நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், ஜூன் 14, 2021

உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் நல வாரியம்,

*உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் நல வாரியம்*


உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
உலமா ஓய்வூதிய (தமிழ்நாடு) திட்டம் , 1981
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு “உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்” துவங்கப்பட்டது.

இந்த வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யார்?

மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் வக்பு அமைச்சர் அவர்கள் இதன் தலைவர் ஆவார்.
10 அரசு அலுவல் சார் உறுப்பினர்களும் மற்றும் 

15 அரசு அலுவல் சாரா உறுப்பினர்களும் இவ்வாரியத்தில் உள்ளனர்.

இவ்வாரியத்தில் உறுப்பினராவதற்கான தகுதிகள் என்ன?

*18 வயது (பூர்த்தி செய்த) முதல் 60 வயதிற்கு உட்பட்ட*

*பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் பேஷ் இமாம்கள், மோதினார்கள், பிலால்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் மற்றும் பிற பணியாளர்கள்.*

*தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள், மற்றும் அனாதை இல்லங்களில் பணி செய்யும் முஜாவர் மற்றும் பிற பணியாளர்கள். இவ்வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.*

உறுப்பினராவதற்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து பெற்று பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்ட ஆவணங்களை இணைத்து அவரிடமே சமர்ப்பிக்க வேண்டும்.

*உறுப்பினர் படிவத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்?*

1) மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

2) பணியாற்றும் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பணிச்சான்றிதழ்

3) வயதுச் சான்றிதழ்
 (பிற ஆவணங்கள் இல்லையெனில் மருத்துவரிடமிருந்து வயதுச் சான்றிதழை பெறலாம்)


*உறுப்பினர் அடையாள அட்டை என்றால் என்ன?*

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (பி.ப.) மற்றும் சிறுபான்மை நல அலுவலர் பெறப்பட்ட விண்ணப்பத்தினை வக்பு  கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைப்பார். 
அவர் விசாரணை, மேற்கொண்டு விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இருப்பின் இ பி.ப. மற்றும் சிறுபான்மை நல அலுவலருக்கு பரிந்துரை செய்வார். பி.ப. மற்றும் சிறுபான்மை நல அலுவலர் கூர்ந்தாய்வு செய்து விண்ணப்பதாரரை உறுப்பினராகப் பதிவு செய்து அதற்கான அடையாள அட்டையை வழங்குவார்.

*உறுப்பினர் அடையாள அட்டை தவறினால் / தொலைந்தால் திரும்பப் பெற முடியுமா?*

முடியும். மாவட்ட பி.ப. மற்றும் சிறுபான்மை நல அலுவலரிடம் ரூ. 20 கட்டணம் செலுத்தி நகல் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

*உறுப்பினர்களுக்கான சலுகைகள் யாவை?*

1) பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் கற்கும் வகுப்பிற்குத் தகுந்தவாறு ரூ 1000 முதல் ரூ  6000 வரை ஆண்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது.

2) மகள் / மகன் (படித்திருக்காவிடினும்) திருமணச் செலவிற்கு திருமண உதவித் தொகையாக ரூ. 2000 வழங்கப்படுகின்றது.

3) பெண் உறுப்பினர்களுக்கு மகப்பேறு கால உதவித் தொகை ரூ. 6000 மற்றும் கருக்கலைப்பு / கருச்சிதைவு ஏற்படின் உதவித் தொகை ரூ. 3000 வழங்கப்படுகின்றது.

4) கண் கண்ணாடி வாங்கினால் அதற்கான செலவை ஈடு கட்டுவதற்காக ரூ. 500 ஒருமுறை மட்டும் வழங்கப்படும். இதற்கு கண் பரிசோதனை செய்த மருத்துவ சீட்டையும், கண்ணாடி வாங்கியதற்கான இரசீதையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

5) குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி செய்து 60 வயது பூர்த்தி அடைந்தோருக்கு மாதம் ரூ. 800 ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

6) ஈமச்சடங்கிற்காக, உறுப்பினர் வாரிசாக நியமித்தவருக்கு இறுதிச்சடங்கு செலவிற்கு ரூ. 2000 வழங்கப்படுகின்றது.


