விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக் கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது.’ (அல்குர்ஆன் 17:32)
இஸ்லாம் கூறும் பெண்களின் ஆடை அணி கலன்கள் தொடர்பாக நோக்குவதற்கு முன்னர் ஏனைய சமுதாயங்களில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை சற்று ஆராய்வோம்.
கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருளாகக்கருத,
ரோமானியர்களோ பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதிவந்தனர்.
மேலும், பிரெஞ்சுக்காரார்கள் கி.பி. 586ல் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளா? இல்லையா? என முடிவெடுக்க ஒரு ஆய்வு சபையை அமைத்தனர். இவ்வாறாக, பிறசமுதாயங்களில் பெண்கள் மிகவும் இழிநிலைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.
ஆனால், சத்திய இஸ்லாமிய மார்க்கமோ பெண்களுக்குரிய உரிமையையும் அந்தஸ்த்தையும் வழங்கி சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதற்கு வழிவகுத்தது. இது பற்றி அருள்மறையாம் திருமறை குறிப்பிடுகையில்,
‘சிலரை விட மற்றும்சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 04:32)
‘குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அப்பங்கீடு கட்டாயக் கடமை.’ (அல்குர்ஆன் 04:07) என்று கூறுகின்றது.
பெண்ணின் பெருமைகளைப் போற்றி, பெண்ணுக்குரிய கண்ணியத்தினை வழங்கிய வாழ்வியல் வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கத்தின் ஆடை அணிகலன்கள் தொடர்பான வழிகாட்டலும் மிக உன்னத மானதாகும். ஆடை அணிவதன் நோக்கம் அதன் பயன்கள் தொடர்பாக அருள்மறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.
‘ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.’ (அல்குர்ஆன் 07:26)
இஸ்லாத்தின் எதிரிகள் நமக்கு எதிராக செய்த சதி முயற்சிகளில் ஒன்றுதான் நாகரீக ஆடைகள் என்ற பெயரில் பெண்களின் உடல் அவயங்கள் தெரியக்கூடிய வகையில் மிக மெல்லிய, இறுக்கமான ஆடைகளை பெண்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி, அதில் அவர்களை ஆர்வம் கொள்ளச்செய்ததாகும். அவ்வாறான ஆடைகளில் பெரும்பாலான ஆடைகள் தமது வீடுகளில், சக பெண்களுக்கு மத்தியில் கூட அணிய முடியாதவைகளாகும்.
உத்தம நபித்தோழியரின் வாழ்வினை படிப்பினையாகக் கொண்டு செயற்பட வேண்டிய பெண்கள்
சீரழிந்த கலாசாரத்தின் சொந்தக்காரர்களான ஒழுக்க வாழ்வில் நெறியீழந்த சினிமா நடிகையர்களை முன்மாதிரியாகக் கொண்டு செயற்படு கின்றார்கள். இவர்களைப் பார்த்து அனுதாபம் கொள்வதா? ஆத்திரப்படுவதா?
மேலும், மாலை நேர பிரத்தியேக வகுப்புக் களுக்குச் செல்லக்கூடிய எமது மாணவிகள் முகத்தை மூடி, மார்க்கம் மறைக்கச் சொன்ன முழங்கையை வெளிப்படுத்துவதுடன்; மிக மெல்லிய, இறுக்கமான ஆடைகளை அணிந்துகொண்டு செல்கின்றனர். அதுமாத்திர மன்றி, நாகரீக ஆடை என்ற பெயரில் தமது கால்பகுதியில் வெட்டு வைத்த ஆடைகளை அணிந்து செல்கின்றனர். இவ்வாறு ஆடை அணிபவர்களைப் பற்றி அல்லாஹ்வின்
திருத்தூதர்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கையில்:
‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களை தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை
ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)
இந்த நபிமொழியைப் படித்த பின்பாவது மெல்லிய, இறுக்கமான ஆடை அணியக் கூடிய எமது சகோதரிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா? அதுமாத்திரமன்றி, நாகரீகம் என்று மேற்கத்தேய கலாசாரத்தில் மூழ்கிப் போயிருக்கின்ற சகோதரிகள் கீழ்வரும் நபிமொழியையும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின் றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே’ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: அபூதாவுத்-4033)
இறுதியாக, ஒழுக்கம் மிக்க ஆடையாக திகழ்வதுடன் மிகச்சிறந்த நாகரீக ஆடையாகவும் விளங்குகின்ற ‘ஹிஜாபை’ பேணுவதன் மூலம் நாம் கொடிய நரக நெருப்பில் இருந்து காப்பாற்றப்பட்டு, அருளாளன் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவோமாக!
நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
ஞாயிறு, பிப்ரவரி 09, 2014
ஆடை அணிந்தும் நிர்வாணம் அழிவு நாளின் அடையாளம்
அழிவு நாளின் அடையாளங்கள்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும்(புகாரி 80,
ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098
உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது
நூல்: அஹ்மத் 11365
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்வரை யுக முடிவு நாள் ஏற்படாது .
நூல்: அஹ்மத் 1511
சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது(புகாரி 7115, 7121)
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்ப பொய்யர்கள தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது( புகாரி 3609, 7121)
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.( புகாரி 3456)
யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும் .( புகாரி 2926)
கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'( புகாரி 5179)
யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. (புகாரி 7119)
கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது
(புகாரி 3517, 7117)
செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது (புகாரி 1036, 1412, 7121)
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான்.( புகாரி 1424)
மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள். ( புகாரி 3609, 7121, 6936)
பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)க ளுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12ஆயிரம் பேர் இருப்பார்கள்.புகாரி 3176
மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
(நூல் : முஸ்லிம் 2451)
அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும(முஸ்லிம் 3546)
மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது
நூல்: முஸ்லிம் 5162.
அல்லாஹ் நம் அனைவரையும் இந்த சோதனைகளிலிருந்து பாதுகாப்பானாக. ஆமீன்!
இஸ்லாத்தில் பெண்ணுரிமை
இஸ்லாத்தில் பெண்ணுரிமை
இஸ்லாத்தில்பெண்ணை கண்ணியப்படுத்தி அவளுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியதோடு அடிமைத் தலையிலிருந்து பெண்ணை விடுவித்து அவளுக்கு, சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது.
கல்வி
மனிதனை மனிதனாக வாழவைப்பது கல்வியே. இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய கடமைகளில் ஒன்றாக கல்வி கற்பதை ஆக்கியிருக்கின்றது.
*."கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கட்டாயக் கடமையாகும்."(பைஹகி'') என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
பெண்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்காக மேலேயுள்ள நபி மொழி அமைந்து காணப்படுகின்றது
இன்னும் பெண்ணுக்கு மணமுடிக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்ணின் சம்மதம் பெற்றே அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றது. திருமணத்தின் போது ஒரு பெண் தனது கணவனிடம் "மஹர்" கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளாள்.
மணமுறிவு
*."நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய "மஹர்களை" கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்.(அல்குர்ஆன் 4:4)
தன் கணவனுடன் இயைந்து வாழ முடியாத சூழல் உருவாகும் போது ஒரு பெண்தன் கணவனிடமிருந்து மணமுறிவு பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.தான் விரும்பாத தனக்கு இயைவு இல்லாத கணவனுடன் காலமெல்லாம் வாழ வேண்டும் என்ற நியதியை இஸ்லாம் விதிக்கவில்லை.
சொத்துரிமை
பெண்ணுக்குரிய சொத்துரிமை பற்றி இஸ்லாம் குறிப்பிடுகையில் (இறந்து போன) பெற்றோரோ- நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருள்களில் அவை அதிகமாகவோ, கொஞ்சமாகவோ இருந்த போதிலும்ஆண்களுக்கும் பாகமுண்டு, அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு.-(அல்குர்ஆன் 4:7)என அல்குர்ஆன்கூறுகின்றது.
எனவே ஒரு பெண் தனது பெற்றோரிடம்,கணவனிடம்,சகோதரர்களிடம் மற்றும் நெருங்கிய உறவினர்களிடமிருந்து வாரிசாக சொத்துக்களைப் பெறத் தகுதியுடையவர்களாகின்றாள். மேலும் சொத்துக்களைத் திரட்டவும், பாதுகாக்கவும், வியாபார முயற்சிகளில் ஈடுபடவும் இஸ்லாம் பெண்ணுக்கு உரிமை வழங்கியிருக்கின்றது
இஸ்லாத்தின் எதிரிகளும் அவர்களோடு சேர்ந்தவர்களும் பெண்ணின் சிறப்பைப் போக்கி அவளுடைய உரிமைகளைப் பறிக்க விரும்புகின்றனர்.
இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சிறப்பு, கண்ணியம், பாதுகாப்பு முதலியவற்றை இறைமறுப்பாளர் களும் நயவஞ்சகர்களும் விரும்புவதில்லை; அவர்கள் பெண்ணினம் மதிக்கப்படுவதை வெறுக்கின்றனர். அவர் களின் இதயங்களை பகைமை எனும் நோய் பிடித்துக் கொண்டுள்ளது. தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்ட தன் பின் மிருகத்தனமான இச்சையுள்ளவர்களையும் பலவீன முஸ்லிம்களையும்
வேட்டையாடுவதற்கான ஒரு வேட்டைக் கருவியாகவும் இதனால் அவர்கள் பெண்களை ஒரு அழகுபொருளாகவும், தங்கள் இச்சை களைத் தீர்த்துக் கொள்ளும் கருவிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அடிமைகளை விடவும் கேவலமாக நடத்து பவர்களும் உள்ளனர்.
”தங்கள் (மனோ)இச்சைகளைப் பின் பற்றி நடப் பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலுமாய்ச் சாய்ந்து விட வேண்டும் என விரும்புகிறார்கள்.” (அல்குர்ஆன் 4:27)
இதயத்தில் இச்சை எனும் நோயுள்ள சில முஸ் லிம்கள்கூட, பெண்களின் அழகு மற்றும் அங்கங்களை ரசிப்பதற்கே வழிவகுக்கின்றனர். பெண்களை ஒரு கண்காட்சிப் பொருளாகவே இவர்கள் மதிக்கின்றனர். இது ஷைத்தானின் தூண்டுதல் என்பதை மறந்து செயல் படுகின்றனர். தங்களின் கண்களுக்கு முன்பாக பெண்கள் எப்போதும் மேனி திறந்தவர்களாக இருக்கவேண்டும் அந்த அழகை ரசிக்கவேண்டும் என
விரும்புகின்றனர். பெண்களுக்கு உரிமைவாங்கித் தரப்போவதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், ஆண்களைப் போன்று பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும். அவர்களுக்குச் சமமாக வேலைகளில் பங்கெடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் ஆண்களுக்கு பணி விடை, உதவி செய்கின்ற பணிப்பெண்களாக இருக்க வேண்டும். விமானங்களில் இவர்கள் பணிப்பெண்களாக நியமிக்கப்பட வேண்டும். கல்விச்சாலைகளில் இவர்கள் ஆண்களுடன் ஒன்றிணைந்து படிக்கும் மாணவிகளா கவும், ஆசிரியைகளாகவும் இருக்க வேண்டும். நாடகங் களில் நடிகைகளாக இருக்கவேண்டும். இன்னிசைக் கச்சேரிகளில் பங்கு கொண்டு பாடவேண்டும். செய்தி
வாசிக்கிறோம் என்ற பெயரில் தொலைக் காட்சி போன்ற ஊடகங்களில் வலம்வந்து ஆண்களை மகிழ்விக்க வேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றனர். மஞ்சள் பத் திரிக்கைகள் பெண்களின் நிர்வாணப் படங்களை வெளி யிட்டு விற்பனையை அதிகரித்து செல்வங்கள் சேகரித்து வருகின்றனர். வியாபாரிகளில் சிலர் தங்களின் வணிகஸ் தலங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் மக்களைக் கவர்வதற்காகவும்,
விற்பனையை அதிகரித்துக் கொள்வ தற்காகவும் பெண்களின் ஆபாசப்படங்களைப் பயன் படுத்தி வருகின்றனர். ஜவுளிக் கடைகளில் ‘ஷோகேஸ்’ பொம்மைகளைக்கூட அழகான பெண்களின் தோற்றத் தில்தான் அமைத்துள்ளனர்.
