நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, மார்ச் 30, 2024

உடலை பட்டினி போடப்படும் போது என்ன நடக்கிறத,

உடலை பட்டினி போடப்படும் போது என்ன நடக்கிறது...?

படத்தில் இருப்பவர் ஜப்பானிய உடலியல் மூலக்கூறு உயிரியலாளர் யோஷினோரி ஓசுமி என்பவர். 2016 ஆம் ஆண்டில், அவர் உடலியல் மூலக்கூறில் "الإلتهام الذاتي" Auto phagy" உடல் தன்னையே உண்ணுதல் பற்றிய மருத்துவ ஆய்வுக்காக நோபல் பரிசை வென்றார்.

அதாவது உடல் 8 மணி நேரத்திற்கு குறையாமலும் 16 மணி நேரத்திற்கு கூடாமலும் பசியுடன் இருக்கும்போது, அது தன்னைத்தானே உண்ணுகிறது, அல்லது உடல் செல்கள் தன்னைத்தானே உண்டு புதுப்பித்துக் கொள்கிறது என்ற மருத்துவ உண்மையை கண்டு பிடித்தார். 

மேலும் இந்த செயல்முறை பற்றி ஓசுமி கூறும் போது, உடல் பட்டினியாக இருக்கும் போது, உடலின் அனைத்து திசுக்களில் இருந்தும் விசேட புரதங்கள் சுரந்து, அவைகள் பெரும் துடைப்பங்கள் போன்று 
சுற்றித் திரிந்து, உடலில் காணப்படும் இறந்த செல்கள், புற்றுநோய் செல்கள் மற்றும் சிதைவுற்ற செல்களை மறுசுழற்சி செய்து, புதுப்பித்துவிடுகின்றன. 

இப்போதும் கூட மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை 
வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உண்ணாமல் குடிக்காமல் பட்டினிக்கு உட்படுத்தி "பட்டினி சிகிச்சை"
அளித்து வருகின்றனர். 

2016 ஆம் ஆண்டு மருத்துவத்துக்காக நோபல் பரிசின் கருப்பொருளும்  இதுவாகவே இருந்தது. 

நோன்பு பற்றி வான் மறை வசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது:

((நீங்கள் நோன்பு நோற்பதானது உங்களுக்கே நன்மையானதாகும். ))

"ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; "  (திருக்குர்ஆன் 2:185)

ஒட்டகம் பற்றி அல்குர்ஆன்,

ஒட்டகம் பற்றி அல்குர்ஆன்

ஒட்டகம் பற்றி நாம் அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்:

100 லிட்டர் தண்ணீர் 10 நிமிடங்களில் குடிக்கும் உயிரினம்
பாலைவனத்தில் கடுமையான சூறாவளி வீசும் போது ஒட்டகத்தின் கண்களுக்குள் மண் போகாமல் இருக்க அது தன் கண்களை மூடிக்கொள்ளும்...

கண்கள் மூடப்பட்டிருந்தாலும் ஒட்டகத்தினால் பார்க்க இயலும்.. எப்படி என்று கேட்கிறீர்களா??

ஒட்டகத்திற்கு (Third eyelid) அதாவது மூன்றாவது கண்இமை என்ற‌ ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான்.

சூறாவளி வீசும் போது தன் கண்களின்  வெளிப்புறத்தே இருக்கும் இமைகளை மூடாமல் இந்த மூன்றாவது இமையை மூடிக்கொள்ளும்.

இந்த மூன்றாவது இமையை பொறுத்த வரை இது ஒளிபுகும் தன்மையை கொண்டது (Transparent) இந்த இமையின் மூலம் பாலைவனத்தில் கடுமையான சூறாவளி வீசும் போது ஒட்டகத்தின் கண்கள் மூடப்பட்டிருந்தாலும் ஒட்டகத்தினால் பார்க்க இயலும்.அதே நேரத்தில் கண்களுக்குள் மண் புகாமலும் இருக்கும்.

சுப்ஹானல்லாஹ்...

அல்லாஹ்வின் இந்த பிரம்மாண்டமான படைப்பை பற்றி சிந்திக்குமாறு திருமறை குர்ஆனில் நமக்கு கட்டளையிடுகின்றான்.

أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

17. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?

திருக்குர்ஆன்  88:17

இன்னும் இந்த ஒட்டகத்தின் படைப்பில் வியக்க வைக்கும் பல சான்றுகள் இருக்கின்றன...!

கப்ரில் (மண்ணறையில்) கேட்கப்படும்,

கப்ரில் (மண்ணறையில்) கேட்கப்படும் கேள்விகள் என்ன...?

ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் வானவர்கள் அவரிடம் மூன்று கேள்விகளைக் கேட்பார்கள். அவை 

1. உன்னுடைய இறைவன்  யார்?
2. உன்னுடைய மார்க்கம் எது?
3. உங்களுக்கு அனுப்பட்ட இறைத்தூதரான முஹம்மது நபியைப் பற்றி நீ என்ன கருதுகிறாய்? ஆகிய மூன்று கேள்விகளாகும்.

இதற்கு முஸ்லிம்------👇🏿

1. என்னுடைய இறைவன் அல்லாஹ்.
2. என்னுடைய மார்க்கம் இஸ்லாம்.
3. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று பதிலளிப்பார். 

அது உனக்கு எப்படி தெரியும்? 
என்று வானவர்கள் கேட்பார்கள். 

நான் குர்ஆனை ஓதினேன். 
அதன் மூலம் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அவர்களை உண்மைபடுத்தினேன். என்று முஸ்லிமான அடியார் கூறுவார்.

காஃபிர்களால் பதிலளிக்க முடியாது. அவர்கள் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள்.

👆🏿நீண்ட ஹதீஸின் சுருக்கம் இது.

------------------------------------------

இதே செய்தி திர்மிதியில்  

--------------------------------- 👇🏿

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். 

ஒருவர் "முன்கர் மற்றொருவர் "நகீர். இந்த மனிதர் பற்றி 
(முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். 

அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை. நிச்சயமாக 
முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். 

உலகில் வாழும் போது இவ்வாறே 
நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் என்று அம்மலக்குகள் பதிலளிப்பர். பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், 

பின்பு அவரை நோக்கி "உறங்குவீராக! என்று கூறப்படும். 

"நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். 

அதற்கு அவ்வானவர்கள் நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள். 

இறந்த மனிதன் முனாபிக்காக (நயவஞ்சகனாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது, 

அம்மனிதன் இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான்.

அதற்கு அவ்வானவர்கள் 
நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். 

அதன் பின் பூமியை நோக்கி "இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எழும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். 

அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் - திர்மிதீ : 991

-----------------------------------------

இதே செய்தி புகாரியில்

-------------------------------- 👇🏿

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். 

அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 

'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். 

அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறுவான். 

அவனிடம் நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். 

நீ நல்லவனாக இருப்பதால் அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். 

இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்...'

அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அவன் நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் 

'இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என அவனிடம் கேட்கப்படும்போது 

எனக்கொன்றும் தெரியாது.
மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' எனக் கூறுவான். 

உடனே 
#நீ_அறிந்திருக்கவுமில்லை: குர்ஆனை ஓதி #விளங்கியதுமில்லை' என்று கூறப்படும். 

பிறகு இரும்பு சுத்திகளால் அவனது இரண்டு காதுகளுக்குமிடையே பிடரியில் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.

