நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், ஜூலை 22, 2024

ஆபாச ஆடைகளாக மாறும் புர்க்கா (ஹபாயாக்கள்,

ஆபாச ஆடைகளாக மாறும் புர்க்கா* (ஹபாயாக்கள்)
*சீரழிகின்ற ஆடைக் கலாச்சாரம்*

*ஆண் மகன்களே*
*கணவன் மார்களே*
*தந்தை மார்களே*

 *கண்ணியம் மிகுந்த பெண்களுக்கு* 
 *தாய்மார்களே*
 *தங்கை மார்களே*
 *உங்களுக்கான பதிவு தான் இது* 

நைட்டிகளாக மாறும் ஹபாயாக்கள்
அணிந்தும் அணியாத நிர்வாண நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

விலை கொடுத்து வாங்கி மாற்றான் கண்களுக்கு பிறந்த மேனியாய் உடல் அங்க அவயங்களை விருந்தாக்கும் அவலம் தற்போதைய இஸ்லாமிய பெண்களிடம் அரங்கேறிக்கொண்டுள்ளது.

சொந்த தாய் , மகள் , சகோதரி ,மனைவி புர்க்கா அணிந்தும் நிர்வாணமாக சுற்றுவதை பார்த்தும் கண்டிக்காது உறுதுணையாக இருக்கும் அனைத்து தந்தை , கணவன் , மகன் , சகோதரன் போன்றோர் மறுமையில் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தப்பவே முடியாது !

மார்க்ம்பேசிவிட்டு வீட்டில் உள்ளவர்களைத் தடுக்காத இவர்கள் ஆண்கள் என்று வீராப்பு பேசுவதற்கு அருகதை உள்ளவர்களா ? 

எப்படி வட்டி வாங்குபவர் கொடுப்பவர் கணக்குஎழுதி வைப்பவர்  சாட்சி சொல்பவர் என அனைவரும் பாவத்தில் சமமானவர்களோ! அதுபோல்

ஊரில் இவ்வாறான மெல்லிய ,வண்ண வண்ண  இருக்கமான நைட்டி போன்ற புர்க்கா, ஹபாயாக்களை வாங்கிகேட்பவர்கள் வாங்கி கொடுப்பவர்கள் ,விற்பனை செய்வோர் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விபச்சாரத்தை தூண்டும்  குற்றத்திற்கு ஆளாகின்றனர் என்பதே உண்மை . 

விற்பனையாளர்களே நீங்கள் இவ்வாறான கேவலமான ஹபாயாக்களை உங்களது வீட்டு சொந்த குமரிகளுக்கு அணிவித்து அழகு  பாருங்களேன் . நீங்கள் உங்ளது பிள்ளைகளுக்கு விரும்பாததை ஏன் வியாபாரம் என்ற பெயரில் மற்றவர்களின் உடல் அங்கங்களை உலகிற்கு காட்சிப் படுத்துகிறீர்கள் . 

வாங்குவது நிறுத்தப்பட்டால்
விற்பனை தானாக நின்றுவிடும்!

நாம் கேட்பது இதுதான் , பெற்றோர்கள் கணவன்மார்கள் இது குறித்து கூடிய கவணம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும் . மார்க்கம் உதறித்தள்ளப்பட்டு அந்நிய சக்திகள் ஊடுருவி நமது இளய சமுதாயத்தை ஆபாசத்தின் பக்கம் அழைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன .

நபியவர்கள் கூறியது போல் " ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! அவர்களது பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவார்கள்." 

இவை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட (புர்க்கா) ஹபாயாக்களா ? அல்லது முஸ்லிம் பெண்கள் நடந்து சென்றால் காமபார்வையுடன் பார்க்க தூண்டும் பேஷன் ஆடைகளா?
மக்களாகிய நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் .

வல்லாஹி , இஸ்லாத்தின் எதிரிகள் சிறப்பாக திட்டம் தீட்டி முஸ்லிம்களை நாசத்திற்குக் கொண்டு செல்கின்றார்கள் .
நமது ஆண்களும் பெண்களும் 
அதற்கு அடிமையாகிவிட்டார்கள்.