7) உறுப்பினர் இயற்கை மரணம் எய்தால் அவர் வாரிசாக நியமித்தவரிடம் ரூ. 15000 நிவாரணத் தொகை வழங்கப்படுகின்றது.

8) உறுப்பினர் விபத்தால் இறப்பின் ரூ.1 இலட்சம் மற்றும் உடல் உறுப்புகளை இழப்பின் (இழப்பிற்குத் தகுந்தவாறு) ரூ. 25000 முதல் ரூ.1 இலட்சம் வரை நிவாரணத் தொகை வழங்கப்படுகின்றது.


*நலத்திட்ட உதவிகளைப் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?*

உறுப்பினர், நலத்திட்ட உதவிகளைப் பெற உரிய படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் அவர் பணிபுரியும் அமைப்பின் நிர்வாகியிடம் “உண்மைச் சான்றிதழ்” கையொப்பம் பெற்று மாவட்ட பி.ப. மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

*உறுப்பினர் பதிவை எவ்வாறு புதுப்பிப்பது?*

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் அவரது பதிவை புதுப்பிக்க வேண்டும். 3 ஆண்டுகள் முடிவடைவதற்கு சற்று முன்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

*உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கு கட்டணம் ஏதும் உண்டா?*

உறுப்பினர் பதிவை புதுப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.

உலமா ஓய்வூதிய (தமிழ்நாடு) திட்டம் , 1981
திருப்திகரமான வாழ்க்கை ஆதாரம் இல்லாத இசுலாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கு (மார்க்க அறிஞர்கள்) உதவுவதற்காக இத்திட்டம் தமிழக அரசால் 1981 - ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இத்திட்டம் எந்த அமைப்பால் செயலாக்கப்படுகின்றது ?

மாநில பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, 27.07.2011 முதல் இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் (sanction) அளிக்கும் அதிகாரத்தினை தமிழ்நாடு வக்/பு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலருக்கு அளித்தது. 2006 ஆம் ஆண்டில் உலமா ஓய்வூதிய ஒப்புதல் கமிட்டி மறு நியமனம் செய்யப்பட்டது. இக்கமிட்டியின் தலைவராக மாண்புமிகு சுற்றுச் சூழல் மற்றும் வக்,பு அமைச்சர் செயல்படுகின்றார். இசுலாமிய சமுதாயத்தைச் சேர்ந்த 6 நபர்கள் உறுப்பினர்களாக இதில் நியமிக்கப்பட்டுள்ளனர். வக்பு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலர் இக்கமிட்டியின் கன்வீனர் (converner) மற்றும் உறுப்பினர் செயலராகச் செயல்படுகின்றார்.

இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்குரிய தகுதிகள் என்ன ?

உலமாவாக இருக்க வேண்டும் (மற்றும்)
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட (அல்லது) வாரியத்தால் சர்வே மேற்கொள்ளப்பட்டு அறிவிப்புச் செய்யப்பட்ட (notified) பள்ளிவாசல்/ தர்கா போன்ற வக்புகளில் பேஷ் இமாம்
அரபி ஆசிரியர் (அ) முஜாவர் ஆக 20 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் (மற்றும்)
60 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும் (மற்றும்)
வேறெந்த திருப்திகரமான வாழ்க்கைத் தொழில் ஆதாரம் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏதேனும் விதி விலக்கு உண்டா?

விதி விலக்கு உண்டு. உடல் ஊனமுற்றவர்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தாலே போதுமானது. அவர்களுக்கு வயதிலும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 50 வயது பூர்த்தி அடைந்தாலே ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.

மாத ஓய்வூதியம் எவ்வளவு வழங்கப்படும் ?

இத்திட்ட பயனாளிக்கு மாதந்தோறும் ரூ.800 மாத ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

விண்ணப்ப படிவத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்?

பணிச்சான்றிதழ்
வயதுச் சான்றிதழ்
ஊனமுற்றவர் எனில் அதற்கான சான்றிதழ்
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் ?

விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலரிடம் எழுதிக் கேட்டுப் பெறலாம். மேற்கண்ட சான்றிதழ்களை இணைத்து முதன்மை செயல் அலுவலர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பிரபல்யமான பதிவுகள்