நூல் - புகாரி : 1374 / 1338

நபி இல்யாஸ் (அலை) அவர்கள் வாழ்க்கை வரலாறு,

நபி இல்யாஸ் (அலை) அவர்கள் வாழ்க்கை வரலாறு

பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

என் அன்பு சகோதர சகோதரிகளே  நாம் புனிதமிக்க ரமலான் மாதத்தில் நபிமார்கள் வாழ்க்கை வரலாறு பற்றி பார்த்து வருகின்றோம். நேற்றையதினம் நாம் நபி ஸுலைமான் (அலை) அவர்கள் வரலாறு பற்றி பார்த்தோம். அதை தொடர்ந்து அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல்கீஷ் ராணி அவர்களை பற்றியும் அறிந்து கொண்டோம். இன்றைய தினம் இன்ஷா அல்லாஹ்
நபி இல்யாஸ்  (அலை) அவர்களது வாழ்க்கை வரலாறை காண்போம் இன்ஷா அல்லாஹ்.

நபி இல்யாஸ்  (அலை) அவர்கள் வாழ்க்கை வரலாறு.

பனீ இஸ்ரவேலர்கள் வமிசத்தில் நபி அல்யஸஉ அலை அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரராக ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூன்றாவது தலைமுறையில் நபி இல்யாஸ் அலைஅவர்கள் தோன்றினார்கள்.

ஹழ்ரத் ஹர்கீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மரணத்திற்குப் பிறகு பனீ இஸ்ரவேலர்கள் விக்கிரகத் தொழும்பர்களாகவும், எல்லாவிதத் தீமையில் ஈடுபடுபவர்களாகவும் மாறிவிட்டார்கள். இவர்களை நேர்வழிப்படுத்தவே அல்லாஹ் நபி இல்யாஸ் அலை அவர்களை நபியாக அனுப்பினான்

. நபி மூஸா அலை அவர்களின் தவ்ராத் வேதத்தையே பின்பற்றினார்கள்.
யூஷஃ இப்னு நூன் ஸிரியா நாட்டை வென்ற பிறகு பனீ இஸ்ரவேலர்களுக்கு அதனைப் பங்கிட்டுக் கொடுத்திருந்தார்கள். அதில் ஒரு பகுதியாக இருந்ததுதான் ஸமாரியா என்ற சிறு நாடு. இதனை அஹப் என்பவன் ஆண்டு வந்தான். 

அதன் தலைநகரின் பெயர் ‘பஃலபக்’ ஆகும். இந்தப் ‘பஃலபக்’ என்ற பெயர் வந்ததற்கு காரணம் ‘பஅல்’ என்ற 60அடி உயர விக்கிரகம் ஒன்று இருந்தது. இது வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தூய்மைப்படுத்த 400பேரை அரசன் நியமித்திருந்தான். 

இது சக்தி வாய்ந்தது என்றும் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் என்றும் அவர்கள் நம்பி அதற்கு அளவுக்கு மீறிய மரியாதையும் அளித்து வந்தனர். அந்த விக்கிரகத்தின் வயிற்றுக்குள் ஷைத்தான் புகுந்து கொண்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்தான். 

இந்த மக்களை திருத்தவே அல்லாஹ் நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபியாக அனுப்பியிருந்தான்.

நபி இல்யாஸ் அலை அவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அரசன் அஹபிற்கு புத்திமதி கூறி நேர்வழிப்படுமாறு உபதேசித்து வந்தார்கள். 

இதேபோல் பல்வேறு சிற்றரசர்களுக்கும் உபதேசித்து வந்தார்கள். அத்தனைப் பேரில் ஒரே ஒருவர் மட்டும் அதைக் கேட்டு முஸ்லிமானார்.

அரசன் அஹபின் மனைவி அஸ்பீல் அரசன் வெளிநாட்டிற்குச் சென்று விடும் போதெல்லாம் இவள்தான் அரசாட்சியைக் கவனித்து வந்தாள்.

 இதற்குமுன் 7மன்னர்களை மணம் முடித்து அதன் மூலம் எழுபது ஆண்மக்களை பெற்றாள். நல்லடியார்களையும் நபிமார்களையும் கொன்றுள்ளாள். இப்படி  பனீஇஸ்ரவேலர்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்ட அதிகமான நபிமார்களை கொலைசெய்து இருக்கின்றார்கள். நபி யாகூப் (அலை) அவர்களின் வழித்தோன்றல் மூலமாக வந்தவர்கள் தான் பனீ இஸ்ரவேலர்கள் அதனை நீங்கள் நபி யாகூப் அலை அவர்கள் வாழ்க்கை வரலாறு பதிவில் சென்று காணலாம். நபி யாகூப் அலை அவர்களுக்கு பின்னால் அதிகமான  நபிமார்களை அல்லாஹ் பனீ இஸ்ரவேல் யூதர்களுக்கு அனுப்பி வைத்தான் இந்த மக்களை நேர்வழி படுத்த ஆனால் யூதர்களே அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை கொலை செய்தார்கள். துன்புறுத்தியே தான் வந்தார்கள். அவர்களுக்காக இறுதியாக அனுப்பப்பட்ட நபி ஈஸா அலை அவர்களையும் கொலை செய்யவே முற்பட்டார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களை உயர்த்திக் கொண்டான் வின்னுலகத்துக்கு அது பற்றி நாம் நபி ஈஸா அலை அவர்கள் வாழ்க்கை வரலாற்றில் காண்போம். 

கடைசிக் கணவனை முடிக்கும் போது மூப்பு வந்து விட்டதால் அஹபை கொல்ல முயற்சிக்க முயலவில்லை.

அரசன் அஹபுடைய அரண்மனைக்கு அருகாமையிலேயே இறைநேசர் மஸ்தகியின் வீடும் தோட்டமும் இருந்தது. மஸ்தகி மிகவும் கண்ணியமானவர். எவர் பொல்லாப்புக்கும் போகமாட்டார். சர்வகாலமும் இறைதியாத்திலேயே இருந்து வந்தார். 

அவருடைய தோட்டம் எல்லோரையும் கவரக் கூடியதாக இருந்து வந்தது. அதனை தம் வசப்படுத்திட அரசி முடிவு செய்தாள். 

ஆனால் அதற்கு அரசர் தடை செய்து வந்தார். ஒருமுறை அரசர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தபோது அரசி மஸ்தகியை கொலை செய்துவிட்டு அந்த தோட்டத்தை தன் வசப்படுத்திக் கொண்டாள்.

அந்த அரசனிடம் சென்று அவனுக்கு நற்போதனைகள் செய்யுமாறும் பிறர் பொருளைக் காரணமின்றிப் பறிப்பது பெருங் குற்றமென்றும் உடனே அந்தத் தோட்டத்தை இறந்தவருடைய வாரிசுதாரர்கள் வசம் ஒப்படைத்து விடுமாறும், விக்கிரகத் தொழும்பை விட்டு அல்லாஹ்விற்கு மட்டும் சிரம்பணியுமாறும் இதற்கு உடன்படாவிடிலல் கடுமையான சிறைத் தண்டனையைச் சந்திக்க வேண்டி வருமென்றும் எச்சரிக்குமாறு அல்லாஹ், நபி இல்யாஸ் அலை அவர்களுக்கு அறிவித்தான்.

நபி இல்யாஸ் அலை அவர்களும் அவ்வாறே செய்தார்கள். ஆனால் தமக்கு புத்தி சொல்ல இவர் யார் என்று கடும் கோபம் கொண்டார். எனவே இல்யாஸ் நபி அவர்களுக்கு கடும் தொல்லை கொடுத்து அவர்களைக் கொன்றுவிடவும் திட்டமிட்டான்.

 இதனையறிந்த இல்யாஸ் நபி அவர்கள் மிகவும் மனவேதனையடைந்து பொறுமையிழந்தவர்களாய் அந்த ஊரை விட்டுப் புறப்பட்டு மலைத்தொடர்கள் நிறைந்த பகுதியில் போய்த் தங்கிக் கொண்டார்கள். 

இவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பல ஒற்றர்களை ஏவியிருந்தான் அரசன் அஹப். நபி அவர்கள் அந்த மலைப்பகுதியில் 7வருடகாலம் வாழ்ந்தார்கள்.

இந்நிலையில் அரசனுக்கு பிறந்த ஒரே மகன் கடும் நோய்வாய்ப்பட்டான். மனம் பதைபதைத்துப் போன அரசன், தேவதை பஅலுக்கு இரவும் பகலும் பூஜை போட்டுப் பார்த்தான். நோய்தான் குணமானபாடில்லை. பூஜாரிகள் இதற்கெல்லாம் காரணம் நபி இல்யாஸ் அலை அவர்கள்தான் என்று அரசரிடம் சொன்னார்கள்.

ஸிரியா நாட்டில் உள்ள தேவதை மிகவும் சக்தி வாய்ந்தது. அங்கு இளவரசனை அழைத்துச் சென்றால் குணம் கிடைக்கும் என்று பூசாரிகள் சொன்னார்கள். இதனால் ஒரு கூட்டம் சிரியாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இல்யாஸ் நபி அவர்கள் தங்கியிருந்த பகுதிவழியாக செல்ல நேரிட்டது. அவர்களை இடைமறித்து, நல்லுபதேசம் செய்தார்கள்.

அந்த நல்லுபதேசங்களை கேட்ட அந்தக் கூட்டத்தினர் ஸிரியா செல்லும் நோக்கத்தை கைவிட்டு முஸ்லிமாகி மறுபடியும் பஃலபக் நகருக்கே திரும்பிவிட்டனர். இவர்கள் மூலம் இல்யாஸ் நபி இருந்த இடத்தை அரசன் தெரிந்து கொண்டான்.

இதனால் ஒரு 50பேர் கொண்ட கூட்டத்தைத் தயாரித்தான். நாங்கள் அனைவர்களும் உங்கள் பேரில் விசுவாசம் கொண்டோம். எனவே தாங்கள் நகருக்குள் வந்து பனீ இஸ்ரவேலர்களுக்கு நற்போதனை செய்து அவர்களையும் விசுவாசம் கொள்ள வேண்டும் என்றும் இதில் நல்ல வெற்றி கிடைக்கும் என்றும் கூறி அவர்களை ஊருக்குள் வரவைக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அந்த 50பேர் கொண்ட கூட்டம் நபி இல்யாஸ் அலை அவர்களை சந்தித்து அரசன் சொன்னவாறு சொன்னார்கள். நபி அவர்களுக்கு அவர்களின் பேச்சுக்களில் நம்பிக்கை ஏற்படவில்லை. 

அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள். உடனே வானிலிருந்து ஒரு தீப்பிழம்பு அந்நயவஞ்சகக் கூட்டத்தினர் மீது பாய்ந்து அவர்களனைவரையும் சுட்டுக் கரித்து விட்டது.

பின் சில முரடர்களை அனுப்பி அவர்களை கட்டி கொண்டு வருமாறு அனுப்பினான். அவர்களும் அவ்வாறு முயற்சிக்கவே நபியவர்கள் அல்லாஹ்விடம் கேட்க வானிலிருந்து தீப்பிழம்பு சீறிப்பாய்ந்து அவர்களனைவரையும் ஒருசில நொடிகளில் சுட்டுக் கரித்து சாம்பலாக்கிவிட்டது.

அரசனின் அவையில் இருந்த ஒரு முஸ்லிம் மந்திரியை அழைத்து அவர் மாதிரி சிலர் முஸ்லிமாக விரும்புவதாகவும் எனவே நகருக்குள் வருமாறும் கேட்டு அவர்களை நகருக்குள் அழைத்து வர அனுப்பினான். 

அவர்கள் வரவில்லை என்றால் அவர்களை கொலை செய்துவிட சில முரடர்களை மறைமுகமாக அனுப்பினான். 

அவரும் இல்யாஸ் அலை அவர்களை சந்தித்து பஃலபக் நாட்டு நிலவரங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினார். நபி இல்யாஸ் அலை அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அல்லாஹ் முஸ்லிம் மந்திரியுடன் செல்லுமாறும் அவ்வாறு செல்லவில்லையென்றால் உங்களை கொலை செய்ய அரசன் ஆளனுப்பி உள்ளார் என்றும் வஹீ அறிவித்தான்.

பின்னர் நபி இல்யாஸ் அலை அவர்கள் தம்மை அழைக்க வந்த மந்திரியுடன் பஃலபக் நாட்டிற்குப் புறப்பட்டார்கள். அவர்களுக்கு முன்னதாகவே அவர்களைக் கொல்ல திட்டமிட்டிருந்த கூட்டம் நகருக்குள் சென்று அரசரிடம் நபி இல்யாஸ் அலை அவர்கள் வருகிறார்கள் என்று சொல்லியது.

நபி இல்யாஸ் அலை ஊருக்குள் நுழைந்த சமயம் அரசனின் மகன் இறந்துவிட்டான். இந்த களேபரத்தில் நபி இல்யாஸ் அலை அவர்களை அரசன் மறந்து போனான். 

மலைவாழ்வு வாழ்ந்த நபி இல்யாஸ் அலை நகருக்குள் ஓரிடத்தில் வாழலாம் என்று முடிவு செய்து ஒரு குடிலைத் தேர்ந்தெடுத்தனர். 

அது நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மத்தாவினுடையதாக இருந்தது.
நபி இல்யாஸ் அலை அவர்கள் அந்த வீட்டைவிட்டு சென்றுவிட்ட பின்னர் மத்தா அம்மையாருக்கு மனநிம்மதி அழிந்து போன தோடு மகனாக இருந்த நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறந்து போய்விட்டார்கள். இதனால் பெரும் கவலையில் ஆழ்ந்து விட்ட அந்த அம்மையார் நபி இல்யாஸ் அலை அவர்களை மலைப்பகுதிக்குள் தேடிக் கண்டுபிடித்து தமது வீட்டிற்கு வருமாறும் மன்றாடிக்கேட்டுக் கொண்டார்கள்.

இல்யாஸ் நபி அவர்கள் மாத்தா அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் வீட்ற்கு வருகைதந்து அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.

சிறிதுகாலம் மத்தா அம்மையாரின் வீட்டிலேயே வாழ்ந்து வந்த நபி இல்யாஸ் அலை அவர்கள் ஒரு சேவையிலும் ஈடுபடாது வீட்டில் அடைபட்டிருப்பதை வெறுத்து, மீண்டும் மலைப் பொதும்பு வாழ்வை மேற்கொண்டார்கள். 

பனீ இஸ்ரவேலர்களைத் திருத்த தாம் இவ்வளவு முயற்சி மேற்கொண்டும் அவர்கள் திருந்தாததால் மிகவும் மனவேதனையுடன் இறைவனிடம் அவர்கள் மீது தண்டனை இறக்க வேண்டினார்கள்.

அல்லாஹ் மூன்று வருடகாலம் அந்தப் பிரதேசத்தில் மழை இல்லாது செய்தான். இதனால் புற்பூண்டுகள் கருக ஆரம்பித்தன. 

பறவையினங்களும் விலங்கினங்களும் செத்தொழிய ஆரம்பித்தன. 

ஒரு சொட்டுத் தண்ணீருக்குக் கூட அந்த மக்கள் ஆளாய்ப் பறக்க ஆரம்பித்தனர்.