மார்பு பகுதிக்கு ஒரு தனிக்கலர் அங்கே ஹார்ட் போல் ஸ்டோன்ஒர்க்,
முழங்கைப்பகுதிக்கு தனிக்கலர் மற்றும் ஸ்டோன்ஒர்க்
இரு கால்களுக்கு மத்தியில் தனிக்கலர் மற்றும் துணியை அங்கே கிழித்து தொங்கவிட்டுக்கொள்வது
மேலும் முன்பகுதியையும்  பின்பகுதியையும் இருக்கமாக பிதுக்கமாக காண்பிப்பது.

இவற்றை அணிவதை விட அணியாமல் பிறந்த மேனியாக போவது மேல் ;  ஏனெனில் இரண்டும் ஒரு நிலையாகத் தான் இங்கு விளங்குகிறது .
இதனை விற்போர் , கொள்முதல் செய்வோர் , தமது மனைவி  பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்போர் , அத்தோடு இவற்றை அணிந்து வெளியில் சென்று ஆண்களை பாவத்தின் பால் ஈர்ப்போர் அனைவருக்கும் விபச்சாரக் குற்றம் வந்தே தீரும் .

ஆடை அணிவது உடலை மறைப்பதற்கு , ஆனால் இன்று ஆடை வெறும் உடலில் இருக்கும் தோல் போன்று ஒட்டியதாகவும் , மெல்லியதாகவும் இருக்கமாகவும் இருக்கின்றது . கேட்டால் fashion ஆம் .

உண்மையில் விபச்சாரம் பல வழிகளில் நம்மை அறியாமலே சமூகத்தில் ஊடுருவியிருக்கின்றது .

எனவே பொறுப்புதாரிகளே ! தயவுசெய்து சமூகத்திற்கு விளிப்பூட்டுவது உங்களது சொந்த பந்தங்கள் அனைவரையும் இந்த கேவலமான கேடுகெட்ட அனாச்சாரத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் .

இப்படிப்பட்ட ஆடைகளை விரும்பும் பெண்களையும்  ஆண்களையும் திருமணம் செய்யாதீர்கள்!

உடையில் இஸ்லாத்தை பின்பற்றாதவர்கள்?
உண்மையில் எப்படி இஸ்லாத்தைப் பின்பற்றுவார்கள்?

வல்ல அல்லாஹ் இந்த அனாச்சாரத்திலிருந்து எமது முஸ்லிம் பெண்மணிகளைக் காத்தருள்வானாக .

எனவே எல்லோரும் இவ்விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து கேடுகெட்ட ஆடைப் பழக்கங்களிலிருந்து எம் இளம் பெண்களையும் , வாலிபர்களையும் பாதுகாப்போம்..

ரயில் பயணிகளுக்கு நற்செய்தி,

ரயில் பயணிகளுக்கு நற்செய்தி.. ரயில் நேரடியாக வீடு வந்து சேரும்!*

  IRCTC ஆனது *Ola Cab* உடன் இணைந்துள்ளது.
  ஒரு வாரத்திற்கு முன்பே வண்டியை முன்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது
  ரயிலை வீட்டிற்கு இலவசமாகப் புறப்படுங்கள்
  ரெயில்வே பயணிகளுக்கு ஒரு பெரிய செய்தியை ரெயில்வே தெரிவித்துள்ளது.
  IRCTC மூலம் டிக்கெட் வாங்கிய பயணிகள் நேரடியாக அவர்களது வீடுகளில் இறக்கிவிடப்படுவார்கள்.
  மிகவும் இலவசம்.
  இதற்காக ஓலா கேப் நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி திங்கள்கிழமை ஒப்பந்தம் செய்துள்ளது.
  ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்த சேவைகள் ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்படும்.   பயணத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக பயணிகள் தங்கள் இலக்கை அடைய ஒரு வண்டியை பதிவு செய்யலாம்.
  இதில் நீங்கள் விரும்பும் காரை முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
  மைக்ரோ, மினி, பிரைம் செடான், பிரைம் பிளே, ஆட்டோ, ஷேர்...
  நாம் விரும்பியதை முன்பதிவு செய்யும் நெகிழ்வுத்தன்மை உள்ளது.
  இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  IRCTC ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் உள்நுழைந்து, 'புக் எ கேப்' விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் பயணிகள் இந்த வசதியைப் பெறலாம்.
  ஸ்டேஷனில் இறங்கியவுடன் வண்டி தயாராகிவிடும்.
  பயணிகள் தங்கள் வீடுகளை பாதுகாப்பாகவும் வசதியாகவும் சென்றடைவதை உறுதிசெய்யும் நோக்கத்தில் ஓலா கேப்ஸுடன் இந்த ஒப்பந்தம் செய்துள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

