமானதாக இருக்கிறது. ஆனால், இவ்வாறு வாரிசுரிமையில் சொத்தில் பங்கீடு பெறாத தன்னுடைய குடும்பத்தாருக்கு வஸிய்யத் செய்வதை விட்டும் பலர் அலட்சியத்துடன் இருக்கின்றனர். இதுவும் நம்முடைய மரணத்திற்கு முன்னால் செய்ய வேண்டிய அவசியமான காரியங்களில் உள்ள ஒன்றாகும்.

எப்போது மரணம் வரும் என்று தெரியாத நாம் இதுபோன்ற மரணத்திற்கு முன்னால் செய்ய வேண்டிய காரியங்களை விரைவாகச் செய்து முடித்துவிட வேண்டும். இதபோன்ற காரியங்களில் அலட்சியத்துடன் இருந்து இறைவனிடத்தில் குற்றவாளியாக மாறிவிடக்கூடாது. இறைவனிடத்தில் நன் மக்களாய் நம் அனைவரும் இருப்போமாக.! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.!

பிரபல்யமான பதிவுகள்