நபியவர்களுக்கு உணவு கொடுப்பதற்கு அல்லாஹ் சில பட்சிகளை ஏவியிருந்தான். அவைகள் அதற்கு உணவுகள் கொடுத்து வந்தன.

 பஃலபக் நகரம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அந்த நகருக்குள் சென்றார்கள் இல்யாஸ் நபியவர்கள். அவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பார்த்தார்கள். அவர்கள் கால்பட்டதும் அந்த வீடுகளில் பஞ்சம் அகன்று சுபிட்சம் பெறத் துவங்கியது.

ஒரு வீட்டில் நுழைந்து பார்க்கும்போது அங்கு ஒரு சிறுவன் நோய்வாய்ப்பட்டிருந்தான். அவர்களை குணப்படுத்த சில நாட்கள் அவர்கள் அந்தவீட்டிலேயே தங்க வேண்டியது ஏற்பட்டது. 

அந்தச் சிறுவன் குணமடைந்ததும் நபி இல்யாஸ் அவர்களுக்கு ஊழியனானார். அவர்கள்தான் ஹழ்ரத் எஸஉ அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களும், இலட்சக்கணக்கான ஜீவராசிகளும் இறந்து போயினர்.

 இந்த நிலையைக் கண்டு நபி இல்யாஸ் அலை அவர்கள் மிகவும் மனம் வருந்தினார்கள். அந்த மக்களை நோக்கி ‘விக்கிரக வணக்கத்தை விட்டொழித்து வல்ல அல்லாஹ்வை வணங்குங்கள். அவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள். அல்லாஹ் மன்னிப்பதில் நிகரற்றவன். கண்டிப்பாக மழையை வருஷிப்பான். அதனால் பஞ்சம் நீங்கும். உங்கள் வாழ்வு மலர்ந்து விடும்’ என்று உபதேசித்தார்கள்.

ஆனால் அந்த மக்கள் அவர்களின் உபதேசங்களுக்கு செவிமடுக்காது சிலைவணக்கத்திலேயே ஈடுபட்டு வந்தனர். வெயில் தாக்கம் இன்னும் அதிகமாயிற்று.

நபி இல்யாஸ் அலை அவர்கள் அந்த மக்களைப் பார்த்து, ‘இப்பவாவது புரிந்து கொண்டீர்களா? இந்த விக்கிரகங்கள் உங்களுக்கு உதவாது என்று.
அதற்கு அவர்கள் சொன்னார்கள் நீங்கள்; உங்கள் அல்லாஹ்விடம் சொல்லி முதலில் மழை பொழியச் செய்யுங்கள். உண்மையாகவே அப்படி மழை பொழிந்து விட்டால் நீங்களும் உங்களுடைய அல்லாஹ்வும் உண்மையாளர்கள் என்று நம்பி நாங்கள் எங்கள் தெய்வங்களை வணங்கி வருவதை விட்டு விடுகிறோம் என்றார்கள்.

பின்னர் நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மழை பொழியச் செய்யும்படி துஆ செய்தார்கள். அல்லாஹ் அவர்களது துஆவை உடனே ஏற்றுக் கொண்டு பலத்த மழையைப் பொழியச் செய்தான். 

வறண்ட பூமி செழிப்படைந்தது.
இவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்டபிறகும் அந்த மக்கள் மனங்கள் மட்டும் மாறுதல் அடையவில்லை. அவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிபடி நடந்து கொள்ளாது மீண்டும் தங்களது வழமைபோல் விக்கிரக ஆராதனை செய்ய ஆரம்பித்துவிட்டனர்;.

நபி இல்யாஸ் அலை அவர்கள் மனம் வெறுத்து போய் இந்த மக்கள் நேர்வழி பெறுவார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை. இனி இவர்களோடு வாழ நான் விரும்பவில்லை. என்னை உன்னிடமே அழைத்துக் கொள்’ என்று கண்ணீர் வீட்டு கேட்டார்கள்.

உடனே ஒளிப்பிழம்புடன் ஒரு புரவி வந்தது. அதில்ஏறி, தம் மேல் துணியை அல்யஸஃவின் தோள்களில் வீசித் தம் பிரதிநிதியாக நியமித்துச் சென்றார்கள்.

மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
“ஸலாமுன் அலா இல்யாஸீன்”  மீது ஸலாமுண்டாவதாக.இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)அடியார்களில் நின்றுமுள்ளவர்."
(அல்குர் ஆன்- 37 : 123-132)

நபி அல்யசஉ (அலை) அவர்கள் இல்யாஸ் (அலை) அவர்களின் வழித்தோன்றலாவர். இவரைப் பற்றி அதிகமான குறிப்புகள் ஏதும் இல்லை.
"இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்."
(அல்குர் ஆன்- 6 : 86)

"இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்."
(அல்குர் ஆன்- 38 : 48)

அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே இத்துடன் நபி இல்யாஸ் அலை அவர்கள் வரலாறு நிறைவுற்றது இங்கு படத்தில் காண்பது நபி இல்யாஸ் அலை அவர்கள் வாழ்ந்த மலை என்று வரலாறுகள் கூறுகின்றது அல்லாஹ்வே அறிவான்  .இன்ஷாஅல்லாஹ் அடுத்து வரும் பதிவுகளில்   ஏனைய நபிமார்கள் வரலாறு பற்றி காண்போம்.
யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக ஆமீன்

வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஜின்கள் மனிதனுள் புகுந்தால் ஓதி பார்க்கும் முறை,

இஸ்லாத்தில் ஜின்கள் மனிதனுள் புகுந்தால் ஓதி பார்க்கும் முறை பற்றி அறிந்து கொள்ளுவோம்

• அல்லாஹ்வின் அற்புத படைப்புகளில் ஜின்களும் ஒன்றாகும் இதை பற்றி அல்குர்ஆனிலும் ஸஹீஹான பல ஹதீஸ்களிலும் நம்மால் காண முடியும்!

• ஜின்கள் மனிதர்களை விட மிகவும் ஆற்றல் மிக்க ஒரு படைப்பு ஆகும் இவர்கள் நம்முடைய கண்களுக்கு புலப்பட மாட்டார்கள் ஆனால் அவர்களின் கண்களுக்கு நாம் தெரிவோம்!

• ஜின்கள் மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சில காரணங்களால் தீங்கு ஏற்படுத்தும் அது உள்ளம் உடல் சார்ந்ததாக இருக்கலாம்! இதற்கு பல ஸஹீஹான ஹதீஸ்கள் உள்ளன!

• நம்மில் பலருக்கு இதில் இருந்து குணம் ஆக வழி தெரியாததால் பல மக்கள் சூனியகாரர்கள் காஃபிர்கள் ஜோதிடம் பார்க்க கூடியவர்கள் போன்றவர்களிடம் இதற்கு தீர்வு தேடி செல்லுகிறார்கள்! அவர்களும் சில கண்கட்டி வித்தைகளை காட்டி பல ஆயிரம் ரூபாய் வாங்கி கொள்ளுகிறார்கள்! இது ஷிர்க் ஆனா செயல் ஆகும்!

• நாம் இவர்களிடம் இவ்வாறு செய்ய கூடாது என்று எடுத்து கூறினால் அவர்கள் கேள்வி இதற்க்கு மார்க்கம் கூறும் தீர்வு தான் என்ன? அதற்க்கு வழி தெரியாமல் தான் நாங்கள் இவ்வாறு செல்லுகிறோம் என்று கூறுகிறார்கள்! 