   https://www.businesstoday.in/amp/latest/economy-politics/story/irctc-ties-up-ola-train-passengers-book-cab-railways-app-247241-2018-03-20


   *மூத்த குடிமக்களின் வசதிக்காக இந்திய ரயில்வே மையப்படுத்தப்பட்ட எண்களை வெளியிட்டுள்ளது!!*
  ----------------------------------
   *9760534983* : TTI,
  முன்பதிவு மற்றும் உணவு
  ----------------------------------
   *9760500000* : சுத்தம் செய்தல்
  ----------------------------------
   *9760534057* : கோச்சில் சிக்கல்
   -------------------------------
  *9760534060* : மின்சார பிரச்சனைகள்
  -------------------------------
   *9920142151* : விசாரணை பிரச்சனை
  -------------------
   *9760534063* : RPF & பாதுகாப்பு
  -------------------
   *9760534069* : குடிநீர் அமைப்பு
  -------------------
   *9760534073* : மருத்துவம்
  -------------------
   

பெண்கள் ஜியாரத்தும்,

*பெண்கள் ஜியாரத்தும் பேண வேண்டிய முறைகளும்*

 ? ஜியாரத் செய்வது பெண்களுக்கு தடுக்கப்பட்டதா?  

! ஜியாரத் செய்வது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான் தடை செய்யப்பட்டிருந்தது.

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

‏  ‏عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا 

கப்ருகளை ஜியாரத்
 செய்வதை  உங்களுக்கு தடை செய்திருந்தேன். ஜியாரத் செய்யுங்கள்.

அறிவிப்பாளர்: புரைதா ரலியல்லாஹு அன்ஹு
ஸஹிஹ் முஸ்லிம்(2305), திர்மிதி(1054), நஸாயீ(2032), அபூதாவூத்(3237), இப்னு மாஜா (1571).

ஜியாரத் என்றால் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தான்.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றாடம் ஸியாரத் செய்திருக்கிறார்கள்.
 ஜியாரத் செய்யும்படி சொல்லியிருக்கிறார்கள் என்கிற ஏராளமான ஹதீஸ்கள் உண்டு. என்றாலும் இங்கே பெண்கள் ஜியாரத் செய்வது தொடர்பாக மட்டுமே பேசுவோம்

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ زَوَّارَاتِ الْقُبُورِ ‏
ஜியாரத் செய்யும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லஃனத் செய்தார்கள் - சாபமிட்டார்கள். 
என்ற ஹதீஸை முன் வைத்து பெண்கள், ஜியாரத் செய்யக் கூடாது என்று வாதிடுகின்றனர். 

இவ்விஷயத்தில் நமது பதில் என்னவென்றால்,  அவர்களுக்கு ஹதீஸ்  துறையில் ஞானம் இல்லை என்பது, அல்லது இருந்தும் தங்களுடைய தவறான கொள்கைக்காக மறைத்து இருட்டடிப்பு செய்கிறார்கள். இந்த இரண்டில் அவர்கள் எதைத்தேர்வு செய்கிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது. 

