குல்கந்தின் பயன்கள்
அனைவரும் அறிந்த குல்கந்த் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.தோலில் சுருக்கங்கள் ஏற்படாதவாறு தடுக்கும்.சுருக்கம் இருந்தால் நீக்கும்.இதயத்தை பலப்படுத்தும்.
குல்கந்தில் உள்ள ரோஜாவில் துவர்ப்பு சுவை இருப்பதால் கல்லீரல்,கணையம்,வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும். செரிமானத்தை சீராக்கும்.மலம் கழித்தலை இலகுவாக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு அருமருந்து.
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏற்படும் மலச்சிக்கலைப் போக்கும் மாமருந்தாகும் குல்கந்த்.
சிலருக்கு பித்தம் அதிகமாகி வயிற்றை புரட்டிக்கொண்டு எப்பொழுதும் வாந்தி வருவது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கு அற்புதமான மருந்தாகும். வாகனங்களில் பயணிக்கும்போது சிலருக்கு வாந்தி வரும்.அதனை வரவிடாமல் தடுக்க கல்கந்த் ஒரு வரப்பிரசாதமாகும்.
குல்கந்த் செய்முறை..
நாட்டு பன்னீர் ரோஜாப்பூ ...30 எண்ணிக்கை.
இதனை காம்புகளை நீக்கி இதழ்களை மட்டும் உதிரியாக எடுத்து நன்றாக கழுகி விட்டு நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
பெரிய கற்கண்டு..100கிராம்
குங்குமப்பூ...5 கிராம்
வெள்ளரி விதை 25 கிராம்
சுத்தமான தேன் ..100 கிராம்
கசகசா 25 கிராம்
உலர்ந்த ரோஜா இதழ்களையும் கற்கண்டையும் ஒன்றாக சேர்த்து உரலில் இட்டு நன்றாக அரைக்காமல் ஒன்றிரண்டாக இடித்து எடுத்துக் கொள்ளவும். அதில் கசகசா,வெள்ளரி விதை,குங்குமப்பூ ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி விட்டு,அதனை மூன்று பகுதிகளாக பிரித்து வைத்துக் கொண்டு,
ஒரு பாட்டிலில் முதலில் கொஞ்சம் தேன் ஊற்றி ரோஜா கலவையில் ஒரு பகுதியை சேர்க்கவும்.பிறகு கொஞ்சம் தேன் சேர்த்து ரோஜா கலவையில் இரண்டாம் பகுதியை சேர்க்கவும்.பிறகு கொஞ்சம் தேன் சேர்த்து ரோஜா கலவையின் மூன்றாம் பகுதியை சேர்த்து விட்டு மீதம் உள்ள தேனை அதன் மீது ஊற்றவும். பிறகு பாட்டிலின் வாய்ப்பகுதியை நல்ல சுத்தமான துணியால் கட்டி ஒரு வாரம் வெயிலில் வைக்கவும்.மாலை நேரத்தில் கிளறி விடவும். ஒரு வாரம் வெயிலில் வைத்து எடுத்து விட்டால் குல்கந்த் தயார்.
பெரியவர்கள்,சிறியவர்கள் அனைவரும் காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும்.சாப்பிட்டப்பின் சுடுத்தண்ணீர் குடிப்பது நலம்.
https://www.youtube.com/channel/UCq08F9DmNjAKwHxQT92yniA
மருந்தளிப்பவர் வைத்தியர்...குணமளிப்பவன் இறைவன்.