• இது தற்பொழுது மட்டும் அல்ல ஆரம்ப காலத்திலும் இந்த பிரச்சனை இருந்தது இதனால் இமாம் வஹீது இப்னு அப்துல் ஸலாம் பாலீ அவர்கள் ஜின்கள் தீண்டுதல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் எப்படி அதை அணுக வேண்டும் என்று நூலை அல்குர்ஆன் ஸஹீஹான ஹதீஸ்கள் அடிப்படையில் மிக தெளிவாக ஒரு கிதாப் எழுதி உள்ளார்!

• அந்த நூல் பெயர் ஜின்கள் மற்றும் ஷைத்தானின் தீண்டுதலை விட்டு பாதுகாப்பு பெற வழிகள் என்பது ஆகும்! நாங்கள் இந்த நூலை அடிப்படையாக வைத்தே இந்த பதிவை நாங்கள் எழுதி உள்ளோம்! 

• இந்த நூலை இமாம் வஹீது இப்னு அப்துல் ஸலாம் இப்னு பாலி (ரஹ்) என்பவர்கள் எழுதி உள்ளார்கள்!

• இமாம் அவர்கள் எகிப்து நாட்டை சார்ந்த மார்க்க அறிஞர் ஆவார்கள்! ஹிஜ்ரி 1386 (கிபி : 1963) பிறந்தார்கள்! மார்க்க கல்வியில் சிறந்து விளங்கிய அறிஞர்களில் இவரும் ஒருவர் ஆவார்! இது மட்டும் அல்ல குறிப்பாக சூனியம், ஜின், ஷைத்தான் தீண்டுதல் போன்றவற்றை மார்க்கம் கூறிய முறையில் ஓதி பார்ப்பதிலும் சிறந்தது விளங்கினார்!

💟 ஜின்கள் :

• ஜின்கள் மறைவான ஒரு படைப்பு ஆகும் இதை முஹ்மின் பார்க்க வில்லை என்றாலும் அதன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்! இதை நம்ப மறுப்பது ஒருவனை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடும்!

(அல்குர்ஆன் : 2 : 1 & 3)

• ஜின்கள் பற்றி அல்லாஹ் பல இடங்களில் அல்குர்ஆனில் கூறி உள்ளான்!

(அல்குர்ஆன் : 46 : 29 | 6 : 130 | 55 : 33 | 72 : 1 & 6)

• ஜின்கள் பற்றி ஸஹீஹான ஹதீஸ்களிலும் விரிவாக இடம் பெற்று உள்ளது :

(நூல் : ஸஹீஹ் புகாரி : 609 | ஸஹீஹ் முஸ்லீம் : 766 & 767)

💟 ஜின்கள் பற்றிய அறிமுகம் :

1) அல்லாஹ் ஜின்களை நெருப்பினால் படைத்தான்! ஷைத்தானும் ஜின் இனத்தை சேர்ந்தவன் ஆவான்!

(அல்குர்ஆன் : 55 : 15 | 38 : 76)

2) ஜின்களில் மூன்று வகை உண்டு அவை : 1) இறக்கை கொண்டு காற்றில் பறக்கும் ஜின்கள்! 2) பாம்பு அல்லது தேள்கள், கருப்பு நிற நாய்கள் வடிவில் உள்ள ஜின்கள் ஆகும்! 3) பயணம் செய்ய கூடிய - ஓரிடத்தில் தங்கி வாழும் ஜின்கள்!

(நூல் : ஹாகீம் : 3702 | முஸ்லீம் : 882 | ஸஹீஹ் ஜாமிஅ : 3114 - தரம் : ஸஹீஹ் : அல்பானி (ரஹ்))

3) ஜின்கள் பொதுவாக பாலைவனம், மனித நடமாற்றம் இல்லாத இடங்கள் பொந்துகள் போன்ற இடங்களில் தேர்ந்தெடுத்து வாழ்கின்றன! இன்னும் சில ஜின்கள் குப்பைக்கூளம் அசுத்தமான இடங்களிலும் இன்னும் சில ஜின்கள் மனிதர்கள் வசிக்கும் வீடுகளிலும் தேர்ந்தெடுத்து வாழ்கின்றன!

(நூல் : ஸஹீஹா : 1070 : அபூதாவூத் : 29 | முஸ்லீம் : 4502)

4) ஜின்களிலும் மனிதர்களை போன்று ஆண், பெண் உள்ளனர்!

(அல்குர்ஆன் : 72 : 6)

5) ஜின்களும் மனிதனை போன்று உண்ணவும், பருகவும் செய்கின்றன! ஜின்களின் உணவுகள் எலும்புகள், கெட்டியான சாணம் போன்றவைகள் ஆகும்!

• ஜின்கள் மனிதர்களை போன்று வலது கையால் சாப்பிடாது மாறாக இடது கையால் உண்ணவும் பருகவும் செய்யும்!

(நூல் : புகாரி : 762 | இப்னு மாஜா : 3266)

6) ஜின் என்ற பெயருக்கு அர்த்தம் மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது ஒன்று என்பதாகும்! நபி மார்களை தவிர மனிதர்களால் ஜின்களை உண்மையான உருவத்தில் பார்க்க முடியாது!

• ஆனால் ஜின்கள் உருவம் மாறி வந்தால் அப்போது நம்மால் அதை காண முடியும் ஆனால் இவர் அல்லது இந்த விலங்கு ஜின் தான் என்று நம்மால் அறிந்து கொள்ள முடியாது!

(நூல் : புகாரி : 2311)

7) ஜின்களுக்கும் நம்மை போன்று கடமை உண்டு அவர்களையும் அல்லாஹ் தன்னை வணங்கவே படைத்து உள்ளான்! அவர்களுக்கும் மார்க்கத்தை எடுத்து சொல்ல நபி மார்களை அல்லாஹ் அனுப்பி உள்ளான்! ஜின்களுக்கும் மரணம் உண்டு! மறுமை நாளில் கேள்வி கணக்கு உண்டு சொர்க்கம் நரகம் உண்டு!

(அல்குர்ஆன் : 6 : 130 | 51 : 56 | புகாரி : 7383)

8) மனிதர்கள் எப்படி நல்லவர்கள் கெட்டவர்கள்! பல மதங்களை பின் பற்றி கொண்டு பல கொள்கைகளாக உள்ளார்களோ அதே போன்று ஜின்களிலும் நல்லது கெட்டது மார்க்கத்தை முழுமையாக பின் பற்ற கூடியவை ஷிர்க்கில் ஈடுப்பட கூடியவை என பல பிரிவுகள் மத கொள்கைகள் உள்ளன!

(அல்குர்ஆன் : 72 : 11)

9) மனிதர்கள் மூலம் எவ்வாறு கண்ணேறு ஏற்படுகிறதோ அதே போன்று ஜின்கள் மூலமாகவும் கண்ணேறு ஏற்படும்! இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஜின்களின் கண்ணேறில் இருந்தும் பாதுகாப்பு தேடி வந்தார்கள்!

(நூல் : திர்மிதி : 2058 | ஸஹீஹ் ஜாமிஅ : 4902)

10) ஜின்கள் - ஷைத்தான்கள் எல்லாம் சூரியன் மறையும் மஹ்ரிப் நேரத்தில் தான் அதிகம் பரவுகின்றன! இதனால் தான் இந்த நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் வீட்டின் கதவுகளை மூடி வைக்க சொன்னார்கள் மேலும் குழந்தைகளையும் வெளியே விட வேண்டாம் என்றும் கூறினார்கள்!

(நூல் : புகாரி : 3304)

11) மனிதர்களால் ஜின்களை பார்க்க முடியாது என்றாலும் ஜின்களை நாய்கள் மற்றும் கழுதைகள் பார்க்கின்றன இதனால் தான் பல நேரங்களில் குறிப்பாக இரவு நேரங்களில் அவை கத்துகின்றன!