ஏனென்றால் அவர்கள் முன்வைக்கும் அந்த ஹதீஸ் திர்மிதி என்ற ஹதீஸ் கிரந்தத்தில்(1056) இடம்பெற்றுள்ளது. 
அதைத் தொடர்ந்து இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் என்ன  குறிப்பிடுகிறார்கள்? என்பதை அறிய கீழ்வரும் வாசகத்தைப் படியுங்கள்

وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنَّ هَذَا كَانَ قَبْلَ أَنْ يُرَخِّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي زِيَارَةِ الْقُبُورِ فَلَمَّا رَخَّصَ دَخَلَ فِي رُخْصَتِهِ الرِّجَالُ وَالنِّسَاءُ ‏.‏

இது ஜியாரத் செய்வது அனுமதிக்கப்படுவதற்கு முன் சொல்லப்பட்டதாகும். எப்போது அனுமதி வழங்கினார்களோ அந்த அனுமதியில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அடங்குவர். என்று இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது கிதாபில் பதிவு செய்துள்ளார்கள். 

(திர்மிதி 1056)

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

நான் கப்ருகளை ஜியாரத் செய்ய தடைவிதித்திருந்தேன். கப்ருகளை நீங்கள் ஜியாரத் செய்யுங்கள். ஏனெனில் கப்ருகளை ஜியாரத் செய்வது மறுமையை நினைவூட்டுகிறது என  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கிய அனுமதி ஆண்கள் பெண்கள் என இருதரப்பினருக்குமாகும்.
எனவே தான் இமாம்கள் பெண்கள் ஜியாரத் குறித்து கூறும்போது

والاصح ان الرخصة ثابتة للرجال والنساء (مراقي الفلاح)

மிகச் சரியான கருத்தின்படி கப்ருகளை ஜியாரத் செய்ய ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனுமதி உள்ளது.

நூல்: மராகில் ஃபலாஹ்.

ندب زيارتها للرجال والنساء علي الاصح (نور الايضاح)

மிகச் சரியான கருத்தின் படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் கப்ருகளை ஜியாரத் செய்வது மன்தூப் - சுன்னத் ஆகும்.

நூல் :நூருல் ஈலாஹ்.

والاصح ان الرخصة ثابتة لهما (البحر الرائق)

மிகச் சரியான கருத்து கப்ருகளை ஜியாரத் செய்ய ஆண்கள் பெண்கள் இருவருக்கும் அனுமதி இருக்கிறது.

நூல் :  அல்பஹ்ருர் ராயிக்.

اما علي الاصح من مذهبنا وهو قول الكرخي وغيره من ان الرخصة في زيارة القبور ثابتة للرجال والنساء جميعا فلا اشكال
(رد المحتار)
நம்முடைய மத்ஹபில் மிகச் சரியான கருத்தும் கர்ஹீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்தும் மற்றவர்களின் கருத்தும் கப்ருகளை ஜியாரத் செய்யும் விஷயத்தில் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் அனுமதி உள்ளது. எந்த சந்தேகமும் இல்லை.

நூல் ரத்துல் முஹ்தார்.

ஷாபிஈ மத்ஹபின் படி பெண்கள் பொது அடக்க ஸ்தலங்களை ஜியாரத் செய்வது மக்ரூஹ் ஆகும்.
காரணம் அவர்கள் பொறுமை குறைந்தவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் என்பதால்.

 ஆனால் நபிமார்கள் வலிமார்களின் கப்ரை ஜியாரத் செய்வது  முஸ்தஹப்பாகும் - விரும்பத்தக்கதாகும். 

