роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

рокுродрой், роЬூрой் 20, 2018

родрооிро┤்роиாроЯ்роЯிро▓் роХро▓்ро╡ி,

தாயகம் சுரேஷ்

350 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 'இந்தியாவின் மருத்துவ தலைநகரம்' சென்னைதான்.

அத்தகைய பெருமைமிகு கல்வியாளர்கள் நிறைந்த மண்ணை, மக்களை, மாணவ சமுதாயத்தை, சமநிலையற்ற ஒரு தகுதி தேர்வை நடத்தி இந்தியாவின் மொத்த 36 மாநிலங்களுள் தமிழகம் 35 இடத்தை அடைந்த மாநிலம் என இழிவுப்படுத்தி காண்பித்து கொண்டே நம் வியர்வையில் உருவான மருத்துவ கல்வியின் கட்டமைப்பை கபளீகரம் செய்யும் இழிச்செயலை செய்கிறது மத்திய அரசு!!!

NEET தேர்வு எழுதிய 36 மாநிலங்களுள் 35வது மாநிலம் எங்கள் தமிழ்நாடு என்பது எத்தகைய முரணானது என்பதை எங்கள் மாநிலத்தின் மருத்துவ கல்வியின் வரலாற்றை வளர்ச்சியை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ������

இந்தியாவிலேயே முதல் அலோபதி மருத்துவமனையாக துவங்கப்பட்டு 1835ல் மருத்துவக்கல்லூரியாக உருப்பெற்றது தான் எங்கள் MMC எனப்படும் சென்னை மருத்துவ கல்லூரி. 1875-ல் MMC மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்னொரு பெருமையும் கிடைத்தது. ‘மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப்’ என்ற இங்கிலாந்து பெண்மணி இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். மருத்துவத் துறையில் பெரும் வளர்ச்சியை எட்டியிருந்த இங்கிலாந்திலேயே பெண்கள் மருத்துவம் பயில முடியாத சூழலில் சென்னைதான் அவருக்கு டாக்டர் பட்டத்தை தந்தது.

சமஸ்கிருதம் படித்திருந்தால் தான் மருத்துவம் படிக்க இயலும் என்றிருந்த ஆதிக்க வாதிகளின் கொட்டத்தை தகர்த்தெறிந்து, திராவிட இயக்கம் அமைத்து தந்த ராஜபாட்டையில் பவனி வந்து இந்தியாவின் முதல் மருத்துவராக படித்து தேறிய டி.பி.முத்துலெட்சுமி அம்மாள் படித்ததும் இதே MMC மருத்துவக்கல்லூரியில் தான்!!!

இதனை தொடர்ந்து,

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி 1938
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி 1954
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி 1958
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி 1960
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி 1965
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி 1965
கோவை அரசு மருத்துவக் கல்லூரி, 1966
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி 1986
IRT பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி 1986
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி 1997
கன்யாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி 2001
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி 2001
தேனி அரசு மருத்துவக் கல்லூரி 2004
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி 2005
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி 1986
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி 2010
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி 2010
சிவகெங்கை அரசு மருத்துவக் கல்லூரி 2012
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி 2013
அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை 2015
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி 2017
இவை தவிர,
அரசு சித்த மருத்துவக் கல்லூரி சென்னை 1965
அரசு சித்த மருத்துவ கல்லூரி திருநெல்வேலி 1985
அரசு ஒமியோபதி மருத்துவக் கல்லூரி 1985,
அரசு யூனானி மருத்துவக் கல்லூரி 1985,
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் கல்லூரி 1985,
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி கன்யாகுமரி 2009.
இவை போதாதென்று,
20க்கும் அதிகமான தனியார் மருத்துவ கல்லூரிகள் என தமிழகம் மருத்துவ படிப்பில் தன்னிகரில்லா இடத்தை தக்க வைத்துள்ளது.

தமிழக மக்களின் உழைப்பால், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுகளின் திட்டங்களால் மருத்துவத்துறை செழித்தொங்கும் இந்த நிலை தான் மத்திய ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியது.

மிக நீண்ட கால திட்டமாக இருந்த "நீட் தகுதித்தேர்வு" எனும் சமநிலையற்ற அகில இந்திய தேர்வை தமிழக பெரும்பான்மை மாணவர்களின் கல்வித்திட்டத்திற்க்குள் வராத போதும் வலுக்கட்டாயமாக திணித்தது.

ஏறத்தாழ 49 மருத்துவ கல்லூரிகளுடன் 6,510 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உள்ள தமிழகத்தில் தமிழக மாணவர்களின் கனவு நம் கண்முன்னே சிதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது!!!

தமிழ்நாட்டின் மொத்த மருத்துவ கல்லூரி இடங்களில் எத்தனை இடங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளி மாநில மாணவர்கள் “லவட்டி” எடுத்துள்ளனர் என்பதை பாருங்கள்!!!

2016ல் 589 இடங்கள்..,
2017ல் 715 இடங்கள்...,
2018ல் எத்தனை பறி போக போகிறதோ?
இந்த குழிபறிப்பு தொடர்ந்தால் எத்தனை இடங்கள் நம் மாநில கல்வி திட்டத்தில் படிக்கும் நம் மாணவ செல்வங்களுக்கு நமக்கு மிஞ்சும்? என்பதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது!!!
(குறிப்பு; திராவிடத்தால் வீழ்ந்தோம் என கதறும் போலிகளுக்கு) - தமிழகத்தின் மொத்த மருத்துவ கல்வித்துறை வளர்ச்சியில் 70% வளர்ச்சியும், கட்டமைப்புகளும் உருவானது “தி இயக்கங்களின் ஆட்சி காலத்தில் தான்” என்பது தான் மறுக்கப்பட முடியாத உண்மை. ..., உங்களுக்கு இது கசப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை பாகற்காய் போல் கசப்பாக தான் இருக்கும்.!!!

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்