(நூல் : புகாரி : 3303 | அபூதாவூத் : 4439)

12) அல்லாஹ் ஏதேனும் செய்ய நாடினால் அதை மலக்கு மார்களிடம் கூறுவான் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அதை பேசி கடைசி வானம் வரை அந்த செய்தி செல்லும்! நபி (ஸல்) அவர்கள் நபியாக அல்லாஹ் தேர்வு செய்வதற்கு முன்பு வரை ஜின்கள் மூன்றாம் வானம் வரை சென்று மலக்கு மார்கள் பேசுவதை ஓட்டுக்கேட்டு வந்தன! நபி (ஸல்) அவர்கள் நபியாக தேர்வு செய்த பின்பு இருந்து அல்லாஹ் இவ்வாறு நடப்பதை தடுத்து விட்டான்!

• இந்த செய்திகளை ஜின்கள் ரகசியமாக ஓட்டு கேட்டு சூனியகாரர்கள் ஜோதிடம் பார்க்க கூடியவர்களிடம் கூறும் அவர்கள் அது கூறிய செய்தி உடன் பல பொய்களை கலந்து மக்களிடம் கூறுவார்கள் இதனால் தான் சில நேரங்களில் அவர்கள் கூறுவது உண்மையாக இருக்கும்!

• ஆனால் முதலில் நாம் இது போன்ற நபர்கள் கூறுவதை உண்மை என நம்பிக்கை கொள்ள கூடாது ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் இது போன்ற நபர்கள் கூறுவதை உண்மை என்று நம்பிக்கை கொண்டால் அவருடைய 40 நாட்கள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறி உள்ளார்கள்!

(நூல் : புகாரி : 3210 | முஸ்லீம் : 4487 & 4488)

13) ஜின்கள் உதவி பெற சிலர் உதாரணமாக பால் கிதாப் பார்க்க கூடியவர்கள் ஜோதிடம் பார்க்க கூடியவர்கள் அல்லாஹ்விற்கு ஷிர்க் வைப்பார்கள் இதன் மூலம் ஜின்களின் நெருக்கத்தை பெறுகிறார்கள்!

• இன்றும் பலர் ஜின்களிடம் இருந்து பாதுகாப்பு பெற என்று தகடு தாயத்து அணிந்து கொள்ளுவார்கள் ஆனால் உண்மையில் அதில் உள்ளவைகள் அல்குர்ஆன் வசனங்கள் மட்டும் அல்ல அல்லாஹ்வை மறுத்து ஜின்களிடம் உதவி தேடும் வாசகமும் அதில் அடங்கி இருக்கும்! இதை பற்றி அறியாத பலர் இதை வாங்கி அணிந்து கொள்ளுகிறார்கள்!

• ஜின்களிடம் உதவி பெற அவற்றிற்கு அறுத்து பலியிடுவார்கள்! அல்லாஹ்வை நிராகரித்து ஜின்களை அல்லாஹ்வின் அளவிற்கு புகழ்வார்கள் இதனால் தான் ஜின்கள் இது போன்ற நபர்களுக்கு உதவி செய்ய முன் வருகின்றன! ஆனால் இது குஃப்ர் (இறை நிரகாரிப்பு) ஆனா செயல் ஆகும்!

• இது மட்டும் அல்லாமல் ஆரம்ப காலத்தில் ஜின்கள் மனிதர்களை பார்த்து பயப்பட கூடியதாக இருந்தன! ஆனால் எப்போது மனிதர்கள் ஜின்களிடம் உதவி தேட ஆரம்பம் செய்தார்களோ அப்போது தான் ஜின்கள் மனிதர்கள் மீது ஆதிக்கம் செய்ய ஆரம்பம் செய்தன!

(அல்குர்ஆன் : 72 : 6 | தப்ஸீர் இப்னு கசிர்  | நூல் : முஸ்லீம் : 1978)

14) மனிதர்களை விட ஜின்கள் அதிகம் ஆற்றல் உள்ளதாக இருந்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் பயப்பட கூடாது எப்போதும் நாம் பயப்பட தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!

(அல்குர்ஆன் : 3 : 175)

15) ஜின்களால் மனிதர்கள் செய்ய முடியாத செயல்களை எல்லாம் செய்வார்கள்! ஜின்களால் காற்றை விட வேகமாக செல்ல முடியும்! வானத்தில் பறக்க முடியும்! ஆழ் கடலில் மூழ்கி முத்துகளை கொண்டு வரும் ஆற்றலும் அவைகளுக்கு உண்டு!

(அல்குர்ஆன் : 27 : 39 | 72 : 9 | 38 : 37)

16) ஜின்களுக்கு அதிகம் ஆற்றல் இருந்தாலும் அவைகளால் மறைவான எதையும் அறிந்து கொள்ள முடியாது! அல்லாஹ் மட்டுமே மறைவானதை அறிந்தவன் ஆவான்!

(அல்குர்ஆன் : 72 : 10 | 34 : 14)

💟 ஜின்கள் மனித உடலுக்குல் புகுவதின்  உண்மை நிலை :

• ஜின்கள் ஒரு மனிதனுள் புகுந்து விட்டால் முதலில் அவனின் மூளையை ஆக்கிரமிப்பு செய்கின்றன! இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பைத்தியம் பிடித்தது போன்று அல்லது சாதாரண மனிதர்கள் போன்று இல்லாமல் மன அளவில் சிந்தனை அளவில் பாதிக்கப்பட்டு போல் நடந்து கொள்ளுவார்கள்!

(அல்குர்ஆன் : 2 : 275 | விளக்கம் : இமாம் குர்துபீ (ரஹ்))

• ஜின்கள் இவ்வாறு சிந்தனை மூலம் பாதிப்பு ஏற்படுத்துவதால் பாதிக்கப்பட்ட நபர் மன நோயாளி போன்று நடந்து கொள்ளுவார்கள்! வீட்டார் அருகில் இருந்தும் ஏதேனும் அருகில் பார்த்தது போன்று பயம் கொள்ளுவார்கள் சாதாரண மனிதர்கள் போல் இல்லாமல் பிரம்மை பிடித்தது போல் இருப்பார்கள்!

• நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே சிலர் ஜின்களின் தீண்டுதலால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள் அதை அல்லாஹ்வின் உதவினால் குணம் படுத்தியும் உள்ளார்கள்! உதாரணத்திற்கு சில ஹதீஸ்களை இங்கே குறிப்பிடுகிறோம்!

1) நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது ஒரு பெண்மணி நபியவர்களை கண்டு தன்னுடைய மகனுக்கு அடிக்கடி நோய் ஏற்படுகிறது என்று கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் அந்த குழந்தை வாங்கி குழந்தை வாயை திறந்து ‘ அல்லாஹ்வின் பெயரால் நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன்! அல்லாஹ்வின் எதிரியே நீ வெளியேறி விடு ’ என்று மூன்று முறை கூறினார்கள்! இதன் பின்பு அந்த குழந்தைக்கு உடல் குணம் ஆகி விட்டது!

(நூல் : முஸன்னஃப் இப்னு அபீஷைபா : 31753)

2) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தனது மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளையுடன் வந்தால் தனது பிள்ளை நிலையை நபி (ஸல்) அவர்களிடம் அந்த பெண்மணி கூறினால் நபி (ஸல்) அவர்கள் அந்த பிள்ளையிடம் அல்லாஹ்வின் எதிரியே வெளியேறி விடு நான் அல்லாஹ்வின் தூதராவேன்!  என்று கூறியது அந்த பிள்ளை குணம் ஆகி விட்டது!