وَمَحَلُّ هَذِهِ الْأَقْوَالِ فِي غَيْرِ زِيَارَةِ سَيِّدِنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَمَّا هِيَ فَلَا تُكْرَهُ بَلْ تَكُونُ مِنْ أَعْظَمِ الْقُرُبَاتِ لِلذُّكُورِ وَالْإِنَاثِ ، وَيَنْبَغِي أَنْ تَكُونَ قُبُورُ سَائِرِ الْأَنْبِيَاءِ وَالْأَوْلِيَاءِ كَذَلِكَ كَمَا قَالَهُ ابْنُ الرِّفْعَةِ وَالْقَمُولِيُّ وَهُوَ الْمُعْتَمَدُ ،
نهاية
பொது அடக்க ஸ்தலங்களை ஜியாரத் செய்வது தான் 
பெண்களுக்கு  மக்ரூஹ் ஆகும். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது  ஆண்கள் மற்றும் பெண்களுக்குண்டான நற்காரியங்களில் உயர்ந்ததாக இருக்கும். 

இப்னு ரிஃப்ஆ மற்றும் கமூலி போன்றோர்கள் கூறியது போன்று அனைத்து நபிமார்கள் வலிமார்கள் கப்ருகளை ஜியாரத் செய்வதும் மக்ரூஹ் அல்ல. இதுவே உறுதியான கருத்தாகும்.

நூல்: நிஹாயா

நபிமார்கள் வலிமார்களது கப்ருகளை ஜியாரத் செய்வது பெண்களுக்கு முஸ்தஹப்பு என்ற கருத்து இஆனதுத் தாலிபீன், பத்ஹுல் வஹ்ஹாப், முக்னில் முஹ்தாஜ், துஹ்பா போன்ற ஷாபிஈ மத்ஹபின் சட்ட நூல்களில் காணப்படுகின்றது.

கதீபுஷ் ஷர்மீனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள் : 
நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஜியாரத் செய்வது ஆண்களுக்கும், பெண்களுக்கும் மிகப்பெரும் வணக்கமாகும். 

தமன்ஹீரி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) என்ற அறிஞர், ஏனைய நபிமார்கள், இறைநேசர்கள், நல்லோர்கள், ஷுஹதாக்களின் கப்ருகளை ஜியாரத் செய்வது மாண்பானது என்று கூறியுள்ளார்கள். (முஃனீ 1-365)

பெண்கள் கப்ருகளை ஜியாரத் செய்ய அனுமதி உள்ளது என்று கூறுகின்ற அதே நேரத்தில் ஜியாரத்தின் ஒழுக்கங்களை   பெண்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உதாரணமாக ஜியாரத் செய்ய நாடுகின்ற பெண்கள் கணவனின் அனுமதியை பெறுதல். மஹ்ரமானவரின் துணையோடு ஜியாரத் செய்தல். இஸ்லாம் கற்பித்த முறைப்படி முழுமையாக தன்னை மறைத்து பர்தா அணிந்து ஜியாரத் செய்தல். கூட்ட நெரிசல்களை தவிர்ந்து ஜியாரத் செய்தல் போன்ற அம்சங்கள் பேணப்பட வேண்டும். 

*பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித குடும்பத்தின் பெண்கள் ஜியாரத் செய்த தகவல்களைப் பாருங்கள்.*

ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்ழா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும், அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் ஜியாரத் செய்வார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அங்கே அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா   அணிந்து தன்னை இழுத்துப் போர்த்திக் கொண்டவர்களாகவே செல்வார்கள். 
(முஸ்னத் அஹ்மத் - 25701 )


அன்னை ஃபாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உஹுத் மலைக்கு சென்று ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஜியாரத் செய்து வந்ததார்கள். 
(முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக் - 6713 , 6717), (ஹாகிம்- 4319 ) 

மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் (தனது சகோதரர்) அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்கள் மக்காவுக்கு சென்றிருந்தபோது ஜியாரத் செய்தார்கள்.
அதைப்பார்த்த அப்துல்லாஹ் இப்னு அபீ முலைகா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "பெண்கள் ஜியாரத் செய்வது தடைசெய்யப்பட்டதல்லவா?" என்றார்கள். அதற்கு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், "ஆம்! தடை செய்திருந்தார்கள், பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி அளித்து விட்டார்கள்" என்று கூறினார்கள். 
நூல்: (ஹாகிம் 1327) , 
  (பைஹகீ - 6999) 

فقالت عائشة: كيف أقول لهم يا رسول الله؟ قال: «قولي: السلامُ على أهل الدِّيار من المؤمنين والمسلمين، ويرحمُ اللهُ المستقدمين منا والمستأخرين، وإنَّا إن شاء الله بكم

நான் ஜியாரத்திற்கு சென்றால் என்ன ஓத வேண்டும்? என்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள். 

 அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் ல லாஹிகூன்'' என்று சொல்லுங்கள்'' என்றார்கள்.

பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிலிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ் நாடினால் நாம் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.( முஸ்லிம் - 2301) 
​என்ற துஆவை சொல்லிக் கொடுத்தார்கள். 

பெண்கள் ஜியாரத் கூடாது என்றிருப்பின் நான் தான் ஜியாரத்தை தடுத்திருக்கிறேனே நீங்கள் ஏன் அங்கே செல்கிறீர்கள்? என்று அல்லவா கேட்டிருப்பார்கள்.


மேற்கண்ட ஆதார தகவல்களின் ஒளியில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பெண்கள் ஜியாரத் செய்வது குர்ஆன் ஹதீஸ் வழியில் அனுமதிக்கப்பட்டது ஆகுமானது. சுன்னத் ஆகும்.

பெண்கள் ஆண்களோடு  கலந்து விடுகிறார்கள் எனவே பெண்கள் ஜியாரத் கூடாது என்று சொல்கிறவர்கள்,  பெண்கள் நிறைய இருக்கிறார்கள் ஆண்கள் ஜியாரத் செய்யக்கூடாது என்று ஏன் சொல்லவில்லை. ஆண்களுக்குக் கூடும். பெண்களுக்குக் கூடாது என்ற இந்த  அளவுகோல் எதை வைத்து எடுத்தார்கள் என்று தெரியவில்லை. 

ஜியாரத்தில் 
ஆண்களும் பெண்களும் கலக்கிறார்களே, இன்னும் அங்கு பித்அத்தான செயல்கள் நடைபெறுகின்றனவே என்ற கேள்விக்கு

*இமாம் இப்னு ஹஜருல் ஹைத்தமி  ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் விளக்கம்*

 ஜியாரத்தை நாடி புறப்படுவது சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள் கலப்பது போன்றதினால் ஜியாரத் கூடாது என்று சொல்லக்கூடியவர்கள் தவாப் செய்வது, அரபாவில் தங்குவது முஸ்தலிபாவில் தங்குவது கல் எறிவது இது போன்ற காலங்களில் ஆணும், பெண்ணும் கலப்பது என்பதும் கூடாது என்று சொல்ல வேண்டும். 

அப்படி எந்த இமாம்களும்  சொல்லவில்லை அதைப் போன்று தான் ஜியாரத்தும்.

ஜியாரத்தை மறுப்பவர்கள் ஆண்களும் பெண்களும் கலப்பதினால் அவை கூடாது என்று மார்க்கம் கூறுகிறவரைப் பார்த்து நீ ஏமாந்து விடாதே

மார்க்க சட்ட மேதைகள், தவாப் செய்யும் போது பெண்களிருந்தாலும் செய்யலாம் என்று தான்  சொல்கிறார்கள். மேலும் பெண்களை விட்டும் தூரமாகியிருங்கள் என்றும் நமக்கு கட்டளையிடுகிறார்கள்.

அதைப் போன்று தான் ஜியாரத்தும். எனவே ஜியாரத் செய்வான். பெண்களை விட்டும் தூரமாகிவிடுவான் ஹராம் என்று பார்ப்பதையெல்லாம் தடுப்பான். முடிந்தால் அவற்றை நீக்கவும் செய்வான்.
பித் அத்துக்காக நல் அமல்கள் விடப்படாது. 

(ஃபத்வா அல் குப்ரா

ஹிஜ்ரி 1446 முஹர்ரம் பிறை 12, ( 19-7-2024)

பிரபல்யமான பதிவுகள்