பெண்ணுரிமை என்ற பெயரில் மேற்கண்டவாறு இழைக்கப்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டதால் இவற்றையெல்லாம் பார்க்கின்ற பெண்கள் ”நாம் இதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளோம் போலும்; நாம் இப்படித்தான் வாழவேண்டும் போலும்” என பெண்கள் எண்ணிக் கொண்டனர்; அவர்களின் மன நிலை இதை சரிகாணும் அளவிற்கு மாற்றப்பட்டுவிட்டது. இதன் காரணத்தினால் அப்பெண்களின்
கணவன்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், தங்கள் வீட்டுக்காரியங்களை கவனிப்பதற்காகவும் அன்னியப் பெண்களை வேலைக்காக அமர்த்துகின்றனர். இதனால் மிகப்பெரிய குழப்பங்களும், தீமைகளும் ஏற்படுகின்றன
இஸ்லாம்
இஸ்லாம்
அரபு: ; al-'islām, என்பது ஒரிறைக் கொள்கையைகொண்ட ஒரு மார்க்கமாகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர்ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிர்க்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது
இஸ்லாதின் நம்பிக்கை.
இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இஸ்லாதின் கட்டாயக் கடமைகளாகும்.
ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபிகள் இந்த மார்க்கத்தை மக்கா நகரில் பரப்பத்தொடங்கினார்கள். இவர் இறைவனின் தூதர் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாதின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள்
1.
இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும்
2.
சொல்-வேர்
இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இதுஇ-ஸ்-ல்-ம்என்ற நான்கு அரபிவேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிப்படுவது என்பதாகும்.
நம்பிக்கைகwள்
குர்ஆன்-இஸ்லாமிய வாழவியல் மற்றும் சட்டத்தின் அடிப்படை
இஸ்லாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விஷயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது
3
இது ஈமான் என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது.
கடவுள்
“கடவுள் ஒருவனே. அவனே அல்லா. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இஸ்லாதின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லா என்ற அரபுச் சொல் பால்வேறுபாடுகாட்டாத ஒரு படர்க்கைச் சொல். இதன் மூலம் “இல்லா” எனப்படும் சொல் ஆகும். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும்.
4.
வானவர்கள்
வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல்
ஒரு இஸ்லாமிய கடமையாகும். இவர்களை இறைவன் ஒளியினால் படைத்ததாக நபிமொழி கூருகின்றது
5. இறைவனை தொழுதவன்னம் இருப்பது, இறைதூதர்களுக்கு இறைவனின் செய்தியை கொண்டு செல்வது, ஒவ்வொரு மனிதனின் பாவ புன்னிய கணக்கை குறித்துக்கொள்வது, அவர்களின் உயிரை எடுப்பது ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது.யிப்ரீல், இந்த வானவ கூட்டத்தின் தலைவராக குறிப்பிடப்படுகின்றார்கள்
வேதங்கள்
முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் வேதங்கள்கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இஸ்லாமிய கடமையாகும்.தவ்ராத்,சபூர், இஞ்சில்,ஆகியவை முறையே மூசா,தாவூத், ஈசா,ஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டது,
இன்னும் இறுதியானதாகவும், திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு குர்ஆன் வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறைதூதர்கள் எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெர்வு செய்யப்பட்டவர்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன் ஆதம் முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றது
உலக மக்கள் இறைவனை மறந்து, அநீதியின் பக்கம் செல்லும்போது அவர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் இறைவனின் செய்தியை அவர்களுக்கு அறிவித்தல் ஆகியவை இவர்களில் கடமை . முகம்மது நபி. இவர்களில் இறுதியானவராக குர்ஆன் குறிப்பிடுகிறது.
இறுதித் தீர்ப்பு நாள்
ஒருநாள் இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, முதல் மனிதன் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை மீக்கப்படுவர். அன்று அவர்கள் செய்த பாவ மற்றும் புன்னியங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவது ஒரு கடமையாகும்.கியாமத் எனப்படும் இந்த நாளில் அவர் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சொர்க்கமோ, நரகமோ தரப்படும் என குர்ஆன் குறிப்பிடுகின்றது.
விதி
விதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என நம்புவது இஸ்லாதின் ஒரு கடமை. விதியை பற்றி சிந்திப்பதையோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குர்ஆன் தடுக்கின்றது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...