(நூல் : அஹ்மத் : 17584 | ஸஹீஹா : 485)

3) நபி (ஸல்) அவர்கள் கெட்ட மரணத்தை விட்டு பாதுகாப்பு தேடும் பொழுது ஷைத்தானின் தீண்டுதல் ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு தேடி உள்ளார்கள்!

اَلَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ

‘ அல்லாஹும்ம இன்னி அஊது பிக்க அய் யத்தகப்பதனியஷ் ஷைத்தானு இன்தல் மவ்த் ’

பொருள் : இறைவா! மரணத்தின் போது ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும்  நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!

(நூல் : நஸயீ : 5532 | அபூதாவுத் : 1552)

4) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்!

(நூல் : முஸ்லிம் : 4386)

💟 ஜின்கள் மனிதனுள் புகுவதற்கு காரணங்கள் :

• மனிதன் ஜின்களால் தீண்டப்பட மிக முக்கிய காரணம் சில நபர்கள் இஸ்லாம் கூறிய முறையில் முதலில் வாழ மாட்டார்கள் பெயர் அளவில் முஸ்லீம் ஆக இருப்பார்கள்! இஸ்லாம் தடுத்த ஹராமான மானக்கேடான செயல்களில் அதிகம் மூழ்கி இருப்பார்கள்!

• வணங்க வழிபாடுகளை விட்டு இவர்கள் தூரம் போகும் பொழுது இவர்களுடைய ஈமான் மிகவும் குறைந்து விடும் இதனால் சிறிய நிகழ்வுகளுக்கு எல்லாம் அதிகம் பயப்படுவார்கள்!

உதாரணமாக : வீட்டில் பால் தீய்ந்து விட்டால் ஏதேனும் நடந்து விடும் வெளியே செல்லும் பொழுது கால் தடுக்கினால் ஏதேனும் ஆகி விடும் இப்படி உள்ளம் மற்றும் செயல் அளவில் அறியாமையினாலும் மூடநம்பிக்கையினாலும் மூழ்கி அதில் செயல் படுத்தி கொண்டும் இருப்பார்கள்! இப்படி பட்ட நபர்கள் எளிதாக ஜின்களால் பாதிப்பு அடைகிறார்கள்!

• இது அல்லாமல் பொதுவாக மூன்று காரணங்களால் ஜின்கள் மனிதர்களை தீண்டுகின்றன அவைகள் ;

1) ஜின்கள் மனிதர்கள் மீது விருப்பம் கொள்ளுதல்

2) மனிதன் அறியாமல் ஜின்னிற்க்கு ஏதேனும் தீங்கு செய்து இருந்தால் அல்லது ஜின் வசிக்கும் இடத்தை ஏதேனும் செய்து இருந்தால்!

3) எந்த காரணமும் இல்லாமல் துன்பம் கொடுக்க மனிதனுள் புகுந்து கொள்ளுதல்!

• குறிப்பாக மனிதன் இருக்கும் மன நிலை பொறுத்து இவை மனிதனுள் புகுகின்றன ;

1) மனிதன் அதிகம் கோவம் கொள்ளும் போது

2) கடுமையாக பயப்படும் பொழுது

3) காம இச்சைகளில் அதிகம் மூழ்கி இருக்கும் பொழுது

💟 ஜின் ஒரு மனிதனுள் புகுந்துள்ளது என்பதற்க்கு அடையாளங்கள் :

• முதலில் நமக்கு உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவம் பார்க்க வேண்டும்! ஏதேனும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்ட உடன் ஜின்னால் ஏதேனும் தீங்கு ஏற்பட்டு விட்டது என்று இருந்து விட கூடாது!

❤️ கனவின் மூலம் வெளிப்படும் அடையாளம் :

• ஜின்கள் மனிதனை தீண்டி விட்டால் அல்லது உடலில் புகுந்து விட்டால் அதன் வெளிப்பாடாக கனவில் தெரியும் இதை வைத்து நாம் இவர் ஜின்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்!

1) தூக்கமின்மை : ஜின்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக உறங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்! நீண்ட நேரம் படுக்கையில் புரண்ட பின்பே உறக்கம் ஏற்படும்!

2) பதற்றம் : தூக்கத்தில் அடிக்கடி பதறி விழிப்பு ஏற்படும்!

3) உறங்கும் பொழுது தன்னை யாரோ அழுத்துவது போல் உணர்வு ஏற்படும் ஆனால் அந்த நேரத்தில் உடலை அசைக்க முடியாது யாரையும் உதவிக்கு அழைக்கவும் முடியாது!

4) அடிக்கடி பயமுறுத்தும் கெட்ட கனவுகள் ஏற்படும்!

5) தூக்கத்தில் திடீர் என அழுவது சிரிப்பு அல்லது கத்துவது!

6) நம்மை அறியாமல் உறக்கத்தில் எழுந்து நடமாடுதல்!

7) கனவில் பாலைவனம் அல்லது மனித நடமாற்றம் இல்லாத இடங்களை அல்லது பயத்தை ஏற்படுத்தும் இடங்களில் காணுதல்!

8) உடல் வலி : சாதாரணமாக உள்ள ஒருவருக்கு ஜின் உடைய தாக்கம் அல்லது உடலினுள் புகும் பொழுது உடலில் திடீர் என்று வலி ஏற்படும் மருத்துவம் பார்த்தாலும் உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் ஆனால் உடலில் ஏதேனும் ஒரு பாகம் மட்டும் வலி இருந்து கொண்டே இருக்கும்!

❤️ உடல் சார்ந்த பாதிப்புகள் :

• ஜின்கள் மனிதனை தீண்டி விட்டால் அல்லது உடலில் புகுந்து விட்டால் அதன் வெளிப்பாடாக உடல் அளவிலும் தெரியும் இதை வைத்து நாம் இவர் ஜின்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்!

1) எப்போதும் தலைவலி இருக்கும் அல்லது உடலில் குறிப்பிட்ட பகுதியில் வலி இருந்து கொண்டே இருக்கும் ( நாம் முதலில் மருத்துவம் பார்க்க வேண்டும் - உடல் வலி ஏற்பட்ட உடன் ஜின்னின் தாக்கம் என்று இருந்து விட கூடாது)

2) சிந்தனையினால் அதிகம் குழப்பம் ஏற்படும் இதனால் தொழுகை திக்ர் இன்னும் பிற அமல்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும்!

3) உடல் நிலை ஏதேனும் ஒரு விதத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் (மருத்துவம் பார்த்தும் உடல் நிலை சரி ஆகாது அல்லது உடலை பரிசோதனை செய்தாலும் உடல் எந்த பிரச்சனையும் இருக்காது)

💟 ஜின்னால் தீண்டபட்டவர்களை எவ்வாறு குணம் படுத்துவது :

• ஜின்களால் பாதிக்கப்பட்டவர்களை அனைவரும் குணம் ஆக்கி விட முடியாது! அவருக்கு என்று சில தனிப்பட்ட குணங்கள் இருக்க வேண்டும் அவை ;

1) அவரின் ஈமான் எந்த வித குறையும் இல்லாமல் உறுதியான அகீதாவில் இருக்க வேண்டும்!

2) முஸ்லீம் ஆக பெயர் அளவில் மட்டும் அல்லாமல் இஸ்லாம் கூறியது போன்று சொல்லிலும் செயலிலும் இருக்க வேண்டும்!

3) அல்லாஹ்வினால் குணப்படுத்த முடியும் என்று உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்!

4) ஜின்களால் ஏற்படும் தாக்கம் அதை எவ்வாறு அணுகுவது என்பதை பற்றி அனுபவம் உள்ள நபராக இருக்க வேண்டும்!

5) தினமும் நேரம் தவறாமல் தொழ கூடியவராக அன்றாட ஓதும் திக்ர்கள் காலை மாலை திக்ர்கள் என அனைத்தும் முறையாக பேணும் நபராக இருக்க வேண்டும்!

6) அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையும் மன உறுதியும் இருக்க வேண்டும்!

💟 எவ்வாறு ஜின்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது :

❤️ ஓதி பார்க்கும் முன்பு பேன வேண்டியவைகள் :

1) முதலில் நாம் ஓதி பார்க்கும் முன் தொழுது அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும்!

2) ஓதி பார்க்கும் இடத்தில் இருந்து உருவப்படம், நாய்கள் இசை கருவிகள் இருந்தால் அதை அகற்ற வேண்டும்!

3) ஷிர்க் வைக்க கூடிய நபர்கள் அந்த இடத்தில் இருக்க கூடாது!

4) ஓதி பார்க்கும் முன் வீட்டாருக்கு அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்!

5) பாதிக்கப்பட்ட நபருக்கு எவ்வாறு உடலில் நிலை (தொடர்ச்சியான உடல் வலி - கெட்ட கனவுகள் ஏற்படுதல்) உள்ளதா? என்று கேட்க வேண்டும்! உறுதியான பின்பே ஓதி பார்க்க வேண்டும்!

6) பாதிக்கப்பட்ட நபர் முதலில் ஒளு செய்து கொள்ள வேண்டும் ஓதி பார்க்கும் நபரும் ஒளு செய்து கொள்ள வேண்டும்!

7) பாதிக்கப்பட்ட நபர் பெண்ணாக இருந்தால் ஆடை விலகாத வாறு நன்கு கட்டி விட வேண்டும்!

8) மஹ்ரமான ஆண் இல்லாமல் பெண்ணிற்கு ஓதி பார்க்க கூடாது!

❤️ ஓதி பார்க்கும் முறை :

• ஓதி பார்க்கும் நபர் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை உடன் இருக்க வேண்டும் சில நேரங்களில் ஓதி பார்க்க கூடிய நபரை கூட ஏதேனும் ஒரு வகையில் ஜின்னால் தீண்டப்படலாம்!

• ஓதி பார்க்கும் நபர் பாதிக்கப்பட்ட நபர் ஆணாக இருந்தால் அவரின் தலையில் கை வைத்து அல்லது பெண்ணாக இருந்தால் முன்னால் அமர்ந்து பின்வரும் வசனங்களை ஓத வேண்டும் (பதிவின் விரிவாக்கம் கருதி அல்குர்ஆன் வசனம் எண் மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்) :

1) (அல்குர்ஆன் : 1 : 1 - 7)

2) (அல்குர்ஆன் : 2 : 1 - 5)

3) (அல்குர்ஆன் : 2 : 163 - 164)

4) (அல்குர்ஆன் : 2 : 255 - 266)

5) (அல்குர்ஆன் : 2 : 285 - 286)

6) (அல்குர்ஆன் : 3 : 18 - 19)

7) (அல்குர்ஆன் : 7 : 54 - 56)

8) (அல்குர்ஆன் : 23 : 115 - 118)

9) (அல்குர்ஆன் : 37 : 1 - 10)

10) (அல்குர்ஆன் : 46 : 29 - 32)

11) (அல்குர்ஆன் : 55 : 33 - 36)

12) (அல்குர்ஆன் : 59 : 21 - 24)

13) (அல்குர்ஆன் : 72 : 1 - 9)

14) (அல்குர்ஆன் : 112 : 1 - 4)

15) (அல்குர்ஆன் : 113 : 1 - 5)

• நாம் மேலே உள்ள வசனங்களை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓதி வந்தால் நிச்சயமாக மனிதனுள் இருக்கும் ஜின் பாதிப்பு ஏற்படும்! அது ஒன்று ஓடி விடும் அல்லது மிகவும் பலகீனமாக ஆகி விடும்!

• அல்லது கோவத்தில் ஓதி விட கூடிய நபரை ஏதேனும் ஒரு வகையில் பயத்தை ஏற்படுத்தும் அல்லது மிரட்டும் ஆனால் நாம் உறுதியாக இதை பொறுப்படுத்தாமல் ஓத வேண்டும்!

• சில ஜின்கள் ஓதி பார்க்கும் பொழுது மட்டும் வெளியேறி விடுவது அல்லது நம்முடன் பேச முற்ப்படும்! அப்பொழுது அதை நாம் வெளியேறும் படி கூறவேண்டும் சில ஜின்கள் வெளியேறாமல் உறுதியாக இருக்கும் அப்போது நாம் மீண்டும் மீண்டும் அல்குர்ஆனை மேலே உள்ள வசனங்களை ஓத வேண்டும்!

• ஜின் வெளியேறி விட்டால் பாதிக்கப்பட்ட நபர் சாதாரணமான நிலைக்கு வந்து விடுவார்! இதன் பின்பு நாம் முதலில் அல்லாஹ்விற்கு தொழுது நன்றி செலுத்த வேண்டும்!

• பாதிக்கப்பட்ட நபர் வீட்டில் வழமையாக அல்குர்ஆன் ஓதுவது வீட்டில் பெண்கள் தொழுவது ஆண்கள் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகை வீட்டில் தொழுவது போன்ற காரியங்களில் ஈடுப்பட வேண்டும்!

❤️ ஓதி பார்த்த பின்பு :

• நாம் ஓதி பார்த்தாலும் ஜின் ஒன்று அப்போது மட்டும் வெளியேறி விடும் அல்லது அமைதியாக ஆகி விடும்! இதனால் அந்த நபர் சில நாட்கள் பின்பு மீண்டும் பாதிக்கப்படலாம்! இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் சில ஒழுக்கங்களை பேனி வரவேண்டும் வழமையாக :

1) தினமும் ஐந்து நேர தொழுகையை நேரம் தவறாமல் தொழ வேண்டும்!

2) மார்க்கம் தடுத்த ஹராமான செயல்களை விட்டு விட வேண்டும்!

3) உறங்கும் முன்பு இஸ்லாம் கூறிய முறையில் ஒளு செய்து விட்டு திக்ர் துஆ அல்குர்ஆன் வசனம் எல்லாம் ஓதி கொண்டு உறங்க வேண்டும்!

4) மூன்று நாட்கள் ஒரு முறை வீட்டில் அல் பகரா ஓத வேண்டும்!

5) தினமும் அன்றாடம் ஓதும் திக்ர் துஆக்கள் காலை மாலை திக்ர்கள் மற்றும் அல்குர்ஆன் தினமும் ஓதி வர வேண்டும்!

6) ஒவ்வொரு நாளும் பஜ்ர் தொழுகைக்கு பின்பு 100 முறை ‘ லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் ’ என்ற திக்ரை ஓத வேண்டும்!

7) ஒவ்வொரு செயலின் போதும் பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பம் செய்யவேண்டும்!

8) பாதிக்கப்பட்ட நபர் சில நாட்களுக்கு தனியாக உறங்க கூடாது!

• மேலே உள்ளவற்றை எல்லாம் நாம் சில மாதங்கள் தொடர்ச்சியாக செய்து வரவேண்டும்! இவ்வாறு செய்த பின்பு மீண்டும் ஒரு முறை நாம் ஓதி பார்க்க வேண்டும் இவ்வாறு ஓதும் போது அந்த நபருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் ஜின் அவரை விட்டு முழுமையாக நீங்கி விட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்!

• ஜின் சென்று விட்டது என்று நாம் அமல்களை விட்டு விட கூடாது அதை தொடர்ந்து செய்து வரவேண்டும்!

அல்லாஹ் போதுமானவன்.♥️

பிரபல்யமான பதிவுகள்